கொடுக்காப்புளி, கொடுக்காய்ப் புளி மரம், புளியங்காய் போலக் காய் காய்க்கும். ஆனால் புளியங்காய் போல இதன் காய் புளிக்காது. காயின் உள்ளே இருக்கும் வெண்ணிற விதை சற்றே துவர்ப்பாய் இருக்கும். மக்கள் விதைகளை விரும்பி உண்பர். கொடுக்காப்புளி என்றால் என்வென்றே தெரியாமல் போகும் நம் சந்ததிகளுக்கு விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும். இந்த ... Read More »
பிரச்னைகளை சமாளிப்பது எப்படிச்!!!
February 5, 2016
“குருவே, எனக்கு பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே போ கிறது’ என்று சொன்னவனைப் பார்த்தார் குரு. “என்ன சங்கதி’ என்றார். “என் வாழ்க்கையில் எங்கு பார்த்தாலும் பிரச்னைகள் தான் தெரிகிறது. அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரிய வில்லை’ என்றான் வந்தவன். இதைக் கேட்டதும் குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந் தது. அவனுக்கு ஒரு சம்பவ த்தைசொல்லத் துவங்கினார். “ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார். தினமும் அவருக்கு ஒரே ரூட் தான். ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ் ... Read More »
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர்!!!
February 5, 2016
அக்பர் தன் அன்னையின் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தார். ஒருநாள் ஆக்ராவிலிருந்து லாகூருக்கு அவர் தனது அரண்மனை பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவருடன் அன்னையும் உடன் சென்றார். அன்னை பல்லக்கிலும், அக்பர் குதிரை மீதும் பயணம் செய்தனர். அவர்கள் செல்லும் வழியில் சிறிதளவே தண்ணீர் ஓடும் சிற்றாறு ஒன்று குறுக்கிட்டது. ஆனால், இவர்கள் கடக்கும் நேரம் இடுப்பளவிற்கு தண்ணீர் பெருகத்தொடங்கியது. அக்பர் தனது குதிரையை விட்டு இறங்கி, தன் அன்னை அமர்ந்திருந்த பல்லக்கை நோக்கி ஓடினார். ... Read More »
இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்??
February 5, 2016
இந்து மதத்தில் பாம்புக்கும் பசுவுக்கும் தனி இடம். மற்ற விலங்குகள், பிராணிகளைவிட இந்த இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம், பசுவைத் தெய்வமாக மதிக்கும் மதம் நமது இந்து மதம். இத்தனை மிருகங்களுக்கும் இல்லாத மரியாதை பசுவுக்கு மட்டும் ஏன் ? பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல், அனைவருக்குமே தன் பாலைத் தருவதால் மட்டுமல்ல. பசு எதைச் சாப்பிடுகிறது ? மனிதன், நெல்லிலிருந்து பெறும் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுகிறான், நெல்லின் உமியைத் தவிடாகவும், நெற்கதிரின் வற்றிய நாற்றான வைக்கோலையும் பசு ... Read More »
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி!!!
February 4, 2016
இது நம் நாடு என்று ஏழை எளியோர்கள் நினைக்ககூடிய இந்தியாவிற்காக நான் பாடுபடுவேன்.அந்த இந்தியாவில் எளியோருக்கு உரிமை இருக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடு நீங்கியிருக்கும். அனைத்துப்பிரிவினரின் முழுமையான சகவாழ்வு இருக்கும். தீண்டாமை சாபம் ஒழிந்திருக்கும். மதுப்பழக்கம் ஒழிந்திருக்கும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் உரிமைகள் பெற்றிருப்பர். மற்ற உலகத்தினரோடு நாம் அமைதியான வாழ்க்கையை பெற்றிருப்போம். இதுதான் நான் காணும் கனவு இந்தியா. மகாத்மா காந்தி மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948), ... Read More »
வள்ளிப்பாட்டு!!!
February 4, 2016
வள்ளிப்பாட்டு -1 பல்லவி எந்த நேரமும்நின் மையல் ஏறுதடீ! குற வள்ளீ!சிறு வள்ளீ! சரணங்கள் (இந்த)நேரத்தி லேமலை வாரத்தி லேநதி யோரத்தி லேயுனைக் கூடி-நின்றன் வீரத் தமிழ்ச்சொல்லின் சாரத்தி லேமனம் மிக்க மகிழ்ச்சிகொண் டாடி-குழல் பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை யோரத்திலே அன்பு சூடி-நெஞ்சம் ஆரத் தழுவி அமரநிலை பெற்று அதன்பயனை யின்று காண்பேன். (எந்தநேரமும்) வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி விரிந்து பொழிவது கண்டாய்-ஒளிக் கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக் குறிப்பினி லேயொன்று பட்டு-நின்தன் பிள்ளைக் ... Read More »
முருகா!!!முருகா!!!
February 4, 2016
ராகம்-நாட்டைக்குறிஞ்சி) தாளம்-ஆதி பல்லவி முருகா!-முருகா!-முருகா! சரணங்கள் 1. வருவாய் மயில்மீ தினிலே வடிவே லுடனே வருவாய்! தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா) 2. அடியார் பலரிங் குளரே அவரை விடுவித் தருள்வாய்! முடியா மறையின் முடிவே!அசுரர் முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா) 3. சுருதிப் பொருளே,வருக! துணிவே,கனலே,வருக! கருதிக் கருதிக் கவலைப் படுவார் கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா) 4. அமரா வதிவாழ் வுறவே அருள்வாய்!சரணம்,சரணம் குமரா,பிணியா ... Read More »
விநாயகர் நான்மணி மாலை!!!
February 4, 2016
வெண்பா 1. (சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம் சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா-அத்தனே! (நின்)தனக்குக் காப்புரைப்பார்;நின்மீது செய்யும் நூல் இன்றிதற்கும் காப்புநீ யே. கலித்துறை 2. நீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம் நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்; வாயே திறவாத மெனத் திருந்துன் மலரடிக்குத் தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. விருத்தம் 3. செய்யுந் தொழிலுன் தொழிலேகாண் சீர்பெற் றிடநீ அருள்செய் வாய். வையந் தனையும் வெளியினையும் வானத்தையும்முன் படைத்தவனே! ஐயா!நான்மு கப்பிரமா! ... Read More »
புதிய அரசு!!!
February 4, 2016
சிங்கப்பூரில் 21.10.1943 ஆம் நாள் இந்திய சுதந்திர அரசை அறிவித்தார். அதற்கு “ஆசாத் ஹிந்த்“ என்று பெயரிட்டார். 38கோடி இந்தியர்களின் விடுதலைக்குப் பாடுபடுவேன் என்ற உறுதிமொழியுடன் அந்தப் புதிய அரசின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஒரு மாத காலத்துள் ஜப்பான், பர்மா, பிலிப்பைன்ஸ், ஜேர்மனி குரொஷியா, சீனா, மஞ்சுகோ, இத்தாலி, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் புதிய அரசினை அங்கீகரித்தன. அயர்லாந்து வாழ்த்து அனுப்பியது. ஜப்பான் அந்தமான் நிக்கோபார் தீவுகளை அந்தப் புதிய அரசுக்கு வழங்கியது. போஸ் அந்தமானுக்கு ... Read More »
மரம்!!! மரத்தின் பயன்கள்!!!
February 3, 2016
மரத்தின் பயன்கள் பறவைகளின் பயணியர் விடுதிகள். பாதசாரிகளுக்கு இருக்க இடம் கொடுக்கும் பொதுவுடைமை வீடுகள். சூரிய நெருப்பு சுடுகிற பாதங்களுக்கு நிழல் கொடுக்கும் வெண்கொற்றக் குடைகள். மரங்களின் பயன்கள் மகத்தானவை. பசிக்குப் பழங்கள் தருகின்றன. நோய்க்கு மருந்தைக் கொடுக்கின்றன. சுவாசிக்கக் காற்றைத் தருகின்றன. குழந்தைகளுக்குத் தொட்டிலையும், இளமைப் பருவத்தில் சுட்டிலையும், முதுமைப் பருவத்தில் ஊன்று கோலையும், இறக்கும்போது எரிக்க விறகையும் தருகின்றன. மரங்களின்றி வாழ்வு ஏது? உயிருள்ள ஒரு மரத்தின் மதிப்பு ரூ.10 இலட்சம், மரம் நமக்கு ... Read More »