அறிவியல் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் எல்லாருக்குமேவேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிய தகவல்களும், சினிமாக்களும், நாவல்களும்,வேற்றுக்கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா எனும் ஆராய்ச்சிகளும், பறக்கும்தட்டுகள் பற்றி விரிந்து கிடக்கும் கதைகளும், வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்துகிடைத்ததாக அறிவியல் தகவல்களில் இருக்கும் ஒலி சமிக்ஞைகளும் எனவேற்றுக்கிரக தகவல்கள் எல்லாமே எப்போதுமே சுவாரசியம் தருபவைதான்…! ஆனால் இங்கே நான் போகப்போவது வேற்றுக்கிரக ஆராய்ச்சிகளுக்கு அல்ல…!வேற்றுக்கிரகங்களில் நிஜமாகவே உயிர்கள் இருக்கிறதோ… இல்லையோ?… ஆனால்ஆண்டாண்டு காலமாக மனிதர்களின் பல படைப்புகளில் வேற்றுக்கிரகவாசிகள்என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என சில கற்பனைத்தோற்றங்களை உருவாக்கிஅதையே நம் ... Read More »
நீல நிற நிழல்கள் (29)
February 10, 2015
நெற்றிப்பொட்டில் ரிவால்வரின் வாய் இம்சையாய் உறுத்த, டாக்டர் சதுர்வேதி திவாகரைப் பலியாட்டைப் போலப் பார்த்தார். “நோ… நோ… என்னைக் கொன்னுடாதே! உனக்கு வேண்டிய… ப… பணத்தை நா… நான் தர்றேன்!” திவாகர் சிரித்தான். “ஸாரி… டாக்டர் சார்! என்னுடைய திட்டத்துக்கு நீங்க கொடுக்கிற முழு ஒத்துழைப்பு பணத்துல இல்லை. உங்க உயிர்லதான் இருக்கு… பேசாம வாங்கிக்கறீங்களா?” “நோ…!” சதுர்வேதி மிரண்டு அலறிக் கொண்டிருக்கும்போதே ரிவால்வரின் ட்ரிக்கர் அழுத்தப்பட்டது. சைலன்ஸரின் உபயத்தில் தோட்டா உமிழப்பட… சதுர்வேதியின் மண்டையோடு அதிர்ந்து ... Read More »
நீல நிற நிழல்கள் (28)
February 10, 2015
மாசிலாமணி பயம் ஈஷிக்கொண்ட பார்வையோடு அந்த நர்ஸை ஏறிட்டார். “நீ என்னம்மா சொல்றே? பம்பாய்ல எனக்குத் தெரியாமே சதி நடந்துட்டிருக்கா…!” “ஆமா சார்! கொஞ்ச நேரத்துக்கு முந்தி ஹாஸ்பிடலுக்குப் பின்பக்கமா இருக்கிற டாய்லெட்டுக்கு நான் போனபோது, இருட்டுல ஒரு மரத்துக்குக் கீழே உங்க சம்பந்தியம்மாவும் லுங்கி கட்டின ஒரு ஆளும் நின்னு மெதுவான குரல்ல பேசிட்டிருந்தாங்க. என் மனசுக்கு ஏதோ சந்தேகம் தட்டவே அவங்களுக்குத் தெரியாம மறைவா நின்னு அவங்க பேசிட்டிருந்ததைக் கேட்டேன்.” “எ… என்ன… பே… ... Read More »
நீல நிற நிழல்கள் (27)
February 10, 2015
டிரான்ஸ்ஃபார்மருக்குப் பின்னால் மண்டியிருந்த செடிகளின் மறைவில் உட்கார்ந்திருந்த ரமணி, ஜோஷியின் நிசப்தமான பங்களாவையே கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான். இதயம் லயம் மாறித் தாறுமாறான துடிப்பிலிருக்க, உடம்பு வியர்த்துக் கசகசத்தது. ஜோஷியின் பங்களாவுடைய சதுர ஜன்னல்களில் ஒட்டியிருந்த ட்யூப் லைட் வெளிச்சம் சட்டென்று அஸ்தமித்தபோது ரமணியின் மனசுக்குள் புதிதாக ஒரு பயம் எட்டிப் பார்த்தது. ‘ஜோஷி திடீரென்று காரில் கிளம்பிவிட்டால் அவரை எப்படிப் பின்தொடர்வது…?’ ‘உடனடியாக டாக்ஸி கிடைப்பது இந்த இடத்தில் சாத்தியம் இல்லையே…!’ ரமணி யோசித்துக் ... Read More »
நீல நிற நிழல்கள் (26)
February 10, 2015
நர்ஸின் முகத்தில் படிந்திருந்த கலவரத்தைப் படித்து விட்ட மாசிலாமணி, கண்களில் பயத்தைப் பரப்பிக் கொண்டு அவளை ஏறிட்டார். “நீ… நீ… என்னம்மா… சொ… சொல்றே…? கீதாம்பரியோட உயிருக்கு மறுபடியும் ஏதாவது ஆபத்தா…?” “சார்… கீதாம்பரியோட உயிரைப் பத்தியோ, பிறந்த குழந்தையோட உயிரைப் பத்தியோ இனிமே கவலைப்பட ஏதுமில்லை. இப்ப நான் சொல்ல வந்த விஷயமே வேறே…” “நீ… என்னம்மா… சொல்றே…?” “சார்…! உங்க குடும்ப விஷயத்துல நான் தலையிடறதா நீங்க நினைக்கக் கூடாது. கொஞ்ச நேரத்துக்கு முந்தி ... Read More »
நீல நிற நிழல்கள் (25)
February 10, 2015
ஜோஷியை ஏறிட்டார் டாக்டர் சதுர்வேதி. “அந்த திவாகர் நிச்சயமா உங்களைச் சந்தேகப் பார்வை பார்த்தானா?” “ம்… பார்த்தான்.” “அவனோட பார்வையே அப்படிப்பட்டதா இருந்தா…?” “நோ டாக்டர்… அவனோட பார்வையை நான் படிச்சுட்டேன். நிச்சயமா என் மேல அவனுக்குச் சந்தேகம் தட்டியிருக்கு…” “அவன் உங்களைச் சந்தேகப்படக் காரணம்…?” “ஹரிஹரனைப் பத்தி இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா கேள்விகளைக் கேட்டபோது நான் இயல்பான முகபாவத்தோடுதான் பதில்களைச் சொன்னேன். ஆனா, என் மனசுக்குள்ளே இருந்த அதிர்ச்சி என்னையும் அறியாமல் என் கண்களில் வெளிப்பட்டிருக்கலாம். அந்த ... Read More »
நீல நிற நிழல்கள் (24)
February 9, 2015
டாக்டர் மனோரஞ்சிதத்தை மாசிலாமணி நைந்துபோன குரலோடு ஏறிட்டார். “ரமணியை ஹரிஹரன் மாதிரி பேச வைக்கிறது இப்போது இருக்கிற சூழ்நிலையில் ரிஸ்க்கான விஷயம் டாக்டர். ரெண்டு பேரோட குரலும் ஒரே தொனியில் இருந்தாலும் பேசற அந்நியோன்யத்தில் நிச்சயமா வித்தியாசம் தெரியும். ஏற்கனவே ரமணி பம்பாயிலிருந்து ஹரிஹரன் மாதிரி பேசியிருக்கான். அது சரியானபடி வொர்க்அவுட் ஆகலை. கீதாம்பரிக்கு அந்தப் பேச்சில் சந்தோஷமில்லை. ‘பம்பாய் மண்ணை மிதிச்சதும் ஆளே மாறிட்டார்… பொண்டாட்டிக்கிட்ட ஏதோ மூணாம் மனுஷிகிட்ட பேசற மாதிரி பேசறாரே’ன்னு கீதாம்பரி ... Read More »
நீல நிற நிழல்கள் (23)
February 9, 2015
“வால்ச்சந்த்…!” கையில் சாவிக் கொத்தோடு பங்களாவின் இருட்டுக்குள் நகர்ந்து வாசல்கதவை நோக்கிச் செல்ல முயன்ற வால் சந்த், ஆர்யாவின் குரல் கேட்டதும் நின்றான். “என்னங்கம்மா?” “வாசல் கதவோட லாக்கர் கொஞ்சம் நுட்பமானது. மேக்னடிக் லாக். வெறும் சாவியைப் போட்டா அது வாயைத் திறக்காது…” “வேற என்னம்மா பண்ணனும்?” “வாசல்கதவுக்குப் பக்கத்திலேயே இடதுபக்கமா, சின்னதா ஒரு மரஷெல்ஃப் இருக்கு. அந்த ஷெல்ஃபுக்குள்ளே ஸ்பேனர் சைஸில் ஒரு மேக்னடிக் ரிலீவர் இருக்கு. அது பாட்டரியில் இயங்குகிற அமைப்பு. கருவியோட தலைமாட்டில் ... Read More »
நீல நிற நிழல்கள் (22)
February 9, 2015
கீதாம்பரியின் பார்வையில் தெரிந்த சந்தேகப் பொறியைக் கவனித்துவிட்ட மாசிலாமணி, முகத்தில் இயல்பான ஒரு புன்னகையைக் கொண்டு வந்தார். “என்னம்மா அப்படிப் பார்க்கிறே?” “மா… மாமா…! ரமணி கொச்சிக்குப் போயிருக்கிறதாகத்தானே… சொ… சொன்னீங்க…! இப்போ பம்பாயிலிருந்து போன் வந்திருக்கிறதா நர்ஸ் சொல்லறாங்க…?” கீதாம்பரிக்கு லேசாக மூச்சிரைத்தது. “அ… அது வந்தும்மா… ரமணி கொச்சிக்குத்தான் போயிருந்தான். ஹரிஹரன் ஜெர்மனி புறப்பட்டுப் போறதுக்கு முந்தி பம்பாய்ல பிஸினஸ் பார்ட்டி ஒருத்தரை எக்ஸ்போர்ட் ஆர்டர் விஷயமா சந்திச்சுப் பேசினதுல, பேச்சு வார்த்தை முடியலை. ... Read More »
நீல நிற நிழல்கள் (21)
February 9, 2015
ஜோஷியின் இதய மையத்தில் பூகம்பம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் முகத்தை வெகு இயல்பாய் வைத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ராவை ஏறிட்டார். “பேர்… என்ன சொன்னீங்க?” “ஹரிஹரன்.” “இதே ஊரைச் சேர்ந்தவரா?” “இல்லை. மெட்ராஸ்.” ஜோஷி யோசிக்கிற தினுசில் முகத்தை முப்பது விநாடிகள் வைத்துக் கொண்டிருந்துவிட்டு மெள்ளத் தலையாட்டினார். “தெரியலையே…” “ஹரிஹரன் மெட்ராஸில் பெரிய பிசினஸ்மேன். நேற்றைக்கு ராத்திரி பம்பாய்க்கு வந்து இன்னிக்குக் காலையில ஃப்ராங்ஃபர்ட் போறதுக்காக ஓட்டல் சில்வர் ஸாண்ட்ல தங்கியிருந்தார். மலபார்ஹில்ஸில் யாரையோ பார்க்கிறதுக்காக ... Read More »