மூலிகை மருந்து: வெந்தயம் :- சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. * ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம் * வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ... Read More »
பெருமாள் தரிசனம்!!!
June 6, 2016
‘அப்பா, சொன்னா கேளுங்க. உங்களுக்கே உடம்பு முடியாம இருக்கு. திருப்பதி வரைக்கும் பயணம் வந்து அவஸ்தை படணுமா? பேசாம நீங்க வீட்டோட இருங்க. நாங்க மட்டும் திருப்பதி போயிட்டு வர்றோம்.’ பெரியவர் ராமானுஜத்திடம் அவர் மகன் பார்த்தசாரதி நிர்தாட்சண்யமாய் சொல்லி விட்டான். அவர் மருமகள் நிர்மலா, ‘இங்கேருந்தே மனசுக்குள்ளே ஏழுமலையானை நெனச்சி கும்பிட்டுக்கங்க மாமா,’ என்று சொல்லி கடுப்பேற்றினாள். அவர்கள் திருப்பதி செல்ல சாமான்களை பேக் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பேரன் வெங்கிட்டும் பேத்தி சௌம்யாவும் ராமானுஜத்தை ... Read More »
வேப்ப மரம்!!!
June 6, 2016
வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று: வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது.இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாகளைக் கொல்லும் சக்தியை உடையது.வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை.நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும்.இதனால் தான் மன நல ... Read More »
மா மரபூக்களின் மருத்துவ குணங்கள்!!!
June 6, 2016
மா மரபூக்களின் மருத்துவ குணங்கள்:- முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம். தொண்டை வலி குணமடையும் தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். ... Read More »
சில காய்கறிகளின் பயன்களும், பக்கவிளைவுகளும்
June 6, 2016
சில காய்கறிகளின் பயன்களும், பக்கவிளைவுகளும்–காய்கறிகளின் மருத்துவ குணங்களும் :- வாழைக்காய் என்ன இருக்கு:- கொழுப்புச் சத்து, விட்டமின் இ. யாருக்கு நல்லது:- வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும் யாருக்கு வேண்டாம்:- வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது பலன்கள்:- உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும். வெள்ளரிக்காய் என்ன இருக்கு:- விட்டமின் ஏ, பொட்டாசியம் யாருக்கு நல்லது:- சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும் யாருக்கு ... Read More »
இளமையை தக்கவைக்கும் தூதுவளைப் பூக்கள்!!!
June 6, 2016
இளமையை தக்கவைக்கும் தூதுவளைப் பூக்கள்:- தூதுவளை செடியைப் போல தூதுவளை பூக்களும் உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணம் கொண்டதாகும். சித்தமருத்துவத்தில் தூதுவளையின் பங்கு முக்கியமானது. இது காயகல்ப மருந்து என்று அழைக்கப்படுகிறது. இளமையை தக்க வைக்க வயதானலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தூதுவளைப் பூக்கள் வரப்பிரசாதமாகும். தினம் இரண்டு பூக்களை எடுத்து மென்று தின்று வர உடல் பளபளப்பாக மாறும். என்றும் இளமை நீடிக்கும். தூதுவளைப் பூக்களை 15 எடுத்து 200 மில்லி ... Read More »
நாளைய உணவு!!!
June 5, 2016
சில வெள்ளாடுகளும், செம்ம்றி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேயந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, “என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதிர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும்” என்றது. அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, ... Read More »
முன்னோர்கள் உட்கொண்ட உணவு!!!
June 5, 2016
நம் முன்னோர்கள் உட்கொண்ட சத்தான உணவு பழக்க வழக்கங்கள் மாறி தற்போது அவசர காலத்திற்கேற்ப அதிகளவில் துரித உணவை நாடி சென்ற மக்கள், தற்போது மீண்டும் பின்நோக்கி பார்க்க துவங்கியுள்ளனர். இதன் விளைவு, பண்டை காலம் தொட்டு நம் முன்னோர்கள் உணவாக உட்கொண்ட வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம், ராகி, வரகு ஆகிய பாரம்பரிய தானியங்கள் மீது இன்று மக்களின் கவனம் சிறிது சிறிதாக திரும்ப துவங்கியுள்ளது. நெற்பயிர் வந்த போதும் கூட சிவப்பு ... Read More »
தண்டனை எப்போதும் உண்டு!!!
June 5, 2016
பூனைக்கு ஒரே சந்தோஷம். குரங்கு அதற்கு நண்பனாகக் கிடைத்ததால், அது தனக்குத் தெரிந்த எல்லாரிடமும் போய் பெருமையடித்துக் கொண்டது. குரங்கு மரத்தில் குதிப்பது, குட்டிக் கரணம் போடுவது, இரண்டு கால்களால் நிற்பது, நடப்பது இவற்றையெல்லாம் அழகாகக் கூறி ஆனந்தம் அடைந்தது பூனை. “”ஒரு நாள் என் வீட்டிற்கு நீங்கள் வர வேண்டும்,” என்று ஆசையாகக் குரங்கைக் கூப்பிட்டது பூனை . “”உன் வீட்டிற்கு வந்தால் உன் எஜமானி என்னை அடித்து விரட்டுவாள்,” என்று குரங்கு பயத்துடன் கூறியது. ... Read More »
பிடிவாதம்!!!
June 5, 2016
ரேவதி நன்றாகப் படிக்கும் மாணவி, பிறர் தன்னிடம் ஒப்படைக்கும் வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமைசாலி சிறுமி, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள். ஆனால் ரேவதியின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. ரேவதியின் அம்மா, அப்பாவிற்கு அவளது பிடிவாதம் பெரிய தலைவலியாக இருந்தது. உடை, பொம்மை, பரிசுப் பொருள் எது கேட்டாலும் உடனே வாங்கி தரவேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள். நாளைய தினம் ரேவதியின் பிறந்தநாள். ... Read More »