சுதந்திரம் வந்தது! தேசம் உடைந்தது! இரண்டாம் உலக யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது. 1945 மே மாதம் 7-ஆம் தேதி நேச நாடுகளிடம் ஜெர்மனி நிபந்தனையின்றி சரணடைந்து விட்டது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்குச் சில சலுகைகளை அறிவித்தது. சிறையிலிருக்கும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பும் வந்தது. அதே ஆண்டில் ஜூலை 26-இல் நடந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தோற்று, தொழிற்கட்சி ஆட்சியைப் பிடித்தது. கிளெமண்ட் ஆட்லி இங்கிலாந்தின் பிரதமரானார். இந்தியாவிடம் அனுதாபம் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 35
May 5, 2015
தேவகோட்டை தேசபக்தர்கள் கோட்டையாயிற்று! ”போராட்டம்! போராட்டம்! முடிவில்லாத போராட்டம். இதுவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நமது பதிலாகும்” (Struggle! Struggle! Eternal struggle. This is my reply to the British Imperialism). -இது ஜவஹர்லால் நேரு 1942 பம்பாய் காங்கிரசில் உதிர்த்த எழுச்சி உரையாகும். அங்கு தன்னுடைய உரையில் ஜவஹர்லால் நேரு சொன்ன கருத்து: “இந்தியாவின் தன்மானம் பேரம் பேசப்படும் பொருள் அல்ல. இந்திய சுதந்திரத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து பேரம் பேசி வாங்க முடியும் என நம்மில் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 34
May 5, 2015
குலசேகரப்பட்டினமும் ‘தூக்குமேடை’யும் 1942 ஆகஸ்ட் புரட்சியை தலைமையேற்று நடத்த காங்கிரசின் தலைமையில் யாருமே வெளியில் இல்லை; அனைவருமே சிறையில் அடைபட்டுவிட்டனர் என்றால், இதை பின் யார் தான் வழிநடத்தியிருக்க முடியும்? காங்கிரஸ் தீர்மானத்தில் காணப்படுவதைப் போல அவரவர் தனக்குத் தானே தலைவராக ஆகியிருந்தால் ஒரேமாதிரியான போராட்டம் நாடு முழுவதும் எப்படி நடந்திருக்க முடியும்? யாருமே சிந்திக்க வேண்டிய செய்தியல்லவா இது. ஆம்! சில தலைவர்கள் இருந்தார்கள். இந்த ஆகஸ்ட் புரட்சிக்குத் தலைமை வகித்தார்கள். வரலாற்று நாயகர்களான அவர்கள் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 33
May 5, 2015
மதுரை மாநகரத்தில் பெண்கள் இட்ட தீ! காந்திஜி பம்பாய் ஆசாத் மைதானத்தில் எழுப்பிய “செய் அல்லது செத்து மடி” எனும் கோஷம் இந்தியாவின் நாலாபுறங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. திரும்பிய இடங்களில் எல்லாம் போராட்டம்; இதுவரை காந்திய வழியில் நடந்த போர் இப்போது யாருடைய உயிருக்கும் ஆபத்தை விளைவிக்காமல் முக்கியமான தொலைதொடர்பு சாதனங்களை அழித்து ஆளும் ஆங்கிலேய வர்க்கத்துக்கு போர்க்காலத்தில் நெருக்கடி கொடுக்கும் போராக அமைந்திருந்தது. காந்திஜி தன்னுடைய தீர்மானத்தில் இப்படித்தான் இந்தப் போராட்டம் இருக்கும் என்பதைச் சொல்லவில்லையாயினும், ... Read More »
சுதந்திர கர்ஜனை – 32
May 5, 2015
எங்கெங்கு நோக்கினும் பற்றி எரியுது கோவைப் பகுதியில் நடந்த நிகழ்ச்சிகளை சுருக்கமாகப் பார்த்தோம். இனி தஞ்சை மாவட்டத்தில் நடந்த இரு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். முதல் நிகழ்ச்சியில், திருவையாறிலுள்ள அரசர் கல்லூரியில் தொடங்கி அங்கிருந்த அரசு அலுவலகங்கள் தீக்கிரையான செய்திகளையும், தொடர்ந்து சீர்காழியில் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள உப்பனாற்றுப் பாலத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கையும் பார்க்கலாம். முதலில் திருவையாற்று நிகழ்ச்சி. ஆன்மீகத் துறையில் மட்டுமல்லாது திருவையாறு அரசியலிலும் முன்னணி வகித்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போர் உச்ச கட்டத்தை ... Read More »
சுதந்திர கர்ஜனை – 31
May 5, 2015
பற்றி எரிந்தது நாடு இதென்ன கொடுமை! காங்கிரஸ் மகாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள், அதில் ‘இத்தனை ஆண்டுகாலம் இந்த நாட்டை சுரண்டிய அன்னியனே நீ வெளியேறு’ என்று குரல் கொடுத்தார்கள். முடிந்தால் உடனே கப்பல் ஏறியிருக்க வேண்டும், அல்லது உங்களோடு ஒட்டும் உறவும் வைத்துக்கொண்டு ஆட்சியை உங்களிடம் தந்துவிடுகிறோம் என்று சமாதானமாகப் போயிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் இந்த மண்ணில் வந்து தங்கிக் கொண்டு, இந்த மண்ணின் மைந்தர்களைக் கண்மூடித்தனமாக தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும், சிறையில் அடைத்தும் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 30
May 5, 2015
வெள்ளையனே இந்தியாவை விட்டு வெளியேறு! 1942, ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி. பம்பாய் ஆசாத் மைதானம். ஆயிரக் கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அமைதியாக மகாத்மா காந்தியடிகளின் உரையைக் கேட்டுக் கொண்டிருக் கின்றனர். ‘Quit India’ தீர்மானத்தை முன்மொழிந்து மகாத்மா வாதங்களை முன்வைக்கிறார். ‘ஆகஸ்ட் க்ரந்தி’ என்று இந்தி மொழியில் சொல்லப்படும் இந்தப் போராட்டம் அமைதி வழியில் பிரிட்டிஷாரை இந்த நாட்டைவிட்டுப் போய்விடும்படி கேட்டுக் கொள்ளும் போராட்டம். இதற்கு முன் எத்தனையோ போராட்டங்களை காந்திஜியின் தலைமையில் காங்கிரஸ் நடத்தியிருந்தும், இந்தப் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 28
May 5, 2015
சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தூது ஆண்டுதோறும் நடைபெறும் காங்கிரஸ் மாநாடுகள் பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும். ஒரு சில நேரங்களில் அவசரமாகக் கூடி முடிவுகள் எடுக்க வேண்டுமானால் மற்ற மாதங்களிலும் கூட காங்கிரஸ் கூடி விவாதித்து முடிவுகளை எடுத்திருக்கிறது. அதைப் போல இரண்டாம் உலக யுத்தம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, இந்தியர்கள் கிழக்கில் சுதந்திர உதயம் எழுமா என்று ஆவலோடு காத்திருந்த நேரத்தில், 1942-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 13 முதல் 16 வரை காங்கிரஸ் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 28
May 5, 2015
தனிநபர் சத்தியக்கிரகம் தனிநபர் சத்தியாக்கிரகத்தைத் தொடங்க காந்திஜி சத்தியாக்கிரகிகளை தானே தேர்ந்தெடுத்தார் என்பதையும், முதல் சத்தியாக்கிரகியாக வினோபாஜியைத் தேர்ந்தெடுத்தார் என்பதையும் பார்த்தோமல்லவா? யார் இந்த வினோபா என்று முதலில் சிறிது பார்க்கலாம். சுருக்கச் சொல்வதானால் மகாத்மா காந்தியை முழுமையாகப் புரிந்து கொண்டவர் வினோபாஜி என்று காந்தியே சொன்னார் என்றால் மற்றவற்றைச் சொல்லவா வேண்டும்? மகாத்மாவினுடைய அகிம்சைக் கொள்கை என்பதும் ‘காந்தியம்’ என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் கொள்கையும் ஒன்றே. ‘பூதான இயக்கம்’ என்ற ஒன்றைத் தொடங்கி மிகையாக நிலம் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 27
May 5, 2015
உலகப்போர் தொடக்கமும் காங்கிரசில் குழப்பமும் 1939-ஆம் வருஷம் அரசியலில் பல நிகழ்ச்சிகள் அரங்கேறின. ஜெர்மனி யுத்தத்துக்குத் தயாராக இருந்தது. எந்த நேரமும் யுத்தம் வெடிக்கும் என்று உலகமே எதிர்பார்த்திருந்தது. காந்திஜி ஹிட்லருக்கு ஒரு கடிதம் எழுதினார், உலகத்தை நாசம் செய்யும் யுத்தத்தைத் தொடங்க வேண்டாமென்று. கேட்கும் மனநிலையிலா ஹிட்லர் இருந்திருப்பார்? கட்சிக் கட்டுப்பாட்டை மீறிவிட்டார் என்று சுபாஷ் சந்திர போசை காங்கிரஸ் மூன்று ஆண்டுகளுக்கு வெளியேற்றிவிட்டது. அந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி மத்திய சட்டசபையில் இந்திய ... Read More »