சுதந்திர கர்ஜனை – 7

நம்முடைய பாரத தேசத்தின் இதிகாசங்களில் எத்தனையோ வீரர்களைப் பற்றிப் படிக்கிறோம். அர்ஜுனன், பீமன், அபிமன்யு, அனுமன் என்றெல்லாம் படிக்கும்போது இவர்களைப் போன்ற மாவீரர்கள் இப்போதும் இந்த மண்ணில் தோன்றுகின்றார்களா என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? ஆம்! ஒவ்வொருவர் மனதிலும் இந்தப் புராணகால வீரர்களைப் போல இன்றும் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உண்டு. ஆம்! நம் காலத்திலும் அப்படிப்பட்ட வீரனொருவன் இருந்தான். அவன் தான் 1857-58-இல் நடந்த முதல் சுதந்திரப் போரில் சாகசங்களை நிகழ்த்திக் காட்டிய ... Read More »

சுதந்திர கர்ஜனை – 6

மராத்திய பேஷ்வா பாஜிராவ் கங்கைக் கரையில் இருந்த பிரம்மவர்த்தம் எனுமிடத்தில் தங்கியிருந்த காலத்தில் நானாவை தத்து எடுத்துக் கொண்டதும், அதே அரண்மனையில் நானாவுடன் விளையாடவும், ஆயுதப் பயிற்சிகளைப் பெறவும் நட்பு பாராட்டிய சிறுமியைப் பற்றி பார்த்தோமல்லவா? அந்தச் சிறுமிதான் ஜான்சி மன்னரை மணந்து கொண்டு ஜான்சி ராணியாகத் திகழ்ந்த லக்ஷ்மி பாய். பாஜிராவ் இறந்த பின்னர் அவரது சுவீகாரப் புதல்வன் நானாவுக்கு ஆட்சியும் இல்லை, சொத்தில் உரிமையும் இல்லை என்றது ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி. அதேநேரம் ஜான்சி ... Read More »

சுதந்திர கர்ஜனை – 5

மீரட் முந்திக் கொண்டது…  தில்லி அதிர்ந்தது! வங்காளத்தில் பாரக்பூரில் சிப்பாய் மங்கள் பாண்டே வெடித்த துப்பாக்கி குண்டையடுத்து, கம்பெனியின் படைப்பிரிவு 19-ம் 34-ம் ஆங்கிலேயர்களின் நேரடிப் பார்வையில் வந்தன. சுபேதார் ஒருவர் ரகசியமாக கம்பெனிக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அவரைக் கொன்றனர். கம்பெனி படைப்பிரிவுகள் 19, 34 -இவ்விரண்டும் கலைக்கப்பட்டு, சிப்பாய்களிடமிருந்த ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. வேலையிழந்த சிப்பாய்கள் இனியாவது திருந்தி தனது வெள்ளை எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்க விருப்பம் தெரிவித்து மீண்டும் அடிமையாக வந்து சேர்வார்கள் ... Read More »

சுதந்திர கர்ஜனை – 4

அயோத்தி நவாபின் வீழ்ச்சி அயோத்தி ராமபிரான் தோன்றியதால் பெருமை பெற்ற தலம். சரயு நதி பாய்ந்து அயோத்தியை வளம் பரப்பிய செய்தியை கம்பன் தன் காப்பியத்தில் அழகாக எடுத்துரைக்கிறான். அப்படிப்பட்ட வளம் பொங்கி வழியும் அயோத்தியின் மீது ஆங்கில கம்பெனியாருக்கு ஒரு கண் உண்டு. 1764 முதலே அயோத்தியை ஆண்ட நவாபுக்கும் ஆங்கில கம்பெனியாருக்கும் தொடர்பு உண்டு. அயோத்தியின் வளமும் செல்வமும் ஆங்கிலேயர்களின் கண்களை உறுத்திக் கொண்டுதான் இருந்தது. ‘ஆதரவற்று கிடக்குதையா இங்கு வேரில் பழுத்த பலா’ ... Read More »

சுதந்திர கர்ஜனை – 3

எரிமலையின் குமுறல் (நானாசாஹேப்) வீரத்தின் விளைநிலம் மராட்டிய மாநிலம்; சத்ரபதி சிவாஜி ஆண்ட புண்ணிய பூமி. சிவாஜியின் வாரிசுகள் ஆண்டு பின்னர் அவர்களின் அமைச்சர்களான பேஷ்வாக்கள் ஆட்சி புரிந்த இடம். மாதேரன் மலைச் சிகரங்கள் அழகு செய்யும் அலங்கார பூமியில் ஒரு சின்னஞ்சிறு கிராமம், அங்கு மாதவராவ் நாராயண் பட் என்பவர் வாழ்ந்தார். மிக மிகச் சாதாரண குடும்பத்தில் வந்தவர். அவருடைய மனைவி கங்காபாய் என்பவர். இவர்கள் செய்த தவப் பயனாய் 1824-இல் இந்த தம்பதியருக்கு ஒரு ... Read More »

சுதந்திர கர்ஜனை – 2

தூரத்து இடிமுழக்கம்  (மங்கள் பாண்டே) 1857 முதல் இந்திய சுதந்திரப் போர் உருவான காரணங்களைப் பார்த்தோம். அது உருவானபின் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகள் சிலவற்றையும் அறிந்து கொண்டால் தான் இந்தப் புரட்சியின் நோக்கம், நடந்த விதம், எதிரிகளின் சூழ்ச்சி, முடிவில் சுதந்திரத் தீயை ஆங்கிலேயர்கள் அடக்கிய விதம் இவற்றை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். முதல் பகுதியில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாரின் நாடு பிடிக்கும் ஆசை, அதனைத் தொடர்ந்து அவர்கள் கொண்டுவந்த அடாவடியான நாடு பிடிக்கும் சட்டம், அதனால் ... Read More »

சுதந்திர கர்ஜனை – 1

 பாரத தேசத்தின் எழுச்சி வரலாறு முதல் சுதந்திரப் போர் “பாரத பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!” என்று குரல் கொடுத்தான் பாரதி. இந்த பாரத தேசத்தின் பழம்பெருமையைச் சொல்லப் புகுந்தால் வரலாற்றின் ஏடுகள் போதாது. எனினும் அந்நியர் படையெடுப்புகள், பல நூற்றாண்டு காலம் அந்நியர் ஆட்சி என்றிருந்த பாரத தேசத்தின் நிலைமை என்ன ஆயிற்று? தில்லியின் சக்கரவர்த்தியாகக் கொடிகட்டிப் பறந்த ஒளரங்கசீப் காலமான பிறகு ஒரு நூறாண்டு காலம் இந்த தேசம் துண்டு துண்டாகப் ... Read More »

கறுப்பு வரலாறு – 36

அடையாறு வந்து சேர்ந்ததும் நன்றாக ஓய்வெடுத்தனர் இருவரும். பிறகு நேராக வங்கிக்கு சென்றான் ரமேஷ். தன்னிடமிருந்த வங்கி கணக்குகளின் விவரங்களை காட்டி அவர்களுடயை விவரங்கள் வேண்டும் என்று கேட்டான். வழக்கமாக மறுத்த வங்கியினர் உளவத்துறை என்றது பேசாமல் எடுத்து கொடுத்தனர். பட்டியலில் அதிக நேரம் செலவிடாமல், நேராக திருவான்மயூரின் அந்த வீட்டில் வண்டியை நிறுத்தினான். உள்ளே சென்ற சில நிமிடங்களில் ஒரு மனிதரை அழைத்துக் கொண்டு நேராக பேராசிரியர் சந்திரசேகரின் வீட்டிற்கு சென்றான். செல்பேசியில் தொடர்பு கொண்டு ... Read More »

கறுப்பு வரலாறு – 35

ரவி ரகுவை போன் போட்டு அழைத்தான். வா நேராக சந்திரசேகரை சந்திப்போம் என்றான். நேராக இரவரும் அவர் வீட்டுக் சென்றார்கள். வாங்கப்பா உட்காருங்க. என்ன ஆராய்ச்சி முடிக்காம வந்திட்டீங்களா. எங்கே பழனியப்பன் என்றார். சார் உங்க கிட்டே நேரடியாக சில கேள்விகளை கேட்கனும். சொல்லுப்பா என்றார் சந்திரசேகர். சார், நீங்க கொடுத்த ஆராய்ச்சி கட்டுரையில் முதல் 15 பக்கங்கள் எழுதினது யாரு. அதுவா. என்னுடயை மாணவன் தம்பிரான். நீங்க கூட போய் பார்த்தீங்களே. அவருடைய இந்த பதில் ... Read More »

கறுப்பு வரலாறு – 34

ஜெயா ரமேஷைப்பார்த்து ஹீத்ரூவிமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருக்கும் வேளையில் கேட்டாள். உங்களோட முடிவு என்ன இந்த கேஸை பொருத்தவரையிலும். ஜெயா ஜான் வீட்டிலே கிடைத்த ஆவனங்களை வெச்சி பார்த்தா, நாலு வருஷங்களுக்கு முன்னால அவன் இந்தியாவுடைய முன்னனி பத்திரிக்கைகளில் களப்பிறர் ஆட்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு தான் நிதி உதவி செய்ய முன் வருவதாக கூறியிருந்தான். அதில் தான் தமிழ் நாட்டில் பிறந்ததாகவும், அவனுடயை தந்தை ரெயின் ஸ்டுவர்ட் தமிழ் நாட்டில் வாழந்ததாகவும், அவர் களப்பிறர் பற்றி ... Read More »

Scroll To Top