சீரகம் / போசனகுடோரி “ போசனகுடோரியைப் புசிக்கில் நோயெல்லாமருங் காசமிராதக் காரத்திலுண்டிட” – தேரன் வெண்பா இந்த போசனகுடோரி ஒரு அருமருந்து… மானிடத்திற்கு இயற்கை கொடுத்த கொடைகளில் ஒன்று… இதனை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை தினசரி நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அக்கறையிலும், நோய்நொடி இல்லாமல் வாழவேண்டும் என்ற பேராவலிலும் இதன் சுவையை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்… சைவ, அசைவ குழம்புகள், கூட்டு, பொரியல் முதல் ரசம் வரை எல்லாவற்றிலும் இந்த போசனகுடோரியை சேர்த்தால் ... Read More »
புற்றுநோயை எதிர்க்கும் கேரட்!!!
April 3, 2016
கேரட் சாப்பிடுவதால் நம்முடைய உடலில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உருவாகிறது என்பது தெரிந்த செய்திதான். ஆனால் கேரட்டில் உள்ள எந்த பகுதி புற்றுநோய் கட்டிகளை அழிக்கிறது என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Carrot இங்கிலாந்திலும், டென்மார்க்கிலும் உள்ள நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றிய ஆராய்ச்சிகளை எலிகளைக் கொண்டு செய்துவருகிறார்கள். எலிகளில் காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் மூன்றில் ஒருபங்காக குறைவது எதனால் என்பதற்கான விடை இப்போதுகிடைத்திருக்கிறது.காரட்களை சேமிக்கும்போது வேர்ப்பகுதிகளில் கறுப்பு நிற புள்ளிகள் தோன்றி அழுகல் தொடங்கி விடுகிறது. இந்த நோய்க்கு ... Read More »
தொட்டாற்சுருங்கி..!
April 3, 2016
காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்டு தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி. ‘நமஸ்காரி’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி ... Read More »
புத்தகம்!!!
April 3, 2016
தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சி-யாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் ஜவஹர்லால்நேரு ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல். மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றாராம் தந்தை பெரியார். ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் ... Read More »
தற்பெருமை அழிவைத்தரும்!!!
April 3, 2016
* மருத்துவர்கள் நோயாளிகளிடம் ‘எனக்கு வியாதியே இல்லை’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கும்படி அறிவுரை கூறுகின்றனர். நோயாளிகள் அப்படிச் சொல்வதனால் வியாதிகள் அகலுவதற்கான சாதகமான நிலை உண்டாகிறது. அதுபோல, இவ்வுலகில் நீ தாழ்ந்தவன் என்று எண்ணிக் கொண்டால், சீக்கிரத்தில் தாழ்ந்தவனாகவே ஆகிவிடுவாய். அளவிட முடியாத அளவிற்குத் திறமை உன்னிடம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டால், அவ்வாறே திறமைகள் மிகுந்தவனாய் ஆகிவிடுவாய். * கல்லானது தண்ணீருக்குள் வருடக்கணக்கில் கிடந்தாலும் அதனுள் தண்ணீர் நுழையாது. ஆனால், களிமண் தண்ணீருக்குள் ... Read More »
மீண்டும் வெளிநாட்டுப் பயணம்
April 2, 2016
தந்தையின் மரணத்திற்குப் பின்னர் சுபாஷ் மீண்டும் வியன்னா பயணமானார். வியன்னாவில் நடைபெற்ற இந்திய மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டு சுபாஷ் சிறப்புரை ஆற்றினார். பின்னர் ரோம் நகரில் நடைபெற்ற ஆசிய மாணவர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் சுபாஷ். அப்போது அந்நிகழ்ச்சியில் தலைமை தாங்கிய முசோலினியை சந்தித்துப் பேசினார். இந்திய சுதந்திரப் போரைப்பற்றி இருவரும் கலந்தாலோசித்தார்கள். ரோம் நகரிலிருந்து யூகோஸ்லாவியா நாட்டிற்குச் சென்று அங்கு சிலகாலம் தங்கினார். 1935 ல் சுபாஷ் ஜெர்மனி நாட்டிற்குச் ... Read More »
மேயர் சுபாஷ்!!!!
April 2, 2016
சுபாஷ் சிறைக்குள் இருந்த சமயத்தில் கல்கத்தா நகர மாநகராட்சிக்கு மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. சிறைக்குள் சுபாஷ் தாக்கப்பட்ட விஷயம் அறிந்த வங்காள மக்கள் பிரிட்டிஷ் அரசின் மீது கடும்கோபத்தில் இருந்தார்கள். அரசை பழிவாங்கக் காத்திருந்த மக்களுக்கு இந்த மேயர் தேர்தல் நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. சிறைக்குள் இருந்த சுபாஷை கல்கத்தா நகர மேயராக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். எனவே சிறைக்குள் இருந்த சுபாஷ் சார்பாக மக்களே ஒரு மனுவை சுபாஷ் சார்பில் தாக்கல் செய்தார்கள். தேர்தல் ... Read More »
முல்லா நசுருதீன்
April 2, 2016
முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார். முல்லாவின் காதருகே சென்று ஏதோ சவால் விட்டார். முல்லா கலகல என்று சிரித்து விட்டு “ஆஹா… வெகு சுலபம்… கொஞ்ச நேரத்தில் சொல்லுகிறேனே… பொறுங்கள்” என்றார். பிறகு அருகிலிருந்த சிலரைப் பார்த்து…” உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள் சில எனக்குத் தோன்றி உள்ளன. அவற்றை இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து ... Read More »
நினைவாற்றலைத் தரும் மாம்பழம்!!!!
April 2, 2016
குளிர் முடிந்து கோடை வெயில் வரப்போகிறது. தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றன அதிக அளவில் விற்பனைக்கு வரும் என்றாலும், பார்த்தவுடன் தன் நிறத்தால் நம்மை ஈர்த்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் ஆற்றல் மாம்பழத்திற்கு உண்டு. முக்கனிகளில் முதலிடத்தையும் பழங்களின் ராஜா என்ற சிறப்பையும் பெற்ற மாம்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. Mangisera Indica என்பது மாம்பழத்தின் தாவரவியல் பெயராகும். இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையினையுடையது. மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் ... Read More »
வெற்றிலை பயன்–சித்த மருத்துவம்:-
April 2, 2016
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர்தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். வயிற்றுவலி: இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி ... Read More »