சாதனையாளர்கள் மற்றவர்களை விட தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தங்களின் மன நிலைகளை சரியான முறைகளில் தக்க வைத்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதனை திறம்பட வெளிப்படுத்துகின்றனர். சாதனையாளர்களிடமிருந்து கவனிக்கப்பட்ட 8 பழக்கங்களை இங்கே பார்ப்போம். அந்த பழக்கங்களை நாமும் கற்றுக்கொண்டு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வோம். 1) ஃபோகஸ்; கவனத்தை சிதறவிடக்கூடாது சாதனையாளர்கள் தங்களின் கவனத்தை சிதறவிடமாட்டர்கள். ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினை மட்டும் தான் பார்ப்பார்கள். ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை பார்ப்பது மன அழுத்தத்திற்கு பெரிய காரணமாக அமைகிறது. அதனால் மற்ற பிரச்சனைகளை பிறகு பார்த்துக்கொள்வதுதான் நல்லது. எனவே நீங்கள் ... Read More »
பிஸினஸ் குட்டிக்கதை
November 2, 2016
ர விச்சந்திரனுக்கு இது ஏழாவது இன்டர்வியூ! ஏற்கெனவே காது கேட்காத, வாய்பேச முடியாத நிலையில் இருக்கும் அவனுக்கு வேலையில்லாதது கூடுதல் வேதனை. இத்தனைக்கும் ஒவ்வொருமுறையும் எழுத்துத் தேர்வில் தன் முழுத் திறமையையும் காட்டுவான். கூடவே, இன்டர்வியூவில் தன்னால் பேச முடியாது என்பதையும் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளை காதால் கேட்க முடியாது என்பதையும் எழுதிக் காட்டுகிறான். அவர்கள் திருப்தி அடையாமல், நிராகரித்து அனுப்பிவிடுகிறார்கள். ரவிச்சந்திரனின் வெறுப்பெல்லாம், ‘விண்ணப்பிக்கும்போதே நம்முடைய குறைகளைச்சொல்லித்தானே விண்ணப்பிக்கிறோம். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நம்பிக்கையோடு இருக்கும்போது இப்படிச் சொல்கிறார்களே’ என்பதுதான். இந்த முறை இன்டர்வியூவில் தேர்வு செய்யப்படாவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது ... Read More »
அட பணமே!
November 1, 2016
சீடர்களுடன் சென்று கொண்டிருந்த குருநாதருக்கு நேரமாகி போனதால் பசியெடுக்க ஆரம்பித்தது. வழியில் எதிர்ப்பட்டவரிடம், “”இந்த ஊரில் தர்ம சத்திரம் எங்கிருக்கிறது?” என்று கேட்டார். “”சுவாமி! தானம் செய்ய இங்கு ஆள் இல்லை. ஆனால், இங்கு உணவகம் ஒன்று இருக்கிறது. பணம் கொடுத்தால் சாப்பாடு கிடைக்கும்” என்றார். சீடரில் ஒருவர் குருவிடம், “”சுவாமி! உங்களை நேரில் பார்க்கும் போது எப்படிப்பட்டவரின் மனமும் மாறி விடும். நிச்சயம் அனைவருக்கும் இலவச சாப்பாடு கிடைக்கும்,” என்றார். எல்லாரும் உணவகத்தில் சாப்பிட்டனர். சீடர் எதிர்பார்த்ததற்கு மாறாக, உரிமையாளர் பணம் கேட்டார். மறுப்பேதும் சொல்லாமல் கேட்டதை கொடுத்து விட்டு குருநாதர் நடக்க ... Read More »
உன்னை தவிர உன் முன்னேற்றத்தை தடுக்க யாராலும் முடியாது
November 1, 2016
ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர். அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும்” என்று எழுதி இருந்தது. இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ... Read More »
சிந்தனைகள்
November 1, 2016
· கல்வியின் அடிப்படையான இலட்சியமே மனதை ஒரு முகப்படுத்துவதுதான். மனதை ஒரு முகப்படுத்துகிற அளவுக்கு அறிவு வளர்ச்சியும் அதிகமாகும். · கல்வி, தன்னம்பிக்கை இவற்றின் மூலமே நம்முன் மறைந்திருக்கும் தெய்வீக சக்தியை நாம் வெளிபடுத்த முடியும். · ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலை நிறுத்த முடியும். · ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின் அவனது பெருஞ் செயல்களைப் பார்க்க வேண்டாம்; அவன் தன் சாதாரண காரியங்களை எங்ஙனம் செய்கிறான் என்பதை கவனிக்க வேண்டும். அவை தாம் ஒருவனுடைய ... Read More »
ஒன்பது திருடர்கள்
November 1, 2016
ஜப்பானில் ஒரு சிறு கிராமம் அது.. இங்கு வசித்து வந்த மக்களுக்கு பெரும் தொல்லையாய் இருந்தார்கள் ஒன்பது திருடர்கள். இவர்களை அடக்கி, தங்களைக் காக்க பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஜென் குரு ஒருவரை அழைத்து வந்தனர். கிராமத்திற்கு வந்த குரு அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக ஒரு கிண்ணத்தில் அரிசி சாதம் எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த ... Read More »
நரகலோகத்தில் பரமார்த்தர்!!!
October 31, 2016
பரமார்த்த குரு கதைகள் நரகலோகத்தில் பரமார்த்தர் மட்டியும் மடையனும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, கவலையோடு இருந்தனர். மண்டுவும் மூடனும் போனாரே! எங்கள் குரு செத்துப் போனாரே! என்று மூக்கால் அழுது கொண்டு இருந்தனர். “இனி மேல் யார் சுருட்டுக்கு நான் கொள்ளி வைப்பேன்? எங்களைத் தனியாக விட்டுட்டு, இப்படி அநியாயமாச் செத்துட்டீங்களே!” என்று ஒப்பாரி வைத்தான், முட்டாள் அதன் பிறகு, ஐந்து சீடர்களும் மடத்துக்கு எதிரே தெருவில் கட்டிப்பிடித்து உருண்டார்கள். “செத்துப்போன நம் குரு, எங்கே ... Read More »
உலக சேமிப்பு நாள்!!!
October 31, 2016
உலக சேமிப்பு தினம் , இத்தாலியில் உள்ள மிலானோ நகரில் முதலாவது சர்வதேச சேமிப்பு வங்கி மாநாடு (சேமிப்பு வங்கிகள் உலக சமூகம்) அக்டோபர் 31, 1924-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து 29 நாடுகளை சார்ந்த அதன் பிரதிநிதிகள், பொதுமக்கள் மத்தியில் சேமிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார உயர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள கடமையை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானிக்க பட்டது. மேலும், ... Read More »
இந்திரா காந்தி!!!
October 31, 2016
இந்திரா காந்தி (1917 – 1984) இந்திய நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் இவரும் ஒருவர். உலக வரலாற்றில் பெண்களினாலும் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியுமென்ற நிலையை ஆணித்தனமாக நிரூபித்து இந்திய நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவி வகித்த பெருமைக்குரியவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. கடந்த 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜவஹர்லால் நேருவிற்கும் கமலா நேருவிற்கும் மகளாக பிறந்தார் இந்திரா காந்தி என அழைக்கப்பட்ட இந்திரா பிரியதர்ஷனி. இவரின் ... Read More »
ஹாலோவீன்!!!
October 31, 2016
அமெரிக்கத் தீபாவளி – ஹாலோவீன் மெரிக்கர்களின் அன்றாட வாழ்க்கையில் சற்று மாறுதலை ஏற்படுத்தும் வகையில் ஒரு வெளிச்ச விழா! இந்த அமெரிக்கத் தீபாவளி. இந்த அமெரிக்கத் தீபாவளிக்குப் பெயர் “ஹாலோவீன்”. இறந்தவர்கள் சொர்க்கத்துக்கும் போகாமல் நரகத்துக்கும் போகாமல் ஆவியாக அலைந்து கொண்டிருப்பவர்களை மகிழ்விக்கும் நன்னாள் தான் “ஹாலோவீன்” நாள் என்பது. இப்படிப்பட்ட கெட்ட ஆவிகளை மகிழ்ச்சியடையச் செய்வதன் மூலம் தங்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் நேராது என நம்புகிறார்கள் அமெரிக்கர்கள். தீபாவளியைப் போலவே ஹாலோவீனுக்கும் வாழ்த்து அட்டைகளிலிருந்து ... Read More »