ஒரு தாவோ கதை

ஒரு தாவோ கதை

பண்டைய சீன நாட்டில் ஒரு சிறிய நகரத்தில் ஒரு கொல்லன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டின் முன் பகுதியிலேயே அவன் தொழில் செய்யும் கடை வைத்திருந்தான். தன் வாழ்க்கையை நடத்த காலை முதல் இரவு வரை அவன் வியர்வை சிந்தி உழைக்க வேண்டி இருந்தது. கடையின் முன்னால் ஒரு மேசையில் ஒரு அழகான பழைய தேனீர் தயாரிக்கும் சட்டியில் நீரை நிரப்பி வைத்திருப்பான். அதன் அருகே ஒரு நாற்காலியும் வைத்திருப்பான். தாகம் எடுக்கும் போதெல்லாம் எழுந்து முன்னால் ... Read More »

முயற்சி

முயற்சி

ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும்.  கவனித்துப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன. எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது.  வெல்பவர்கள் தளர்வதில்லை! தளர்பவர்கள் வெல்வதில்லை! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது. Read More »

படித்ததில் பிடித்தது

கரன்சி காகிதங்கள் ஒன்றுபோலிருந்தாலும் அவை ஒன்றல்ல .சில காகிதங்களில் மருந்து வாசம் வீசும் .சில தாள்களில் குருதி மணக்கும் .பல தாள்களில் கண்ணீரும் புன்னகையும் ஒருங்கே ததும்பும் . நன்றி – ஆத்மார்த்தி புதிய தலைமுறை  Read More »

ஒருவன் மகானிடம் சென்று

ஒருவன் ஒரு மகானிடம் சென்று, … “ஐயா, நான் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?” என்று கேட்டான். “தாராளாமாக சாப்பிடலாம்” என்றார் மகான். “தண்ணீர் குடிக்கலாமா?” என்று கேட்டான் அவன். “குடிக்கலாம்” என்றார் மகான். “சிறிது புளிப்புப் பொருள்…” என்று இழுத்தான் அவன். “தவறேதும் இல்லை…சாப்பிடலாம்” என்றார் மகான். “இவை மூன்றையும் சாப்பிடலாம் என்கிறீர்கள்… இவை மூன்றையும் சேர்த்து தானே மது தயாரிக்கப்படுகிறது… அதை ஏன் சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்?” என்றான் அவன். உடனே மகான் அவனைப் பார்த்து கேட்டார், ... Read More »

கான்ஃபிடன்ஸ் கார்னர்

கான்ஃபிடன்ஸ் கார்னர்

பறக்கத் தயங்கும் பறவைகள் இரண்டை, பிரியமுடன் வளர்த்து வந்தார் அந்த அரசர். அவை நன்கு பறக்க வழி செய்பவர்களுக்கு சன்மானம் உண்டென அறிவித்தார். பலரும் பலவிதமாய் முயன்றார்கள். ஒருவர் மட்டும் வெற்றிகரமாய் பறக்கவிட்டார். பறவைகளை கிளையொன்றில் அமரவைத்து கிளைகளை அவர் திடீரென்று வெட்டியதும் பதறிய பறவைகள் பறக்கத் தொடங்கின. உள்ளிருக்கும் சக்தியை உசுப்பினால் தயக்கமின்றி பறக்கலாம் எல்லோரும்!! Read More »

கான்பிடன்ஸ் கார்னர்

கான்பிடன்ஸ் கார்னர்

சூரியனை உன்னிப்பாக கவனித்துவிட்டு ஆளாளுக்கு அறிக்கை கொடுங்கள் என்றார் ஒரு பயிற்சியாளர். பெரும்பாலானவர்கள், சூரியனைப் பார்த்தால் கண்கூசுகிறதென்று ஒதுங்கி விட்டார்கள். பிறகு பயிற்சியாளரே சொன்னார்.”சூரியன் ஒளிமிக்கதாய் இருக்கிறது.             அதனை கிரகங்கள் சுற்றுகின்றன. நீ ஒளி மிக்கவனாய் இருந்தால் உன்னை எல்லோரும் சுற்றிக்கொள்வார்கள். உண்மையில் கிரகங்கள் சுழல்கின்றன. ஆனால் சூரியன் உதிக்கிறது; அஸ்தமிக்கிறது என்கிறார்கள். தான் இயங்காமல் பிறரை இயக்கி அதிலும் தன் இயக்கத்தை வெளிப்படுத்தும் சூரியனின் இயல்பே தலைமைப் பண்பின் அடையாளம்” என்றார் அவர். Read More »

ரோபோ!!!

ரோபோக்களை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது மறைந்த எழுத்தாளர் சுஜாதா என்று சொன்னால் அது மிகையாகாது. தன்னுடைய ‘ஜீனோ’ மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ரோபோ என்கிற வார்த்தையை பிரபலமாக்கினார். “ரோபோ” என்கிற வார்த்தை பிறந்தது 1920ல். பெயர் சூட்டியவர் பிரபல செக் கலைஞர் ஜோசெஃப் சாபெக். அவருடைய தமையன் கேரல் சாபெக் நாடகத்தில் முதன் முறையாக இந்த வார்த்தையை உபயோகித்தார். கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், காலம் காலமாக மனிதர்கள் ரோபோக்களை உருவாக்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அல் சசாரி என்றவர் ... Read More »

மின் விசிறிகள்!!!

வீட்டுக்கு வெளியே அனல் பறக்கும் கோடை வெப்பம் தாங்க முடியாமல் வீட்டுக்கு உள்ளே நுழைந்ததும் நாம் செய்யும் முதல் வேலை மின் விசிறியின் குமிழை அழுத்தி அதைச் சுழலச் செய்வதுதான். விசிறி சுழலத் துவங்கியதும் நாம் குளிர்ச்சியும் வசதியும், மகிழ்ச்சியும் அடைகிறோம். மின்விசிறியின் கண்டுபிடிப்பு பற்றி அறிந்துகொள்வதும் உண்மையில் அத்தகைய மகிழ்ச்சியளிப்பதுதான். பழங்காலந்தொட்டே மனிதன் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாக்கப் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தான். முன்னாளில் மர இலைகளும், பறவைச் சிறகுகளும் விசிறியாகப் பயன்படுத்தப்பட்டு ... Read More »

நுண்செயலி!!!

நுண்செயலி என்பது சிலிகான் சில்லுவின் (Silicon chip) ஒரு செயற்கை வடிவம்; இது கணினியின் மூளை போன்று செயல்படுவது. கணினியில் விரும்பிய செயல்களை மேற்கொள்ள, நிரல்களை வடிவமைக்க, நினைவகத்திலிருந்து (memory) தரவுகளைப் (data) பயன்படுத்த, வெற்றிகரமாக கணிதச் செயல்பாடுகளை நிறைவேற்ற என்று பல வழிகளிலும் இந்த நுண்செயலி பணியாற்றுகிறது. தொடக்க காலக் கணினிகள் மிக மிகப் பெரியவை, ஓர் அறையையே அடைத்துக் கொள்ளக்கூடியவையாய் இருந்தன; ஏராளமான பெரிய இணைப்புக் கம்பிகளைக் கொண்டிருந்தன. இத்தகைய குறைகளைப் போக்குவதற்கு, உரிய ... Read More »

போக்குவரத்து விளக்குகள்!!!

பெரிய நகரங்களில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட கம்பத்தை அல்லது அமைப்பைக் கண்டிருக்கிறோம். இவ்விளக்குகள் 3 வண்ணங்களில் அமைந்திருக்கும். அவை முறையே பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு ஆகியன. ஜே.பி.நைட் என்பவர் லண்டன் மாநகரில் 1868ஆம் ஆண்டு இப்போக்குவரத்து விளக்குகளைக் கண்டு பிடித்தார். மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் இவ்விளக்குகள் நிறுவப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்நாளில் தானியங்கிப் போக்குவரத்து வாகனங்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கவில்லை. குதிரையை அல்லது குதிரை பூட்டிய வண்டிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர். ... Read More »

Scroll To Top