சுதந்திர கர்ஜனை – 16

வணக்கத்துக்குரிய தலைவர்கள் சென்ற பகுதியில் குறிப்பிட்ட ஐந்து பெருந்தலைவர்களைத் தொடர்ந்து மேலும் சில தலைவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்துடன் இந்தப் பகுதியைத் தொடங்குவோம். 6. ஃபக்ருதீன் தயாப்ஜி இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி மூன்றாம் ஆண்டிலேயே காங்கிரசுக்குத் தலைமை ஏற்றவர் இந்த ஃபக்ருதீன் தயாப்ஜி. தீவிரமான சிந்தனைகளைக் கொண்டவர் இவர். வழக்கம் போல அந்தக் கால காங்கிரசாரில் வழக்கறிஞராக இருக்கும் புகழ்மிக்கத் தலைவர்களை நீதிபதிகளாக நியமிக்கும் வழக்கத்தையொட்டி இவரும் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றார். ... Read More »

சுதந்திர கர்ஜனை – 15

ஒற்றுமை காங்கிரஸ் சூரத் காங்கிரசில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் இரு தனிக் கட்சிகளாகப் பிரிந்தது. தீவிரவாத காங்கிரசார் கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டனர். பால கங்காதர திலகர் கைது செய்யப்பட்டார். அரவிந்தரும் சதி வழக்கொன்றில் கைதானார். வ.உ.சி மீதும் நெல்லை சதி வழக்கொன்று போடப்பட்டு கடும் தண்டனை பெற்று சிறை சென்றார். சுப்பிரமணிய சிவா 6 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறை சென்றார். இப்படி தீவிரவாத காங்கிரசார் சிறைக் கொட்டடியில் வீழ்ந்து கிடந்த காலத்தில், மிதவாத காங்கிரசார் ... Read More »

சுதந்திர கர்ஜனை – 36

தற்காலிக இந்திய சுதந்திர சர்க்கார் பிரகடனம் முந்தைய சில பகுதிகளில் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது  தமிழகத்தில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகள் பற்றி பார்த்தோம். இவை இந்த நாடு முழுதும் நடந்த புரட்சி எப்படி நடந்தது என்பதை விளக்குவதற்காக நமக்குப் பழக்கமான ஊர்களில் நடந்தவற்றை மட்டும் எடுத்துக் காட்டினோம். இனி நாட்டின் நிலை என்ன, காங்கிரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன, பிரிட்டிஷ் பேரரசின் திட்டங்கள் என்ன என்பதைப் பற்றியும் சிறிது பார்க்கலாம். 1942 ஆகஸ்ட் 9-ஆம் ... Read More »

சுதந்திர கர்ஜனை – 14

காங்கிரசில் ராஜ விசுவாசிகள் 1885-இல் பம்பாயில் நடந்த முதல் காங்கிரசில் தீர்மானித்தபடி 1886-இல் கல்கத்தாவில் இரண்டாவது காங்கிரஸ் நடந்தது. தேசபக்தர் பாலகங்காதர திலகர் முதன்முதலாக இந்த காங்கிரசில் தான் பங்கு கொண்டார். தொடர்ந்து அதற்கு அடுத்த வருஷம் 1887-இல் காங்கிரஸ் சென்னையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் நடந்தது. இதற்குத் தலைமை வகித்தவர் பக்ருதீன் தயாப்ஜி. இதில் சேலம் விஜயராகவாச்சாரியர் தமிழில் ஒரு பிரசுரத்தை வெளியிட்டார். அந்தப் பிரசுரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. முதல் இரு மாநாட்டிலும் ஆங்கிலமே ... Read More »

சுதந்திர கர்ஜனை – 13

இந்தியர்களுக்கென்ற ஓர் அமைப்பு தேவைப்பட்டது! 1857-58-இல் நடந்த முதல் சுதந்திரப் போரின் முடிவில் இந்திய சிப்பாய்களை அடக்கி,  ஒடுக்கி, படுகொலைகளைச்  செய்து முடித்து, இந்தியாவைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின் பிரிட்டிஷ் அரசி விக்டோரிய மகாராணியர் இந்தியாவை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிலிருந்து பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அப்படி விக்டோரியா மகாராணியார் இந்தியாவுக்கும் மகாராணி என்று ஆனதைக் கொண்டாடும் விதத்தில் 1877-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஏக சக்ரவர்த்தினியாக முடிசூட்டிக் கொள்ள ஏற்பாடுகளைச் செய்தார். இந்தியாவில் ... Read More »

சுதந்திர கர்ஜனை – 12

‘இந்திய தேசிய காங்கிரஸ்’ பிறந்தது இனி சுதந்திரத்துக்காகப் போராடிய ‘இந்திய தேசிய காங்கிரஸ்’  பிறந்து வளர்ந்த வரலாற்றைப் பார்ப்போம். ‘காங்கிரஸ்’என்று இங்கு குறிப்பிடும் சொல்லுக்கும் இன்று இருக்கும் ஒரு அரசியல் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக நினைக்க வேண்டாம். இங்கு ‘காங்கிரஸ்’ என்னும் சொல் முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனுக் கொடுத்து சலுகை பெறும் படித்த இந்தியர்கள் தொடங்கிய ஒரு அமைப்பைக் குறிக்கும் சொல். 1857-இல் நடந்த முதல் சுதந்திரப் போரிலிருந்து ஆங்கிலேயர்கள் கற்றுக்கொண்ட பாடம், இனியும் இந்தியர்களை ... Read More »

சுதந்திர கர்ஜனை – 11

காங்கிரஸ் உருவான பின்னணி இந்திய சுதந்திரப் போர் வரலாறு மிக நீண்ட நெடிய வரலாறு. அதில் வீர வரலாறு படைத்த சுதந்திரப் போர் தியாகிகள் எண்ணற்றவர்கள். அவை அனைத்தையும் விவரமாகப் படிக்க விரும்புவோர் அது குறித்த பல நூல்களைப் படித்துணர வேண்டும். அது சாத்தியமில்லாக நிலையில் ஓரளவாவது நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் தெரிந்துகொள்ள சிலம்புச் செல்வர் திரு. ம.பொ.சிவஞான கிராமணியாரின் நூலைப் படிக்க வேண்டும்;  ஈரோடு  வழக்குரைஞர் திரு. ஸ்டாலின் குணசேகரன் தொகுத்த நூல்களைப் படிக்க ... Read More »

சுதந்திர கர்ஜனை – 10

சென்னை நகரில் நானா சாஹேப் நானா சாஹேப் நேபாளத்துக்குப் போய்விட்டார் என்று தான் வரலாற்றாசிரியர்கள் சொன்னார்களே தவிர, அதற்குப் பின் அவர் எங்கே போனார், என்ன ஆனார் என்பதையெல்லாம் சொல்லாமல், அங்கேயே இருந்து அவர் இறந்து போயிருக்க வேண்டுமென்று முடித்துவிட்டனர். ஆனால் நமக்குத் தெரியவரும் ஒரு செய்தியை இங்கு அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். மகாகவி பாரதி சென்னையில் ‘சுதேசமித்திரன்’  பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். அவருக்கு பண்டிட் எஸ்.நாராயண ஐயங்கார் என்பவர் நண்பர். பாரதி காசியில் இருக்கும்போதே ... Read More »

சுதந்திர கர்ஜனை – 9

வீரர்கள் இருந்தும் வீரம் இருந்தும் துரோகம் வென்றது! தியாகி மங்கள் பாண்டே தொடங்கி வைத்து, மீரட்டில் பெண்கள் உசுப்பிவிட வெகுண்டெழுந்து வீரர்கள் புரட்சியில் ஈடுபட்டு  தில்லி வரை கொண்டுசென்று, அங்கிருந்து கான்பூர், லக்னோ, ஜான்சி என்று பரவி இறுதியில் காட்டுத்தீ போல எழுந்த புரட்சித்தீ முடிவுக்கு வந்தது. பல்லாயிரக் கணக்கான இந்திய சுதேசி வீரர்களைக் களபலி கொடுத்தபின் ஒருவழியாக பாரத தேசம் முழுவதையும் தங்கள் கைப்பிடிக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். எப்பேர்ப்பட்ட நாடு, எப்படிப்பட்ட வீரர்கள்! அவர்களுடைய ... Read More »

சுதந்திர கர்ஜனை – 8

வெள்ளையனை எதிர்த்து வாளேந்திய மெளல்வி அகமதுஷா 1858-இல் நடந்த முதல் சுதந்திரப் போர் வட இந்தியாவையே குலுங்க வைத்தது. அதில் பங்கேற்றுத் தங்கள் இன்னுயிர் ஈந்த தேசபக்த சிங்கங்கள் ஏராளம்! ஏராளம்! வரலாற்றில் அழியாத இடம்பெற்றுவிட்ட நிகழ்வு இந்தப் புரட்சி. ஆங்கிலேயர்களுக்கு அது சிப்பாய்க் கலகம். இந்திய தேசபக்தர்களுக்கு அது முதல் சுதந்திரப் போர். இந்த புனித யுத்தத்தில் தங்கள் நல்லுயிர் ஈந்த மாவீரர்களில் மெளல்வி அகமது ஷா மறக்க முடியாதவர். யார் இந்த மெளல்வி அகமது ... Read More »

Scroll To Top