மனைவி இறந்த சோகத்தில் மூழ்கி இருந்த ராஃபிள்ஸ் மெல்ல தன் பழைய நிலைக்குத் திரும்பினார். மனதில் புது உற்சாகத்துடன், உடலும் தேறியவுடன் இந்தோனேசிய நாட்டில் தன் முழுக் கவனத்தைச் செலுத்தினார். புட்டென்சோர்க் நகரத்தின் அருகிலுள்ள கிட்டத்தட்ட 7,000 அடி உயரமுள்ள குனாங்க் கெடே சிகரத்திற்குத் தன் நண்பர்களுடன் மலையேறினார். முதன் முதலில் சிகரத்தின் உயரத்தை அளவிட முயன்று வெற்றி அடைந்தார். இந்தச் சிகரத்தின் உயரத்தை அளந்த வெற்றி இன்னும் மேலும் பல வெற்றிகளை அடைய வழி வகுத்தது. ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 6
May 15, 2015
இன்றைய சிங்கப்பூரில் வெளிநாட்டிலிருந்து வந்து வேலை பார்ப்பவர்களை மூன்று வகைப்படுத்தி அவர்கள் இங்கே தங்கியிருந்து வேலை பார்ப்பதற்கு பலவகையான அனுமதி சீட்டுகளை வழங்குகிறது சிங்கப்பூர் அரசாங்கம். வேலை அனுமதிச் சீட்டுப் பெற்று சிங்கப்பூரில் குடும்பத்துடன் தங்கி நிரந்தரவாசியாகி பின்னர் குடியுரிமை பெற்று வாழ்பவர்கள் ஒருபுறம் இருக்க, கட்டுமானப் பணியில் இருக்கும் தொழிலாளிகள், வீட்டு வேலைக்கு வரும் பணிப்பெண்கள், உணவகங்களில் சமையல் வேலை செய்பவர்கள், துப்புரவுத் தொழிலாளிகள், வேலையாட்கள் போன்றவர்களும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களே! ஆனால் இவர்களுக்குக் குறைந்த ஊதியம், ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 5
May 15, 2015
பினாங்கு வந்து சேர்ந்ததும் உதவிச் செயலாளராக இருந்த ராஃபிள்ஸ் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வுப் பெற்றார். கூடவே மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கினார். பினாங்கு நகரை ஆங்கிலேயர்கள் கற்பனை செய்தது போல் அவ்வளவு எளிதாக த் தங்கள் வசதிக்கேற்றாற் போல் மாற்றியமைக்க முடியவில்லை. பினாங்கின் சூழல், பருவ நிலை எதுவுமே ஆங்கிலேய துரைகளுக்கும், கனவான்களுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. ஏராளமான இயற்கை வளங்கள், பச்சைப் பசேல் காடுகள், நிறைய மழை, இவற்றோடு மலேரியா பரப்பும் கொசுக்களினால் மலேரியா காய்ச்சல், அதிக ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 4
May 15, 2015
ராஃபிள்ஸ் ஒரு தேர்ந்த ராஜதந்திரி போல் செயல்பட்டு சிங்கப்பூர் தீவில் தன் நாட்டுக் கொடியைப் பறக்க விட்டார். ஆனால் ராஃபிள்ஸ் தன்னை ஒரு சாமர்த்தியமிக்க அரசியல்வாதியாகவோ அல்லது பதவி மோகம் கொண்ட ஆளுநராகவோ மட்டும் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. அவர் மிகச்சிறந்த உயிரியலாளராக இருப்பதை மிகவும் விரும்பினார். மனிதநேயமிக்க அவரது மற்றொரு முகமும் சரித்திரத்தில் பதிவாகியிருக்கிறது. அவரது சமகால மாமனிதர்களான வில்லியம் பிட் இளையவர், நெப்போலியன், நெல்சன், வெலிங்டன் போன்றவர்களின் பெயர்களோடு நாம் ராஃபிள்ஸ் பெயரையும் இணைக்கலாம் ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 3
May 15, 2015
சிங்கப்பூரைக் குத்தகைக்கு வாங்குவதற்கு முன்னால் சிங்கப்பூர் டச்சு காலனியாக இருக்கிறதா என்று விசாரித்து விட்டுப் பின்னர்தான் வாங்கினார். ஹாலந்து என்று அழைக்கப்படும் நெதர்லாண்ட் நாட்டைச் சேர்ந்தவர்கள் டச்சுக்காரர்கள். ஐரோப்பாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு, குறிப்பாக ஆசிய நாடுகளில் தங்கள் வர்த்தகம் மற்றும் அரசியல் ஆளுமைகளை நிறுவியவர்கள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லை. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், நெதர்லாண்ட்ஸ், இத்தாலி போன்ற நாடுகளும் தங்கள் காலனிகளை உலகமெங்கும் நிறுவினார்கள். இதில் யார் எந்த நாட்டில் காலனி அமைத்தாலும் ஐரோப்பாவில் அந்த ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 2
May 15, 2015
அக்கால கடலோடிகள் தாங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த நாட்டிற்கு இவர்களாக முயன்று ஒரு கடல் வழிப் பாதை கண்டுபிடித்துச் சென்றடைந்தனர். கொலம்பஸ் இந்தியாவுக்கும் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கடல் வழியே செல்வதற்கு ஒரு புதிய பாதை கண்டுபிடிக்க முயன்று அமெரிக்காவை அடைந்தார். அந்தப் புதிய பூமியை அவர் தான் சாகும் வரை ஆசிய கண்டத்தின் ஒரு பகுதியாகவே, ஆசியாவின் கிழக்குப் பகுதி என்று நினைத்திருந்தார். அங்கே ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினர் சற்று செந்நிறமாக இருந்ததால் சிவப்பிந்தியர்கள் ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 1
May 15, 2015
சிங்கப்பூர் சிங்கப்பூர் ஒரு நாடா? ஒரு சிறு நகரமா அல்லது ஒரு நகர நாடா? இப்படி தெற்கிலிருந்து வடக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து விட முடியும் என்ற சாத்தியங்கள் இருக்கும் ஒரு சிறிய நகரம் ஒரு தனி நாடாக வளர்ந்து இன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக, உலகில் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக, மக்கள் வசதியாக வாழக் கூடிய நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இங்கு குடியேறிய புதிதில் பல ஆச்சரியங்களைக் கொடுத்தது இந்நகர வாழ்க்கை. அந்த ... Read More »
கயோலா – சபிக்கப்பட்ட தீவு
May 14, 2015
இத்தாலி நாட்டின் நேப்ல்ஸ் இல் உள்ள ஒரு சிறு தீவுதான் இந்த கயோலா ! நேப்ல்ஸ் நாட்டை சேர்ந்த மக்கள் இந்த தீவை சபிக்கப்பட்டது என்று கூறுகின்றனர் . அதற்கு பல காரணங்களையும் கூறுகின்றனர் . இந்த அழகான தீவிற்கு பின் பல மர்மங்கள் உள்ளதாம் . இந்த தீவின் முதலாளிகள் எல்லாம் அற்ப ஆயுளில் இறந்து விடுவதால் இந்த மக்கள் இதை கண்மூடித்தனமாக நம்புகின்றனர் ! 1920 களில் சுவிஸ் ஹான்ஸ் பௌன் ஒரு தரை ... Read More »
நாஸ்கா கோடுகள் – புரியாத புதிர்
May 14, 2015
இந்த பூமிப்பந்தானது பல்வேறு மர்மங்களையும் அதிசையங்களையும் தன்னகத்தே அடக்கியது. இம்மர்மங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் தருணம் அவை மானுட வாழ்வியலுக்கான புதியதொரு திறவுக்கொலாக அமைந்துள்ளது. பலகோடி நட்சத்திர மண்டலங்களையும் கிரகங்களையும் உள்ளடக்கிய இந்த அண்டத்தில் பூமி என்னும் இக்கோளில் மட்டுமே உயிர்கள் தோன்றியது முதல் அவ்வுயிர்கள் அண்டத்தை ஆளும் வேட்கை கொண்டு அலைவது வரை அனைத்துமே விந்தையானது. இதில் இன்றும் மானுட அறிவிற்கு சவால் விடும் அதிசயங்களையும் மர்மங்களையும் இயற்க்கை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் நாஸ்கா கோடுகள். ... Read More »
கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொள்ளும் பறவைகள் !
May 13, 2015
இந்தியாவின் அஸ்ஸாம்[Assam] மாநிலத்தை சேர்ந்த ஜெடிங்கா [Jetinga] என்னும் கிராமத்தில்தான் தான் இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது . இந்த ஊரில் ஏறக்குறைய 2500 மக்கள் வசித்து வருகின்றனர் . இந்த கிராமம் பிரபலம் ஆனதற்கு காரணம் இந்த பறவைகள் தற்கொலைதான் ! உலகில் பல இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து இங்கு வரும் பறவைகள் பெரும்பாலும் திரும்ப செல்வதில்லை . இங்குள்ள வீதிகளில் செத்து விழும் . இது இன்று நேற்று நடப்பதில்லை ! ... Read More »