அப்பாவை அப்பாவாகப் பார்க்காமல் வெறுமனே ஆண்மகனாகப் பார்த்தேன். வெள்ளிக் கலசம் போல் தேகம். குதிரையின் லாவகமும் சிங்கத்தின் கம்பீரமும் இணைந்த உடல் அசைவுகள். அதற்கு மேல் பார்க்க பயம்மாக இருந்தது. ‘‘சைட் அடிச்சது போதும், வா’’ என்று கூப்பிட்டு விடுவார்! ஒரே இரவில் மாற்றி விட்டாரே! என் ஈகோ தடுத்தது. இவரா மாற்றினார்? மாற்றியது கல்லீரல் கான்சராக்கும். பாட்டி எதிர்பட்டார். பூஜையறையை சுத்தப்படுத்தி விட்டு வருகிறார் போலும். புடவை மடிப்பிலும் கை நகங்களிலும் விபூதி தீற்றல். ‘‘சௌதாமினி, ... Read More »
அப்பாயணம் – 3
March 11, 2015
வீறிட்டு அலறினேன்! பாட்டி ஓடி வந்தாள். பாட்டியின் வெள்ளைப் புடவையை பற்றினேன். ‘‘என்னாச்சு என்னாச்சு சௌதாமினி? ’’ பாட்டி பதறினாள். நான் நிலை குத்தி நின்றேன். மெதுவாக கைகளை எடுத்து விட்டு புடவையை பார்த்தேன். திட்டு திட்டாக மஞ்சள் நிறம். ‘‘பாட்டி நான் சாகப்போறேன்; சீக்கிரமே சாகப்போறேன்; கொஞ்ச நாள்ல வாயிலும் மூக்கிலும் ரத்தம் வரும். அவ்வளவுதான்… அவ்வளவுதான்.’’ திமிறி திமிறி கதறினேன். வயதான பாட்டியால் என்னை சமாளிக்க முடிய வில்லை. ‘‘அது வெறும் மஞ்சகாமாலை, சௌதாமினி, ... Read More »
அப்பாயணம் – 2
March 11, 2015
‘‘உங்க அப்பாவோட பணத்துக்கும் பவருக்கும் நீ இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லையே, சௌதாமினி?’’ மாதங்கி ஒரு முறை கேட்டபோது நான் ஆத்திரத்தில் வெடித்து விட்டேன். ‘‘நான் அந்த ஆளோட பொண்ணு. உன்ன மாதிரி அவர… ’’ அதற்கு மேல் பேசவில்லை. ‘‘எங்க அம்மாவுக்கு இடமில்லாத மனசிலும் வீட்டிலும் எனக்கும் இடம் வேண்டாம்.’’ இங்கு அம்மாவின் அம்மாவோடு இருக்கிறேன். அம்மாவின் பூர்வீகம் கேரளாவில் செட்டிலான தமிழ் குடும்பம். பாலகிருஷ்ணன் மகள் என்கிற அடையாளம் துறந்து ‘ மல்லிகே சேச்சி’ யின் ... Read More »
அப்பாயணம் – 1
March 11, 2015
தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய செவ்வந்திப் பூக்களை பார்த்து கொண்டிருந்தேன். என் கண் முன்னே பூவின் இதழ்களை ஒவ்வொன்றாக பிய்த்து போட்டது காற்று. பார்க்க சகிக்காமல் உள்ளே வந்தேன். ஒரு மண் புழுவை துள்ள துடிக்க எறும்புக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. ஏன் எங்கு பார்த்தாலும் சித்ரவதையாக இருக்கிறது? நெற்றிப்பொட்டை அழுத்தி கொண்டேன். தலையில் அழுத்தி விரல்களை எடுத்தபோது கொத்து முடி கையோடு வந்தது. அந்த காற்றைப் போல, எறும்புக் கூட்டத்தைப் போல என்னை சின்னா பின்னப்படுத்திக் கொண்டிருந்தது ... Read More »
அதே மோதிரம் – 5
March 11, 2015
உடைந்த கைபேசியில் இருந்து இப்படியொரு குறுஞ்செய்தி வருவது சாத்தியமா..? வந்திருக்கிறதே! எப்படி..? மணியின் கைபேசி கோளாறை எப்படி சொல்வது. அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் சில சமயம் இதைவிட தாமதமாகவும் கிடைத்திருக்கிறது. பல முறை பொம்மி சொல்லியும் தன் கைபேசியை மணி மாற்ற விரும்பவில்லை. வழக்கம் போலவே எழுந்தவன் அலுவலகம் சென்றான். வழக்கத்திற்கு மாறாக மணியின் முகம் வேறுமாதிரி இருந்தது. யார் கவனித்தார்களோ இல்லையோ மணியின் மேலதிகாரி கவனித்திருக்க வேண்டும். மணி, முதலாளி அறைக்கு அழைக்கப்பட்டான். மதிய உணவு நேரம். ... Read More »
அதே மோதிரம் – 4
March 11, 2015
மணியின் கையில் இருக்கும் மோதிரம் மணியின் நிச்சயதார்த்த மோதிரம். தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டியவனுக்கு வந்த முதல் பொருள். அந்த மோதிரம், காதலி தனக்கு நிச்சயிக்கப்பட்ட விரலில் அணிவித்த அதே மோதிரம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என மணியின் ஆழ்மனதின் குரல் காதில் கேட்கத் தொடங்கியது. குழப்பம் மேலும் சூழலை குழப்பியது. மோதிரம், காதலி, சாலை குழி, மஞ்சல் முகம், விடுமுறையில் இருக்கும் மாறன், திடீரென்ற ஆனந்தனுடன் சந்திப்பு, கண்ணாடி பின்னால் நடந்த யாரோ, எல்லாவற்றுக்கும் மேலாக கழட்டிய ... Read More »
அதே மோதிரம் – 3
March 11, 2015
அந்த தலையில்லாத உருவம் அங்கு இல்லை. மணி அதிர்ச்சியானது நண்பன் ஆனந்தனைப் பார்த்து. இந்த நண்பன் மணியின் பக்கத்துவீடு. நினைவு இருக்கின்றதா..? தொடக்கத்தில் கீழே விழுந்தும் பின்னால் வாந்த கனரக வாகனம் மோதம் சென்றதே. ஆம் ‘எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ; கடவுளுக்கு என் மீது அதிகம் நம்பிக்கை இருக்கிறது’ . இந்த வாசகம் ஒட்டியிருக்கும் மேஜைக்கு சொந்தக்கார். பக்கத்து வீடுதான் என்றாலும் மணியும் ஆனந்தனும் இப்படி முகத்துக்கு முகம் சந்திப்பது இப்போதுதான். அதுவரை ... Read More »
அதே மோதிரம் – 2
March 11, 2015
காதலியில் அழுகுரல் கேட்டவுடன் அதுவரை அடங்கியிருந்த கண்ணீர் வெளிவந்தது. மாற்றி மாற்றி இருவரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள். இனி அவர்கள் பேசுவதை கேட்போம். “நீங்க போனை என்ன செஞ்சிங்க..” “ஒன்னிமில்ல விடு; மன்னிச்சுடு….” “சொல்லுங்க என்ன செஞ்சிங்க.. தூக்கி எறிஞ்சிங்கதானே….?” “ம்….விடுவிடு தப்பு என் மேலதான்…. அவசரப்பட்டுட்டேன்…” “நீங்க என்ன செய்விங்க…. உங்க நிலமை தெரியாம நான் தான் அதிகம் பேசிட்டேன்… மன்னிச்சிடுங்க….இனி இப்படி பேச மாட்டேன்….” “இல்ல…தப்பு என் மேலதான்…” “இல்ல இல்ல என்மேலதான்… சரி ... Read More »
அதே மோதிரம் – 1
March 11, 2015
‘எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ; கடவுளுக்கு என் மீது அதிகம் நம்பிக்கை இருக்கிறது’ . இந்த வாசகம் ஒட்டியிருப்பது நம் நாயகனின் மேஜை மீதுதான். அதன் காரணம் சுவாரஸ்யமானதாக இருப்பதால் இங்கு சொல்வதில் தவறில்லை. கடந்த ஆண்டு நடந்த சம்பவம் அது. வேலைக்கு செல்லும் சமயம் வழக்கம் போல அம்மாவிடம் சொல்லியவனை அம்மா; ‘ஐயா, இன்னிக்காவது வெளியில் இருக்கும் சாமியைக் கூம்பிட்டிட்டு போப்பா…’ என்றார். வீட்டிலிருந்து வெளிவந்தால் இடது புறத்தில் சின்னதாய் ஒரு கோவில் ... Read More »
கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்
March 10, 2015
வெளி பரந்து விரிந்து கொண்டு எவ்வளவு தூரம்தான் போய்க் கொண்டிருக்கும்? வீட்டிற்கு முன் தாத்தா வந்து நின்று கொண்டிருப்பது போன்ற பிரமை ஏற்பட்டதும் திடீர் விழிப்பு. எழுந்து உட்கார வேண்டும். இல்லையேல் வெளியைப் பற்றிய ஞாபகம் பிசகிவிடும் என்பது போல் இருந்தது. சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்து கொள்வதே பெரிய சிரமமாகப் பழகிப் போயிருந்தது. மீண்டும் ஜன்னலை நோக்கிப் பார்வையை நகர்த்தினேன். ஜன்னல் கதவு இலேசாகத் திறந்திருந்தது. வெளி சிறிய இடைவெளியில்தான் தெரிந்து கொண்டிருந்தது. வெளி முழுக்க இலேசான ... Read More »