நிலவு வானத்தில் அமைதியாக எரிந்து கொண்டு இருந்தது, யாரோ சோளபொறியை அள்ளி இறைத்ததைபோல் வானத்தில் நட்ச்சத்திரங்கள் சிதறி கிடந்தன, தூரத்தில் இருக்கும் பனை மரங்களும், தென்னைமரங்களும் பேய் நிழல்போல் காட்சியளித்தன, எனது காட்டின் அடப்போரத்தில் யாரோ நிழல்போல் அடிக்கடி நடமாடுவதைபோல் எனக்குள் ஒரு மாயை உணர்வு தோன்றி தோன்றி மறந்துகொண்டு இருந்தது, போன வருடம் எங்கள் காட்டிற்கும் பக்கத்து காட்டுக்காரர் வேப்பமரத்தில் தூக்கு போட்டுகொண்டு காட்டிலேயே இறந்துவிட்டதாகவும் அவர் ஆவி இரவு நேரங்களில் காட்டில் அலைந்துகொண்டு இருப்பதாகவும் ... Read More »
ஒரு மர்ம இரவு – 1
March 23, 2015
அப்பொழுது எனக்கு பதினாறு வயது, பள்ளிக்கு சென்றுகொண்டு இருந்தேன், மூன்று கிலோமீட்டர் பள்ளிக்கு காட்டு குறுக்கு வழியில் நடந்து போவேன், அதே வழியில் நடந்து வருவேன் ஒரு நாளைக்கு மொத்தம் ஆறு கிலோமீட்டர் ஏழு வருடம் நடந்து இருக்கிறேன், அப்பா சைக்கிள் வாங்கி கொடுத்தார் ஆனால் அதில் செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை, நடந்து செல்வதில் அதிக விருப்பப்பட்டேன், ஏனென்றால்! நடந்து சென்றால்தானே நண்பர்களோடு ஜாலியாக கதை பேசிக்கொண்டு, மாட்டுவண்டி பாதையில் உலவும் ஓணானை துரத்தி அடித்துகொண்டு, ... Read More »
இரை தேடிய இரவுகள் – 10 இறுதி அத்தியாயம்.
March 19, 2015
ஆகஸ்ட் 12 – 2002, இரவு 9.49.. சடக் சடக் என வந்த அந்த அழுத்தமான சத்தங்களுடன் … கண்களுக்கு நேர் எதிரே அந்தப் பெரிய விளக்குகள் இரண்டும் எரியத்தொடங்கின.. கண்களைத்திறக்கமுடியவில்லை வெளிச்சத்தின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது.. இருந்தாலும் கண்களைத் திறந்தே ஆக வேண்டும்… தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய ஆவல் கொண்ட அவள் கண்கள் .. கஷ்டப்பட்டு திறந்து கொள்ள முற்பட்டன… மூடியிருந்த கண்கள் திறந்தவுடன் கனமான அந்த வெளிச்சம்… ஒரு கணம் ... Read More »
இரை தேடிய இரவுகள் – 9
March 19, 2015
வீட்டின் அழைப்பு மணி அலறியது…. ஓரிரு நிமிட இடைவெளியில் வந்து கதவைத் திறந்தாள் பவித்ரா… மிஸ் பவித்ரா நீங்கதானே…. வந்திருந்த பெண் பவியிடம் கேள்வியைக் கேட்டாள்… வீட்டிற்குள் வர முன்னரே என் பெயரை அறிந்து வைத்திருக்கின்றாள்…யாரோ என்ற சிந்தனையுடன்… மெதுவாக….தன் அடித்தொண்டையால்… ஆ….ம… ஆமா என்றாள்…. ஓ… ஹாய் என் பேரு சுலக்சனா… உள்ள வரலாமா என்றாள்… திடு திப் என வந்திருக்கும் இவள் உள்ளே வரலாமா என்றதும் ஆம் என்பதா இல்லையா என்பதா என்று சிந்திக்கக்கூட ... Read More »
இரை தேடிய இரவுகள் – 8
March 19, 2015
1994-மார்கழி-24ம் நாள்… மறுநாள் உதயமாக இருக்கும் நத்தார்… கடைவீதிக்கு சென்று வந்த களைப்பில் … கதவைத்திறக்கும் மோகன், வனிதா …மகள் அக்ஷயா… கதவைத்திறந்து கையில் பொதிகளுடன் மாடிப்படிகளில் ஏறி வந்த களைப்பில் … ப்.ப்……. கொஞ்சம் தண்ணி… எடு… வனி கொஞ்சம் பொறுங்க….. களைப்பில் சோபாவில் சாய்கிறாள்… நான் தண்ணி கேட்கிறன்..நீ அங்க இருந்தா..என்ன அர்த்தம்… எரிந்து விழுகிறான் மோகன்.. என்ன அவசரம்…சாகப்போறிங்களா.. வனிதாவின் பதில் ம்.. அதைத்தான்டி நீ பாத்திட்டிருக்க…. கடவுளே கடவுளே…அதுக்கு முதல் நான் ... Read More »
இரை தேடிய இரவுகள் – 7
March 19, 2015
எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே.. நிம்மதி வேண்டும் வீட்டிலே…. கண்ணை மூடி பாடிக்கொண்டிருந்த அவள் தோளில் மெதுவாக கையை வைத்தாள் அவள்… மேடம்.. ம்.. இடம் வந்தாச்சு.. சிரித்துக்கொண்டே தன் இருக்கையை விட்டு எழுந்திருந்தாள்.. லதா..! முன்னால் அவர்கள் இருவரும் இறங்கிச் சென்று.. வெளியில் சுற்று முற்றும் பார்த்த பின்… வாங்க.. என்று சமிக்ஞையைத் தொடர்ந்து .. மெதுவாக அந்தப் பேரூந்தின் படிகளில் இறங்கினாள்.. எத்தனை கோடி பணமிருந்தாலும் … மீண்டும் அவள் உள் ... Read More »
இரை தேடிய இரவுகள் – 6
March 19, 2015
உச்சி வெய்யில் சூடு…. நிலம்..நீர் என விரும்பும் இடங்களிலெல்லாம் கேட்பாரின்றி தன் ஆதிக்கத்தினை செலுத்திக்கொண்டிருக்கின்றான்…சூரியன்.. நெற்றியில் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்து விரல்களால் விட்டெறிந்து..முந்தானை நுனியால் முகந்துடைக்கும் கமலா … ச்சீ….என்ன வெயிலிது… அலுத்துக்கொள்கின்றாள்.. சமையலறை வாடையோடு வாசலில் வந்து களைப்புடன் நிற்கும் கமலத்தினைப் பார்த்து.. என்னடியம்மா கமலம்..வேலையெல்லாம் ஆச்சா.. கேட்டபடி உள்நுழையும் சிவராமன்.. ஆமா ஆமா…அலுத்துக்கொள்ளும் கமலத்தினை மேலும் கீழுமாக ஒரு தடவை பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார் சிவராமன்.. 3 மணிக்கெல்லாம் வாறதாக சொல்லியிருக்காங்க…என்ன? தயார்தானே… அவரது ... Read More »
இரை தேடிய இரவுகள் – 5
March 19, 2015
கண் போன போக்கிலே கால் போகலாமா.. கால் போன போக்கிலே மனம் போகலாமா.. எலேய்.. அந்த சவுண்ட கொஞ்சம் குறைப்பியா…… சவுந்தராஜனின் இனிமையான அந்தக்குரலில் ஒலித்துக்கொண்டிருந்த அந்தத் தத்துவப்பாடலை குறுக்கறுத்த அவன் குரல் பேரூந்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த அநேகமானோரைக் குழப்பியே விட்டது. எறங்கு எறங்கேய்…. சாப்புடறவங்கள்லாம் சாப்பிடுங்கப்பா…இன்னும் 6 மணி நேரத்துக்கு வண்டி எங்கயும் நிக்காது…. பேரூந்து உதவியாளனின் எச்சரிக்கைத் தொனி கலந்த அந்த வேண்டுகோள் பலரின் வயிற்றை நேரடியாகத் தாக்கியது. சாதாரண ஓட்டல்தான் ஆனா ... Read More »
இரை தேடிய இரவுகள் – 4
March 19, 2015
பயணிகள் கவனத்திற்கு…என்று ஆரம்பிக்கும் அறிவிப்புக்கள் தொடர்ந்தவண்ணமிருக்கிறது.. சென்னை சர்வதேச விமான நிலையம்.இ 1993ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி மாலை 7.00 மணி அந்தப் பையைத் திறம்மா.. பயணிகளின் பயணப்பொதிகளை காவல்துறையினர் சோதனையிடுகின்றனர்..இது ஆரம்பம் யார் யாரு கூட வாறாங்க.. இல்லைங்க நான் தனியாத்தான் போறன் ஓ..லீவுல போறிங்களா.. கேள்விகளைக் கேட்டபடியே அவளுக்கான போடிங் காட்டினைத் தயார் செய்கிறார் உத்தியோகத்தர். ஒரு தடவைக்கு இரு தடவை அவளது கடவுச் சீட்டினை மேலும் கீழுமாக புரட்டிப்பார்த்தவர்.. உங்க ... Read More »
இரை தேடிய இரவுகள் – 3
March 19, 2015
மங்களம்.. மங்களம் உரத்த குரலில் தன் மனைவி மங்களத்தை அழைக்கிறான் சண்முகம் மீண்டும் ஒரு தடவை சற்று உரத்து அழைத்துப்பார்க்கிறான் இல்லை எந்தவித பதிலும் இல்லை எங்கே போயிருப்பாள் இவள்.தனக்குத் தானே கேள்வி கேட்டபடி சமையலறைக்குள் நுழைந்தவன் முகம் சிவந்தே போனது..ச்சீ பொம்பளையா இவள்..ராத்திரி சாப்பிட்ட ப்ளேட்..சமையல் பாத்திரங்கள்..எல்லாம் அப்படியே கழுவாமல்..ம் என்று பல்லைக் கடித்தவனாக குளியலறைப்பக்கம் தன் பார்வையைத் திருப்பினான். அங்கு சென்றவன் கண்களில் ஆத்திரம் இன்னும் அதிகமானது. என்ன பொம்பளை இவள்.. கழுவப் போட்ட ... Read More »