உயர்வு

உயர்வு

விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் காலத்தில் வாழ்ந்தவர் அறிஞர் ஈசுவர வித்யாசாகர். அவர் எப்பொழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவார் மற்றும் ஏழைகளுக்கு உதவிடுவார். ஒரு நாள் வகுப்பறையில் கரும்பலகையில் ஒரு நேர்கோடு ஒன்று போட்டு விட்டு இதை அழிக்காமல் சிறியதாக்கி விட முடியுமா என்று கேட்டார். அனைத்து மாணவர்களும் யோசித்தார்கள். “அழிக்காமல் எப்படி சிறியதாக்குவது?” எப்படி என்று. ஒரு பையன் எழுந்து வந்தான். கரும்பலகையில் உள்ள அவர் போட்ட கோட்டிற்கு பக்கத்தில் அதை விட பெரிய கோடு ஒன்று ... Read More »

பழகிப் பார்ப்போம்

பழகிப் பார்ப்போம்

இவ்வுலகில் பிறந்த அனைவருமே பணக்காரரும் இல்லை, ஏழையும் இல்லை. காலையில் கிழக்கில் உதிக்கின்ற சூரியன் மாலையில் மேற்கில் மறைவது போல, பகல் மற்றும் இரவு மாறுவது போல, நமது வாழ்விலும் பணக்காரன் ஏழையாக மாறுகிறான், ஏழை பணக்காரனாக மாறுகிறான். இது நமது வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளே. இங்கு எதுவும் நிரந்தரம் கிடையாது. இந்த பழைய பாடல் வரிகளைப் போல, “ஒரு சாண் வயிற்றிற்காக மனிதன் கயிற்றிலே நடக்கிறான் பாரு”. ஒரு சாண் வயிறு இல்லாவிட்டால் இவ்வுலகில் ஏது கலாட்டா…. நமது முழுவாழ்க்கையின் ... Read More »

இலக்கு

இலக்கு

வாழ்வில் நமக்கு இலக்கு தேவைதான். இலக்கு நோக்கியே இயக்கம் என்றாகும் போது ‘எதை நோக்கி ஏன் போகிறோம்’ என்று புரியாமல் இயந்திரங்களாகி விடுகிறோம். சிலர் இலக்குகளை மீறி இலக்குகளை நினைத்து தன்னில் வெறியேற்றிக் கொள்கிறார்கள். அப்போது ஆசை, அச்சம் என்று பலப்பல மேகங்களை மீறி உண்மையின் ஒளி வெளிவரும். அதன் தெளிவில் பாதையும் தெரியும்; பயணமும் புரியும்; வாழ்க்கையும் அமைதி அடையும். ஒரு முழுமையான வாழ்வான இதனை அடைய மனதினை முழுமையாக நம் வசமாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் நம் மனதும் இலக்கும் ஒன்றாக ... Read More »

குழப்பம் குருவே குழப்பம்!

குழப்பம் குருவே குழப்பம்!

புகழ்பெற்ற துறவி அவர். அவருக்கு ஏராளமான மாணவர்கள். ஒருநாள், அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘குருவே, எனக்கு ஒரு குழப்பம்,’ என்று ஆரம்பித்தார் மாணவர். ‘என்ன?’ ‘நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன். கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையையும் தருகின்றன. அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்!’ ‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி… இதில் என்ன குழப்பம்?’ ‘நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக ... Read More »

இன்று: நவம்பர் 16

இன்று: நவம்பர் 16

1532: தென் அமெரிக்காவில் இன்கா சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னரான அதாஹுவல்பா ஸ்பானிய தளபதி பிரான்சிஸ்கா பிஸாரோவின் படைகளினால் கைது செய்யப்பட்டார். 1943: ஜேர்மனியில் நோர்வேயினால் நிர்வகிக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையமொன்றின் மீது அமெரக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. 1944: ஜேர்மனியின் டுயெரென் நகரை  நேச நாடுகளின் படைகள் நிர்மூலமாக்கின. 1945: ரொக்கட் தயாரிப்பு தொழில்நுட்பத்திற்காக ஜேர்மனிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியிலாளர்களை அமெரிக்க இராணுவம் இரகசியமாக இணைத்துககொண்டது. 1945: யுனெஸ்கோ அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. 1965: சோவியன் யூனியனின் வெனேரா 3 ... Read More »

வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?

வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர். என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்? கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் ... Read More »

இன்று: நவம்பர் 15

இன்று: நவம்பர் 15

1913 – இலக்கியத்திற்கான நோபல் பரிசு ரவீந்திரநாத் தாகூருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 1937 – முதன் முதலாக சுருக்கெழுத்து முறையை சர். ஐசக் பிட்மென் வெளியிட்டார். 1949 – நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். 1988 – பாலஸ்தீன நாடு பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டது. 2000 இந்தியாவின் 28வது மாநிலமாக ஜார்க்கண்ட் உருவானது.   Read More »

படிச்சாலும் ஜீரோ???

படிச்சாலும் ஜீரோ???

ஓர் உச்சிவெயில் காலத்தில் மெக்காலே என்ற மேற்கத்தியதையல்காரன் தைத்துக் கொடுத்த பருத்திக் குல்லாய், இந்த அடைமழைக்காலத்துக்கு உகந்தது எனச்சொல்லி, அப்பா என்றழைக்கப்படும் ஆசிரியர் என்றழைக்கப்படும் அதி மேதாவிகளாலும் மாணவர்களுக்கு அணிவிக்கப்பட்டுக்  கொண்டிருக்கிறது.     அடிமை இந்தியாவின் 40 கோடி மக்களை  அரசாண்டவர்கள் வெறும் 15,000 ஆங்கிலேயர்கள். அந்த 15,000 பேருக்கும் சேவகம் செய்ய பியூன் என்ற கடைநிலை ஊழியர்கள் தேவைப்பட்டனர். அவர்களை உருவாக்க கண்டுபிடிக்கப்பட்டதுதான் மெக்காலேகல்விமுறை.       ஒரு பியூனுக்காக அளவெடுத்து வடிவமைத்த சீருடையை நாட்டின் கலெக்டர் முதல் டாக்டர் வரை அனைவருக்கும் அணிவித்தால் என்ன நடக்குமோ அதுதான் இன்று நடக்கிறது.   மெக்காலே முறை கல்விமுறை பல அறிவாளிகளுக்குப்பொருந்தாமல் பரதேசிக் கோலத்தையே தந்திருக்கின்றன. உதாரணமாக, ஒரு உலகப்புகழ் பெற்ற இந்தியரின் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் கீழே…   ஆங்கிலம் 200க்கு 89   குஜராத்தி 100க்கு 45.5   கணிதம் 175க்கு 59   பொது அறிவு 150க்கு 54   மொத்தம் 625க்கு 247.5   39.6% மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து மயிரிழையில் தேர்ச்சியடைந்த அந்த மக்கு மாணவனின் பெயர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. மெக்காலே கல்விமுறையின் ‘தரத்துக்கு‘ இதைவிட வேறு சான்றுகள்வேண்டுமா..?     ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தேர்வு முடிவுகளால்இந்தியாவெங்கும் சுமார் 2,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். படித்தவர்கள் மிகுந்த மாநிலமான கேரளாவில்தான் அதிகஎண்ணிக்கையில் தற்கொலைகள் நடக்கின்றன.   படித்தவர்கள் குறைவாக உள்ள பீகாரில் தற்கொலைகள் மிகஅரிதாகவே நிகழ்கின்றன. கல்வி கற்றுத்தந்தது என்ன? பந்தையக் குதிரைகளுக்குஓடுவதைத் தவிர வாழ்வில் வேறு எதுவுமே தெரியாது. அவைகளால் பாரம் சுமக்கக்கூட முடியாது. அதனால்தான் அவை கால் ஒடிந்துபோனால் மனமும் உடைந்து போகின்றன.   பணம் தேடும் பந்தயக் குதிரைகளாக மாணவர்களை மாற்றும் இந்த கல்விமுறை, வாழ்க்கையின் ஆழத்தை அளந்துசொன்னதில்லை.   உலகின் தேர்ந்த பொறியாளர்கள் அனைவருக்கும் ஈபிள் டவர்தான் கனவுக் கட்டடம். உலகத்தின் மிகப்பெரிய எஃகு கோபுரமான ... Read More »

ஒண்ணை விட ஒண்ணு…!

ஒண்ணை விட ஒண்ணு…!

ஒரு ஊரில் ஒரு கல்வெட்டி இருந்தான். கல்லுடைப்பது அவன் வேலை. வருமானம் போதவில்லை. வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது அவனுக்கு. ஒரு நாள், அவன் போன வழியில் ஒரு பணக்கார வீடு தென்பட்டது. அந்த வீட்டின் வாசல் வழியே அவன் கண்ணில் பட்ட அத்தனை பொருள்களும் செல்வங்களும் அவனை விழிபிதுங்க வைத்தன. அடடா.. அந்த பணக்காரனுக்கு எத்தனை செல்வாக்கு… என நினைத்தான். பணக்காரன் மீது பொறாமையாக இருந்தது. தனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் எப்படியிருக்கும்? என நினைத்துப் ... Read More »

இந்திய வரலாற்றில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்

இந்திய வரலாற்றில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்

கி மு 3102 – கலியுகம் ஆரம்பம் கி மு 3000 – சிந்து சமவெளி நாகரீகம் (மொஹஞ்சதாரோ-ஹாரப்பா) கி மு 2500 – வேதங்கள் இயற்றப்படுதல் கி மு 2000 – ஆரியர் வருகை கி மு 0800 – இதிகாசங்கள், உபநிஷத்துக்கள் இயற்றப்படுதல் கி மு 0567 – கௌதம புத்தர் பிறப்பு கி மு 0550 – மகாவீரர் பிறப்பு கி மு 0480 – புத்தர் நிவாணம் அடைதல் கி மு ... Read More »

Scroll To Top