ஹிட்லரின் நாஜிப் படையினரால் உலகப் போர் காலகட்டத்தில் பல சித்திரவதை, கொலை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. அங்கு அடைக்கப்பட்டவர்கள் மொத்தம் மொத்தமாகக் கொன்று குவிக்கப்பட்டனர். அப்படி, போலந்து நாட்டின் அவுஷ்விட்சிலும் ஜெர்மானிய நாஜிக்கள் ஒரு கொலை முகாமை ஏற்படுத்தினர். 1940-1945 காலகட்டத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த முகாமில் கொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோனோர் யூதர்கள். இங்கே உயிருடன் எஞ்சியிருந்தவர்களை சோவியத் படையினர் விடுவித்தனர். அந்த நிகழ்வின் 70-வது ஆண்டு நிறைவு தினம் சமீபத்தில் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, முகாமில் ... Read More »
பூமிக்கு அருகே வந்த சிறுகோளின் நிலவு
February 7, 2015
எல்லையற்றுப் பரந்து விரிந்திருக்கிற விண்வெளியில் புதிர்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் குறைவில்லை. அதனால் விண்வெளி தொடர்பான ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் கடந்த வாரம், பூமிக்கு அருகே வந்த ஒரு சிறிய கோளுக்கு தனி நிலவு இருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர். ஏறக்குறைய ஒரு பெரிய சொகுசுக்கப்பல் அளவுக்கு இருக்கும் இந்த சிறுகோளை நாசாவின் ரேடார்கள் படம் பிடித்திருந்தன. அவற்றை ஆராய்ந்தபோது, அந்தச் சிறுகோளின் வெளிவட்டப்பாதையில் ஒரு நிலவு சுற்றிவருவதை தாங்கள் கண்டறிந்திருப்பதாக நாசா ... Read More »
நீல நிற நிழல்கள் (16)
February 7, 2015
மாசிலாமணியின் இதயம் ஒருமுறை உதைத்துக் கொண்டது. டெலிபோன் ஆபரேட்டர் பெண்ணைத் தவிப்பாய் ஏறிட்டார். “இதோ பாரம்மா! டாக்டரம்மாகிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேச வேண்டியிருக்கு. நீ ஏதாவது ஏற்பாடு பண்ணமுடியாதா?” “ஸாரி சார்! நான் இந்த இடத்தை விட்டு அசையக் கூடாது. நீங்க லேபர் ரூமுக்குப் போய்க் கதவுக்கு முன்னாடி நில்லுங்க… ஏதாவது ஒரு காரணத்துக்காக நர்ஸ்கள் வெளியே வரலாம். அவங்ககிட்ட தகவலைச் சொல்லி அனுப்புங்க.” மாசிலாமணி வியர்த்த முகத்தைத் துடைத்துக் கொண்டே திலகத்திடம் வர… ... Read More »
நீல நிற நிழல்கள் (15)
February 7, 2015
மயக்கம் தெளிந்து எழ முயற்சித்துக் கொண்டிருந்த ஹரிஹரனை நோக்கி வேகமாய் நகர முயன்ற ஜோஷியைக் கையமர்த்தினாள் ஆர்யா. “சார்! அந்த ஆளை இப்போ என்ன பண்ணப் போறீங்க?” “இவனோட வாய்க்குப் பிளாஸ்டர் ஒட்டி, ரெண்டு கையையும் பின்னுக்கு மடக்கிக் கட்டணும். இல்லேன்னா கார்ல அவனை டாக்டர் வீட்டுக்குக் கொண்டுட்டுப் போறது சிரமமாயிடும்.” “அந்த இம்சை அவனுக்கு வேண்டாம்…” “பின்னே…?” “அவனை மறுபடியும் மயக்கத்துக்குக் கொண்டுட்டுப் போயிடலாம்.” “எப்படி?” “கார் டேஷ்போர்டுக்குள்ளே எப்பவுமே ஸெடடீவ் இஞ்செக்ஷன் ரெடியா இருக்கும். ... Read More »
நீல நிற நிழல்கள் (14)
February 7, 2015
“என்ன சொன்னே… டெலிபோன் டைரக்டரியைப் புரட்டி நம்பர் தேடிட்டிருந்தாரா?” இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா குரலை உயர்த்திக் கொண்டு கேட்க, பேரர் யாதவ் தலையசைத்தான். “ஆமா ஸாப்!’ “நம்பர் கிடைச்சு போன் பண்ணினாரா?” “இல்லை. சாப்பாட்டுத் தட்டை நான் உள்ளே கொண்டுபோய் டீபாய் மேலே வெச்சதும் டைரக்டரியை அப்படியே போட்டுட்டுச் சாப்பிட வந்தார். நான் கீழே கேட்டரிங் செக்ஷனுக்குப் போய்ப் பால் கொண்டு வர்றதுக்குள்ளே, அவர் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு டெலிபோனுக்குப் பக்கத்துல உட்கார்ந்து டயல் எண்களைத் தட்டிக்கிட்டு இருந்தார். நான் ... Read More »
நீல நிற நிழல்கள் (13)
February 7, 2015
கமலா நேரு பார்க்குக்குப் பின்புறம் இருந்த ஜோஷியின் பங்களா போர்டிகோவில் ஆர்யா காரை நிறுத்தியபோது அவளுடைய மணிக்கட்டில் இருந்த கடிகாரம் பத்தரை மணியைக் காட்டியது. “வா ஆர்யா! நீ இப்போ இங்கே வந்தது நல்லதாப் போச்சு. கடந்த அரை மணி நேரமா டாக்டர் சதுர்வேதிக்கு போன் பண்ணிப் பேச எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியலை. டெலிபோன் ரெண்டு பக்கமும் ஃபால்ட். மழை கொஞ்சம் விட்டதும் நானே புறப்பட்டு வரலாம்னு நினைச்சேன்…” ஆர்யா நெற்றியைச் சுருக்கினாள். “நீங்க எதுக்காக ... Read More »
நீல நிற நிழல்கள் (12)
February 6, 2015
மனதுக்குள் உறுத்திக் கொண்டிருந்த அந்தச் சந்தேகத்தை இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ராவிடமே கேட்டான் ரமணி. “சார்! என்னோட பிரதர் ஹரிஹரன் ஓட்டல் ரூமைப் பூட்டிக்கிட்டு வெளியே போயிருந்த சமயத்துலதான் துவாரகநாத் கள்ளச்சாவி போட்டு ரூமைத் திறந்து, பொருட்களை எடுத்துட்டுப் போனதா சொன்னீங்க… ஹரிஹரன் யாரையாவது பார்க்கிறதுக்காக வெளியே போயிருக்கிற பட்சத்தில் வாட்ச்சைக் கட்டிட்டுத்தானே போயிருக்கணும். இல்லையா?” “ம்… இருக்கலாம்.” “அப்படி வாட்ச் கட்டிட்டுப் போயிருந்தா அந்த வாட்ச் துவாரகநாத் மணிக்கட்டுக்கு எப்படி வந்திருக்க முடியும்? லாரி மோதிச் செத்துப்போன துவாரகநாத் ... Read More »
நீல நிற நிழல்கள் (11)
February 6, 2015
விட்டல் வியர்த்த முகமாக டாக்டர் சதுர்வேதியையே பார்க்க, அவர் ஆர்யாவை ஏறிட்டார். “கெஸ்ட்டை நான் உள்ளே கூட்டிட்டுப் போறேன். நீ போய் கூல்ட்ரிங்க்ஸுக்கு ஏற்பாடு பண்ணு ஆர்யா!” ஆர்யா தலையசைத்துவிட்டு, இருட்டில் பழகிவிட்ட பார்வையோடு எதன் மீதும் மோதிக்கொள்ளாமால் லாபரட்டரியின் உட்புறத்தை நோக்கி நடக்க, சதுர்வேதி கையிலிருந்த ரிவால்வரை விட்டல் பக்கமாய்த் திருப்பினார். “ம்… வா!” “ச… சார்!… எ… என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க ச… சார்!…” “பயப்படாதே வா!… நிஷாவைத்தானே நீ பார்க்க வந்தே? அவ ... Read More »
நீல நிற நிழல்கள் (10)
February 6, 2015
பம்பாய் சில்வர்ஸாண்ட் ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட் இளைஞன் தனக்கு எதிரில் உட்கார்ந்திருந்த ரமணியைப் பார்த்துக் கொண்டே டெலிபோனில் கீதாம்பரியோடு பேசினான். “மிஸஸ் கீதாம்பரி ஹரிஹரன் ப்ளீஸ்!” “ஹோல்டிங்” “மேடம்! உங்க கணவர் உங்களோடு பேசுவதற்காகக் காத்திருக்கிறார். இணைப்பு தரட்டுமா?” “ப்ளீஸ்…” ரிசப்ஷனிஸ்ட் இளைஞன் ரிஸீவரின் வாயைத் தன் இடது கை விரலால் பொத்திக் கொண்டு, கவலை முகத்தோடு ஏறிட்டான். “சார்! நீங்க சொன்னது போலவே மிஸஸ் கீதாம்பரியிடம் பேசிவிட்டேன். அவர்கள் லைனில் இருக்கிறார்கள்… பேசுங்கள்…” “தாங்க்யூ வெரி மச்!” ... Read More »
நீல நிற நிழல்கள் (9)
February 6, 2015
டாக்டர் சதுர்வேதியும் ஆர்யாவும் மின்சாரம் செத்துப் போயிருந்த அந்தக் கெட்டியான இருட்டில் மேற்கொண்டு நகராமல் அப்படியே நின்றார்கள். சில விநாடி கலக்கமான நிசப்தத்துக்குப் பிறகு, ஆர்யா பிசிறடிக்கிற குரலில் கூப்பிட்டாள். “டாக்டர்…!” “ம்…” “இந்த நேரம் பார்த்து நம்ம ஜெனரேட்டரும் ரிப்பேர். ரெண்டு நாளைக்கு முந்தி ஜெனரேட்டரை ரிப்பேர் பார்க்க வந்த ஆளை ஒரு வாரம் கழிச்சு வரச்சொன்னது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பத்தான் தெரியுது.” “ஆர்யா! அதையெல்லாம் பேசிட்டிருக்க இது நேரமில்லை. டார்ச்சை எடுத்துக்கிட்டு உள்ளே ... Read More »