கறுப்பு வரலாறு – 3

நல்லா பேசனே பழனி. கரிகாலன் வந்து சொன்னார். யாராவது மசிஞ்சாங்களா என்று கேட்டார் சந்திரசேகர். வரலாற்றுக்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்தவர். பல புத்தகங்கள் எழுதியவர். வேலையில் இத்தனை கவனம் கொண்டு வீடு மனைவி மக்களை துறந்துவிட்டு தனியாக வாழ்பவர். அந்த ஓட்டு வீட்டில் வெறும் புத்தகங்களும் பழைய ஓலைகளும், கல் வெட்டின் பெரிய புகைப்படங்களும் பூதக்கண்ணாடிகளும் வவ்வால் நாற்றமும் நிறைந்துக் கிடந்தன. ஆமாம் சார். உணர்ச்சிப் பூர்வமா பேசியிருக்கேன். இந்த வருஷம் யாரும் இந்த தலைப்பை ... Read More »

கறுப்பு வரலாறு – 2

சவிதா தான் இந்த ஐவரணி வரலாறு பாடம் எடுக்க காரணம். அவள் இந்த கல்லூரியை தேர்ந்தேடுத்த காரணம் வீட்டை விட்டு அதிக தூரத்தில் இருந்ததால். அப்பா அம்மா அண்ணன் தொந்திரவு இல்லாமல் ஒரு நாள் முழுக்க இருக்கலாம். ரவி சவிதாவுடன் ஒட்டிக் கொண்டான். 8வது வகுப்பில் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு உனக்கு என்னை பிடிச்சிருக்கா என்று எழுதி விஞ்ஞானப் புத்தகத்தில் வைத்து சவிதாவிடம் கொடுத்தான். அவள் ஒரு வருடத்திற்கு பிறகு 9வது வகுப்பில் ஆம் என்று எழுதி ... Read More »

கறுப்பு வரலாறு – 1

களப்பிறர் ஆட்சியைப் பற்றி இதுவரை யாராலும் சரியாக ஆராய்ச்சி செய்ய முடியவில்லை. நம்மிடம் உள்ள நூல்களையும் கல்வெட்டுகளையும் பழம் பெரும் கோவில்களில் கிடைத்த செய்திகளையும் பிராம்மி கல்வெட்டுகளையும் பழைய ஓலைகளையும் ஆராய்ந்து பார்த்ததில் தமிழக வரலாற்றைப் பற்றி பல அரும் பெறும் விஷயங்களை சேகரித்து விட்டோம். ஆனால் இந்த களப்பிறர் ஆட்சியைப் பற்றி யாராலேயும் நிறைவாக ஒன்றும் எழுத முடியவில்லை. இதைப் பற்றி ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் ஒரு திறந்த ஆய்வுக் கட்டுரை நிறைவு பெறாமலேயே இருக்கிறது. ... Read More »

கடைசி பேட்டி – 22 ( மர்மத் தொடர் )

கண்விழித்துப் பார்த்தான். மயக்கம் வருவதற்கு முன் கை கட்டுடன் தான் எழுந்திரிக்கப்போறேன் என்று நினைத்துக்கொண்டு தான் மயங்கினான். அதிசயமாக கையில் கட்டு இல்லை. தலையில் பத்துப் பேர் உட்கார்ந்திருந்தது போல கனத்தது. சட்டையில் ரத்தம். ஒழுகி கசிந்து ஒரு துர்நாற்றத்தை கொடுத்தது. பசித்தது. ரத்தத்தை தொட்டு நாற்காலியில் 8.30 என்று எழுதினான். இரண்டாவது முறையாக முழு எண் இல்லை. இருட்டான ஒரு அறை. பெரிய பங்களாவின் ஹாலாக இருக்கும். ஒரு டிவி. ரெயின் டிவி ஓடிக்கொண்டிருந்தது. ரவி ... Read More »

கடைசி பேட்டி – 21 ( மர்மத் தொடர் )

ரெயின்போ டிவிக்கு யோகம். சூப்பர் டிவி நிருபர்கள் மூன்று அமைச்சர்களையும் ஒரு அமைச்சரின் பேரனையும் கொன்று விட்டு ஓடிவிட்டார்கள். பகிரங்கமாகவே சூப்பர் டிவி குற்றவாளிகள் என்று தலைப்பிட்டு செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. இவர்களே சில நேயர்களை செட்டப் செய்து இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க அவர்களும் சொல்லிக் கொடுத்தப் படி ஒப்பித்தார்கள். இவங்களை தூக்கில மாட்டனும். பொறுப்பான பொதுவாழ்வில் இருக்கிறவங்களை இப்படி சட்டத்தை கையிலெடுத்துகிட்டு சூப்பர் டிவி நிருபர்கள் செய்தது கொடுமை சூப்பர் ... Read More »

கடைசி பேட்டி – 20 ( மர்மத் தொடர் )

அமைச்சர் ரமணி ஆனந்தனின் வீடு. வீட்டிற்கு ஏதிராக வண்டியை நிறத்தினான். தூரத்தில் பின்னாடி ஒரு ஜீப் வந்து நின்றதை கவனித்தான். விக்ரமனாக இருக்கும். வெளியே இருந்த காவலாளி வண்டியை நன்றாக சோதனைப் போட்டான். பிறகு வெடிகுண்டு கண்டுபிடிக்கும் இயந்திரத்தை வண்டிக்கு கீழ் உள்ளே விட்டு இழுத்தான். வெளியே நிறைய கட்சிக்காரர்கள். இவனுக்கு அவர்கள் போலீஸ் என்று தெரியும். உள்ளே நுழையும் முன்பே இவனை தனியாகவும் அவளை தனியாகவும் சோதனை செய்தனர். நிருபர்களிடம் பேனாவும் பேப்பரையும் தவிர்த்து என்ன ... Read More »

கடைசி பேட்டி – 19 ( மர்மத் தொடர் )

ராதிகாவை மெதுவாக முன்னே போகவிட்டு நந்தினியிடம் வந்தான். அவள் கைகளைத் தொட்டுத் திருப்பி ஒரு போஸ்ட் இட்டை ஒட்டிச் சென்றான். அவன் லிப்டுக்குள் சென்றான். அவனுக்கு அக்பர் மீது கோபமில்லை என்று காட்ட அவன் எடுத்து வந்த பேனாவை கழுத்துப் பட்டையுடன் அணிந்திருந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்தான். அவன் லிப்டுக்குள் சென்றதும் ஆவலாய் அதை திருப்பி பார்த்தாள். அதிர்ச்சியடைந்தாள். சாவு என்னை துரத்துகிறது. அதனால் நீ என்னைத் துரத்துவதை நிறுத்தி விடு. என்ன பைத்தியக்காரத்தனம் இது. அப்படி ... Read More »

கடைசி பேட்டி – 18 ( மர்மத் தொடர் )

டிவியில் விளம்பரதாரர் மக்களுக்கு பல வகையான பொருட்களை வழங்குகிறார்கள். இதில் எத்தனை மக்களைப் போய் சேருகிறது என்பது ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம். வீட்டுப் பொருட்கள் டிவி ஃபிரிஜ் வாஷிங் மெஷின் துவங்கி சோப் சீப் கண்ணாடி ஷாம்பு வரை டிவியில் வேலை செய்பவர்களுக்கு தினமும் ஏதாவது கிடைத்துக் கொண்டே இருக்கும். சென்று முறை பெருங்காய வியாபாரி கொடுத்த நிகழ்ச்சியினால் இன்னும் மூன்று மாதத்திற்கு பல வீட்டில் பெருங்காயமே வாங்கத் தேவையில்லை எனும் நிலை. பலரும் உள்ளே ... Read More »

கடைசி பேட்டி – 17 ( மர்மத் தொடர் )

ரவியும் பல முறை போன் செய்துவிட்டான். பதில் இல்லை. ராதிகாவும் அவனுடைய மொபைலில் முயற்சி செய்துவிட்டு அமைதியானாள். ராஜகோபாலுக்கு ஒரே குழப்பம். ராஜேஷையும் காணவில்லை அவனைத் தேடச்சென்ற நந்தினியையும் காணவில்லை. ரெயின் டிவிக்கு செய்தி சென்றடைந்திருந்தது. அவர்களுக்கு ஒரே குதுகலம். சின்ன எழுத்துக்களில் அவர்களுடைய நிகழ்ச்சிகளின் நடுவே ப்ளாஷ் நியூஸ் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அமைச்சர்கள் கொலை. ஒரு பெரிய தொலைக்காட்சியின் நிருபர் கைது. மேலும் விவரங்கள் இல்லை என்று கலக்கிக் கொண்டிருந்தனர். வெறும் வாயயை மெல்லுபவர்களுக்கு அவல் ... Read More »

கடைசி பேட்டி – 16 ( மர்மத் தொடர் )

பக்கத்து அறையில் அவனிடம் கேட்ட கேள்விகளுக்கும் அவனுடைய பதில்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொய் கண்டுபிடிக்கும் கருவியின் கருத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். உங்கள் பெயர்? ராஜேஷ் – உண்மை உங்கள் அப்பா அம்மா எங்க இருக்காங்க? அமெரிக்காவில். – உண்மை நீங்க எத்தனை வருஷமா சூப்பர் டிவியில் வேலை செஞ்சிகிட்டுஇருக்கீங்க? 6 வருஷமா – உண்மை நீங்க இதுவரைக்கும் யாரையாவது கொலை பண்ணியிருக்கீங்களா? இல்லை. – உண்மை அமைச்சர் நீலவாணனை நீங்க கொலை பண்ணிங்களா? இல்லை – உண்மை ... Read More »

Scroll To Top