உண்மை சம்பவம்.!!??

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்து க்கொண்டான். அக்காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோப மடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டு பிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்ட வசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை ... Read More »

சூரிய குடும்பம் – 2

சூரிய குடும்பம் – 2

சூரிய குடும்பம் 2 எனும் இத்தொடரில் வானில் சூரியனுக்கு அடுத்து ஓளி கூடிய பொருளாகத் தென்படும் பூமியின் உபகோளான சந்திரனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். பூமியின் ஒரே ஒரு துணைக் கோளான சந்திரன் சூரிய குடும்பத்தில் ஐந்தாவது மிகப் பெரிய துணைக் கோளாகும். இது சூரியனில் இருந்து மிக அதிக தொலைவிலுள்ள ஒன்பதாவது கிரகமான புளூட்டோவை விட பெரியது என்பது குறிப்பிடத் தக்கது. சூரிய குடும்பத்தின் ஏனைய கிரகங்களை விட பூமிக்கு மிக அருகில் சந்திரன் உள்ளது. ... Read More »

பிரபஞ்சவியல்!!! –  பாகம் 4

பிரபஞ்சவியல்!!! – பாகம் 4

பிரபஞ்சவியல் எனப்படும் Cosmology——நான்கு நட்சத்திரப் பயணங்கள் தொடரின் புதிய அத்தியாயமான பிரபஞ்சவியலில் (Cosmology) தற்போது பிரபஞ்சத்தின் முக்கிய அம்சங்களான கரும் சக்தி மற்றும் கரும் பொருள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். சென்ற தொடரில் கரும் பொருள் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பார்த்தோம். இன்று இது பற்றிய மேலதிக தகவல்களையும் இதன் சிறப்புக்களையும் பார்ப்போம். பால்வெளி அண்டத்திலுள்ள கரும்பொருள் (The Amount of Dark Matter Inside Milkyway Galaxy) பிரபஞ்சத்தில் கரும் பொருள் சாதாரண கண்ணுக்குத் தெரியும் ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 13

மனிதனுடைய கீழ் மனசு காமலோகத்தில் சுத்தப்படுத்தப்படும் என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதன் பின்னர் அவனிடம் சட உலகில் இருந்த உயர்ந்த எண்ணங்களும், தன்னலமற்ற மனப்பாங்குமே சுவர்க்கத்துக்கு அவன் செல்லும்போது கூடவருகின்றன. சமய ஈடுபாடு கூடிய ஒருவருக்கு அவருக்கேற்ற சுவர்க்கம் கிட்டுகிறது. கடவுள் வணக்கத்தில் இன்பம் கண்டவருக்கு சடஉலகில் பல்வேறு தடைகள் கிலேசங்கள் சௌகரியங்கள் அவருடைய தெய்வவழிபாட்டுக்கு இடைஞ்சல்களாக இருந்திருக்கும். சுவர்க்கத்தில் எல்லாவித இடர்பாடுகளும் நீங்கப்பெற்று தெய்வ வழிபாட்டுக்கு அனுகூலமான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அதுவே அவருக்கு ... Read More »

உண்மை சம்பவம்.!!??

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலு ம் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர் ட்டோ. இருவர் மனைவியர் பெயரு ம் மார்கரிட்டா. அந்த மன்னர் முடி சூட்டிய ... Read More »

சூரிய குடும்பம் – 1

சூரிய குடும்பம் – 1

இத்தொடரில் நமது பூமி அமைந்திருக்கும் பால்வெளி (Milky way)அண்டத்தின் உள்ளே உள்ள சூரிய குடும்பம் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்வோம். வட்ட உருளை எனும் (Disk) ஆகவும் உருளை எனப்படும் (sphere) ஆகவும் இரு பரிமாணங்களில் ஆராயப்படும் பால்வெளி அண்டம் 75 000 ஒளி வருடங்கள் நீளமான விட்டம் உடையது. கிட்டத்தட்ட 200 பில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இப் பால்வெளி அண்டம் பிரபஞ்சத்தில் உள்ள ஏனைய அண்டங்களுடன் ஒப்பிடுகையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. மேலும் நமது பால்வெளி ... Read More »

கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.????

விஞ்ஞானம்,மருத்துவம் வளர்ந்துகொண்டே போகிறது ஆனால் மனிதன் முன்னேறுகிறானா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது வளர்ச்சி என்பது மனிதனை அழிப்பதாக இருந்தால் அது வளர்ச்சியல்லவே இன்றைய காலத்தில் முன்னைய காலத்தில் இருந்த மருத்துவத்தை விட எத்தனையோ மடங்கு முன்னேறிவிட்டது ஆனால் மனிதனின் சராசரி ஆயுட்காலம்,ஆரோக்கியம் முன்பை விட வளர்ச்சியடையவில்லை எந்த விதத்தில் எங்கள் வளர்ச்சி இருக்கிறது??? நிற்க.. கருவில் இருக்கும் 3மாத பெண் குழந்தை அப்பாவாகியது.இது சாத்தியமில்லையா? ஏன் சாத்தியமில்லை ???????? சாத்தியமாம் விஞ்ஞானம் சொல்கிறது. ... Read More »

பிரபஞ்சவியல்!!! – பாகம் 3

பிரபஞ்சவியல் எனப்படும் Cosmology——3 நமது நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரின் புதிய அத்தியாயமான பிரபஞ்சவியல் பகுதியில் முதல் இரண்டு தொடர்களிலும் கரும் சக்தி (Dark energy) பற்றிய சுருக்கமான மற்றும் தெளிவான விளக்கத்தைப் பார்த்தோம். இன்றைய தொடரில் அதன் ஜோடியான கரும் பொருள் (Dark matter) பற்றிய விபரங்களைப் பார்ப்போம். நாம் வாழும் பூமி உட்பட இந்த பிரபஞ்சத்தில் மிக அதிகளவு கனவளவைத் (74%) தன்வசம் கொண்டிருப்பது கரும் சக்தி. இதைப் போல் அதிகளவு திணிவைத் தன் ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 12

முந்தைய பதிவுகளில் குறிப்பிட்ட இரண்டாவது படிநிலையில் உள்ளவர்கள் இங்கு வாழ்ந்த பொழுது கீழ்த்தர ஆசைகள், சிற்றின்பக் கேளிக்கைகள், மிருகத்தனமான இச்சைகள் ஆகியவைகளுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தவர்கள். இறந்த பின்னர் இந்த இன்பங்ளை அனுபவிக்க இயலாத நிலையில் அவைகளுக்காக ஏங்கி அல்லல்படுவர். இவர்கள் சிறிதளவேனும் ஆன்மீக ஈடுபாடு இல்லாது வாழ்ந்தவர்கள். மூன்றாவது நாலாவது படிநிலைகளில் உள்ளவர்கள் சிறிது முன்னேறிய ஆத்மாக்கள். இவர்களுக்கு பூவுலகுடன் தொடர்புகொள்ள நாட்டமிருந்தாலும் (Earth Stimuli) இங்குள்ளவர்கள் அவர்களை நோக்கித் தங்கள் பலம் வாய்ந்த உணர்ச்சிபூர்வமான சிந்தனை ... Read More »

15 நிமிடத்தில் விண்வெளியை அடையும் விண்கலம்!!!

15 நிமிடத்தில் விண்வெளியை அடையும் விண்கலம்!!!

லண்டன்: ஸ்கைலான், வெறும் 15 நிமிடங்களில் விண்வெளியை அடையும் ஒரு புரட்சிகரமான விண்கலத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளனர். ஒலியின் ஐந்து மடங்கு விட வேகம் வாய்ந்த இந்த விண்கலம் ஒரு மணி நேரத்திற்கு 30,577.5 கிமீ (19,000 மைல்கள்) வேகத்தில் பயணிக்கும். இந்த விண்கலத்தை தயாரிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கம் $60 மில்லியன் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட் பொறிக்கு Sabre என்று பெயர் வைத்துள்ளனர். விமான இயந்திரங்கள் காற்றில் இருந்து ஆக்சிஜன் மற்றும் திரவ ... Read More »

Scroll To Top