ஜென்… ஜென் தத்துவங்களை கடைபிடிக்க எண்ணி பல முறை தோற்றிருக்கிறேன். அதை யாராலும் கடைபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஜென் தத்துவம் உன் வாழ்க்கையை இப்போது இந்த நொடி இந்த விநாடி வாழ்ந்து பார் என்பது அப்படியென்றால் சாப்பிடும் போது சாப்பிடு, படிக்கும் போது படி. சாப்பிடும் போது படிக்காதே என்பது தானே. The Zen And The Art Of Motorcycle Reparing என்று ஜென் தத்துவத்தை விளக்கும் ஒரு புத்தகம் கிடைத்தால் படித்து பாருங்கள். ... Read More »
இப்போதே நல்ல நேரம் தான்!
December 26, 2015
வாழ்க்கையில் நேரம் மிக முக்கியமானது. ஒன்றைச் செய்வதாக வாக்களித்து விட்டு, தாமதித்து செய்தால் உயிர் கூட போய்விடும் வாய்ப்புண்டு. தசரதருடன் கைகேயி போர் ஒன்றுக்குச் சென்றாள். அந்தப் போரில் அவள் பல வகையிலும் அவருக்கு உதவினாள். தன் அன்பு மனைவியின் செயல்பாட்டினால் வெற்றி பெற்ற தசரதர், மகிழ்ச்சியில்,””கண்ணே! நீ என்னிடம் இரண்டு வரங்கள் கேட்கலாம். எதுவானாலும் தருவேன்,” என்றார். அவள், “”இப்போது வேண்டாம்…பின்னால் பார்க்கலாம்,” என்றாள். “பின்னால்’ …”பார்க்கலாம்’ என்ற வார்த்தைகள் மனித வாழ்வுக்கு உகந்தவை அல்ல. ... Read More »
மக்களின் மனதில் நிற்பவர் யார்
December 26, 2015
இதோ ஒரு இனிமையான கவிதை! இந்தக் கவிதையை இளவயதில் பள்ளியில் படிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. என்ன கவிதை அது! “”செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே- எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே சக்தி பிறக்குது மூச்சினிலே” பாரதியார் எழுதிய இந்தப்பாடல், ஒரு காலத்தில் மூன்றாம் பரிசு தான் பெற்றது. “ஆச்சரியமாக இருக்கிறதே!’ என்பவர்கள் தொடருங்கள். சென்னையில் ஒரு இலக்கிய அமைப்பினர் கவிதைப்போட்டி அறிவித்தனர். முதல்பரிசு ரூ.300, இரண்டாம் பரிசு ரூ.200, மூன்றாம் ... Read More »
சித்திரக்கவிகள்
December 26, 2015
இந்தப் பாடல் நேராக வரிவடிவிலும், சுழியாகச் சித்திர வடிவிலும் அமைந்துள்ளது. மேலிருந்து கீழாக முதல் எழுத்துக் களையும் கீழிலிருந்து மேலாகக் கடையெழுத்துக் களையும் சுற்றி சுற்றி நான்கு முறைப் படித்தாலும் சரியாக வரும். கவிமுதி யார் பாவே விலையரு மாநற்பா முயல்வ துறுநர் திருவழிந்து மாயா பொருள் : வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள் விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும். அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்து ஒருவர் பெற்ற ... Read More »
திருடாதே!
December 26, 2015
திருடாதே! ரத்னாகரர் என்பவர் திருடி பொருள் சேர்த்தார். ஒருமுறை காட்டு வழியே வந்த ஏழு ரிஷிகளை மறித்தார். அவர்களில் ஒரு ரிஷி””அப்பனே! பொருள் வேண்டியா எங்களைத் தடுத்தாய். உணவு கூட அன்றாடம் கிடைத்தால் தான் உண்போம். இல்லாவிட்டால் பட்டினி கிடப்போம். எங்களிடம் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது? அது சரி…எதற்காக திருடுகிறாய்?” என்று கேட்டார். “”சுவாமி! என் குடும்பம் பெரியது. அவர்களுக்கு உணவிடவே திருடுகிறேன்,” என்றார் ரத்னாகரர். “”குடும்பம் பெரிது என்பதற்காக திருடுவது பாவமல்லவா! உன்னிடம் ... Read More »
மனஅழுத்தம்!!!
December 26, 2015
மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்… வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு ... Read More »
வாழ்க்கை
December 25, 2015
ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை. ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று ... Read More »
500 ரூபாய்
December 25, 2015
200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டை காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். … கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர். பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் ... Read More »
நம்பிக்கையை விடவே விடாதே!
December 25, 2015
ஒரு வேடனுக்கு யானை வளர்ப்பது என்றால் கொள்ளை ஆசை. அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச்சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டி விடுவான். அவை பிளிறிப் பார்க்கும், தப்பிக்க முயற்சிக்கும். ஆனால், காலப்போக்கில் அவ்வாறு முயற்சிப்பதில் எந்த பலனும் இல்லையென நம்பிக்கையை இழந்து விடும். மேலும், அவற்றுக்கு அவ்வப்போது சாப்பாடு வந்து விடும். அதை விரும்பி சாப்பிடும் குட்டிகள் கொஞ்சநாளில் சமாதானமாகி விடும். வளர்ந்து பெரிதாகி விடவும் செய்யும். இதன்பிறகு, வேடன் ... Read More »
தரை துடைக்கும் வேலை
December 25, 2015
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். ‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. ... Read More »