மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும் :– *அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது. *கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது. *அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு ... Read More »
ஊக்கம்!!!
February 19, 2016
ஊக்கம் ஊக்கமூட்டும் சில பழமொழிகள் இங்கே: அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம். இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம். உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை. ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும். ஒரு காசு பேணின் இரு காசு தேறும். கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும். கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான். கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் ... Read More »
திருநீற்றுப் பச்சை!!!
February 19, 2016
மூலிகையின் பெயர் :- திருநீற்றுப் பச்சை. வேறுபெயர்கள் :- உத்திரச்சடை, மற்றும் சப்ஜா . பயன் தரும் பாகங்கள் :- இலை, வேர் மற்றும் விதை முதலியன. வளரியல்பு :- இது சாதாரணமாக இந்தியாவில் எல்லா இடங்களிலும் வளர்கிறது. மேலும் பிரான்ஸ், இந்தோனேசியா, மொராக்கோ, அமரிக்கா, மற்றும் இத்தாலியிலும் பயிரிடப்படுகிறது. தோட்டங்களில் வளர்க்கப்படிகின்றது. இது சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் நடுவில் அகன்றும், நுனிகுறுகியும், நீண்டும் இருக்கும். பூக்கள் வெண்மையாக கதிர் போன்று இருக்கும். ... Read More »
முதல் படி!!!வெற்றியாளர்!
February 19, 2016
முதல் படி உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன. – Goethe. நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. – Martin Luther King Jr. செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து ... Read More »
பாவேந்தர் பாரதிதாசன்!!!
February 18, 2016
“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை ... Read More »
மஹாசக்திக்கு விண்ணப்பம்!!அன்னையை வேண்டுதல்!!
February 18, 2016
மஹாசக்திக்கு விண்ணப்பம் மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன் மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில் சிந்தனை மாய்த்துவிடு; யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன் ஊனைச் சிதைத்துவிடு; ஏகத் திருந்துலகம்-இங்குள்ளன யாவையும் செய்பவளே! 1 பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப் பாரத்தைப் போக்கிவிடு; சிந்தை தெளிவாக்கு-அல்லா லிரைச் செத்த வுடலாக்கு; இந்தப் பதர்களையே-நெல்லாமென எண்ணி இருப்பேனோ? எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்று இயங்கி யிருப்பவளே. 2 உள்ளம் குளிராதோ?-பொய்யாணவ ஊனம் ஒழியாதோ? கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக் கண்ணீர் பெருகாதோ? வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு வேட்கை தவிராதோ? ... Read More »
நல்லதோர் வீணை!!!
February 18, 2016
நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ,-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி,சிவசக்தி!-நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1 விசையுறு பந்தினைப்போல்-உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையுறு மனங்கேட்டேன்-நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும்-சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன்;-இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 2 Read More »
காணி நிலம் வேண்டும்!!
February 18, 2016
காணி நிலம் வேண்டும்-பராசக்தி காணி நிலம் வேண்டும்;-அங்கு, தூணில் அழகியதாய்-நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய்-அந்தக் காணி நிலத்திடையே-ஓர் மாளிகை கட்டித் தரவேணும்;-அங்கு, கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் 1 பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்போலே-நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற்பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல்வர வேணும். 2 பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும்;-எங்கள் கூட்டுக் களியினிலே-கவிதைகள் கொண்டுதர வேணும்;-அந்தக் காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன் காவலுற வேணும்;என்தன் பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப் பாலித்திட வேணும். 3 Read More »
சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து வதந்திகள்??/
February 18, 2016
சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து பற்பல வதந்திகள் உலவின. பல மர்மங்கள் இன்றும் வெளிச்சத்திற்கு வரவில்லை. நூல்களிலும் இணைய தளங்களிலும் பலர் கொடுத்திருந்த தகவல்களை வரிசைப்படுத்தியுள்ளேன். தாய்வானின் அதிகாரிகள் விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்பட்ட தேதியில் அப்படியொரு விபத்து தாய்வானின் நடந்ததாக எந்தவித ரெக்கார்டும் இல்லை. பிரிட்டிஷ் இண்டெலிஜென்சியின் ரகசியக்கோப்புகளில் பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் கிளமெண்ட்ஸ் அட்லீ ‘’ போஸ் இப்போது எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்’’ என்று 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிவெடுத்ததாகப் பதியப்பட்டிருக்கிறது. CIA ... Read More »
மூளையை பலமாக்கும் மஞ்சள்
February 17, 2016
மஞ்சளுக்கும் பெண்களுக்கும் நிறையவே தொடர்புகள் உண்டு. அவர்கள்தான் இந்த மஞ்சளை, தங்கள் உடல் அழகுக்காகவும் பயன்படுத்துகிறார்கள்; கமகம சமையலிலும் உபயோகிக்கின்றனர். இதே மஞ்சளுக்கு மூளையை பலமாக்கும் `பவர்’ இருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள் வட கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.அதாவது, சமையலுக்காக பயன்படுத்தும் மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட் பொருள் அல்சைமர் மற்றும் டெமெண்டியா என்கிற மூளை சம்பந்தப்பட்ட மற்றும் நினைவாற்றலை குறைக்கும் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டிருப்பது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு குறித்து ... Read More »