சகிப்புத்தன்மை மனிதனுக்கு ரொம்ப அவசியம். நெருக்கடி மிகுந்த விட்ட இந்தக் காலத்தில், பஸ்சில் செல்லும் போது, ஒருவன் தெரியாமல் நம்மை மிதித்து விட்டால் கடுமையாக வலிக்கத்தான் செய்கிறது. அதை அவனிடம் இதமாகச் சொல்லலாமேதவிர, அவன் மீது கை நீட்டினால், பிரச்னை பெரிதாகத்தான் செய்யும். ஒரு இளைஞன், குரு ஒருவரிடம் வந்து, “”ஐயனே! தாங்கள் எனக்கு கடவுளைப் பற்றி உபதேசிக்க வேண்டும்,” என்றான். “”சீடனே! இதுபற்றிய உபதேசம் பெற வேண்டுமானால், நான் சொல்லும் விதிமுறைகளின்படி, கடுமையான விரதம் இருக்க வேண்டும். அந்த விரதத்தை நீ சரியாகப் பூர்த்தி செய்து விட்டதாக நான் கருதினால், உபதேசம் செய்வேன்,” என்றார். இளைஞனும் சம்மதித்தான். ... Read More »
எல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டு
March 28, 2016
* உலக நிகழ்ச்சிகள் யாவும் தற்செயலாக நடக்கின்றன என்று எண்ணுபவன் தன்னிடத்திலேயே நம்பிக்கை இல்லாதவன் என்று தான் சொல்ல வேண்டும். * ஆண்டவன் இந்த உலகத்தில் நமக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவரது படைப்புகள் அனைத்திலும் ஒரு நியமத்தினை அல்லது ஒழுங்கினைக் காணமுடிகிறது. அதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். * இந்த உலகில் உள்ள எல்லாம் இறைவனனின் உறைவிடம் என்பதை உணருங்கள். அவன் கொடுப்பதை அனுபவியுங்கள். அதைத் தவிர அதுவேண்டும் இதுவேண்டும் என்று ஆவலில் அலையாதீர்கள். * பரந்த நோக்கம் மட்டுமே மனிதனை வாழவைக்கும். அதற்கு மாறாக பொறாமை,முரட்டுச்சிந்தனை, கொடிய பழக்கவழக்கங்கள் ... Read More »
ஜென் என்றால் என்ன?..”
March 28, 2016
ஜென் என்றால் என்ன?..” கேள்வி எழுந்தது ஒரு மாணவனிடமிருந்து. துறவி அவனைச் சற்று நேரம் ஆழ்ந்துபார்த்துவிட்டுச் சொன்னார் “யாரும் அதை தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்” மாணவன் விடுவதாய் இல்லை “அப்படியனால் சுவாமி. ஜென் என்னதான் சொல்லுகிறது?” “zen teaches nothing. ஜென் சொல்லித்தருவது எதுவுமில்லை”. “அப்படியானால்…..” மாணவன் இழுத்தான்… “சும்மாயிரு..” வெகு வேகமாய் குருவின் குரல். மாணவன் தெளிந்தான். Read More »
நல்லதை மட்டுமே காண்போம்
March 28, 2016
* வாழ்வு நிரந்தரமானது என்று எண்ணுவது அறியாமை. இதனால் தான் பொன்னையும், பொருளையும் தேடி அலைந்து வாழ்நாளை வீணாக்குகிறோம். * மனம் என்னும் வீட்டில், தூய்மையற்ற சிந்தனை நுழைந்தால், இதயத்திரையில் கறை படிந்து விடும். * நல்ல திசையில் மனதைத் திருப்புங்கள். நல்லதை மட்டுமே எப்போதும் காண முயலுங்கள். * பூமிப்பந்தில் பாதி இருட்டாகவும், பாதி ஒளியாகவும் இருப்பது போல, வாழ்விலும் இன்ப, துன்பம் சரி பாதியாக கலந்திருக்கிறது. * வாழ்க்கை என்பது ஒரே திசையில் செல்லும் நீரோட்டம். அதனால், ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாக்கிக் கொள்ளுங்கள். * ஜபம், தியானம், பஜனை போன்றவை விலைமதிப்பு மிக்க ரத்தினங்கள். அவற்றின் ... Read More »
கேள்வியும் பதிலும்.
March 28, 2016
அறிவு, அறியாமை, ஐயுறல், கொளல், கொடை, ஏவல் … தரும் வினா ஆறும் இழுக்கார் சுட்டு, மறை, நேர், ஏவல், வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி எனும் எண்ணிறையுள் இறுதி நிலவிய ஐந்தும் அப் பொருண்மையின் நேர்ப நூல்: நன்னூல் (சொல்லதிகாரம், பொதுவியல் #385 & #386) பாடியவர்: பவணந்தி முனிவர் கேள்விகள் ஆறு வகைப்படும். இந்த ஆறையும் புலவர்கள் தள்ளாமல் ஏற்றுக்கொள்வார்கள்: 1. அறி வினா (பதில் தெரிந்தே கேட்கும் கேள்வி. உதாரணமாக, ... Read More »
தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..
March 28, 2016
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லைஎன்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். 2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று. 3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்,அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள். 4. என் ... Read More »
வாழ்கை தத்துவம்!!!
March 28, 2016
தற்போதுள்ள மனித அறிவின் படி ஒரே ஒரு தடவைதான் எமது வாழ்கையாகும்.இவ்வாழ்க்கையானது ஒரு குறுகிய காலப்பகுதியை வரையறையாக கொண்டுள்ளது.(ஒவ்வொரு மனிதனுக்குமான இக்கால அவகாசம் சமமாக இருப்பதில்லை) இக்கால இடைவெளிக்குள் , வாழ்க்கை என்றால் என்ன? ஏன் வாழவேண்டும்? ஏன் உறவுகளை மதிக்க வேண்டும்.? ஏன் உண்மையாக இருக்கவேண்டும்? யாரை முழுமையாக நம்புவது? ஏன் கோபம் வருகிறது? ஏன் சிந்திக்கின்றோம்? எதுவும் சில காலம் தான் எனத் தெரிந்தும் பொறாமைப்படுகிறோம்? எப்படியோ ஒரு நாள் உடலை மண்ணுக்கு கொடுக்க இருக்கிறோம், ஏன்? இப்படியாக பல கேள்விகள் வாழ்க்கை ... Read More »
வாழ்க்கையை புதிய கோணத்தில் பாருங்கள்!
March 28, 2016
வாழ்க்கை பல்வேறு சுவாரஸ்யங்களைக் கொண்டது. சிலருக்கு இந்த உண்மை அனுபவ ரீதியில் புலப்படுகிறது. பலருக்கோ புலப்படாமல் போய் விடுகிறது. வாழ்க்கையை ஒரே மாதிரியாக அணுகினால் போரடித்து விடும். ஒவ்வொரு நிமிடத்திலும் வாழ்தலில் தான் வாழ்க்கை உயிர்பெறுகிறது. சாதனையாளர்களும் வாழ்க்கையை ரசிக்காமல் சாதனைகளைப் புரியவில்லை. வாழ்க்கையை அவர்கள் எப்படி பார்த்தார்கள் என்பதுதான் முக்கியம். சுபாஷ் சந்திரபோஸ் நாட்டு விடுதலையைத் தன்னுடைய லட்சியமாகக் கொண்டார்.அதற்காக அவர் பட்ட துயரங்கள் பல. நம்முடைய நிலையிலிருந்து பார்த்தால்அவையெல்லாம் தாங்க முடியாத துன்பங்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர் இந்தத் துன்பங்களை எப்படிப் ... Read More »
நல்லது நடக்கட்டும்!
March 28, 2016
திருடன் ஒருவன், ஒரு மண்டபத்திற்கு வந்தான். அங்கு துறவி ஒருவர் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரிடம் சலனம் சிறிதும் இல்லை. “நம்மைப் போல இவனும் ஒரு திருடன் போல, அதனால் தான் யாருக்கும் தெரியாமல் இக்காட்டில் ஒளித்திருக்கிறான்’ என்று நினைத்தான். இவன் இருக்கும் இடத்தில் தங்கினால், தான் திருடிய பொருளுக்கு ஆபத்து வந்துவிடும் என்று எண்ணி, உடனே மண்டபத்தை விட்டு வெளியேறினான். சிறிது நேரம் கழித்து அவ்வழியே ஒரு குடிகாரன் வந்தான். தான் எவ்வளவு குடித்தாலும் சுய நினைவை இழப்பதில்லை என்பதில் அவனுக்கு அலாதியான நம்பிக்கை. அந்த மண்டபத்தைக் கடந்தான் குடிகாரன். சமாதி நிலையில் ... Read More »
வெற்றி தரும் எண்ணங்கள்!!!
March 28, 2016
வெற்றி தரும் எண்ணங்களைபற்றி அறிஞர்களின் கருத்து “வெற்றியினைச் சிந்தியுங்கள் வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள். வெற்றியை உருவாக்கத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும். மனப்படம் அல்லது மனப்பான்மை மிக வலிமையுடன் நிலைபெறுகிறபோது அது சூழ்நிலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. இதற்கும் மனக்கட்டுப்பாடுதான் அவசியமாகிறது” – வின்சென்ட் பீல்(மதப்போதகரும் மனோதத்துவ நிபுணரும்) “நம்பிகைதான் நிகழ்ச்களை உருவாக்குகிறது ” – வில்லியம் ஜேம்ஸ் “எண்ணம் எவ்வளவு வன்மையுடன் உடலை ஆட்சி செய்கின்றது என்பதை எண்ணிப்பர்கும் பொழுது எனக்கு பெரும் வியப்பேற்படுகிறது “- கவிஞன் கதே “தொழிலில் வெற்றியும் தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை ,மனப்பன்மையினல்தான் நிர்ணயிக்கப்படுகிறது “- டாக்டர் வால்டர் ... Read More »