விம் ஹாஃப் [Wim Hof] – பனிகட்டி மனிதன் [ICEMAN]

விம் ஹாஃப் [Wim Hof] – பனிகட்டி மனிதன் [ICEMAN]

விம் ஹாஃப் [Wim Hof] – பனிகட்டி மனிதன் [ICEMAN] 48 வயதான டச்மேன்[Dutchman] விம் ஹாஃப் என்பவருக்கு சாதாரண மனிதனை விட அதிக குளிரை தாங்க கூடிய சக்தி உள்ளது . இவர் இது வரை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் . உறைந்த ஏரிகளில் , பனிக்கட்டிக்கு அடியில் நீந்தியுள்ளார் , ஐஸ் கட்டிகள் நிறைந்த பேழைகளில் மூழ்கியபடி இருந்துள்ளார் , பனிபடர்ந்த மலைகளில் வெறும் அரைக்கால் சட்டையுடன் ஏறியுள்ளார் ! இப்படி பல சாதனைகளை ... Read More »

விலங்குகளை கல்லாக மாற்றும் ஆபத்தான ஏரி !

எந்த விலங்கு இந்த ஏரியின் நீரை பயன் படுத்தினாலும் அது கல்லாக மாறிவிடும் ! ஆம் , உண்மைதான் ! டான்சானியாயாவில் உள்ள நேட்றான் ஏரிதான் அது [Lake Natron, Tanzania] மிகவும் ஆபத்தானது : பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருக்கும் இந்த ஏரி கொடிய ஆபத்தை தன்னுள் மறைத்து வைத்துள்ளது . அழகிருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பது இந்த ஏரியின்  விசயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை. உண்மை என்ன ? இந்த அபூர்வ விசயத்திற்கு ... Read More »

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால்  நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்! இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே ... Read More »

தேஜா வு (Deja vu)

தேஜா வு (Deja vu)

“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது,  இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் ... Read More »

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!!

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!!

மேற்கு வங்காள மாநிலம், மிட்னப்பூர் மாவட்டத்தில் கலைகுண்டா ராணுவ விமானதளம் உள்ளது. இதன் அருகே உள்ள மவுலிஷோல் கிராமத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் விளக்கு கம்பம் நடுவதற்காக ஊழியர்கள் பள்ளம் தோண்டினர். சுமார் 3 அடி ஆழம் தோண்டிய போது, கடப்பாரை ஏதோ ஒரு உலோகத்தின் மீது மோதுவதை உணர்ந்த ஊழியர்கள், மண்ணை கையினால் அகற்றிப் பார்த்து, திகைப்படைந்ததனர். இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட 450 கிலோ எடையுள்ள வெடிகுண்டு 4 அடி நீளத்தில் ... Read More »

ஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் ! – புதிர் கதை

பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை நேரம்.அரசனும் அரசியும் உறங்கும் கட்டில் மெத்தையை அவர்களது வேலைக்காரன் சரி செய்ய வந்தான்..மெத்தை விரிப்புகளை தட்டிப் போட்டபின்பு, முல்லை மல்லிகை மலர்களை மெத்தையில் பரப்பினான்.பிறகு இனிய மணம் வீசும் ஊதுபத்திகளை ஏற்றிவைத்தான்.வேலையை சரியாக முடித்துவிட்டோமா என்று மெத்தையை ஒருதரம் சரிபார்த்தான். மெத்தையின் அழகும், அந்த அறையில் இருந்த இனிய நறுமணமும் அவனது சிந்தையையை மயக்கியது.’அரசனும் ... Read More »

அரணாகும் அறிவு

முன்னொரு காலத்தில் பல சிற்றரசர்கள் தனித் தனி நாடுகளை ஆண்டு வந்தனர் .அப்படிப்பட்ட  ஒரு சிற்றரசுதான் இங்கு குறிப்பிடப்படும் ஒரு நாடு. சண்பக புரி என்று அந்த நாட்டுக்குப் பெயர்.அந்த நாட்டுப் பிரபுக்களுக்குச் சில அதிகாரங்கள் இருந்தன. பிரபுக்கள் அந்த நாட்டுக்கு மன்னனைத் தேர்ந்தெடுப்பர். ஓராண்டானதும் அவன் பதவியிறக்கம் செய்யப்பட்டு தொலைவில் உள்ள மனிதரற்ற கடல் நடுவில் இருக்கும் தீவுக்கு அனுப்பப் படுவான். கானகம் நிறைந்த அந்தத் தீவில் பல விலங்கினங்கள் வாழ்ந்து வந்தன. அங்கு செல்பவர் இறப்பது ... Read More »

சுதந்திர கர்ஜனை – 40

பூத்தது புதிய யுகம்! 1947 ஆகஸ்ட் 15. இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத நாள். அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய சுதந்திரமாக எழுந்து நின்ற நாள். நாமக்கல்லார் பாடியபடி  ‘கத்தியின்றி ரத்தமின்றி’ நடந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றி இது. இங்கு இந்த ‘கத்தியின்றி ரத்தமின்றி’ எனும் இந்தச் சொற்றொடரின் பொருள் வேறு.   நம்மை ஆண்ட பிரிட்டிஷாரின் மீது கத்தி வீசாமலும், அவர்களது ரத்தத்தைச் சிந்தாமலும், நம்மை வருத்தி இந்திய தேசபக்தர்களின் ரத்தத்தின் மீது கட்டப்பட்ட சுதந்திர மாளிகை இது. ... Read More »

சுதந்திர கர்ஜனை – 39

ஜவஹர்லால் நேருவின் சுதந்திர உரை 1947 ஆகஸ்ட் 14-ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு தில்லி மாநகரில் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு இந்தியாவின் மூவண்ண சுதந்திரக் கொடி ஏற்றப்படுகிறது. அரசியல் சட்டம் இயற்ற அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை கூடுகிறது. தலைமைப் பீடத்தில் பாபு ராஜேந்திர பிரசாத். சரியாக 12 மணிக்கு ஜவஹர்லால் நேரு எழுந்து நாட்டு மக்களுக்கு ஓர்  உரையாற்றுகிறார்.   மிகப் பிரபலமான அவரது உரையின் தமிழக்கத்தை இப்போது பார்ப்போம். (தில்லியில், இந்திய அரசியல்சட்டத்தை ... Read More »

சுதந்திர கர்ஜனை – 38

ரத்தச் சேற்றில் பூத்த சுதந்திரத் தாமரை பிரிட்டிஷ் பிரதமர் ஆட்லி இங்கிலாந்து காமன்ஸ் சபையில் இந்தியாவுக்கு 1948 ஜூன் மாதத்தில் சுயாட்சிப் பொறுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தாரல்லவா? அந்த அறிவிப்பை ஓரளவு துணிச்சலான அறிக்கைதான் என்றார் ஜவஹர்லால் நேரு. அகில இந்திய காங்கிரஸ் காரிய  கமிட்டி கூடி பிரிட்டிஷ் பிரதமரின் அறிவிப்பை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியது. மதக் கலவரங்கள் நடந்த இடங்களுக்கெல்லாம் சென்று மக்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு காந்திஜி 1947 மார்ச் மாதம் பிகாரிலுள்ள பாட்னாவுக்கு வந்தார். ... Read More »

Scroll To Top