நளதமயந்தி பகுதி-16

தமயந்தி நளனிடம், தாங்கள் செங்கோல் ஏந்தி முறை தவறாத ஆட்சி நடத்தினீர்கள். அப்படிப்பட்ட தர்மவானான உங்களிடம் ஒரு யோசனை சொல்கிறேன். இதையாவது, தயவு செய்து கேளுங்கள். நாம் காட்டு வழியில் வரும் போது, நம்முடன் ஒரு பிராமணர் சேர்ந்து கொண்டார் அல்லவா! அவருடன் நம் குழந்தைகளை அனுப்பி குண்டினபுரத்திலுள்ள எங்கள் தந்தை வீட்டில் சேர்க்கச் சொல்லிவிடுவோம். பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்பது தானே உங்கள் நோக்கம்! அது நிறைவேறி விடும். நான் உங்களைப் பின்தொடர்கிறேன். உங்களைப் பார்க்காமல் என்னால் ... Read More »

நளதமயந்தி பகுதி-15

அவள் தன் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.அன்பரே! நீங்களா இப்படி சொன்னீர்கள்! காதல் வயப்பட்டு நாம் கிடந்த காலத்தில், கடைசி வரை பிரியமாட்டோம் என உறுதியளித்தீர்களே! அது காதல் மோகத்தில் சொன்னது தானா? என் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சொல்கிறேன், கேளுங்கள். ஒரு பெண் குழந்தைகளை இழந்தால் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அவள் தன் கணவனை இழந்துவிட்டால் பாதுகாப்பற்ற நிலையை அடைவாள். அவளது கற்புக்கு களங்கம் கற்பிக்கப்படும், அல்லது பாதுகாப்பற்ற ... Read More »

நளதமயந்தி பகுதி-14

இன்றிரவு தங்கிப் போகலாமே, என்று தமயந்தி சொல்லவில்லை, ஆனால், அவளது பார்வையின் பொருள் நளனுக்கு அவ்வாறு இருந்ததால், அவனும் மக்களுடன் தங்கலாமே என எண்ணி, அவர்களிடம் ஒப்புதல் அளித்தான். நளனின் பின்னாலேயே வந்த ஒற்றர்கள் மக்களும், நளனும் இவ்வாறு பேசுவதைக் கேட்டு உடனடியாக புட்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். சற்றுநேரத்தில் முரசு ஒலித்தது. நிடதநாட்டு மக்களே! நளன் இந்த நாட்டின் ஆட்சி உரிமையை இழந்து விட்டார். அவருக்கு யாராவது அடைக்கலம் அளித்தாலோ, அவருடன்  பேசினாலோ அந்த இடத்திலேயே கொல்லப்படுவார்கள். ... Read More »

நளதமயந்தி பகுதி-13

சூதாட்ட வெறி கண்ணை மறைக்க, தன்னிடம் இதுவரை பணிசெய்த பெண்கள் என்று கூட பாராமல், அவர்களையும் வைத்து சூதாட முன்வந்தான் நளன். வழக்கம் போல் பகடை உருள, அவர்களையும் புட்கரனிடம் இழந்து விட்டான் நளன்.நளனின் எல்லாப் பொருட்களும் போய்விட்டன. ஆம்…நாடே போய்விட்டது. அசையாப் பொருள்களுடன் அரண்மனையில் அசைந்தாடிய பெண்களும் பறி போனார்கள். இனி அவர்கள் புட்கரனின் பணியாட்களாக இருப்பார்கள். விளையாட என்ன இருக்கிறது? நளன் திகைத்துப் போய் எழுந்தான். நளனே! ஏன் எழுந்திருக்கிறாய்? கையில் வெண்ணெய் இருக்கிறது. ... Read More »

நளதமயந்தி பகுதி-12

நளதமயந்தி பகுதி-12

விதி தான் நளனைப் போட்டுப் பார்க்க வேண்டுமென முடிவு செய்து விட்டதே! அதிலும் சனீஸ்வரர் ரூபத்தில் அல்லவா வந்துள்ளது! இந்த சனீஸ்வரர் போல் உத்தமமான கிரகம் உலகில் இல்லை. அதனால் தான் அதற்கு ஈஸ்வரன் பட்டம் கொடுத்து,கடவுள் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். எல்லா கிரகங்களும் நவக்கிரக மண்டபத்தில் இருந்தாலும், சனீஸ்வரருக்கு மட்டுமே கோயில்களில் தனி சன்னதி இருக்கிறது.குரு இருக்கிறாரே  என சிலர் கேட்கலாம். அவர் குரு அல்ல. சனகாதி முனிவர்களுக்கும், பார்வதிதேவிக்கும் உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தியையே குரு ... Read More »

நளதமயந்தி பகுதி-11

நளதமயந்தி பகுதி-11

பெருமாளுக்கும் பூமாதேவிக்கும் திருமணம் ஆயிற்று. அவரதுமுதல் மனைவி பூமா தான். புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைப்பது நமது கலாசாரம். புதுமணத்தம்பதிகளைசிவபார்வதி கைலாயத்துக்கு விருந்துக்கு அழைத்தனர். பெருமாள் புறப்பட்டு விட்டார். பூமாதேவி வர மறுத்துவிட்டாள். அன்பரே! தங்களோடு நான் வந்துவிட்டால், இந்த பூலோகத்திலுள்ள பொருட்களெல்லாம் எங்கு போய் இருக்கும்? எனக்கு இன்னொரு பெயர் அசலா (இருந்த இடத்தை விட்டு நகராதவள்) என்பதை தாங்கள் அறிவீர்களா! நான் நகர்ந்தால் பூகம்பம் அல்லவா ஏற்படும். மக்கள் என்னாவார்கள்? என் பிள்ளைகளை நானே ... Read More »

நளதமயந்தி பகுதி-10

புட்கரா! சூதாட்டம் மன்னர்களுக்கே உரித்தான இனிய பொழுதுபோக்கு. ஆம்…யாராவது ஒருவருக்கு…ஏனெனில், இதில் ஒருவர் தன் பொருளை இழந்து விடுவாரே! நளனைப் பற்றுவதற்கு நான் மிகுந்த சிரமப்பட்டேன். இப்போது, பற்றி விட்டேன். இனி அவனை என் இஷ்டத்திற்கு ஆட்டி வைப்பேன். அவனுடைய புத்தியை கெடுக்க வேண்டியது என் பொறுப்பு. நீ நளனுடன் சூதாடு. வெற்றி உன் பக்கமாக இருக்கும்படி செய்து விடுகிறேன், என்றார் சனீஸ்வரர். புட்கரனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. சூதாட்டத்தில் ஒருவேளை தனக்கும் தோல்வி வரக்கூடும் என்ற ... Read More »

நளதமயந்தி பகுதி-10

புட்கரா! சூதாட்டம் மன்னர்களுக்கே உரித்தான இனிய பொழுதுபோக்கு. ஆம்…யாராவது ஒருவருக்கு…ஏனெனில், இதில் ஒருவர் தன் பொருளை இழந்து விடுவாரே! நளனைப் பற்றுவதற்கு நான் மிகுந்த சிரமப்பட்டேன். இப்போது, பற்றி விட்டேன். இனி அவனை என் இஷ்டத்திற்கு ஆட்டி வைப்பேன். அவனுடைய புத்தியை கெடுக்க வேண்டியது என் பொறுப்பு. நீ நளனுடன் சூதாடு. வெற்றி உன் பக்கமாக இருக்கும்படி செய்து விடுகிறேன், என்றார் சனீஸ்வரர். புட்கரனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. சூதாட்டத்தில் ஒருவேளை தனக்கும் தோல்வி வரக்கூடும் என்ற ... Read More »

நள தமயந்தி -9

ஏற்கனவே, சனீஸ்வரர்  தமயந்தியின் சுயம்வரத்துக்கு வந்தபோது, தாமதமாக வந்ததால், அதில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று. மேலும், தமயந்தி தேவர்களைப் புறக்கணித்து, நளனுக்கு மாலையிட்டு விட்டதால், அவரது ஆத்திரம் அதிகரித்தது. தேவர்களை விட உயர்ந்தவன் ஒரு மானிடனா? என்று அவருக்கு பெரும் கோபம். இதனால், நளன் மீது வெறுப்பு அதிகரித்து அவனை ஒரு வழிசெய்ய நேரம்பார்த்துக் காத்திருந்தார். நள தமயந்தி 12 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். தங்கள் தேசத்து மக்களை கண்ணும் கருத்துமாய் பாதுகாத்தனர். மக்களும் மன்னன் ... Read More »

நளதமயந்தி பகுதி-8

வழியில், அவர்கள் ஒரு சோலையில் இளைப்பாறினர்.அந்தச் சோலையில் ஒரு அழகிய குளம் இருந்தது. அதில் இறங்கி நள தமயந்தி தம்பதியர் நீராடி மகிழ்ந்தனர். கரையேறிய தமயந்தியிடம் நளன்,  புன்னகைப் புயலே! அழகே வடிவாய் பேசும் பைங்கிளியே! இந்தச் சோலை எப்படியிருக்கிறது தெரியுமா? எங்கள் மாவிந்த நகரத்தில் நாங்கள் இளைப்பாறும் சோலையை அப்படியே உரித்து வைத்தது போல் இருக்கிறது, என்றான். வந்தது வினை. தமயந்தி கோபித்துக் கொண்டாள்.நாங்கள் என்றால்… இவர் யாரைச் சொல்கிறார்? இவர் தான் மாமன்னராயிற்றே! அழகில் ... Read More »

Scroll To Top