மெக்சிகோ நாட்டில் வசிக்கும் மொலினா தபியா என்ற 31 வயதுப் பெண் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தன் மகள் பூனைக்குட்டியை வைத்து விளையாடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இரண்டு வயதாகும் மொலினாவின் மகள், சிறிய பூனைக்குட்டி ஒன்றைத் தலைகீழாகப் பிடித்து விளையாடுவது, பூனையை அதட்டுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இருந்தன. உடனே ‘கொஞ்சம்கூட பொறுப்பிலாமல் பூனையைத் துன்புறுத்த அனுமதிப்பதும் அதை வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்வதும் வெட்கக்கேடானது’ என்கிற ரீதியில் பலர் கமென்ட் அளிக்க, ... Read More »
பாகிஸ்தானின் ராணுவ உதவிக்கு ஒபாமா 100 கோடி அமெரிக்க டாலர் ஒதுக்க ஒப்புதல்
February 8, 2015
வாஷிங்டன், பாகிஸ்தான் நாட்டின் ராணுவ உதவிக்காக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா 100 கோடி அமெரிக்க டாலர் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிதியானது தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக பாகிஸ்தானின் மக்கள் மற்றும் ராணுவ நிதி உதவியாகவும், பொருளாதார மேம்பாடு, அணு நிலைப்பாடுகளின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம் உள்ளிட்ட பிற விசயங்களுக்கு பயன்படும். அமெரிக்க காங்கிரசுக்கு பட்ஜெட் ஒப்புதலுக்கான விவரங்களை ஒபாமா அனுப்பியதை அடுத்து மாநில துறை இதனை வெளியிட்டு உள்ளது. கடந்த ... Read More »
‘பயங்கரவாத விவகாரம்’ பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுக்கு சீனா, ரஷியா ஆதரவு
February 8, 2015
பெய்ஜிங், பயங்கரவாதத்திற்கு நிதிஉதவி மற்றும் புகlலிடம் அளிப்பவர்களை தண்டிக்க வலியுறுத்தி ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவர இந்தியா முயற்சித்து வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதியில் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக வலம்வருகின்றனர். மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகளும் பாகிஸ்தானிலே உள்ளனர். பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக எந்தஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மும்பை குண்டுவெடிப்பு தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு எதிராக ... Read More »
மோடியின் வருகையை பிரபலப்படுத்திய சீன மீடியாக்கள் கருத்துகள்
February 8, 2015
பீஜிங், வரும் மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கு முன்பாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சீனாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடனான சுஷ்மா சுவராஜின் சந்திப்பை மையப்படுத்தி அந்நாட்டு செய்தி சேனல்கள், பத்திரிகைகள் விரிவாக செய்திகளை வெளியிட்டுள்ளன. அதுமட்டுமல்ல பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்கள் குறிப்பாக, சில்க் ரோடு பிராஜக்ட்டுகள் பற்றியும் சீன மீடியாக்கள் பரவலாக செய்தி வெளியிட்டிருந்தது. அங்குள்ள அரசால் நடத்தப்படும் நாளிதழான ‘குளோபல் ... Read More »
நீல நிற நிழல்கள் (20)
February 8, 2015
சில விநாடி யோசனைக்குப் பின், ஆர்யா நெற்றியில் சரம் கட்டியிருந்த வியர்வையை இடதுகை ஆட்காட்டி விரலால் வழித்துக்கொண்டே வால் சந்தை ஏறிட்டாள். “வால் சந்த்!…” “அம்மா!…” “டாக்டர் கிடக்கிற கோலத்தைப் பார்த்தா அவர் உயிரோடு இருப்பார்னு எனக்குத் தோணலை… டாக்டரோட மரணத்துக்குக் காரணமான நிஷாவை எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியே தப்ப விட்டுடக் கூடாது. எப்படியாவது அவளை மடக்கியாகணும்!” “இந்தப் பங்களாவுக்குள்ளே போறதுக்குப் பின்பக்கமா ஏதாவது வழி இருக்காம்மா?” “இல்லையே!” “ஏதாவது ஒரு வழியில் நான் பங்களாவுக்குள்ளே ... Read More »
நீல நிற நிழல்கள் (19)
February 8, 2015
“வீ ஆர் ஹெல்ப்லெஸ்!” என்று சொல்லிவிட்டு நகர முயன்ற டாக்டர் மனோரஞ்சிதத்தின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு குரல் தழுதழுத்தாள் திலகம். “டாக்டர், என்னோட மருமகப் பொண்ணை எப்படியாவது காப்பாத்திக் குடுங்க. என் மகன் ஹரி உயிரோடு இருக்கிறான்னு பம்பாயிலிருந்து தகவல் கிடைச்சிருக்கிற இந்த நேரத்துல இவ எங்களை விட்டுட்டுப் போயிடக் கூடாது டாக்டர்!” மனோரஞ்சிதம் உயிரில்லாத புன்னகையொன்றைப் பூத்தாள். “ரெண்டு உயிர்களையும் காப்பாத்தறதுக்கான எல்லா முயற்சிகளையும் எடுத்துக்கிட்டேன். குழந்தை பிறந்ததுக்கப்புறம் கீதாம்பரியோட பல்ஸ் ரேட் சரியில்லை. அதைச் ... Read More »
நீல நிற நிழல்கள் (18)
February 8, 2015
பவ்யமாக எழுந்து கும்பிட்ட அந்த நபருக்கு வயது இரண்டு இருபது இருக்கலாம். முடி கொட்ட ஆரம்பித்துவிட்ட மண்டையில், அஞ்சிய ரோமங்கள் கட்டுப்பாட்டை இழந்து சிலும்பிக் கொண்டு தெரிய, வெளிறிப் போன நிறத்தில் காக்கி பாண்ட், காக்கி சர்ட் அணிந்திருந்தான். முகத்தில் மெலிதாய் ஒரு பயக் கோட்டிங். ஒரு லேசர் பார்வையோடு இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா கேட்டார்: “யார் நீ?” அவன் தன் மார்புக்குக் குறுக்கே இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டான். “ஸாப்! நான் ஒரு டாக்ஸி டிரைவர். என் பேர் சஹாடே. ... Read More »
நீல நிற நிழல்கள் (17)
February 8, 2015
ஆர்யா ஆச்சரியப்பட்டாள். ‘கார் ஹார்ன் கொடுத்தும் டாக்டர் ஏன் வெளிவரவில்லை? ஒருவேளை தூங்கிவிட்டாரோ? மாட்டாரே!’ காரின் பின்ஸீட்டில் உட்கார்ந்திருந்த வால் சந்த் கேட்டான்: “அம்மா, நான் வேணும்னா சுவரேறிக் குதிச்சு உள்ளே போய் டாக்டருக்குக் குரல் கொடுக்கட்டுமா?” “பொறு வால் சந்த்! டாக்டர் லாபரட்டரியில் எதாவது ஒரு முக்கியமான வேலையா இருக்கலாம். ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணிப் பார்ப்போம்!” மூன்றாவது தடவையாக நீளமாய் ஒரு ஹாரனைக் கொடுத்துவிட்டு ஆர்யா காத்திருக்க ஆரம்பித்தாள். நிமிஷங்கள் ஐந்து கரைய… ஆர்யாவின் ... Read More »
சிங்கப்பூரில் இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படவில்லை; தைப்பூச மோதலுக்கு சிங்கப்பூர் விளக்கம்
February 8, 2015
சிங்கப்பூர், புதன்கிழமையன்று தமிழகத்தை போலவே சிங்கப்பூரிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது, மேளங்கள் வாசிப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் இந்தியர்கள் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து, அவர்களை சிங்கப்பூர் போலீஸ் கைது செய்தது. இதற்கு இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதைத்தொடர்ந்து, அந்நாட்டு சட்டத்துறை மந்திரி கே.சண்முகம், சிங்கப்பூரில் இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘சிங்கப்பூரில் பாத யாத்திரைகளுக்கு அனுமதியில்லை ... Read More »
மிகவும் பழமையான பாம்பு படிமங்கள்
February 8, 2015
நிலத்தில் ஊர்வனவற்றில் முக்கியமான உயிரினமான பாம்புகள், பல்லிகளின் பரிணாம வளர்ச்சியால் தோன்றியவை என விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். காரணம், பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த பாம்பு படிமங்களில் சிறிய கால்கள் போன்ற உறுப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தவகையில் சுமார் 10¼ கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பாம்பு படிவங்கள் இதுவரை கண்டறியப்பட்டிருந்தன. ஆனால் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரில் உள்ள ஒரு குவாரி ஒன்றில் இருந்து மிகவும் பழமை வாய்ந்த 4 பாம்பு படிவங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. ... Read More »