அன்று செவ்வாய்க் கிழமை. மாலை ஐந்து மணி. பங்களாவின் சமையலறையில் பார்வதிக்கு ‘ஸ்ட்ப்டு எக்‘ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து விட்டு அதற்குப் பதிலாக சோயா உருண்டை, சிக்கன் அல்லது காளான் அடைத்து மைதா பிசினால் முட்டையை ஒட்டி வேக வைப்பது. கொழுப்பற்ற புரத உணவு. அவளை தனியே செய்யச் சொல்லிவிட்டு டைனில் ஹால் பக்கம் வந்தேன். அப்படியே கையை கட்டிக் கொண்டு கோழித்தூக்கம் போட்டபோது… “வீல்” என்ற பார்வதியின் அலறலும், தீய்கிற ... Read More »
ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 3
March 13, 2015
அன்று ஞாயிற்றுக் கிழமை. காலை ஆறு மணிக்கு வெள்ளை வெளேர் என்ற செஃப் டிரெஸ்ஸில் ஓட்டமும் நடையுமாக ஒரு பெண்மணி வந்தார். வெளேர் முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்கள். செம்பட்டை தலை முடி; சரிந்த வயிறு. அதிகமாக சக்தியை விரயம் செய்யாமல் எனக்கு மாத்திரம் கேட்கிற மாதிரி பேசினார்; “ஐ யம் பலீனா. ” அவரை வரவேற்று உபசரித்து அவருக்கான அறையைக் காட்டினேன். அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கான வேலைச் சுமையில் பாதியை பங்கிட்டுக் கொண்டார்! அன்று ... Read More »
ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 2
March 13, 2015
அன்று புதன் கிழமை. முகூர்த்த நாள். ஹோட்டல் அறைகள் எல்லாமே நிரம்பி வழிந்தன. அதிகாலை நான்கு மணியிலிருந்து நானும் என் குழுவினரும் பறந்து பறந்து ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தபோது என் பாஸ் ஜெகதீஷ் குமாரிடமிருந்து ஃபோன். வீட்டுக்கு வரச் சொன்னார். அவர் பங்களா ஹோட்டலிலிருந்து பத்து கிலோ மீட்டர். காரைக் கிளப்பிக் கொண்டு போனேன். இயற்கைக் காற்று சதிராடும் ஹால்… “மூணு முக்கியமான விஷயம் சூரி’’ என்றார், மளமளவென்று ஷேவ் செய்த முகவாயை வருடிக் கொண்டே. நான் ... Read More »
ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 1
March 13, 2015
மிஸ்டர் ஜெகதீஷ் குமார்: வயது ஐம்பத்து மூன்று. ஹோட்டல் கோல்டன் பாலஸ் ஓனர். என் முதலாளி. கோடிஸ்வரர்; வருமான வரியெல்லாம் கட்ட மாட்டார். மிஸஸ் ஆரண்யா: ஜெகதீஷ் குமாரின் மனைவி; பிரபல ஆயுர்வேத வைத்திய நிபுணரான வால்மீகியின் மகள். வயது ஐம்பது. சமூக சேவை, மாதர் சங்கம் என்று வீடு தங்காத பெண்மணியை கடந்த ஆறு மாதமாக ஒரு கார் விபத்து சக்கர நாற்காலியில் முடக்கிப் போட்டது. இடுப்பெலும்பு சேதமுற்றவர். உலோக இடுப்பு பொருத்தி இருந்தாலும் தொடர்ந்து ... Read More »
தங்கத் தண்டு – 21 இறுதி அத்தியாயம்
March 12, 2015
சுரங்கத்தின் மறு பாதை தனகிரி தாண்டிப் போகும். அங்கிருந்து புதுச்சேரி போய், சுற்றி வளைத்து கடல் மார்க்கமாய் இலங்கை சென்று தப்பித்த விக்டர் மார்ஷல் இப்போது தனியார் விமானத்தில் ஜூடி பக்லே என்ற விமானியுடன் பசிபிக் கடலிலுள்ள எரிமலைத் தீவுக்கு போய்க் கொண்டிருக்கிறான். நூற்று இருபது கிலோ எடையில் ராட்சசன் போல் இருந்த ஜூடி பக்லே கள்ளமறியாதவன். பணத்துக்காக விக்டர் மார்ஷல் ஏவிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். விக்டர் எரிமலைக் குழம்பு வருகிற வழியில் பள்ளம் வெட்டச் ... Read More »
தங்கத் தண்டு – 20
March 12, 2015
தனகிரி – தாமரைக்குளம் அந்தரீஸ், நரேன், சுதர்சனா மூன்று பேரும் நின்றிருந்தனர். மேலே பொதி பொதியாய் மேகங்கள்; கீழே தண்ணென்று பூத்த தாமரைகள்… “ என்ன மேடம், நீங்க பாட்டுக்கு புராணக் கதையில வர்ற மாதிரி நாதா, எனக்கு தாமரைப் பூக்களைப் பறித்துத் தருகிறீர்களான்னு கேட்டு இங்க கொண்டு வந்து நிறுத்திட்டீங்க! ” அந்தரீஸ் பேச்சை ஆரம்பித்தான். “படத்தைப் பாருங்க ! தாமரைப் பூக்களை கண்டு பிடிச்சுட்டோம்! முதலையை கண்டு பிடிக்கணும்! ” என்றாள் சுதர்சனா. “ ... Read More »
தங்கத் தண்டு – 19
March 12, 2015
அம்பல சித்தர் குகையிலிருந்து வெளி வந்தனர் சுதர்சனாவும் நரேனும் அந்தரீஸும். விக்டர் மார்ஷலின் ஒரே நோக்கம் ரசவாத ரகசியம்தான். அது பத்திரமாக இருக்கிறது; அம்பல சித்தர் குகைக்கு மட்டுமல்ல; இரண்டு மலைகளுக்கிடையில் அவன் வந்ததற்கான அறிகுறியே இல்லை ! ஆனால் தனகிரிக்கு வந்திருக்கிறான்; காட்டுவாசிகளை கொன்றிருக்கிறான் ! ஏன்? இப்போது எங்கிருக்கிறான்? என்ன ஆனான்? சுதர்சனா நரேனிடம் கேட்டாள், “சார், ரிது அகோரிகள் கிட்ட மாட்டிக்கிறதுக்கு முன்னாடி அவ கூட்டத்தோட எங்க தங்கியிருந்தா? ” “தனகிரிக்குப் பின்பக்கம், ... Read More »
தங்கத் தண்டு – 18
March 12, 2015
நரேன் மேல் தன் உடம்பு அழுந்த படுத்திருந்தாள் ரிது ! அறைக்குள் ஒரே ஒரு ஜன்னல் வழியாக வெளிச்சமும் குளிர்காற்றும் வந்து கொண்டிருந்தது. நரேன் ஜன்னல் கதவை முழுதும் சாத்தினான் ! அறைக்குள் புழுக்கம் அதிகரித்ததால் ரிது அவனை விட்டு விலகி கட்டாந்தரையின் சில்லிப்பை விரும்பி அங்கு சென்று படுத்துக் கொண்டாள் ! தனக்கு மட்டும் காற்று வரும்படி லேசாக ஜன்னலை திறந்த நரேன், கன்னத்தை துடைத்துக் கொண்டு வசதியாகப் படுத்துக் கொண்டான்………. அவன் மனிதன்தானே? விடிந்தது. ... Read More »
தங்கத் தண்டு – 17
March 12, 2015
அந்தரீஸுக்கும் மூச்சுத் திணறியது. நிலத்தில் போட்ட மீனாகத் திணறி முடித்தான். அவன் வாய் திறக்க முயற்சித்த அதே விநாடி… ஒரு கை அவன் மூக்கையும் வாயையும் பொத்தி குளத்தின் அடித்தரைக்கு இழுத்துப் போனது! அடித்தரையில் அவனைப் படுக்க வைத்து வாயோடு வாய் வைத்து காற்றை ஊதி மூச்சு திணறலை சரிப்படுத்திய பின் திரும்பவும் மூக்கையும் வாயையும் பொத்தியது! இரவு பத்து மணி இருக்கலாம். ரிது நரேனின் மடியில் கை போட்டு கதையளந்து கொண்டிருந்தாள். நரேன் தன் சுபாவத்துக்கு ... Read More »
தங்கத் தண்டு – 16
March 12, 2015
ஸ்தனகிரி குகை முழுக்க ரத்த எழுத்துக்களும், சிறுத்தைகள் பிய்த்து போட்ட மிச்சமும்… ரத்த வாடை இன்னமும் அடித்துக் கொண்டிருந்தது. மண்டையோடு பிய்ந்து வந்த கொத்து முடி குகைக்கு வெளியே செடியில் மாட்டியிருந்தது. நரேன் நிதானமிழந்து குகையின் சுவரை கைகளால் குத்தி தன் ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். கைகளில் புள்ளி புள்ளியாய் ரத்தம்! அவன் லாவண்யாவை நேசித்தான்; மனமார நேசித்தான். எத்தனை முறை அவளை மனதுக்குள் கட்டித் தழுவி இருப்பான், எத்தனை முறை சின்ன உதடுகள் கரைந்து போகுமளவு ... Read More »