பொது அறிவு

பொது அறிவு

1) ‘பை’ என்ற ஆங்கிலப்படத்தில் தாலாட்டு பாடிய இந்திய பெண்மணி யார்? 2) மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? 3) 2013 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிக உயரமான காந்தி சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையின் உயரம் மற்றும் அது அமைந்துள்ள இடம் எது? 4) கை விளக்கு காரிகை என்றழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தனது சட்டையில் அணிந்திருந்த பெயர் பலகையில் என்ன வாசகம் குறிப்பிடப்பட்டு இருந்தது? – 5) லில்லிபுட் மற்றும் குலிவர் கதையில் ... Read More »

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி….

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி….

உண்மையைச் செய்ய முயற்சி செய். அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்து கொள்வாய். -கதே பிறருடைய பழிச்சொல்லுக்கு விடையளிக்க வேண்டுமா? ஆம் எனில் உன் கடமையைச் செய்துவிட்டு மௌனமாய் இருந்துவிடு, அதைவிடச் சிறந்த விடை கிடையாது. -வாஷிங்டன் செய்து முடிக்கப்பட்ட கடமை, நம்பிக்கைக்குத் தெளிவையும் உறுதியையும் அளிக்கவல்லது. ஆகவே நம்பிக்கைக்கு பலம் அளிப்பது கடமையே. -ட்ரைடன் எட்வர்ட்ஸ் தீமைகளை விலக்குவது என்பதைக் கடமையாகக் கொள்ளுதல் நன்மைகளைச் செய்வதற்குச் சமம். -காந்தியடிகள் கடமையைச் செய்ய நேரத்தைக் கடத்தாதே. அரிய ... Read More »

இதயத்துக்கு வலுசேர்க்கும் உணவு வகைகள்

இதயத்துக்கு வலுசேர்க்கும் உணவு வகைகள்

கீரைகளில் இதயபலத்துக்கு உதவும் சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் ஏதேனும் ஒரு கீரையை சாப்பிடுவது நல்லது. * முழுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலு சேர்க்கும். இதயத்தைப் பாதுகாக்கும். * ஓட்ஸில் நார்ச்சத்துகள் மிகுந்துள்ளன. இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் இரத்த ஒட்டத்தையும் சீராக்கும். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. * ஆப்பிள் இதயத்துக்கு மிகவும் நல்லது. இது இரத்தம் உறைவதைத் தடுக்கும். * பாதாம் எண்ணெய்யில் விட்டமின் “இ’ ... Read More »

உன்னை தொடரும் இரண்டு கண்கள்

உன்னை தொடரும் இரண்டு கண்கள்

நல்லவனாகவே வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் அதற்கான வழிமுறைகளை சுலபமாக சொல்லலாம். சுலபமாக சொல்லிவிடலாமே தவிர அதை கடைபிடித்து நல்லவனாக வாழ்வது என்பது மிகவும் கஷ்டம். நம்மை பொறுத்தவரையில் நல்லவனாக வாழ்வதில் அவ்வளவாக சிரமம் இருப்பது கிடையாது. ஆனால் மற்றவர்களும் நம்மை நல்லவன் என்று புரிந்துகொள்ள வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும் என்று முனையும் போது தான் சிக்கல்கள் உருவாகிறது. நல்லவனாகவே வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற இந்த கேள்வியை சற்று திருத்தி சிலரிடம் ... Read More »

அப்படியா!!!

அப்படியா!!!

ஒரு ஊரில் ஒரு ஜென் குரு இருந்தார். நல்ல குரு என்பதை விட, நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பது அவர் கொள்கை. அப்பழுக்கில்லாதவர் என்ற பெயரை அந்த ஊர் மக்களிடம் பெற்றிருந்தார் குரு. அவர் இருந்த குடிலுக்குப் பக்கத்தில் ஒரு அழகான இளம்பெண்ணும் அவளது பெற்றோரும் வசித்துவந்தனர். அவர்கள் அந்த ஊரில் ஒரு உணவகத்தை நடத்தி வந்தார்கள். இளம்பெண் அடிக்கடி குருவைப் பார்ப்பது வழக்கம். ஒரு நாள் அந்த இளம்பெண் கர்ப்பமாக இருந்ததை பெற்றோர் கண்டுபிடித்து ... Read More »

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்.. கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.. அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்.. முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்.. வருகைப் பதிவேட்டை சரிபார்த்து ... Read More »

மரணம்

மரணம்

மரணம் என்றாலே யாருக்குத்தான் பயமில்லை? மரணம் என்பது மறைக்கப்பட்தொரு விடையமாகும். இது ஈசனின் தொழில் என்கிறது இந்துமதம். இது எதனால்? யாரால்? எப்படி? எப்போ? என்கிற கேள்விகளுக்கு விடையே இல்லை. ஆனால் முற்காலத்தில் வாழ்ந்த துறவிகள் மரணத்தை கூட தள்ளிப்போடுமளவிற்குஅவர்களுக்கு சக்தியிருந்ததாக அறியமுடிகிறது. இது எந்தளவு உண்மை என்பதுகேள்விக்குறியே? விஞ்ஞானத்தை எடுத்துக்கொண்டால் மரணம் என்பது மூளையின் தொழில்பாடுமுற்றுமுழுதாக இல்லாமல் போவதையே மரணம் என்கிறார்கள். மூளையானது தனது செயற்பாடுகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் ஒருவிதமான ஹோமோன் ஒன்றை உற்பத்தி செய்கிறது இவ் ஹோமோனானது ஒருவித இன்ப உணர்ச்சியை அழிக்கிறது.மரணிக்கும் தருவாயில் ... Read More »

மனம் கவலையான நேரத்தில்!

மனம் கவலையான நேரத்தில்!

“மனசு ரொம்ப கனமா இருக்கு, என்ன செய்யுறதுன்னு தெரியலே” என்ற வார்த்தைகளையே நாம் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த உணர்வு நாம் எல்லோரும் எதோ ஒரு கட்டத்தில் அனுபவித்திருக்க கூடியது தான். வாழ்க்கையில் இறுக்கமான கட்டங்கள் (மன வேதனையான) ஏற்படும். சிலருக்கு எவ்வளவு சிரமமான சிக்கலும் இறுக்கம் தராது. ஒருவரது வாழ்வில் இறுக்கமான பாதிப்புகளையும் மனநோயையும் அடைய அதிகம் வாய்ப்புள்ளது. அந்த பட்டியலில் திருமணம், தொழில், காதல், உறவுகள், நிகழ்வுகள், இழப்பு போன்ற சோகமான கட்டங்களும் உண்டு. பலர் சோகமான மோசமான நிகழ்வுகளே வாழ்வில்இறுக்கம் என்று கருதுகிறார்கள். மகிழ்ச்சிகரமான விஷயங்கள் கூட இறுக்கத்தைஏற்படுத்தும். இறுக்கம் வாழ்வில் இன்றியமையாத ... Read More »

ஒரு ஊர்ல ஒரு ராஜா!

ஒரு ஊர்ல ஒரு ராஜா!

ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு ராஜா. அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான். அரசனின் முகத்தைக் கவனித்த அமைச்சருக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம். ஆகவே அமைச்சர் ஒரு யோசனை சொன்னார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’ ‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லையே!’ ‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக ... Read More »

பணத்தை பெற இதோ மந்திரம் !

பணத்தை பெற இதோ மந்திரம் !

       மனிதன் உயிரோடு வாழ்வதற்கு காற்று மிகவும் அவசியம். ஆனால் இன்று அந்த தூயக்காற்றை கூட விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலைமை வந்து கொண்டிருக்கிறது. அப்படி என்றால் காற்றை வாங்க காசு தேவை. ஆக, மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியமான பொருளாக பணம் இருக்கிறது. கைநிறைய பணம் இருந்தால் அதை சில மணிநேரங்களிலேயே மிகச்சுலபமாக செலவும் செய்துவிட முடிகிறது. ஆனால் அந்த பணத்தை மொத்தமாக பெறுவதற்கு இரத்தத்தை சிந்த வேண்டி இருக்கிறது. சிலருக்கு மிக ... Read More »

Scroll To Top