அமானுஷ்யன் – 44

ஆனந்தின் கண்கள் கலங்கியதையும் என்ன சொல்லலாம் என்று தவித்ததையும் கண்ட அக்‌ஷய் புன்னகையுடன் அண்ணனைத் தட்டிக் கொடுத்தான். “அதில் ஒன்றும் தப்பில்லை. ஏன் என்றால் உன் நிலைமையில் நான் இருந்தாலும் அதைத் தான் செய்திருப்பேன்.” ஆனந்த் அப்போதும் சமாதானமாக முடியாமல் தவித்தான். அக்‌ஷய் வாய் விட்டு சிரித்தான். ஆனந்த் கேட்டான்.”உன்னால் எப்படி இந்த நிலைமையிலும் சிரிக்க முடிகிறது?” “ஏதாவது ஒரு நாள் எல்லோரும் இறந்துதான் ஆக வேண்டும் என்கிற உண்மை எனக்கு விளங்கி இருக்கிறதால்தான்” எல்லா தத்துவங்களையும் ... Read More »

அமானுஷ்யன் – 43

ஆனந்த் ஜெயின் தன்னை அழைத்து ஆச்சார்யா கொலை வழக்கை ஒப்படைத்ததில் இருந்து ஆரம்பித்து விவரமாகச் சொல்ல அக்‌ஷய் உன்னிப்பாக அனைத்தையும் கேட்டான். ஆச்சார்யா வீட்டில் அவர் புதிதாக வாங்கி இருந்த ஒரு ஜென் புத்தகத்தினுள் டெல்லி வரைபடத்தில் ஏழு இடங்கள் குறிக்கப்பட்டிருந்தது என்று ஆனந்த் சொன்னபோது, அக்‌ஷய் அந்த இடங்களைச் சொல்லும்படி ஆர்வமாகச் சொன்னான். ஆனந்த் சொன்னான். “சாந்த்னி சௌக், ரயில்வே ஸ்டேஷன், பாரகம்பா ரோடு, லோட்டஸ் டெம்பில், சன்சாத் மார்க், கனாட் ப்ளேஸ், இந்தியா கேட்.” ... Read More »

அமானுஷ்யன் – 42

அக்‌ஷயிற்கு கேட்டதை எல்லாம் மனதளவில் ஜீரணிக்க சற்று நேரம் தேவைப்பட்டது. அந்தத் தாயின் குரலில் தொனித்த துக்கமும், அவள் மிகச் சரியாக சொன்ன விவரங்களும் அவனை திகைப்பில் ஆழ்த்தியிருந்தன. கடந்த காலம் என்ன என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டவனுக்கு, கடந்த காலத்தின் கடந்த காலம் தெரிய வந்தது அவனை நிலை குலைய வைத்தது. ஆழ்ந்த சிந்தனையால் அவன் சிலைபோல் அமர்ந்திருந்தான். ஆனந்த் குழப்பத்தோடு அக்‌ஷயைப் பார்த்தான். ‘இன்னும் என்ன யோசிக்கிறான்?’ என்று நினைத்தவனாய் மெல்ல கேட்டான். “இந்தக் கட்டை ... Read More »

அமானுஷ்யன் – 41

ஆனந்திற்குத் தன்னைக் கண்காணிக்கும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமானது ஏன் என்று புரியவில்லை. சிபிஐ உயர் அதிகாரி ஒருவனுக்குத் தன்னை யாராவது பின் தொடர்ந்தாலோ, கண்காணித்தாலோ தெரியாமல் போக வாய்ப்பேயில்லை என்று தெரிந்தும் அதற்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படித் தெரிந்தாலும் பரவாயில்லை என்று ஆரம்பத்தில் ஓரிரு ஆட்களை ஏற்பாடு செய்திருந்தவர்கள் இப்போது கூடுதலாக ஆட்கள் போட்டிருப்பது எதனால் என்று யோசித்தும் அவனுக்கு விளங்கவில்லை. டாக்சியில் சிபிஐ அலுவலகத்திற்குப் போய்க் கொண்டிருந்தவனுக்கு ... Read More »

அமானுஷ்யன் – 40

அக்‌ஷய் கிளம்பிப் போன பிறகு சஹானாவின் வீட்டில் மயான அமைதி நிலவியது. வருண் கூட உறக்கத்தில் இருந்து எழுந்தவன் யாரிடமும் ஒன்றும் பேசவில்லை. அக்‌ஷயின் பெட்டி, துணிமணிகள் எதுவும் அறையில் இல்லை என்பதை எழுந்தவுடனேயே கவனித்தவன் ஒன்றுமே பேசாமல் தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான். மகன் முகத்தில் தெரிந்த துக்கத்தை சஹானாவால் சகிக்க முடியவில்லை. தானாகக் குளித்து தானாக உடை மாற்றிக் கொண்டு பாட்டி மேசையில் வைத்த டிபனை விழுங்கி விட்டு ஒரு நடைப்பிணமாக வருண் பள்ளிக்கு ... Read More »

அமானுஷ்யன் – 39

அக்‌ஷய் தன்னைப் பின் தொடரும் போலீஸ்காரனை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ளாமல் நடந்தான். சுமார் 15 நிமிடங்கள் வேகத்தைக் குறைத்தும், அதிகரித்தும் அவன் நடந்தபோது அந்த போலீஸ்காரனும் அதே போல் செய்து கிட்டத்தட்ட ஐம்பது அடி தூரத்திலேயே இருந்தான். அந்த போலீஸ்காரன் பார்வையில் இருந்து மறைவது அக்‌ஷயிற்கு முடியாத காரியம் இல்லை. ஆனால் அப்படி மறைந்தால் அவன் மேல் சந்தேகம் அவர்களுக்கு அதிகரிக்கும். அவனைப் பற்றி அதிகமாக சஹானாவிடம் குடைவார்கள். அவளைத் தொந்திரவு ... Read More »

அமானுஷ்யன் – 38

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இது வரை இப்படிப்பட்ட பிறந்த நாள் விழா கொண்டாடப்படவில்லை என்கிற அளவு வருணின் பிறந்தநாள் விழா அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டது. மொட்டை மாடி அலங்கார விளக்குகளால் ஜொலித்தது. வருணின் அப்பா இருந்த போது தடை செய்யப்பட்ட நண்பர்கள் பலர் உற்சாகமாக வந்திருந்தனர். காலை பள்ளி செல்லும் போது அம்மா வாங்கித் தந்த புதிய ஆடையை அணிந்து கொண்டு போன வருண், மாலை விழாவிற்கு அக்‌ஷய் வாங்கித் தந்த ஆடையை அணிந்து கொண்டான். நண்பர்கள் அனைவரிடமும் ... Read More »

அமானுஷ்யன் – 37

வருணின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்தின் முழுப் பொறுப்பையும் அக்‌ஷய் தான் மேற்கொண்டிருந்தான். அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள வருணின் அனைத்து நண்பர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தன் பிறந்த நாளுக்கு வரும்படி வருண் அழைத்திருந்தான். வருணின் தந்தை இருந்த வரை அவன் சில குறிப்பிட்ட வீடுகளை மட்டும்தான் கூப்பிட அனுமதி உண்டு. வருணின் நண்பர்களிலேயே சிலர் பிறந்த நாள் விழாவுக்கு வர அனுமதி கிடையாது. “அந்தப் பையன் பொறுக்கி மாதிரி இருக்கிறான்”, “இந்தப் பையன் அம்மாவின் கேரக்டர் ... Read More »

அமானுஷ்யன் – 36

“எனக்கும் ஆரம்பத்தில் அவன் மேல் சந்தேகம் இருந்தது சார். ஆனால் அவன் அந்தத் தீவிரவாதியாகக் கண்டிப்பாக இருக்க முடியாது சார். இவன் ஆக்ராவில் ஒரு முஸ்லீம் பெண்ணைக் காதலித்துக் கொண்டிருக்கும் ரோமியோ சார். வாயைத் திறந்தால் மூட மாட்டேன்கிறான். இவன் அவளைக் கல்யாணம் செய்து கொள்ள தவித்துக் கொண்டிருக்கிறான். இவனை சஹானா பக்கத்து வீட்டுக்காரருக்கெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. இவனை மட்டுமல்ல. இவன் காதலைக் கூட அந்த ஆள் தெரிந்து வைத்திருக்கிறார். இவன் கல்யாணத்தை எப்படியாவது நடத்திக் கொடுக்க ... Read More »

அமானுஷ்யன் – 35

அக்‌ஷய் அந்த மீசைக்காரரின் சந்தேகத்தைக் கவனித்தாலும் அலட்டிக் கொள்ளவில்லை. சஹானாவிடம் சொன்னான். ”சஹானா. நான் அவனைப் பற்றி சந்தேகப்பட்டது எல்லாம் உண்மையாகி விட்டது பார்த்தீர்களா. இனியாவது வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி விடாதீர்கள்” சஹானா ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். ஆரம்பத்தில் இருந்து அலட்டாமல், பதறாமல் சற்று சோம்பலாக சோபாவில் சாய்ந்து கொண்டு பேச அவனால் எப்படி முடிகிறது என்று அவள் திகைத்தாள். ”சஹானா. உங்கள் டிவி ரேட்டிங் உடனடியாக ஒரு வழி சொல்கிறேன் கேளுங்கள். அந்தத் ... Read More »

Scroll To Top