ஒரு மடத்தில் “சும்மா இருப்பது எப்படி?” என செய்முறை விளக்கம் தருமாறு தன் சிஷ்யர்களுக்கு அந்த மடத்து குரு ஒரு பரீட்சை வைத்தார்.யார் சிறந்த விளக்கம் அளிக்கிறார்களோ அவன் ஞானத்தை உணர்ந்தவன் என பாராட்டி தலைமை பொறுப்பு அளிப்பதாக அறிவித்தார். எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாய்,சும்மா இருப்பதற்குண்டான வழிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்தனர். சிலர் பேசாமலும், சிலர் அசையாமலும், சிலர் உணவு உண்ணாமலும் இருந்தனர். சிலர் கண்களை மூடி தியானிப்பது போன்று சும்மா இருந்தார்கள். இன்னும் சிலர் மலைகள், காடுகள் என்று போய் சும்மா இருப்பதை செய்து காண்பித்தார்கள். ஆனால் ஒரே ஒரு மாணவன் மட்டும் சும்மா இருக்க எந்த ... Read More »
அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்………
March 29, 2016
அவள் ஒரு கிராமத்து அம்மா…… நான் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்…… என்னிடம் வந்தாள்…..” ஆத்தா இத எப்படி பேசுவது? சொல்லித் தறியா? கையில் புதியபோன்…” நான் சொன்னேன்:” அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்…..சிகப்பு புட்டன் அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்…. அதற்கு அந்த அம்மா:_” இது என்னோட பையன் வாங்கி கொடுத்தது…..” எவ்வளவு பெருமிதம்……. அந்த அம்மா முகத்தில்…… என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்……மாசம் ஒரு தடவை பேசுவான்……… இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு? பேசவே இல்லை….. அவருடைய பையன் பேரை சொல்லி அவன் எப்பையாவது போன் பண்ணி இருக்கான்னு ... Read More »
வாழ்க்கை ஒரு பயணம்!!!!
March 29, 2016
வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியானது எதுவென்று கேட்டுப் பார்த்தால், “பயணப்படுவது”என்று தான் சொல்லக்கூடும். பயணத்தை வெறுக்கிறவர்கள் எத்தனையோ மென்மையான காட்சிகளை தவறவிடுகிறார்கள். வெறுமனே தூங்கிக் கொண்டு போவதும், பேசிக் கொண்டே போவதும் பயணத்தில்சேர்க்கலாகாது. பயணத்தை கொண்டாட தேவை “கவனம்”. இந்தக் கவனம்தான் பலவெற்றிகளை அறிமுகப்படுத்துகிறது. வாழ்க்கையே ஒரு பயணம் தானே! ஒரு செழித்த நாடு! அந்த நாட்டின் அரசன் தினமும் காலையில் யானையில் அமர்ந்து ஊர்வலம் வருவான். அப்படி வருகிறபோது, ஊரின் ஒரு மூலையிலிருந்து ஓடோடி வரும் இளைஞன் யானையின் வாலைப் பிடித்து இழுப்பான். யானையால் நகரமுடியாது. ஒரு சில ... Read More »
ஆளுக்கொரு அறிவுரை
March 29, 2016
ஒருமுறை, ராமகிருஷ்ணரின் சீடரான பிரும்மானந்தர் படகுப் பயணம் மேற்கொண்டார். படகிலிருந்த ஒருவன், அவரைக் கேலிசெய்தான். பிரும்மானந்தர் வருத்தமடைந்தாலும், அவனைத் தட்டிக் கேட்கவில்லை. குருநாதரிடம் சென்று, நடந்ததைச் சொன்னார். ராமகிருஷ்ணர் அவரிடம், “”நீ ஏன் அவனைக் கண்டிக்கவில்லை. தவறு செய்பவனைக் கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும்,” என்றார். மற்றொரு முறை, மற்றொரு சீடரான விவேகானந்தர் படகில் சென்றார். அதே ஆசாமி படகில் அவருடன் வந்தான். அவன், விவேகானந்தரை கேலி செய்ய ஆரம்பித்தான்.விவேகானந்தர் மாவீரர் அல்லவா! கை முட்டியை மடக்கி, அவனை ஓங்கிக் குத்தப்போனார். அவன் அப்படியே ஒடுங்கி விட்டான். இந்த சம்பவத்தை பெருமையாக குருவிடம் ... Read More »
எது நிரந்தர இன்பம்?
March 29, 2016
ஒரு அரசனை நாடி புலவர் ஒருவர் வந்தார். அன்றைய புலவர்கள், அரசனின்பெருமைகளைப் புகழ்ந்து பாடுவதும், அதற்கு அவர்கள் பரிசு கொடுப்பதும் வழக்கம். இந்தப் புலவர் கடவுளை மட்டுமே அதுவரை பாடியவர். ஆனால், கோயிலில் குடும்பத்தைக் காப்பாற்றுமளவு போதுமான சம்பளம் கிடைக்காததால், அரசனைப் புகழ்ந்து பாட வந்துவிட்டார். அவனைப் புகழ்ந்து பாடினார். அவனும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டி ஆட்டி ரசித்தான். பாடி முடித்ததும், அமைச்சரை அழைத்து, “”இந்த புலவர் என்னை மகிழ்ச்சிப்படுத்தியதற்காக இவருக்கு பத்தாயிரம் பொற்காசுகள் கொடுங்கள்,” என்று உத்தரவிட்டான். புலவர் அமைச்சருடன் சென்றார். அமைச்சரோ,””சரி…போய் வருகிறீர்களா?” என்றார். “”அமைச்சரே! அரசன் தரச்சொன்ன ... Read More »
கெமன்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள இருபது…
March 29, 2016
1. தினமும் அரை நாள் கடுமையாய் உழையுங்கள். 2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்பு தான். 3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும். 4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியில் தான் ஏற வேண்டும். 5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது. மற்றொன்று நாமே ஏறுவது. 6. வியாபார அபாயங்களைக் கண்டு அஞ்சக்கூடாது. 7. பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியத்தை னமக்கு பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும். 8. ... Read More »
தர்மத்திலுமா சிக்கனம்!
March 29, 2016
ஒரு பணக்காரர் துறவியிடம் போனார். அவரிடம், “”மகனே! உனக்கு கிரகநிலை சரியில்லை. இதனால் உன் செல்வம் அழிந்து போக வாய்ப்புண்டு. நீ பழங்கள் வாங்கி ஏழைகளுக்கு தானம் செய். பிரச்னை குறையும்,” என்றார். பணக்காரரோ பெரிய கருமி. “”பழம் வாங்கிக் கொடுத்தால் நிறைய செலவாகுமே! என்ன செய்யலாம்?” என யோசித்தவர் வேலைக்காரனை அழைத்து, “”நம் தோட்டத்தில், பழுத்து கனிந்து கீழே விழும் நிலையிலுள்ள வாழைப்பழங்களை மட்டும் பறித்து வா,” என்றார். அவனும் ஐந்தாறு பழங்களைப் பறித்து வந்தான். அதை வேலைக்காரி ஒருத்தியிடம் கொடுத்தார் பணக்காரர். “”வீட்டுக்கு போவதற்குள் ... Read More »
இயற்கையை மாற்ற முடியாது!
March 29, 2016
ஒரு சமயம் மூன்று ரிஷிகள் வான் வழியே சஞ்சாரம் செய்து கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து ஒரு கருடன் பறந்து சென்றது. அதன் வாயில் ஒரு பாம்பு சிக்கியிருந்தது. “”அடடா…இந்த கருடனுக்கு கொஞ்சமாவது இரக்கமிருக்கிறதா! பாம்பை இந்தப் பாடு படுத்துகிறதே!” என்றார் ஒரு ரிஷி. அவ்வளவு தான்! பறந்து கொண்டிருந்தவர் கீழே விழுந்து விட்டார். இன்னொருவர், “”இந்த பாம்பு இதுவரை எத்தனை பேரைத் தீண்டி உயிரைப் பறித்திருக்கும். இதற்கு இது தேவை தான்!” என்றார். அவரும் கீழே விழுந்தார். மூன்றாவது ரிஷியோ, “”இவையெல்லாம் இயற்கையின் நிகழ்வுகள். கருடன் பாம்பைப்பிடிப்பதும், பாம்பு மனிதனைத் தீண்டுவதும் ... Read More »
எப்போதும் நல்லவனாயிரு!!!
March 29, 2016
ஒரு முனிவரை நேர்மையாளன் ஒருவன் சந்தித்தான். “”முனிவரே! நான் நல்வழியில் தான் நடக்கிறேன். ஆயினும் வாழ்க்கையில் படும் கஷ்டங்கள் அதிகம். நன்மை செய்வதும், நல்லதையே நினைப்பதுமான எனக்கு ஏன் இத்தனை துன்பம்?” என்று கேட்டான். முனிவர் சிரித்தார். “”அது உன் முன்பிறவியிலான பயன். போன ஜென்மத்தில் நீ பெரும் கொடுமைக்காரனாக இருந்திருக்கலாம். அதன் விளைவு இப்போது தெரிகிறது,”என்றார். பதிலுக்கு அவன்,””அந்த ஜென்மத் தவறுக்கு தண்டனையை, அப்போதே அல்லவா தர வேண்டும்….! நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இப்போது தீயவனாய் இருந்தாலும்,நன்றாய் வாழ்பவர்கள், போன ஜென்மத்தில் நன்மை செய்தவர்கள் என்றல்லவா அர்த்தமாகி விடும்…இது நியாயமா?” என்று கேட்டான். “”உன் ... Read More »
நான்… எனது…!பொறாமை!
March 29, 2016
“நான்…’ என்பது ஆணவம். எனது என்பது அகங்காரம். நமக்கென்று இந்த பூமியில் எதுவுமே இல்லை. பிறக்கும் போது, உடலில் ஆடை கூட இல்லை. போகும்போது,சிதை சுட்டவுடன் முதலில் பொசுங்கிப்போவதும் ஆடை தான்! எதையும் கொண்டு வரவுமில்லை. கொண்டு போகப் போவதுமில்லை. ஆனாலும், இந்த பூமியில் ஏதோ ஒன்றைத் தேடி நாம் படும் அல்லல் கொஞ்ச நஞ்சமல்ல. வாழ்க்கையின் சூட்சுமம் நமக்கு புரியவில்லை என்பதற்காக, அந்த ஆண்டவன் போடுவதை தப்புக்கணக்கு என்று சொல்லி கொண்டிருக்கிறோம். இப்படித்தான் இருந்தார் சுகதேவர் என்ற முனிவர். முனிவர் என்பவருக்கு எந்த வித கெட்ட குணமும் இருக்கக்கூடாது. ஆனால், இவருக்கு “பொறாமை‘ என்கிற கெட்ட குணம் ... Read More »