தீக்காய தழும்புகளை இயற்க்கை முறையில் இலகுவாக நீக்குவது எப்படி? உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது, இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள். அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள். ... Read More »
துளசி : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!!!
May 29, 2016
துளசி ஒரு குத்துச்செடி. இதில் வெள்ளை துளசி மற்றும் கருந்துளசி என்ற இரு வகைகள் உண்டு. துளசியில் இருமலை குணப்படுத்தும் யூஜினல் மற்றும் சில வேதி பொருட்கள் உள்ளன. காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை உள்ளிழுத்து அதிக பிராணவாயுவை வெளியிடுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இதன் இலை, காம்பு என முழுச்செடியும் மருந்தாக பயன்படுகிறது. எய்ட்ஸ் நோயை அழிக்கும் அளவிற்கு இதற்கு சக்தி இருக்கிறது என நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட மனநல நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் ... Read More »
கோவைக்காய்!!!
May 29, 2016
கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இரத்தம் சுத்தமடைய: காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான ... Read More »
எலுமிச்சையின் பயன்கள்!!!
May 29, 2016
எலுமிச்சையில் செடி எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகை உண்டு. பயன்கள்: வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து கொண்டுள்ள எலுமிச்சை பல்வேறு பலன்களை தருகிறது. தேள்கொட்டினால், அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும். நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், தகுந்த ... Read More »
யாரும் அழித்துவிட முடியாது!!!
May 29, 2016
ஒருநாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார். அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும், அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும் நன்றாகத் தெரியும். அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு ” முல்லா அவர்களே உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மைதானா?” என்று கேட்டான். ... Read More »
தங்கப் பறவை!!!
May 29, 2016
ஒரு ஊரின் அருகே பெரிய காடு ஒன்று இருந்தது.அந்தக் காட்டில் பலவித மரங்கள் நன்கு செழித்து வளர்ந்திருந்தன. அந்த மரங்களை நாடி பலவிதமான பறவைகளும் வந்து மகிழ்ச்சியோடு தங்கிச் செல்லும். இவற்றை வேட்டையாட வேட்டைக்காரர்களும் வருவார்கள். ஒருநாள் இந்தக் காட்டுக்கு ஒரு வேட்டைக்காரன் வந்தான். வெகுநேரமாகியும் அவனுக்கு எந்தப் பறவையோ விலங்கோ அகப்படவே இல்லை.மிகவும் களைத்துப்போனவன் ஒரு மரத்தடியில் சற்றே ஓய்வெடுக்கலாம் என அமர்ந்திருந்தான். திடீரென இனிமையான குரல் கேட்டது.அந்த மனிதன் சுற்றிச் சுற்றிப் பார்த்தான்.சற்றே தலையைத் ... Read More »
திருட்டு வெளிப்பட்டது!!!
May 28, 2016
மறுநாள் சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செதி கேட்டு அந்தக் கிழவி பரபரப்படைந்தாள். சமூகத்தில் மிக செல்வாக்குடைய குல்ஷா என்ற பணக்கார பிரபுவின் முகத்திரையைக் கிழிக்க அவள் துடித்தாள். ஆனால், தான் அந்தப் பிரபுக்கெதிராக கூறப்போகும் புகாரை அக்பர் நம்புவாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. எதற்கும் அவரை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தாள். மறுநாள் கிழவி தயங்காமல் தர்பாருக்கே சென்று விட்டாள். வாயிற்காவலர்கள் அவளைத் தடுத்தி நிறுத்தி ... Read More »
நன்மை மட்டுமே கிடைக்கும்!!!
May 28, 2016
நன்மை செய்தால் நன்மை மட்டுமே கிடைக்கும்! மகாபாரத்தில் கூறப்பட்ட ஓர் அழகான கதை இது. கவுதமன் என்பவன் நற்குலத்தில் தோன்றியவன். ஆனால் அவனுக்கு நண்பர்கள் சேர்க்கை சரியில்லை. எனவே அவனிடம் நல்ல குணம் என்பதே கிடையாது. ஆனால் அவனது காலத்தில் ராஜதர்மன் என்ற ஒரு கொக்கு வாழ்ந்து வந்தது. தேவர்களும் போற்றும் நற்குணங்கள் நிறைந்து, பறவைக் குலத்தையே பெருமைப்படுத்திய கொக்கு அது. அதே சமகாலத்தில் விரூபாட்சன் என்ற ஓர் அரக்கனும் வாழ்ந்து வந்தான். அவன் பிறந்ததோ அரக்கர் ... Read More »
அக்பரின் நந்தவனம்!!!
May 28, 2016
ஒருநாள் காலையில் அக்பர் தன் அரண்மனை உப்பரிகையில் உலவிக் கொண்டிருக்கையில், அவர் பார்வை நந்தவனத்தின் மீது சென்றது. அது வசந்த காலம் என்பதால் மரங்களும், செடிகளும் வண்ண மலர்களுடன் பூத்துக் குலுங்க, அவற்றிலிருந்து வீசிய நிறுமணம் மனத்தைக் கிறங்கச் செய்தது. இளங்காலையில் வீசிய தென்றல் அவர் உடலை இதமாக வருடிச் செல்ல, அவர் காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தார். இவ்வாறு தன்னை மறந்த நலையில் உலவிக் கொண்டிருந்த அக்பர், நந்தவனத்தில் நடந்து செல்லும் வழியில் கல் ஒன்று ... Read More »
அந்தணர் வீட்டு கிணறு!!!
May 28, 2016
பத்ரிகாசிரமம் என்னும் திருத்தலத்தில் அந்தணர் ஒருவர் வசித்தார். தினமும் மக்களிடம் பிட்சை ஏற்று உண்டு வந்தார். எல்லா உயிர்களையும் நேசிக்கும் குணம் கொண்டவர். நாளைக்குப் பாடு நாராயணன் பாடு என்ற அளவில் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. தனது குடிசை வாசலில் இருபுறமும் பெரிய தொட்டி வைத்து அதில் தண்ணீர் நிரப்பி வைப்பது அவரது வழக்கம். பறவை, விலங்குகள் தாகம் தணிய நீர் அருந்திச் செல்லும். வழிப்போக்கர்களும் அவர் வீட்டில் தண்ணீர் அருந்தி இளைப்பாறிச் செல்வர். தண்ணீர் தானத்தால், ... Read More »