கால எந்திரம் என்னும் அதிசயம்

எந்திரம் ஒன்றின் மூலம், நாம் கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் செல்லமுடியுமா என்ற அற்புதமான கற்பனை மூலம் உருவானதுதான் இந்த “கால எந்திரம்” (Time Machine) என்னும் ஆராய்ச்சி. இந்த எந்திரம் உருவாக்கப்படுவது சாத்தியமா, இல்லையா என்கிற விவாதம் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. சில விஞ்ஞானிகள் அதற்கான முயற்சிகளில் இன்னும் ஈடுபட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள்.ஒருவர் ஒளியின் திசைவேகத்தில் (அதாவது, ஒரு நொடிக்கு 1,86,000 கிலோமீட்டர்கள்) பயணம் செய்ய முடிந்தால் அவரால் இறந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ செல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் ... Read More »

கற்றாழை உடல்நல நன்மைகள்

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள். கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை ... Read More »

உடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்

ஆளரவமற்ற அரையிருட்டுச் சந்து. நீங்கள் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கிறீர் கள். திடீரென ஒரு காலடியோசை உங்களைப் பின்தொடர்கிறது. திரும்பிப் பார்த்தால், முக மூடியணிந்த ஒரு மனிதன் உங்களை நோக்கி வேக வேகமாக வந்து கொண்டிருக்கிறான். தலைதெறிக்க ஓட ஆரம்பிக்கிறீர்கள். உங்களால் அப்படி ஓட முடியும் என்று அதற்கு முன் உங்களுக்கே தெரியாது. உங்களுக்குள் பய எச்சரிக்கை மணியை அடித்து, ஓடத் தூண்டியது எது? அதுதான் `அட்ரினல்’ சுரப்பி! சிறுநீரகங்களின் மேல் கொழுப்பு அடுக்குக்குள் பதுங்கிக் கிடக்கிறது, ... Read More »

விஷத்தை உட்கொள்ளும் விசித்திர கிளிகள் ( MACAW )

சில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன. இது, தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, தாவரங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு முறையாகும். இருப்பினும் அமெரிக்காவில் வாழும் ஒருவகை கிளியினம் இதுபோன்ற விஷமுள்ள விதைகளை உணவாக உட்கொள்கிறது. இது மிகவும் வியப்புக்குரிய செயலாகும்! ஏனெனில் தாவரங்களை உணவாக உட்கொள்ளும் மற்ற விலங்கினங்கள் இந்தச் செடியின் பக்கம் தலைகாட்டவே பயப்படும்போது, இந்தப் பறவையினம் மட்டும் தொடர்ந்து விஷமுள்ள இந்த விதைகளை உணவாக உட்கொண்டும் எந்த விதப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லை. ... Read More »

டைனோசரை வேட்டையாடிய அனகோண்டா !

அனகோண்டா பாம்புகளும், டைனோசர்களும் பிரம்மாண்ட தோற்றம் உடையவை. டைனோசர்கள் மற்ற எல்லா உயிரினங்களையும் வேட்டையாடும் திறன் உடையவை என்பது நமக்குத் தெரியும். ஆனால் அனகோண்டா பாம்புகள், குட்டி டைனோசர்களையே வேட்டையாடி உள்ளன என்று இப்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே அதற்கான தடயங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைச் சேர்ந்த தொல்லியல் நிபுணர் தனஞ்ஜெய் மொகாபே, 1980 முதல் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு புதை படிவங்களை சேகரித்து ஆய்வு செய்து வந்தார். இவருக்கு 1987-ம் ... Read More »

நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்!

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள துங்குஸ்கா ஆற்றுப்படுகை அருகே 1908 ம் ஆண்டு நடந்த ஒரு இயற்கை அதிசயம் 100 ஆண்டுகளாக மர்மமாகவே நீடிக்கிறது. ‘துங்குஸ்கா நிகழ்வு’ என்று அறிவியலறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பற்றிய மிகச்சரியான விளக்கம் இதுவரை யாராலும் அளிக்கப் படாததே இதற்குக் காரணமாகும். 1908ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி காலை 7.17 மணி. ரஷ்யாவின் மத்திய சைபீரியா பகுதியில் இருந்த மக்கள் அடிவானிற்கு மேலே நீலம் கலந்து வெண்மையுடன் ஒளிரும் பொருள் ஒன்றைக் ... Read More »

தொண்டையை காப்பாற்றுங்கள்

தொண்டைக்கு வரும் பாதிப்புகளையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் சொல்கிறார் டாக்டர் எம்.என்.சங்கர். பொதுவாக தொண்டையில் என்னென்ன பாதிப்புகள் வரும்? பொதுவாக தொண்டை நோய்களைப் பற்றி ஆராயும் போது அநேகம் பேரை பாதிப்பவை இவை என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தைகளுக்கு தொண்டையில் சதை வளருதல், பெரியவர்களுக்கு தொண்டை வலி, சரியாக உணவு உண்ண இயலாமை, குரல் மாற்றம், தொண்டையில் புற்றுநோய், வாய்ப்புண், பான்பராக்கினால் வரும் வியாதிகள், இவை தான் முதலில் எனது ஞாபகத்திற்கு வருகின்றன. குழந்தைகளுக்கு தொண்டையில் ... Read More »

பாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது!.

ஒவ்வொரு நாளும் புதிதான மற்றும் ஆர்வமான ஒன்றை கற்றுக்கொள்ளும் படிப்பாக, பாரன்சிக் சயின்ஸ் படிப்பு திகழ்கிறது. குற்றப் புலனாய்வு நடவடிக்கையிலும், அதனையடுத்த நீதி வழங்கும் நடவடிக்கைகளிலும், ஒரு முக்கிய அம்சமாக பாரன்சிக் சயின்ஸ் திகழ்கிறது. சூழல் குற்றங்களை புலனறியவும், அதனை சரியான முறையில் கண்டறியவும், தூய அறிவியலைப் பயன்படுத்தும் செயல்பாட்டிற்கு பெயர்தான் பாரன்சிக் சயின்ஸ். இன்றைய நிலையில், நடைமுறையில் பார்த்தால், பயன்பாட்டில் இருக்கும் பாரன்சிக் அறிவியல் தொழில்நுட்ப சேவைகள், தேவைக்கு ஏற்றாற்போல் போதுமானதாக இல்லை. இத்துறை நிபுணர்களுக்கு ... Read More »

இணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா?

நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய உலகில் அனைத்துத் துறைகளும் கணினிமயம் ஆவதுடன், உலகில் எந்த மூலையில் இருந்தும் சேவைகளைப் பெறுமாறு இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. வங்கியியலும் இதிலிருந்து விதிவிலக்காக முடியுமா என்ன? இன்று அனைத்துப் பிரபலமான வங்கிகளும் தமது வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய சேவைகளான மின்சாரப் பயனீட்டுக்கட்டணம், ரயில் பயணச்சீட்டு, விமானப்பயணச்சீட்டு எனப் பல சேவைகளுக்கான கட்டணத்தை இணையத்தின் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் பயன்பெறுமாறு தமது வங்கிக்கணக்கு வசதிகளை அமைத்துள்ளன. இதற்காக தனது வங்கிக்கணக்குகளை ... Read More »

புயல்களுக்கு பெயர்வைக்கும் முறை எப்படி வந்தது?

1970ல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டின்போது, பசிபிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி அந்த பகுதியை சேர்ந்த நாடுகளை உலக வானிலை அமைப்பு முதல் முறையாக கேட்டுக் கொண்டது. அதேபோல், வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி, 2000ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு & ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மாநாட்டில் இந்த பகுதியில் அமைந்துள்ள நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. அதன்படி, வடக்கு இந்திய பெருங்கடல் ... Read More »

Scroll To Top