மச்சி . நா பேய பாக்கனும்டா . என்ற ஹரியை அதிசயித்துப்பார்த்தான் ராம் . என்னடா திடீர்னு ? பைத்தியம் பிடிச்சிடுச்சா ? இல்ல மச்சி . கண்டிப்பா நா பார்த்தே ஆகனும் . இனி ஹரியிடம் வாதம் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது ராமுக்குத்தெரியும் . அப்படினா உனக்கு ஏத்த சரியான ஆளு பேயடிச்சாமி தான்டா . அந்தாளபோயி பாரு . அவரு உனக்கு எல்லாம் தெளிவா சொல்லுவாரு . என்றவாறே அவனிடமிருந்து விடைபெற்றுச்சென்றான் ராம் ... Read More »
காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்
March 27, 2015
காலரா என்ற சொல் மரண தேவனின் சாசனத்திற்கு இணையானதாக ஒரு 60 ஆண்டுகள் முன்பு வரை கருதப் பட்டது. கங்கை நதிப் பகுதிகளில் தேங்கிய நீர்க்குட்டைகளின் காரணமாக இந்தத் தொற்று நோய் முதன்முதலில் உருவானதாகக் கருதப் படுகிறது. பின்னர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், சர்வதேச கடல்வழி வர்த்தகத்தின் காரணமாக, ரஷ்யா, ஐரோப்பா, வட, தென் அமெரிக்கா கண்டங்கள், ஆப்பிரிக்கா என்று உலகம் முழுவதும் பயணித்து கோடிக்கணக்கில் உயிர்களைக் காவு கொண்டது. 18,19,20ம் நூற்றாண்டுகளின் உலக வரலாறு பற்பல ... Read More »
குப்பைக்காரன்
March 27, 2015
முதன் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு செல்கின்ற விண்வெளி வீரர்களின் பட்டியலில் தன் பெயர் இல்லை என்பதைக் கண்டவுடன் வில்லியம்ஸுக்கு கோபம் தலைக்கேறியது. தன்னுடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 15ல் செவ்வாய் கிரகத்திற்கு செல்கின்ற வாய்ப்பு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தான். அவனுடைய மேலாளர் “உங்கள் பிறந்த நாளன்று ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது மிஸ்டர். வில்லியம்ஸ் “என்று போனவாரம்தான் கைகுடுத்துவிட்டு போனார். ஆனால் பயணம் செய்யப்போகும் ஏழு விண்வெளி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது தன்னுடைய பெயரைத் தேடித் ... Read More »
பேய் பிடித்த வீடு
March 27, 2015
அந்த வீட்டின் படுக்கையறையுள் நுழைந்ததும் பெரிய புயல் வீசியபடி இருப்பதை உணர்ந்தேன். மெதுவாக ஆரம்பித்து பின் பலமாக வீசிய அந்தப் புயலால் சிறிது நேரத்தில் நிலத்தில் தூக்கி வீசப்பட்டேன். தரையில் இருந்து மெதுவாக என்னை சுதாகரித்தபடி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து என்னை ஆசுவசப்படுத்திக் கொண்டேன். சில நிமிட நேரத்துக்கு பின் எழுந்து கண்ணாடி யன்னலை மெதுவாக மேலே உயர்த்த முயன்றேன். உயர்த்த முடியவில்லை. மிகுந்த பலத்தோடு உயர்த்தியபோது மீண்டும் வெளியில் இருந்து வீசிய புயல் காற்று ... Read More »
பின் தொடரும் பேய்!!!
March 27, 2015
நள்ளிரவைக்கடந்தும் மடிக்கணினியில் இணையத்தை மேய்ந்து கொண்டிருந்ததனால் கண்களுக்கு ஏற்பட்ட இறுக்கத்தைக் குறைக்க நிமிர்ந்து வரவேற்பறையைப் பார்க்கையில் பகீர் என்றது. அங்கு ஒருவன் உட்கார்ந்து இருந்தான், என்னையே உற்றுப்பார்த்துக் கொண்டு … பொன்னிறத்தில் தலைமுடி, ஸ்காண்டிநேவிய நிறம், உட்கார்ந்திருக்கும்பொழுதே உயரமாகத் தெரிந்தான். சன்னல்களையும் கதவையும் தாழிட்டுத்தானே வந்தேன், என்ற யோசனையில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “ஹூ ஆர் யூ … வெம் எர் டு” என ஆங்கிலத்திலும் சுவிடிஷிலும் மாறிக்கேட்டுக்கொண்டு அவனருகே நெருங்கினேன். அவனை நெருங்க நெருங்க அவன் உட்கார்ந்திருந்த ... Read More »
திகிலூட்டும் பேய்
March 27, 2015
வருஷம் 1960 காரவீடு நடு இரவு மணி ஓன்று, ஐயோ யாராவது ஓடிவாங்களென்னு ஒரு குரல், ஐயோ பாவி மகளே இப்படி பண்ணிட்டியே, இதுக்காகவா உன்னை சீராட்டி தாலாட்டி வளர்த்தேன். அதே வருசத்திலே இரண்டு மாதம் கழித்து,நடு இரவு மணி ஓன்று நான் உன்னை என்ன பண்ணினேன், நீ இருக்கும் போதுதான் எங்களை நிம்மதியா இருக்க விடலே, செத்தும் எங்க நிம்மதியை கெடுக்க பேயா அலையுறியே. அதே நாள் அதி காலை 5 மணி, மணியக்கார ஐயா..ஐயா.. ... Read More »
அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!
March 27, 2015
உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?! அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய ... Read More »
பயம் – 9
March 24, 2015
அமுதன் நம்பிக்கை இழந்தான். அவனது விழிகள் மெல்ல மூட ஆரம்பித்தன. அவனது அம்மாவை நினைத்து கண்ணீர் கொட்டியது. கைகளை விடதுணிந்த நேரம் அவனுக்கு ஓர் குரல் கேட்டது. அமுதா… நீ இறக்கமாட்டாய்… கையை விட்டுவிடாதே.. அசரீரி மீது அவனுக்கு நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை ஆனால் அன்று அவனதை நம்பினான். சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தான் கோபியும் விகியும் மட்டுமே பேயரைந்ததைப்போல் இருந்தனர். கொஞ்சம் அவனுக்கு தைரியம் பிறந்தது . மூடிய கண்களை நன்றாக திறந்து தேடினான். ஒன்றும் ... Read More »
பயம் – 8
March 24, 2015
யாரோ தன்னை பின்னல் இழுப்பதை உணர்ந்ததும் அவன் கை வேகமாக அருகில் இருந்த சுவற்றில் இருந்த ஒரு சிறிய இடுக்கினை பற்றிக்கொண்டான். பயம் அவனுள் ஆழமாக குடிகொண்டிருந்தது.அதில் அவனுக்கு தெரிந்த அரைகுறை நீச்சலும் மறந்து போயிருந்தது. அவன் அந்த இடுக்கினை பிடித்தாலும் அவனதுகால்களை யாரோ பின்னோக்கி இழுத்தனர். அவனது நண்பன் தள்ளிவிடும்போது தான் நீரின் உள்ளோட்டதிற்கு அருகில் தள்ளபட்டிருப்பதை உணர்ந்தான் அமுதன். வருகின்ற நீரின் கொந்தளிப்பால் ஒரு பாதி நீர் உள்பக்கமாகவும் மறு பாதி வெளியேயும் அடித்து ... Read More »
பயம் – 7
March 24, 2015
அமுதனின்பின் மண்டைக்கு நேராய் அந்த கரிய உருவத்தின் இரும்பை ஒத்த கை மேல நன்றா ஓங்கி அடிக்க தயாரானது. திடீரென அமுதன் திரும்பினான். இவ்வளவு நாள் பயத்தையே காணாத அவனுக்கு பேயின் உருவத்தினை கண்முன்னே மிக அருகில் பார்த்தான். அவன் சிறிய வயதில் அவனது அண்ணன் , பக்கத்துக்கு வீட்டு அக்கா ஏரிக்கரையோரம் கண்முன்னே பார்த்தாய் சொன்ன அத்தனை அடையாளங்களும் அப்படியே ஒத்திருந்தது. அவனுக்கு பயப்பட கூட நேரமில்லை அடி இடது காதின் கீழ்புறம் விழுந்தது. கட்டிலில் ... Read More »