உலகின் பழமையான நாகரீகமான மெசபடோமியாவில் தான் பேரீச்சம்பழம் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.எகிப்திய பிரமிடுகளிலும்,கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும்இடம்பெற்றுள்ள பேரீச்சம் பழம், கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துப்பழமாக உலக மக்களால் உண்ணப்பட்டு வருகிறது. பேரீச்சம்பழத்தின் மருத்துவக் குண பெருமைகள்… * ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாகச் ... Read More »
விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு!!!
December 30, 2015
சிகாகோவில் நடைப்பெற்ற சர்வ சமயப் பேரவை: கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து 400 ஆண்டுகள் ஆகியிருந்தது. அதன் நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்கு, அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில், பிரம்மாண்டமான ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் கண்காட்சியில் அறிவியல், பொருளாதாரம் என்று சுமார் 20 பேரவைகள் நடைபெற்றன. அங்கு சர்வ சமய பேரவை சொற்பொழிவுகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, பதினேழு நாட்கள் நடைபெற்றன. அங்கு ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகளை, மூன்று பிரிவுகளாகப் பிரித்து ... Read More »
சிவசக்தி!!!
December 30, 2015
இயற்கையென் றுனைரைப்பார்-சிலர் இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்: செயற்கையின் சக்தியென்பார்-உயித் தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்; வியப்புறு தாய்நினக்கே-இங்கு வேள்விசெய் திடுமெங்கள்ஓம்என்னும் நயப்படு மதுவுண்டே?-சிவ நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய் 1 அன்புறு சோதியென்பார்-சிலர் ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்: இன்பமென் றுரைத்திடுவார்-சிலர் எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்; புன்பலி கொண்டுவந்தோம்-அருள் பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய் மின்படு சிவசக்தி எங்கள் வீரைநின் திருவடி சரண்புகுந்தோம். 2 உண்மையில அமுதாவாய்;-புண்கள் ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்! வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்கு வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்; ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும் ஊறிடுந் திருவருட் சுனையாவாய்; ... Read More »
சக்கர நாற்காலியில் ஒரு சாதனையாளர்
December 29, 2015
ஊன்றி நடக்க உறுதி கொண்டால் ஒட்டடை நூல்கூட ஊன்று கோல்தான். என்ற கவிதைக்குச் சாட்சியாக காட்சியளிப்பவர்தான் சூர்யா என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மன் நடுங்கும் கைகளுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி திணறி, திணறிப் பேசும் சூர்யாவாவிற்கு 23 வயதாகிறது. இவரை நேரில் பார்ப்பவர்கள் இவரா இதையெல்லாம் செய்வது என்று நிச்சயம் ஆச்சர்யப்பட்டு போவார்கள். அப்படி சூர்யா என்னதான் செய்கிறார் கொஞ்சம் ஆரம்பத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்களேன். பிறந்த 6 மாதத்திலேயே சூர்யா இயல்பானவன் இல்லை என்பது தெரிந்து விட்டது. முதுகுத் ... Read More »
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது
December 29, 2015
சதுரகிரி மதுரை- ஸ்ரீவில்லிப்புத்தூர் நெடுஞ்சாலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் இருக்கிறது கிருஷ்ணன் கோயில். இங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது வத்திராயிருப்பு, வத்திராயிருப்பிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இருப்பது தாணிப்பாறை. இதுவே சதுரகிரி மலையின் அடிவாரம். சதுரகிரி பிரமிப்பு, மகிழ்ச்சி, இன்பம், பக்தி, சித்தி முதலியனவற்றை உண்டாக்கக்கூடிய பிரமாண்டம். இயற்கை வளங்களும், மூலிகைக் காடுகளும், நீர் நிலைகளும், விலங்குகளும், பறவைகளும், குகைகளும், கோயில்களும் நிறைந்த மலை. இதிகாசங்களிலும், புராணங்களிலும் இடம் பெற்றிருக்கும் ஆன்மிக சிறப்பும், பதினெட்டு சித்தர்களும், பற்பல ... Read More »
அதிர்ஷ்டசாலி யார்?
December 28, 2015
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது… பிச்சைக்காரனை இழுத்து ... Read More »
குழந்தை
December 28, 2015
அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது. * கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது. * குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது. * அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது. * பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது. * ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. * புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது. * நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது. * நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது. * * 4,5 வயதுகளில் ... Read More »
கஷ்ட காலங்களில் கடவுள்
December 28, 2015
ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம். நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால்தடங்கள். அவனுக்கு ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை. சத்தமாகக் கேட்டான். “என்னுடன் வருவது யார்?” “நான் கடவுள்” என்று அசரீரியாகப் பதில் வந்தது. அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. ‘கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்’. பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் ... Read More »
நிற்காத கடிகாரமாயிருப்போமா
December 27, 2015
நிம்மதியான வாழ்வுக்கு துறவறமே உயர்ந்தது என நினைத்தான் ஒரு மனிதன். காட்டுக்கு தவமிருக்க போய்விட்டான். அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. “”இது என்ன வாழ்க்கை! காலை முதல் மாலை வரை கண்மூடிக்கொண்டே இருப்பது! இரவானாலும் தூங்குவது! அதிகாலையில் கொட்டும் பனியில் குளத்திற்குப் போய் நீராடுவது! பூ பறிப்பது! சுவாமியை வணங்குவது! போதாக்குறைக்கு தனிமை வேறு! பேச்சுத்துணைக்கு ஆளில்லையே! ஏன் இங்கு வந்தோம்! இது வேண்டாமென்று ஊருக்குத் திரும்பிப் போனால் “இவ்வளவுதானா உன் வைராக்கியம்?’ என ஊரே கேலி ... Read More »
சும்மா ஒரு வெட்டி வேலை
December 27, 2015
சும்மா ஒரு வெட்டி வேலை: நான் விஜயகாந்த் அல்ல புள்ளிவிபரங்களை சரியாகச் சொல்ல…. தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை தோரயமாக 53722 இதில் பாதி பள்ளிகள் 25000 தனியாருடையது என எடுத்துக் கொண்டால் 25000 பள்ளிகள். அதில் 50 பிள்ளைகள் வருடத்துக்கு புதிதாக சேருவதாக வைத்துக் கொள்வோம் டொனேசன் மினிமம் 20000 வைத்துக் கொள்வோம் மொத்த டொனேசன் : 25000 * 50 * 20000 = 2500,00,00,000 ரூபாய் தமிழகத்தில் மட்டும் ஒருவடத்திற்கு. இது அனைத்தும் ... Read More »