ஒரு துறவி ஆற்றங்கரையில் அமர்ந்து தண்ணீர் ஓடும் அழகையே பார்த்துக் கொண்டு இருந்தார். இயற்கையில் ஈடுபட்டு மனம் ஒருமுகப்பட்டதால் மவுனத்தில் ஆழ்ந்தார். அந்த நேரம் இளைஞன் ஒருவன் வந்தான். கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் அவனுள் இருந்தது. “”சுவாமி எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் என்பவர் யார் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?” என்று கேட்டான். துறவியோ அதைக் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அமைதி காத்தார். கேள்வி அவரின் காதில் விழவில்லை என்பதை அவரின் மவுனம் உணர்த்தியது. “”சுவாமி! நான் சொல்வது ... Read More »
வரலாற்றில் இன்று: நவம்பர் 9
November 9, 2016
1905: பிரான்ஸில் அரசாங்கத்தையும் தேவாலயத்தையும் பிரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1906: தியோடர் ரூஸ்வெல்ட், பனாமா கால்வாய் நிர்மாணப்புப் பணிகளை பார்வையிடச் சென்றதன் மூலம் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதியானார். 1913: அமெரிக்க கனேடிய மத்திய பகுதியிலுள்ள ஏரிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 19 கப்பல்கள் அழிக்கப்பட்டதுடன் 250 இற்கும் அதிகமானோர் பலியாகினர். ஏரிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை அழிவு இதுவாகும். 1921: விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1937: ... Read More »
அனுபவம்!!!
November 8, 2016
நாம் நமது அனுபவத்தை இரண்டு வகையாக கூறலாம். 1. ஆட்படும் அனுபவம் அல்லது சிறப்பான அனுபவம் 2. மோசமான அனுபவம் சிறப்பான அனுபவம் – எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதிலிருந்து கண்டிப்பாக ஏதாவதொரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மோசமான அனுபவம் – ஒரு செயலை செய்யும் போது அதிலிருந்து எந்த ஒரு பாடமும் கற்றுக் கொள்ளவில்லையோ அது மோசமான அனுபவம். அனுபவத்தின் சிறப்பு – உலகிற்கே வெளிச்சம் கொடுக்கக்கூடிய மின்சார விளக்கை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வாய் எடிசன் முதல் முறையிலேயே பல்பைக் கண்டுபிடித்து விடவில்லை. ஏறக்குறைய ... Read More »
நிம்மதி
November 8, 2016
யானைக்கு தன் உடம்பை தூக்க முடியவில்லை என்ற கவலையிருந்தால் அணிலுக்கு உடம்பு போதவில்லையே என்ற கவலை உண்டு. ஏழைக்கு சாப்பாடு பிரச்சனை என்றால், பணக்காரனுக்கு வருமான வரிப் பிரச்சனை. பெருளாதாரம் சரியாக இருந்தாலும் கணவனோ மனைவியோ சரியில்லாத குடும்பங்களில் பிரச்சனை. அன்பிருந்தும் பணம் இருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களில் பிரச்சனை. பழமொழி கூறுவது: “வீட்டிற்கு வீடு வாசப்படி என்பார்கள்” “ஒவ்வொரு கூந்தலிலும் பேனிருக்கும் என்பார்கள்” பிரச்சனை இல்லாத குடும்பமே இல்லை. ஐயோ நிம்மதி இல்லையே என்று அலுத்துக் கொள்ளாதவனே ... Read More »
நாணயம் கூறும் பாடம்
November 8, 2016
நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் நாணயத்திற்கு இரண்டு பக்கம் உள்ளது என்பது. ஒரு பக்கம் தலை மற்றொரு பக்கம் பூ. இதே போல் தான் நம் வாழ்கையில் வெற்றியும் தோல்வியும். வெற்றி தலை என்றுவைத்துக்கொண்டால் பூ தோல்வி. நாம் நாணயத்தை சுண்டி விட்டால் தலையும் வரலாம் பூவும் வரலாம். இதன்இரண்டிற்கும் உண்டான சாத்தியக்கூறு 50% ஆகும். இது போல் தான் நம் வாழ்கையில்வெற்றியும் தோல்வியும். ஒரு முறை தோல்வி அடைந்தால்அடுத்த முறை வெற்றிஅடைய வாய்ப்பு இருக்கிறது. அடுத்த முறையும் தோல்வி அடைந்தால்அதற்கு அடுத்தமுறை வெற்றி அடைய வாய்ப்பு உண்டு. எப்போதும் பூ தான் விழும் என்று சொல்ல முடியுமா. தலை எப்போதாவது வந்து தானேஆகவேண்டும் இல்லையா. அது போல தான் வாழ்க்கை. எப்பொழுதும் தோல்வியே வரும்என்று இல்லை. நிச்சயம்மாக வெற்றி வரத்தான் செய்யும். மீண்டும் பூ விழுந்து விட்டதே என்று மீண்டும் நாணயத்தை சுன்டாமல் விட்டால் தலைஎப்படி வரும். அது போல தோல்வி அடைந்து விட்டோமே என்று மீண்டும் முயற்சிசெய்யாமல் விட்டு விட்டால் வெற்றி எப்படி அடைய முடியும். உங்களுக்கு தோல்வி வரும் போதெல்லாம் உங்கள் பாக்கெட்டிலிருந்து ஒருநாணயத்தை எடுத்து பாருங்கள். அடுத்த முறை வெற்றி தான் என்று சொல்லிகொள்ளுங்கள். உங்களுக்கு தெம்பு வரும். மீண்டும் முயற்சி செய்யும் வேகம் வரும். அடுத்த முறை வெற்றி அடைவீகள். Read More »
தைரியமாக இருப்போம் (நீதிக்கதை)
November 8, 2016
ஒரு காட்டில் முயல்கள் கூட்டம் ஒன்று வசித்து வந்தது. அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து வந்தது. அதாவது முயல்கள் அனைத்தும் கோழைகளாக இருந்தன. ‘வேட்டைக்காரன் வந்ததும் நம்மைத்தான் வேட்டையாடுகிறான். சிங்கம், புலி போன்ற மிருகங்களும் நம்மைத் தான் அடித்து உண்ணுகின்றன. ஆகவே…நம் கூட்டம் இனி உயிர் வாழ்வதில் பயனில்லை, ஒன்றாக ஏதேனும் ஒரு குளத்தில் செத்து மடிவோம்’என முயல்களின் தலைவன் கூற அனைத்தும் ஒரு குளத்தை நோக்கிச் சென்றன. அந்தக் குளத்தில் நூற்றுக்கணக்கான தவளைகள் வசித்து வந்தன.அவை கரையில்அமர்ந்திருந்தன.முயல்கள் கூட்டமாக வருவதைப் பார்த்த தவளைகளின் தலைவன் ‘முயல்கள் கூட்டமாக நம்மைத்தாக்க வருகின்றன.நாம் கரையில் ... Read More »
அந்தக் கதவுகள் மூடியே இருக்கட்டும்!
November 8, 2016
ஒரு முதியவரும், அவரது மருமகளும் தினமும் எதாவது வாக்குவாதம் செய்துகொண்டிருப்பர். இதனால், அவரது மகனுக்கு நிம்மதி இல்லாமல் போய் விட்டது.ஒருநாள் சண்டையில், மகன் தந்தையைத் திட்டி விட்டான். பெரியவர் வருத்தத்துடன் புறப்பட்டார். வழியில் மகான் ஒருவரைக் கண்டார். “”சுவாமி! முதுமையில் பிள்ளைகள் நமக்கு உதவப் போவதில்லை என்பது தெரிகிறது.இருந்தாலும், இளமையில் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை என்று ஏங்குவதும்,அவர்கள் மீது பாசம் வைத்து வளர்ப்பதும் தேவைதானா?” என்று கேட்டார். மகான் சிரித்தபடி, “”சரியப்பா! நீ உன் பெற்றோர் இருந்த காலத்தில் அவர்களைக் கவனித்தாயா?” “”சுவாமி… ... Read More »
வரலாற்றில் இன்று: நவம்பர் 8
November 8, 2016
1520: சுவீடன் மீது படையெடுத்த டென்மார்க் படையினர் ஸ்டொக்ஹோமில் சுமார் 100 பேரை கொலை செய்தனர். 1923: ஜேர்மன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான நாஸிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றது. 1932: பிராங்ளின் டி ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக முதல் தடவையாக தெரிவானார். பின்னர் மேலும் 3 தடவைகள் இவர் வெற்றிபெற்று சாதனை படைத்தார். 1939: ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் படுகொலை முயற்சியிலிருந்து நூலிழையில் தப்பினார். 1950: கொரிய யுத்தத்தின்போது அமெரிக்க விமானப்படையின் எவ்-80 ... Read More »
வாழும் வரை போராடு!
November 7, 2016
ஒரு வாலிபனுக்கு ஏராளமான பணம் இருந்தது. ஆனாலும், அவன் ஏதோபிரச்னைகளில் சிக்கி தவித்துக் கொண்டே இருந்தான். வாழ்க்கையே வெறுத்துப்போனது. ஒருமுறை, அவனது தந்தையின் நண்பர் அவனது வீட்டுக்கு வந்தார்.வாடிப்போன அவன் முகத்தைக் கண்டு “என்ன பிரச்னை?’ என்றார். “”ஐயா! நான் நிறைய சம்பாதிக்கிறேன். பொருளையெல்லாம் மனைவி,பிள்ளைகளுக்காக செலவழிக்கிறேன். ஆனால், அவர்கள் இன்னும்… இன்னும்… என்கிறார்களே தவிர, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தபாடில்லை. என் நண்பர்களும் அப்படியே! நான் செலவழித்தால் உடன் வருகிறார்கள். இல்லாவிட்டால் ஓடி விடுகிறார்கள். எனக்கு வேலை செய்து செய்து அலுத்து விட்டது. நிம்மதியைத் தேடி அலைகிறேன்,” என்றான். பெரியவர் ... Read More »
எறும்பு – சிறந்த பொறுமைசாலி !
November 7, 2016
ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில்சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன. எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்துபார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்றகொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது. கோடை காலத்தில் தனக்கு வேண்டிய உணவை சேகரித்து வைத்துவிட்டு குளிர் காலத்தில் கோடைக்காக பொறுமையுடன் காத்திருக்கிறது எறும்பு ... Read More »