விடமாட்டேன் உன்னை – 2

விடமாட்டேன் உன்னை – 2

குன்றத்தூரின் கடைசிப் பகுதியில் இருந்தது கணேஷ் நகர். இதன் கடைசித் தெருவில், கடைசி வீடாக இருக்கும் மாடி வீடுதான் வேதாசலத்தில் வீடு. அந்த அர்த்த ராத்திரியிலும் உள்ளே லைட் எரிந்து கொண்டிருக்க, பேச்சுக் குரல் கேட்டது. “ஏங்க… உங்ககிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கேன். நேரங்கெட்ட நேரத்தில பையனை வசூலுக்கு அனுப்பாதீங்கன்னு… இப்ப பார்த்தீங்களா மணி 12.40 ஆகுது. என் பையன இன்னும் காணோம்” என்ற கமலம்மாளுக்கு வயது 42 இருக்கும். கனத்த உடம்பு. பார்ப்பதற்கு நடிகை காந்திமதியை ... Read More »

விடமாட்டேன் உன்னை – 1

விடமாட்டேன் உன்னை – 1

விடமாட்டேன் உன்னை..! – திகில் தொடர்கதை (உண்மைச் சம்பவம்) சங்கரும் ராமுவும் ஒரே சீராக டிவிஎஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நேரம் இரவு பனிரெண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்த்து. அன்று அமாவாசையானதால் ஊரெங்கும் இருளடித்திருந்தது. பியூஸ் போனதால் தெருவிளக்குகள் தேமே என்று நின்று கொண்டிருந்தன. டிவிஎஸ் வண்டி தெருவை விட்டு சாலையில் திரும்பியது. அந்த சாலையில் இவர்களது வாகனத்தைத் தவிர வேறு எந்த வாகனமும் தென்படவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒரு வெளிச்சப் புள்ளிகூட கண்ணில் படவில்லை. ... Read More »

பிறவி மர்மங்கள் – 28

கேத்தரின் அவளுக்கிருந்த பிரச்சனைகளிலிருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டாள். பிரச்சனைகள் எதுவும் மீண்டும் தலைகாட்டுவதில்லை. நான் என்னுடைய நோயாளிகளுக்கு இத்தகைய சிகிச்சையை கொடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். பழைய முற்பிறவி நினைவுகளைத் தூண்டும் சிகிச்சையை நான் கீழ்கண்ட நோயாளிகளுக்கே பரிந்துரைக்கிறேன் – நோயாளிகளுக்கு பிறசிகிச்சைகள் அளிக்கும் பலன்கள், அவர்களின் நோயின் அறிகுறி, சிகிச்சைக்கு நோயாளிகளுடைய ஒப்புதல், எளிதில் ஹிப்னாடிஸத்தில் சமாதி நிலையை அவர்கள் அடையும் தன்மை, மற்றும் என்னுடைய உள்ளுணர்வின் தாக்கம் முதலியவற்றைக் கண்டு ஆராய்ந்த பிறகே, நோயாளிகளுக்கு இத்தகைய ... Read More »

பிறவி மர்மங்கள் – 27

கேத்தரினுடைய சிகிச்சையின்பொழுது ஏற்பட்ட நம்பமுடியாத அனுபவங்களுக்குப் பிறகு நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. அந்த அனுபவங்கள் எங்களது வாழ்க்கை முறைகளை முற்றிலுமாக மாற்றிவிட்டது. கேத்தரின் சிலசமயங்களில், சாதாரணமாக எங்கள் அலுவலகத்துக்கு வந்து நலன் விசாரித்துச் செல்வாள். ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் பகிர்ந்துகொள்வாள். மீண்டும் பழைய நினைவுகளை பற்றித் தெரிந்துகொள்ள அவள் விரும்பியதில்லை. எங்களது பணி முடிந்துவிட்டது. வாழ்க்கையை உற்சாகத்துடன் கேத்தரின் எதிர்நோக்க ஆரம்பித்திருக்கிறாள். அவளை பீடித்திருந்த மனநோய் முற்றிலுமாக விலகிவிட்டது. தற்பொழுது அவளுக்கு இருக்கும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அவள் ... Read More »

பிறவி மர்மங்கள் – 26

இறுதி ஹிப்னாடிச அமர்வுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கேத்தரினிடமிருந்து ஒரு ஃபோன் வந்தது. ஒரு முக்கியமான விஷயம் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகக் கூறி கிளினிக்கில் அப்பாய்ன்மெண்ட் வாங்கிக் கொண்டாள். புதிய பெண்ணாக முழு உடல்நலத்துடன் அவதாரம் எடுத்திருக்கும் கேத்தரின், என் அலுவலகத்திற்கு வந்தாள். புன்னகையுடன் மகிழ்ச்சியான தோற்றத்துடன், மனதின் முழுஅமைதி அவள் தேகமெங்கும் பிரதிபலிக்க கேத்தரினைக் கண்டேன். ஒரு கணம், குறைந்த காலகட்டத்தில் கேத்தரினிடம் ஏற்பட்ட வியக்கத்தகுந்த முன்னேற்றத்தை எண்ணினேன். கடந்தகால நினைவுகளைக் கூறக்கூடிய “ஐரிஸ் சால்ட்ஸ்மேம்“ என்ற ... Read More »

பிறவி மர்மங்கள் – 25

அடுத்த அமர்வுக்கு கேத்தரின் வருவதற்குள் மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. எனக்கு உடல்நிலை சரியில்லாததனாலும் கேத்தரின் விடுமுறையில் சென்றிருந்ததனாலும் சற்று தாமதமாகிவிட்டது. இடைப்பட்ட காலங்களில் கேத்தரினின் உடல்நிலை முன்னேற்றம் திருப்திகரமாக இருந்தது. ஆனால் இந்த முறை ஹிப்னாடிஸ அமர்வு ஆரம்பித்ததும் கேத்தரினிடம் பதற்றம் காணப்பட்டது. கேத்தரின் தன் மனநிலை மற்றும் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், ஹிப்னாடிஸம் இதற்குமேலும் தனக்கு உதவி செய்யக்கூடும் என்று நினைக்கவில்லை என்று கூறினாள். சாதாரணமாக கேத்தரினுடைய நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, சில வாரங்களுக்கு முன்னரே ... Read More »

பிறவி மர்மங்கள் – 24

கேத்தரின் நன்கு குணமாகிவிட்டாள். துன்பங்களைக் கொடுத்த அவளுடைய மனக்கலக்கங்கள் முற்றிலும் விலகிவிட்டன. ஹிப்னாடிஸ அமர்வின்பொழுது அவள் சென்றுவந்த பிறவிகள் திரும்பவும் வரஆரம்பித்தன. நாங்கள் ஒரு இறுதி நிலையை நோக்கிச் செல்வதை உணர்ந்தேன். ஐந்து மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் சிகிச்சை அடுத்த அமர்வோடு முடிந்து விடக்கூடும் என்று நான் நினைக்கவில்லை.   “சிற்பவேலைப்பாடுகளைக் காண்கிறேன்.” கேத்தரின் கூற ஆரம்பித்தாள். “சில பொன்னால் செய்யப்பட்டுள்ளன. களிமண்ணைப் பார்க்கிறேன். மக்கள் மண்பாண்டங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவை செந்நிறத்தில் உள்ளன. ஒருவகையான செம்மண்ணை ... Read More »

பிறவி மர்மங்கள் – 23

“நான் மிதக்கிறேன்.” கேத்தரின் முணகினாள். “நீ எந்த நிலையில் இருக்கிறாய்?” “இல்லை. நான் மிதக்கிறேன். எட்வர்ட் எனக்கு ஏதோ கடன் பட்டிருக்கிறார். . . . . . ஏதோ கடன் பட்டிருக்கிறார்.” “என்ன என்று உனக்குத் தெரியுமா?” “இல்லை. . . . . . ஏதோ எனக்கு புரியவைக்க வேண்டியது தொடர்பாக . . . . . எனக்கு கடன் பட்டிருக்கிறார். எனக்கு அவர் சொல்லவேண்டிய விஷயம் இருக்கிறது. என் சகோதரியினுடைய குழந்தை ... Read More »

பிறவி மர்மங்கள் – 22

கேத்தரினுக்கு முதன்முதலாக ஹிப்னாடிச சிகிச்சையை துவங்கியதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிவிட்டன. கேத்தரினிடம் நோயின் சுவடே இல்லாமல் போனது மட்டுமல்லாமல், அவளுடைய அமைதியும், தேஜசும் அதிகரித்தது. அவளை அறியாமலேயே அவளைச் சுற்றியுள்ளவர்களை அவள் கவர்ந்தாள். பல வருடங்களாக அவள் மருத்துவமனை கேன்டீனில் தன் காலை உணவை உண்கிறாள். அவளை யாரும் அவ்வளவாக கவனித்தது கிடையாது. ஆனால், இப்பொழுதெல்லாம் முன்பின் தெரியாதவர்கள் கூட அவளிடம் பேச விழைகிறார்கள். ஆண்களும், பெண்களும் விரும்பிப் பேசுகிறார்கள். “உங்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன். நீங்கள் ... Read More »

பிறவி மர்மங்கள் – 21

இறுதியாக கேத்தரின் மீண்டும் பேச ஆரம்பித்தாள். “நகைகள் சென்றுவிட்டன. . . . . . ஒளியும் மறைந்துவிட்டது. . . . . . . எல்லாம் மறைந்துவிட்டன.” “அசரீரிகளும் சென்றுவிட்டனவா?” “ஆமாம். என் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.” தலையை பக்கவாட்டில் அசைக்க ஆரம்பித்தாள். “ஒரு ஆன்மா என்னை நோக்குகிறது.” “உன்னையா?” “ஆமாம்.” “அது யாரென்று அடையாளம் காணமுடிகிறதா?” “சரியாகத் தெரியவில்லை. . . . . . அது எட்வர்ட் என்று நினைக்கிறேன்.” எட்வர்ட் ... Read More »

Scroll To Top