கறுப்பு வரலாறு – 23

மறுநாள் காலையில் எழுந்தவன் ஜெயாவை சௌத்தாலில் இருக்கும் அவளுடைய மாமவின் வீட்டுக்கு போக சொல்லிவிட்டு ட்யூப் ரயிலை பிடித்து லண்டன் பிரிட்ஜ் வந்து இறங்கினான். லண்டனின் சிறப்பே இந்த ட்யூப் தான். ஒடிச் செல்லும் மனிதர்கள், அனைத்து நிறம், இனம், மொழி. லண்டனில் உயிர் இல்லை என்றால் உயிருக்கே உயிர் இல்லை என்று பொருள் என்றோ எங்கோ படித்ததை நினைத்துக் கொண்டான். தி ஆப்ஸென்ட் மைன்ட் எனும் புத்தகத்தை வாங்கினான். ஒரு பெரிய கலத்தில் காபியை ஒன்னரை ... Read More »

கறுப்பு வரலாறு – 22

கொழும்பு விமான நிலையத்தில் அரை மணி நேரம் நின்ற ப்ரிடீஷ் ஏர்வேஸ் விமானம் லண்டன் ஹீத்ரூ விமான நிலையம் நோக்கி விடாமல் 10 மணி நேரம் சென்றது. ரமேஷ் ஜெயாவிடம் விமானத்தில் எதுவும் பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டான். சாதரணமாக ஊரை சுற்ற செல்லும் சுற்றுலா பயணிகள் போல் இருப்போம் என்று சொல்லிவிட்டான். அவர்களும் பொதுவான பல விஷயங்களை பேசிவிட்டு உறங்கினர். சுமார் 10 மணி காலையில் ஹீத்ரூ சென்றடைந்தனர். ஒரு டாக்ஸி அமர்த்திக் கொண்டு ஓட்டல் ரெஸிடென்ஸி ... Read More »

கறுப்பு வரலாறு – 21

மதுரை சென்று அடைந்ததும் அனைவரும் களைத்திருந்தனர். உடலும் மனமும் சோர்வடைந்திருந்தது. மதுரை ஆனந்த விலாஸில் வண்டியை நிறுத்தி உணவு உண்டுவிட்டு பல்கலைகழகத்திற்கு அருகிலேயே ஒரு விடுதி எடுத்து தங்கினர். அனைவருக்கும் பல மணி நேரம் உறங்கியது போல் ஒரு உணர்வு. முதலில் எழுந்த்து சவிதா தான். ரவியை எழுப்பி வா, கோவிலுக்கு போகலாம் என்று அழைத்தாள். அவன் எழுந்து முகம் கழுவி, தயாரானான். நீலாவும் ரகுவும் தயாரானார்கள். பழனியப்பனை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. நால்வரும் ஜோடிகளாக மதுரை ... Read More »

கறுப்பு வரலாறு – 20

சொல்லுங்க கரிகாலன் எதுக்காக நீங்க சங்கரை கொன்னீங்க என்று பொறுமையாக கேட்டார் இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட். சார், நான் அவரை கொலை பண்ணலை. சரி. ஆனா உங்கள் வண்டியில் ரத்த கறை கிடைச்சிருக்கு. அவரு உங்களோட காலை வந்தவரு திரும்பி வரலை. ஆமாம் சார். ஆனா என் வண்டியை ரகு தம்பியும் ஓட்டுவாரு. அப்ப ரகு இந்த கொலை செஞ்சாருன்னு சொல்றீங்களா. அப்படி சொல்லலை சார். எல்லா புள்ளைங்களும் நல்ல புள்ளைங்க தான். ஆனா………… என்று இழுத்தார். ஆனா ... Read More »

கறுப்பு வரலாறு – 19

நான்கு நண்பர்களும் பழனியப்பனின் அறையில் இருந்தார்கள். நிலைமை இறுக்கமாக இருந்தது. சங்கரின் கொலையை அவர்கள் ஜீரணிக்க முடியவில்லை. கரிகாலன் தான் கொலையை செய்தது என்பது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. யாரும் சங்கரின் வீட்டில் இதைப் பற்றி தகவல் சொல்லவில்லை. அது போலீஸின் வேலை என்று தடுத்துவிட்டார் பழனியப்பன். இன்னும் நமக்கு தஞ்சை போலீஸ் பாதுகாப்பு தரவில்லையே என்று வருத்தப்பட்டார். ஆனால் லிப்டின் ஆப்பரேட்டர் ஆள் மாறியதை நண்பர்கள் காணத் தவறவில்லை. சார் நாம் இப்ப அடுத்தது என்ன ... Read More »

கறுப்பு வரலாறு – 18

ரமேஷ் சென்னையின் தலைமை தொலைபேசி நிலையத்தின் இயக்குனருக்கு முன்பு அமர்ந்திருந்தான். மிஸ்டர் ரமேஷ் இப்ப ஒரு சில மாவட்டங்களை தவிர்த்து நம்ம தமிழ் நாடு முழுவதும் டிஜிடல் எக்ஸசேன்ஜ் தான். போன கால்கள் இப்பவே எடுத்துக் கொடுத்திடலாம். ஆனா வந்த கால்கள் கண்டுபிடிக்கனும்னா இனிமே தான் சர்வீஸ் ஆக்டிவேட் பண்ணவேண்டியதிருக்கும். அதுவில்லாம இது ஒரு பொலிடிகல் ப்ராப்ளமா ஆகிடக்கூடாது. ஏற்கனவே நாங்க போன் டாப்பிங்க் பண்றோம் அப்படின்னு எதிர் கட்சிகள் கூச்சல் போடறாங்க. ஒரு நிமிடம் அமைதியாக ... Read More »

கறுப்பு வரலாறு – 17

ரமேஷ் இரண்டாவது நாளே சென்னை கிளம்பினான். பழனியப்பனுக்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான் மாணவர்களை. தம்பிரானையும் ஞானப்ரகாசத்தையும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்தான். காவல் துறை இந்த விவகாரத்தில் நுழைந்துவிட்டது என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டாம் என்று பார்த்துக் கொண்டான். கரிகாலன் விஷயமும் பத்திரிகை துறைக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான். அடுத்து சந்திரசேகர் என்று சொல்லிக் கொண்டான். வீட்டுக்கு வந்ததும் மாடிக்குச் சென்று திறந்தவெளி நீச்சல் குளத்தில் குளித்தான். படுக்கையறைக்கு வந்து ஜெயாவின் ... Read More »

கறுப்பு வரலாறு – 16

தஞ்சையில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் வந்து தங்கினான். ரகுவை தனியாக பிடித்து விவரங்களை அறிந்துக் கொண்டான். ரவியை தனியாக சந்தித்து பேசினான். ரவியிடம் கரிகாலனை கண்காணிக்கும் பணியில் அமர்த்தினான். உணவகத்தில் தனியாக சவிதாவைப்பிடித்தான். அவளிடமும் பேசினான். நீலாவை லிப்டில் பிடித்து அவன் அறைக்கு அழைத்துச் சென்று பேசினான். பழனியப்பனிடமும் கரிகாலனிடமும் பேசவில்லை. அவன் வந்த்து அவர்கள் இருவருக்கும் தெரிய வேண்டாம் என்று சொன்னான். இருவரையுமே சந்தேகிப்பதாகவும் இருவருக்கும் நான் இங்கிருக்கும் விவரம் தெரியக் கூடாது என்றும் கூறினான். ... Read More »

கறுப்பு வரலாறு – 15

அழகான இந்தியில் பேசத் தொடங்கினார் பாஸ்கர் பாராஷேர். ரமஷின் மேலதிகாரி. ரமேஷ் வளர்ந்த நாடுகள் நம் நாட்டில் அதிகம் உளவு செய்யும் பகுதிகளை அறிந்திருக்கறீர்களா. ஆமாம் சார். நாட்டில் எங்கே பெட்ரோல் கிடைக்கிறது என்பது நம் அரசாங்கத்தைவிட முதலில் அவர்களுக்கு கிடைக்கிறது. அது போல அணு ஆயுத சோதனைகள், வைரம், தங்கம், ராணுவ ஒப்பந்தங்கள், அரசியல் மாற்றங்கள், மதவாதத்தினால் மாற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்கள், எங்கெல்லாம் தீவிரவாதம் ஊடுருகிறது என்றெல்லாம். சரி தான் ரமேஷ். அந்த பட்டியலில் தமிழக ... Read More »

கறுப்பு வரலாறு – 14

மத்திய உளவுத்துறை அதிகாரி ரமேஷ் கடிகாரத்தை பார்த்தான். 45 நிமிடம் ஓடியிருந்தான். வழக்கமான நேரம் தான். ஆனால் வழக்கமான தூரம் இல்லை. மிக தொலைவில் வந்திருந்தான். செல்பேசியை எடுத்து மனைவி ஜெயாவை அழைத்தான். பிக் மீ அப் என்று விட்டு வைத்தான். மெதுவாக கடலோரத்தில் இருந்த மணல்வெளியில் தன் வெற்று கால்களை பதித்தான். நீலாங்கரை கடல் அன்று மிக அழகாக நீலமாக காட்சியளித்தது. செல்பேசி ஒலித்தது. டீக் ஹெய். தீஸ் மின்டோமே பஹூஞ்ச் தான் ஹூன் என்று ... Read More »

Scroll To Top