சுதந்திர கர்ஜனை – 26

நேதாஜியின் வீர முழக்கம் இந்திய சுதந்திரப் போரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ‘நேதாஜி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் பற்றி விரிவான பல செய்திகளைக் கொடுக்க வேண்டும். என்றாலும் கட்டுரையின் அளவு நீண்டு கொண்டே போகக் கூடாது என்பதால் சுருக்கமால சில செய்திகளைச் சொல்லிவிட்டுப் பின் வரலாற்றைத் தொடர்கிறேன். ‘பருப்பு இல்லாமல் கல்யாணமா?’ என்பது போல,      நேதாஜி இல்லாமல் இந்திய சுதந்திரப் போர் வரலாறா என்று கேட்பார்கள். “இந்தியா உடனடியாக சுதந்திரம் பெற்றாக வேண்டும், ... Read More »

சுதந்திர கர்ஜனை – 25

காந்திஜி விலகினார்! 1932. மகாத்மா காந்தி வரிகொடா இயக்கம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. கள்ளுக்கடை மறியலும் அதனால் கைது நடவடிக்கைகளும், சிறைவாசமுமாக போராட்டக் களம் சூடு பிடித்துக் கொண்டிருந்தது. நாட்டில் சிறைச்சாலைகள் எல்லாம் சத்தியாக்கிரகிகளால் நிரப்பப்பட்டிந்தன. காந்தியடிகளும் சிறையில் இருந்த காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் பல அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்தது. அதன்படி ஹரிஜனங்களுக்கென்று தனித்தொகுதி ஒதுக்கப்பட்டது. எரவாடா சிறையில் இருந்த காந்திஜி, முன்னமேயே அப்படி மக்களைப் பிரித்து ஹரிஜனங்களுக்கென்று தனித்தொகுதி ஒதுக்குவார்களானால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று ... Read More »

சுதந்திர கர்ஜனை – 24

காந்தி- இர்வின் ஒப்பந்தம் பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு என்ன சலுகைகள் வழங்கலாம், இந்தியாவின் தேவைகள் என்ன என்பது போன்ற விஷயங்களை இந்தியத் தலைவர்களுடன் விவாதித்து முடிவெடுப்பதற்காக, லண்டனில் வட்டமேஜை மகாநாடு என்ற பெயரில் கூட்டங்கள் நடத்துவது வழக்கம். அதில் இந்தியாவிலிருந்து பல பிரதிநிதிகள் சென்று வருவார்கள். 1930-இல் ஒரு வட்டமேஜை மகாநாடு லண்டனில் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்திற்கு இந்தியாவிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் யாருமே செல்லவில்லை. காரணம் பெரும் தலைவர்கள் சிறையில் அடைபட்டிருந்தனர். இந்திய சுதந்திரத்துக்காகப் போராடும் மக்களின் ... Read More »

சுதந்திர கர்ஜனை – 23

பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு தியாகம் இந்திய சுதந்திரம் மகாத்மா காந்தியடிகளின் வழிகாட்டுதலுடனும், காங்கிரஸ் இயக்கத்தின் கீழ் மக்கள் திரண்டு போராடியதாலும் கிடைத்தது என்பதோடு, ஆங்காங்கே நடந்த சில அதீதமான தியாகச் செயல்களும் காரணிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 1929 டிசம்பரில் நடந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டையும் அதில் ஜவஹர்லால் நேரு அறிவித்த ‘பூரண சுயராஜ்யம்’ கோரிக்கையையும், அடுத்து 26 ஜனவரி 1930-ஐ சுதந்திர தினமாக அனுசரிக்கச் சொன்ன அதே காலகட்டத்தில், தனியொரு இயக்கமாக, நாடு தழுவிய ... Read More »

சுதந்திர கர்ஜனை – 22

போராட்டக் களம் தீவிரமடைந்தது 1928-ஆம் வருஷம் கல்கத்தாவில் நடந்த காங்கிரசுக்கு மோதிலால் நேரு தலைவராக இருந்தார். இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த மகாநாடாகக் கருதப்பட்டதற்குக் காரணம் இருந்தது. இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்ககூடிய மாநாடாக அது இருந்தது. நேருவின் தலைமையில் காங்கிரசின் வருங்காலத் திட்டம் பற்றி இதில் விவாதிக்கப்பட விருந்தது. இந்தியா ஒரு குடியேற்ற நாடு என்பதை பிரிட்டிஷ் அரசு ஒப்புக்கொள்ள வேண்டுமென்பது காங்கிரசின் விருப்பம். இந்தத் தீர்மானத்தை காந்திஜி விஷயாலோசனை கூட்டத்தில் முன்மொழிய, அதற்கு சுபாஷ் ... Read More »

சுதந்திர கர்ஜனை – 21

அடக்குமுறை தாண்டவம் சைமன் கமிஷன் இந்தியாவுக்கு விஜயம் செய்வதை எதிர்த்து இந்திய மக்கள் ஒன்று திரண்டு  ‘சைமனே திரும்பிப் போ’ என்று ஒரே குரலில் எதிர்ப்பதைக் கண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் திகைத்துப் போய் நின்றது. நெல்லிக்காய் மூட்டைகள் என நம்பியிருந்த இந்திய மக்கள் இப்படி ஒருமித்த குரலில் எதிர்ப்புக் குரல் எழுப்பியது அவர்களுக்கு அச்சத்தை ஊட்டியது போலும். அவர்கள் தங்கள் ஆத்திரத்தையும் கோபத்தையும் அடக்கு முறைகளைக் கையாண்டு பதிலடி கொடுக்கத் தொடங்கினர். லாகூர் நகரத்தில் ஒரு பிரம்மாண்டமான ... Read More »

சுதந்திர கர்ஜனை – 20

சட்டசபைக்குள் முட்டல் மோதல் காங்கிரசில் இரு பிரிவினர் இருந்தனர் என்பது ஊரறிந்த விஷயம் அல்லவா? அப்போதைய சுயராஜ்ய கட்சியின் முக்கியப் பிரமுகராக இருந்தவர் சி.ஆர்.தாஸ். மிகத் திறமையான வழக்கறிஞர், வங்காளம் தந்த சிறந்த தேசபக்தர்களுள் ஒருவர். அரவிந்தரும் வங்கத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு புரட்சிக்காரராக விளங்கியவர். இவர் மீது அலிப்பூர் சதிவழக்கு என்ற பெயரில் ஒரு வெடிகுண்டு வழக்கைத் தொடுத்து இவரை எப்படியாவது சிறையில் தள்ளிவிட பிரிட்டிஷ் அரசு முயற்சி செய்து அவரை சிறைபிடித்தது. அப்போது அரவிந்தர் ... Read More »

சுதந்திர கர்ஜனை – 19

வைக்கம் போராட்டம் 1925-ல் காந்திஜி விடுதலையாகி வெளியில் வந்தவுடன் தேசபக்தர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. சட்டசபைக்குச் செல்லவேண்டுமென்ற கட்சியார்  ‘சுயராஜ்ய கட்சியார்’ என அழைக்கப்பட்டனர். இந்த சுயராஜ்யக் கட்சியார் பல மாகாணங்களில் வெற்றி பெற்று மாகாண சட்டமன்றங்களுக்குள் சென்று விவாதங்களில் ஈடுபடலாயினர். மத்திய மாகாணம், வங்காளம் ஆகிய மாகாணங் களில் சுயராஜ்யக் கட்சியார் பெரும்பான்மை பலம் பெற்றுவிட்டனர். அங்கெல்லாம் இரட்டை ஆட்சி முறை தொடங்கப்பட்டது. ஆட்சியில் சட்டமன்றத்தில் சில துறைகளும், கவர்னரின் நேரடிக் கண்காணிப்பில் சில துறைகளும் இயங்கும் ... Read More »

சுதந்திர கர்ஜனை – 18

சட்ட மன்றங்களில் சுதேசிகள் அகமதாபாத் நீதிமன்றத்தில் செளரி சாவ்ரா நிகழ்ச்சிகளுக்காக காந்திஜியைக் கைது செய்து வழக்கு தொடுத்தார்களல்லவா? அப்போது காந்திஜி அளித்த வாக்குமூலம் மிகவும் பிரசித்தமானது. அப்படி அந்த வாக்கு மூலத்தில் காந்தி என்ன தான் சொன்னார்? அவர் சொன்னதன் மூலக் கருத்து,  ராஜ விசுவாசியாக இருந்த தான் எப்படி ராஜத் துரோகியாக மாறினேன் என்பது தான். அந்த வாக்குமூலத்தின் முழு நகலும் நமக்குக் கிடைக்குமானால் அது மிக அரியதொரு ஆவணமாகத் திகழும். இந்த வழக்கு விசாரணை ... Read More »

சுதந்திர கர்ஜனை – 17

முரசு கொட்டி வந்த புதிய போர்முறை மகாத்மா காந்தி அறிமுகம் செய்த புதிய போர்முறை   ‘ஒத்துழையாமை இயக்கம்’  தொடங்கிய ஆண்டு 1920. அரசியல் கட்சிகளுக்கிடையே பிளவுகள் தோன்றின. முந்தைய ஆண்டே மிதவாத காங்கிரசார் தனித்துச் சென்றுவிட்டனர்; கல்கத்தாவில் தனி மகாநாட்டையும் நடத்தினர். அமிர்தசரஸ் காங்கிரசில் விவாதிக்கப்பட்ட-  பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்து சலுகைகள் பெறுவதா, அல்லது ஒத்துழையாமை இயக்கம் நடத்தி தங்கள் உரிமைகளைக் கோரி போராடுவதா? இது தான் பிரச்னை. முதலில் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து உரிமைகளை வேண்டிப் பெறுவோம் ... Read More »

Scroll To Top