கேணிவனம் – 12

ப்ரொஃபெஸர் கணேஷ்ராம், ஃபோனில் தாஸிடம், தான் ஓவியத்தில் கண்டுபிடித்த மூன்றாவது நபர் பற்றி கூறிக்கொண்டிருந்தார். ‘அந்த மூணாவது நபர், அரசருக்கு பக்கத்துல, உக்காந்துட்டிருக்கிற மாதிரியிருக்கு… ஒரு அரசன் நின்னுட்டிருக்கும்போது, பக்கத்துல உக்கார்ற தகுதி ரொம்ப சிலருக்குத்தான் இருக்கும்… அந்த வகையில பாக்கும்போது, ஒண்ணு யாராவது ஒரு பெரிய புலவரா இருக்கலாம்… இல்லன்னா யாராவது ஒரு முனிவராவோ இல்லை சித்தராவோ இருக்கலாம்..’ ‘நீங்க என்ன சார் நினைக்கிறீங்க..?’ ‘எனக்கு தெரிஞ்சு அது புலவரா இருக்க வாய்ப்பில்லை..!’ ‘ஏன்..?’ ‘ஏன்னா, ... Read More »

கேணிவனம் – 11

சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில்… CTH ரோட்டில்…. ஒரு கார் சீறிக்கொண்டிருந்தது. உள்ளே…. தாஸ் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் லிஷா அமர்ந்திருந்தாள். ‘இன்னும் எவ்வளவு தூரம் போகணும்…’ ‘ஆல்மோஸ்ட் தேர்… ஏன் லிஷா? சந்தோஷ் இல்லாம போரடிக்குதா..?’ ‘அப்படியில்ல… சும்மாதான் கேட்டேன்..’ என்று பேசியவள், சற்று தயங்கி… ‘உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா..?’ ‘என்ன லிஷா..?’ ‘நேத்து, நீங்க சந்தோஷ்கிட்ட பேசும்போது இந்த வார்ம்ஹோல் எங்கேயிருக்குன்னு வெளிநாட்டுக்கு சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க..?’ ‘ஆமா..?’ ‘அப்ப ஏன், நம்ம நாட்டு விஞ்ஞானிங்ககிட்ட ... Read More »

கேணிவனம் – 10

இரவு 7 மணி… ANCIENT PARK-ல் வாடிக்கையாளர்கள்… கூடத்தில் அங்குமிங்கும் புத்தகங்களில் முகம் புதைத்திருந்தனர். ஒருவிதமான அமைதி அந்த கூடத்தில் கனத்துக்கொண்டிருந்தது. லிஷா சடாரென்று அவசர அவசரமாக ANCIENT PARKக்குள் நுழைந்தாள். அவள் அப்படி அவசரமாக நுழைந்ததை, அங்கே கூடத்தில் புக் படித்து கொண்டிருக்கும் சில வாடிக்கையாளர்கள் கவனம் கலைந்தவர்களாக அவளை மிதமாக முறைத்தனர். அவள் அவர்களை சட்டை செய்யாமல் அங்கிருந்து, தாஸின் ஆஃபீஸ் அறைக்கு சென்று கதவை பதற்றத்துடன் திறந்தாள்… அறை காலியாக இருந்தது…கான்ஃபரன்ஸ் அறைக்குள் ... Read More »

கேணிவனம் – 9

‘என்ன லிஷா சொல்றே… குணாவைக் காணோமா..? எங்கே போனான்…?’ என்று சந்தோஷ் அதிர்ச்சியாய் கேட்க… ‘ஆமா சாண்டி(Sandy), சாப்பிட்டு முடிச்சி கூடவே வந்த ஆளு, கை கழுவிட்டு, கான்ஃபரன்ஸ் ஹால் பக்கம் போயிட்டிருந்தாரு… அப்புறம் ஆளக்காணோம்… தேடிப்பாத்தா எங்கேயும் இல்ல..?’ என்று லிஷா குழப்பமாக கூற… தாஸ் சட்டென்று எழுந்து… கான்ஃபரன்ஸ் ஹால் பக்கம் வேகமாக நடந்தான்… லிஷா அவனை பின்தொடர்ந்து போக, சந்தோஷ் வாசலை நோக்கி ஓடினான். கான்ஃபரன்ஸ் ஹாலில், பழையபடி ஆரஞ்சு கலர் வெளிச்சமும், ... Read More »

கேணிவனம் – 8

சுவற்றில் ப்ரொஜெக்ட் செய்யப்பட்டிருந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்த தாஸ்… எழுந்து அந்த ஓவியத்தை நெருங்கி சென்றான். ‘சந்தோஷ், நாங்க ரெண்டு பேரும் எப்படி வெவ்வேற காலக்கட்டத்துக்கு வந்து சேர்ந்தோம்னு தெரிஞ்சிடுச்சி…’ ‘எப்படி பாஸ்…’ என்று சந்தோஷ் கேட்டுக் கொண்டிருக்க… தாஸ் அந்த ஓவியத்தை நெருங்கி வந்து உற்றுப் பார்த்தான்.  இதுவரை அந்த ஓவியத்தில் பார்க்காத ஒரு விஷயம், தாஸ் கண்களுக்கு தெரிந்தது. அது… அந்த ஓவியத்தை சுற்றி வரையப்பட்டிருந்த பார்டர். ஓவியத்தின் மையப் பகுதியிலேயே இதுவரை தனது ... Read More »

கேணிவனம் – 7

‘யோவ் ரைட்டர்… எல்லாம் உன்வேலதானா..? நீ என்ன வில்லனா..?’ என்று குணா, தாஸை முறைத்துக் கொண்டிருந்தான்… ‘சாரி குணா… என்னை வில்லன் மாதிரி நடந்துக்க வச்சிட்டீங்க…’ ‘நான்தான் உன் சகவாசமே வேண்டாம்னு சொல்லியிருக்கேன்ல..? அப்புறம் ஏன்யா எனக்கு தொல்லை கொடுக்குறே..?’ என்று குணா கோபப்பட ‘குணா… நான் உங்களை இங்க வரவழைச்சதே நம்ம நல்லதுக்குதான்…’ ‘என்ன நல்லது..?’ ‘நாம மறுபடியும், அந்த காட்டுக்கோவிலுக்கு போக வேண்டியிருக்கும்…’ என்று கூற, உடனே குணாவிற்கு, அவன் அந்த காட்டுக் கோவிலில் ... Read More »

கேணிவனம் – 6

‘குணா, ஏன் கோவமா பேசுறீங்க..?’ என்று மறுமுனையில் குணாவை தாஸ் சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான். ‘பின்ன என்ன உங்கிட்ட கொஞ்சுவாங்களா..?’ என்று குணா கோபம் குறையாமல் பேசினான். ‘ப்ளீஸ் குணா, காம் டவுன்…’ ‘யோவ், நீ அந்த கோவில்ல விட்டுட்டு போனதும், ஒரு மணி நேரம், கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி ஆயிடுச்சி…! எப்படி தனியா துடிச்சேன் தெரியுமா..?’ ‘அங்கே என்ன நடந்து… நீங்க எப்படி தப்பிச்சு வந்தீங்க… அதை சொல்லுங்க..’ என்று பேசியபடி, ... Read More »

கேணிவனம் – 5

தாஸ் இன்னமும் ரயிலுக்கு உள்ளே செல்லாமல், கதவருகிலேயே நின்றிருந்தான். அந்த காலை வேளையில், மிதமான ரயிலோசை அவனை பொறுத்தவரை, ஒரு தியானம் போல் இருந்தது. நடந்ததை சொன்னால், யார் நம்புவார்கள்… எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தனக்குள் எழும்பிய எண்ணங்களை அடக்கி, தன் மனதை ரயிலோசையில் லயிக்க விட்டான். எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தான் என்று அறியாத வண்ணம் நேரம் கடந்துக் கொண்டிருதது… இதுவும் ஒரு வகையில் டைம் ட்ராவல்தான்… நான் காலத்தை கடந்தவன்… ஒரு சின்ன ... Read More »

கேணிவனம் – 4

கிணற்றுக்குள் இருந்த அந்த பாடலையே பார்த்துக் கொண்டிருந்த தாஸ், சற்று நேரத்தில் இயல்புக்கு திரும்பியவனாய், தனது மொபைல் ஃபோன் வெளிச்சத்தில் அந்த பாடலை ஃபோட்டோ எடுத்துக் கொண்டான். மொபைலில் பேட்டரி இன்னும் இரண்டு புள்ளிகளே இருந்ததால், கருவறைக்கு வெளியே வந்து மொபைல் லைட்டை ஆஃப் செய்தான். குணா, தனது புலம்பலை நிறுத்திவிட்டு, நெருப்புக்கு அருகில் அமர்ந்திருந்தான். மூட்டிய தீ எப்போதும் அணைந்துவிடும் என்ற நிலையில் அரைகுறையாக எரிந்துக் கொண்டிருந்ததை அவன் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘என்ன தாஸ், ... Read More »

கேணிவனம் – 3

விட்டத்தில் தாஸ் கண்ட ஓவியம்… அவனது தூக்கத்தை கலைத்து எழுந்து உட்கார வைத்தது. அந்த ஓவியத்தில் நடுவே ஒரு பெரிய கருப்பு வட்டமும், அந்த வட்டத்திற்கு வெளியே பல மனிதர்கள், பாதி உடம்பு வட்டத்துக்குள்ளும், மீதி உடம்பு வெளியில் இருக்கும்படியும் விழுந்து வணங்குவது போல் வரையப்பட்டிருந்தது. அந்த வட்டத்திற்கு அலங்காரங்கள் அமர்க்களமாக செய்யப்பட்டிருந்தது. மேற்கொண்டு தாஸ், அந்த ஓவியத்தை பார்க்க முனைந்தபோது, வெளிச்சம் போதாததினால்…. தாஸ் எழுந்து நின்றான். உற்றுப் பார்த்தான்.  தரையில் மூட்டியிருக்கும் தீயின் வெளிச்சம் ... Read More »

Scroll To Top