ஜனவரி 05,2011 அ- அ+ நிஜமான நளனும் இங்கிருக்கிறான். மற்றவர்களும் எனது கண்களுக்கு மட்டுமே தெரியும்படி நளனைப் போலவே இருக்கின்றனர். தேவர்களை அடையாளம் காண்பது எளிது. தேவர்களின் கண்கள் இமைக்காது. அவர்களது பாதங்கள் நிலத்தில் படாமல் அந்தரத்தில் நிற்கும். அவர்கள் அணிந்து வரும் மாலைகள் வாடாது. இங்கே இந்திரன், அக்னி, வருணன் எமதர்மன் ஆகிய தேவர்கள் அமர்ந்துள்ளனர். அவர்களது அடையாளத்தை இவற்றைக் கொண்டே கணித்து விடலாம். நிஜமான நளனைக் கண்டுபிடித்து விடலாம் என்ற மகிழ்ச்சியுடன் கண்களால் துழாவினாள் ... Read More »
நளதமயந்தி பகுதி-6
February 23, 2015
தேவர்கள் சென்ற பிறகு, நளன் மன்னர்கள் தங்கியிருந்த அரண்மனைக்குப் போய்விட்டான்.தமயந்தி ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தாள்.யாரைக் காதலித்தோமோ, அவனே, மற்றவர்களுக்கு என்னைக் காதலியாக்க தூதாக வந்தது எவ்வளவு பெரிய கொடுமை! இவன் என்ன மனிதன்! அன்னப்பறவை சொன்னது முதல் இவனே கதியென இருந்தோமே! இப்போதோ இவன் தூதனாகி விட்டான். இவனை நாடி என் மனம் செல்வதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படிப்பட்டவன் கடைசி வரை என்னைக் காப்பாற்றுவானா? அவள் தனக்குள் அரற்றினாள். மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. ... Read More »
நளதமயந்தி பகுதி-5
February 23, 2015
அப்போது தான் இன்னொரு சிக்கலும் எழுந்தது.தன் விஷயம் ஒருபக்கம் இருக்கட்டும்! தேவர்கள் அவர்கள் பாட்டுக்கு, தமயந்தியிடம் தங்களுக்காக தூது செல் என சொல்லிவிட்டார்கள். தமயந்தி கன்னிமாடத்தில் இருப்பாள். அவளைச் சந்திக்க வேண்டுமானால், பெரும் கட்டுக்காவலை மீறிச் செல்ல வேண்டியிருக்குமே! என்ன செய்யலாம்? என்று யோசித்தான் நளன். இந்திரனிடமே அதுபற்றி கேட்டான். தேவேந்திரா! உனக்காக நான் தூது போக தயாராக இருக்கிறேன். ஆனால், அரண்மனைக் கன்னிமாடத்தில் காவல் பலமாக இருக்குமே! அதை எப்படி கடந்து செல்வேன்? என்றான். நளனே! ... Read More »
நளதமயந்தி பகுதி-4
February 23, 2015
நாராயணா! என்ற மந்திரத்தை முழக்கியபடியே சென்ற நாரதரை இந்திரன் வரவேற்றான்.சிவபெருமானின் நெற்றிக்கண்ணையும் குளிரச் செய்யும் வகையில் மகதி என்னும் யாழ் மீட்டி இனிமையாய் பாடும் மாமுனிவரே, வர வேண்டும், வர வேண்டும், ஆசனத்தில் அமருங்கள். எல்லா லோகங்களுக்கும் சென்று வருபவர் நீங்கள். ஏதேனும்விசேஷத்தகவல் உண்டா? என்றான். நாரதர் சிரித்தார்.நினைத் ததைத் தரும் கற்பகமரம், கேட்டதைத் தரும் சிந்தாமணி ஆகியவற்றையெல்லாம் கொண்ட பெரும் செல்வனே! தேவாதி தேவனே! வஜ்ராயுதம் ஏந்தி தேவர்களுக்கு துன்பம் தந்த பறக்கும் மலைகளில் ... Read More »
நளதமயந்தி பகுதி-3
February 23, 2015
மகிழ்ச்சியடைந்த அன்னப்பறவை, சரி, தமயந்தி! உன் காதலனுடன் சேர்த்து வைப்பது என் பொறுப்பு. உன்னிலும் உயர்ந்தவள் இந்த உலகில் யாருண்டு! கவலை கொள்ளாதே! உடனே நிடதநாடு நோக்கி பறக்கிறேன். உன் உள்ளம் கவர் கள்வனிடம் உன் காதலைத் தெரிவித்து விடுகிறேன், என்று சொல்லிவிட்டு வேகமாக பறந்தது. தமயந்தி தன் காதல் நிறைவேறுமோ அல்லது ஏதேனும் இடைஞ்சல் வருமோ என்ற கவலையிலும், நளனை எப்போது காண்போமோ என்ற ஏக்கத்திலும் முகம் வாடியிருந்தாள். அப்போது அவளது தோழிகள் வந்தனர்.அவர்களுக்கு ... Read More »
நளதமயந்தி பகுதி-2
February 23, 2015
சொல்கிறேன், கேள், என்ற அன்னம், நளனே! இந்த உலகிலேயே அழகாக நடை பயில்பவர்கள் நாங்கள் தான் என்று இறுமாப்பு கொண்டிருந்தோம். ஒருநாள், தமயந்தி நாங்கள் அலைந்து கொண்டிருந்த தடாகத்தின் பக்கமாக வந்தாள். அவளது அழகும், நடை எங்களையும் விட நளினமாக இருந்ததைக் கண்ட நாங்கள் வெட்கப் பட்டு தலை குனிந்தோம். ஆஹா…இவளல்லவோ உலகப் பேரழகி. இவளைப் போல இனிமேல் நாங்களும் நடக்க வேண்டும். இவளிடமல்லவா நடை பயில வேண்டும் என்று எண்ணினோம். இப்படிப்பட்ட பேரழகு பெட்டகத்திற்கேற்ற கட்டழகன் ... Read More »
நளதமயந்தி பகுதி – 1
February 23, 2015
தர்மராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார். எதற்காக சூதாடினோம், எதற்காக நாட்டையும், தம்பியரையும், மனைவியையும் பணயம் வைத்து அவமானப்பட்டோம். என் ஒருவனது தவறான முடிவால், இன்று எல்லாரும் சிரமப்படுகின்றனரே! இதைத்தான் விதி என்பதோ! ஏன் மனிதனை இப்படி கஷ்டங்கள் வாட்டுகின்றன! கிருஷ்ணா! என்னைப் போல் கஷ்டப்பட்டவர் உலகில் யாரும் இருக்கமாட்டார்கள். இனியும் இருக்கக் கூடாது, என்று பெருமூச் செறிந்த வேளையில், சிரிப்பொலி கேட்டது. சிரித்தவர் வியாச மகரிஷி. தர்மராஜா அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். சாதாரணமான மகரிஷியா அவர்! ... Read More »
இந்தியாவின் தீராத மர்மங்கள் – 2
February 22, 2015
இந்தியாவின் தீராத மர்மங்களில் இரண்டாவது இடத்தை லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்தான் பிடித்திருக்கிறது. லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமர் என்பதைத்தவிர பெரும்பாலான விஷயங்கள் பலருக்குத் தெரியாது. அக்டோபர்-2, 1904ல் பிறந்த லால் பகதூர் சாஸ்திரி இந்திய சுதந்திரப் போராட்டக் காலங்களில் இண்டியன் நேஷனல் காங்கிரசின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவர். சுதந்திர இந்தியாவின் நேருவின் அமைச்சரவையில் தொடர்ந்து பதவி வகித்த போதும், பெரிதாய் பரபரப்பாய் வெளியில் தெரியாத அமைதியான அரசியல்வாதியாகவே இருந்தவர். மே-27, 1964ல் ... Read More »
உலக கோப்பை போட்டியில் முதல் சதம்!!!
February 22, 2015
இன்றைய தினத்தில் கிரிக்கெட் உலகில் நமது வீரர்கள் (ஆண்கள்) உலக சாதனையோ, உள்ளூர் சாதனையோ செய்தால் நாம் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அரசு முதல் விளம்பர நிறுவனங்கள் என எல்லா தரப்பினரும் பாராட்டும், பரிசும் அறிவிக்கிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் பெண்கள் அணி என ஒன்று இருப்பதே நம்மில் சிலர்? பலர் அறியாமல் இருப்போம். இந்திய பெண்கள் அணியில் ஒருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். என்னவென்று அறிந்து கொள்ள வாசியுங்கள். தற்போது இந்தியாவில் நடைபெற்று ... Read More »
பக்தர்களை கொன்ற சாமியார்!!!
February 21, 2015
914 பக்தர்களை கொன்ற சாமியார் ‘ஜிம் ஜோன்ஸ்’ வசூல் ராஜா படத்தில் கமல் ஒரு வசனம் சொல்லுவார், ‘கடவுள் இல்லைன்னு சொல்றவனை நம்பலாம், கடவுள் இருக்குன்னு சொல்றவனையும் நம்பலாம், ஆனா நான் தான் கடவுள்ன்னு சொல்றவனை மட்டும் நம்பாதே’ என்று. இன்றும் சிலர் நான் தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களையும் நம்பி இந்த நவநாகரிக உலகத்தில் கூட ஒரு கும்பல் சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த ... Read More »