கேணிவனம் – 2

இரயிலை தொலைத்த அந்த தண்டவாளத்தில் தாஸூம், குணாவும் முழித்துக் கொண்டு நின்றிருக்க… ‘சே..! என்ன ஒரு முட்டாள்தனம்..’ குணா புலம்பினான்… ‘ச்சே’ என்று தாஸூம் புலம்பியபடி நின்றிருந்து… ஒரு சமயத்துக்குமேல் இருவருக்கும் அலுத்துவிடவே… வேறுவழியில்லாமல் அந்த தண்டவாளத்தில் ரயில் சென்ற திக்கில் இலக்கில்லாமல் நடக்க ஆரம்பித்தனர். நீண்ட தூரம் நடந்துப் பார்த்தும் அதே காடுகள் சூழுந்த தண்டவாளம்தான் இருபக்கமும் தெரிகிறது. ‘இதுக்கு மேல நடந்து பயனில்லை குணா, பேசாம இந்த காட்டுவழியா கொஞ்ச தூரம் உள்ளே நடந்து ... Read More »

கேணிவனம் – 1

முன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிருந்தது. மணி முற்பகல் 11 என்றால் யாரும் நம்பமாட்டார்கள். அவ்வளவு மேகமூட்டத்துடன் அந்த காடு மாலைவேளை போல் காட்சியளித்துக் கொண்டிருந்தது. இரயில் தண்டவாளம் என்ற பெயரில் சீராக அமைந்திருக்கும் அந்த இரண்டு இரும்பு கோடுகளை இரசித்தபடி தனது ஜன்னலோர இருக்கையில் குணா அமர்ந்திருந்தான். அப்பர் பர்த்தில் 11 மணிவரை தூங்கியும்கூட அவன் கண்களில் தூக்கம் இன்னும் மீதமிருந்தது. அவன் ... Read More »

ரத்த காட்டேரி – 30 இறுதி அத்தியாயம்.

ரத்த காட்டேரி – 30 இறுதி அத்தியாயம்.

அந்தப் பாதை செங்குத்தாக சரிவாகக் கீழ்நோக்கி இறங்கியதாலும், கம்பளிப் போர்வை மற்றும் தேவையான பொருட்களை சுமந்து செல்லவேண்டியிருந்ததாலும், நிதான மாகவே நடந்து சென்று கொண்டிருந்தனர். பின்புறம் திரும்பிப் பார்த்தபோது டிராகுலா கோட்டை தூரத்தில் தெரிந்தது. விசில் சத்தமும் சூறைக்காற்றும் பனிப் பொழிவுமாக இருந்தது. அவர்கள் நடக்க ரொம்பவும் சிரமப்பட் டனர். இதுபோக தூரத்தில் ஓநாய் கூட்டத்தின் ஊளைச் சத்தம் வேறு. ஓய்வெடுப்பதற்காக ஓரிடத்தைக் கண்டுபிடித்தனர். பாறைகளுக்கு இடுக்கில் குகைவாசல் போன்ற இடுங்கிய ஒரு பகுதியைப் பார்த்துவிட்டு, “மினா, ... Read More »

ரத்த காட்டேரி – 29

ரத்த காட்டேரி – 29

ஜோனாதன் தன்னுடைய டைரியில் குறிப்பிட்டிருந்ததைப் போல அந்தப் பாதையில் அவர்கள் மணிக்கணக்கில் பயணம் செய்தனர். டிராகுலா பிரபுவின் கோட்டையை நெருங்க நெருங்க மினாவின் உடல்நிலையில் ஏதோ மாற்றம் ஏற்படுவதைப் பார்த்தார் ஹென்சிங். அப்போது மினாவை மயக்கத்தில் ஆழ்த்த முயன்று தோற்றுப் போனார் ஹென்சிங். மனித நடமாட்டமே இல்லாத மலைகள் நிறைந்த பாலைவனப்பகுதியில் அவர்களின் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. மினா நன்றாக உறங்கலானாள். மினா என்ன காரணத்தினாலோ சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டாள். அந்த பயங்கரமான குதிரையின் அமானுஷ்ய ... Read More »

ரத்த காட்டேரி – 28

ரத்த காட்டேரி – 28

இந்த பரபரப்பான லண்டன் மாநகரம் தனக்கு சரிப்படாது என்று முடிவுக்கு வந்துவிட்டது டிராகுலா பிரபு. அதனால்தான் மண் நிரப்பப்பட்ட தன்னுடைய கடைசிப் பெட்டியுடன் தப்பிக்க முயற்சி செய்கிறது. அதனைத் தப்பிக்க விடக்கூடாது. எப்படியும் பின்தொடர வேண்டும். ஒரு மன நிறைவான விஷயம் என்னவென்றால் இப்போது அது பயணிக்கும் கப்பல் அத்தனை விரைவாக கரையை நெருங்கி விடாது. கப்பல் கரையை நெருங்கும்மட்டும் அதனால் தப்பித்துவிட முடியாது” என்றார் ஹென்சிங். டிரான்சில்வேனியாவுக்குத் திரும்பிச் செல்வதுதான் டிராகுலா பிரபுவின் நோக்கம் என்பதில் ... Read More »

ரத்த காட்டேரி – 27

ரத்த காட்டேரி – 27

ஆயினும் ஜோனாதன் ஹார்க்கர் தன்னை சுதாரித்துக் கொண்டு சட்டென்று உருவிய தனது கூர்மையான பிச்சுவாவை அந்த உருவத்தை நோக்கி விசையுடன் வீசினார். ஆபத்தான அந்த வீச்சிலிருந்து மிக சாதாரணமாக டிராகுலா பிரபு தப்பித்துக் கொண்டார். அதற்குள் அந்தப் பிச்சுவாவை கைப்பற்றிக் கொண்ட ஜோனாதன் மறுபடியும் டிராகுலா பிரபுவை நோக்கி வீசினார். ஹென்சிங் இடக்கையில் பரிசுத்த ரொட்டி நிறைந்த பை மற்றும் சிலுவையை உயர்த்திக் காட்டியபடி டிராகுலா பிரபுவை நோக்கி முன்னேறினார். அதே சமயம் மற்றவர்களும் அதை நோக்கி ... Read More »

ரத்த காட்டேரி – 26

ரத்த காட்டேரி – 26

டிராகுலா பிரபு தன்னுடைய இடக்கையில் மினாவுடைய இரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்திருந்தது. வலக்கையால் அவளது கழுத்தின் பின்பகுதியை இறுக்கிப் பிடித்திருந்தது. மேலும் அவளைத் தன் மார்போடு சேர்த்து இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. அவளது இரவு உடை ரத்தத்தில் ஊறி நனைந்திருந்தது. டிராகுலா பிரபுவின் மார்புப் பகுதியிலிருந்து ஓர் அருவிபோல வடிந்து கொண்டிருந்த ரத்தப் பாய்ச்சலைக் கண்டு அவர்கள் எல்லாரும் மிரண்டுபோய் விட்டனர். அந்த அறைக்குள் அவர்கள் நுழைந்துவிட்ட காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பினார் டிராகுலா பிரபு. அவரது ... Read More »

ரத்த காட்டேரி – 25

ரத்த காட்டேரி – 25

செர்வாண்டிடம் ஒரு பூமாலையைக் கொடுத்தபடி, “இது வெள்ளைப் பூண்டின் பூக்களால் கோர்க்கப்பட்ட மாலை. நீங்கள் இதனைப் போட்டுக் கொள்ளுங்கள்” என்றார். இன்னும் சில பொருட்களை எடுத்து மற்றவர்களிடம் கொடுத்து அதன் பாதுகாப்பு மகத்துவம் பற்றிக் கூறினார். செர்வாண்ட் தனது பையிலிருந்த சாவிக் கொத்து ஒன்றை எடுத்து, அதில் இருந்த ஒவ்வொரு சாவியையும் கல்லறையின் கதவில் போட்டுத் திருப்பினார். அதில் கடைசிச் சாவி கதவில் பொருந்தியவுடன் கதவு திறந்து கொண்டது. அந்தக் கதவைத் திறந்தவுடன் எல்லாரும் ஒருவித நடுக்கத்தை ... Read More »

ரத்த காட்டேரி – 24

ரத்த காட்டேரி – 24

ஆம்; உண்மைதான். நம்முடைய ஜோனாதன் ஹார்க்கர் டிராகுலா பிரபுவோடு சில காலம் தங்கியிருந்தவர். அது உணவு அருந்துவதை ஒருபோதும் அவர் பார்த்ததில்லை. முகம் பார்க்கும் கண்ணாடியில் அதன் உருவம் தெரியாது. திடும்மென்று ஒரு ஓநாயாகவோ அல்லது வௌவாலாகவோ அதனால் சுலபத்தில் மாற முடியும். ஏன் திடும்மென்று பனிமூட்ட மாகவோ நிலாவில் ஒரு பனித்துளியாகவோ மாறமுடியும். ஒரு தலைமுடி கடக்க முடியாத இடைவெளியில்கூட அதனால் கடந்து செல்ல முடியும். ஆனால் இவ்வளவெல்லாம் செய்ய முடிந்தாலும் சில விஷயங்களில் மிகவும் ... Read More »

ரத்த காட்டேரி – 23

ரத்த காட்டேரி – 23

இதோ, இந்தக் கட்டுத்தறியை உங்களின் இடக்கையால் பற்றிக்கொண்டு அவள் இதயத்திற்கு நேர்மேலாக இதன் முனை பொருந்துமாறு சரியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். வலது கையால் மரச் சுத்தியலை எடுத்துக் கொண்டு தயாராகுங்கள். நாங்கள் பிரார்த் தனை செய்யப் போகிறோம். அப்போது கடவுளை தியானித்தபடி இந்தக் கட்டுத்தறியை அவளின் மார்பில் அடித்து இறக்குங்கள். அத்துடன் அந்தக் காட்டேரி அவளிடமிருந்து விடுபடுவதுடன், லூசியின் ஆத்மா என்றென்றைக்கும் சாந்தி யடைந்துவிடும்.” ஹென்சிங் கூறியபடியே ஆர்தர் லூசியின் இதயத்தில் அந்தக் கட்டுத்தறியை அடித்து இறக்கத் ... Read More »

Scroll To Top