குகை நமசிவாயர் திருவண்ணாமலை மீதிருந்து இறங்கும்போது வருவது குகை நமசிவாயர் கோயில். குகையிலேயே வாழ்ந்து, அங்கேயே சிவலிங்கமாக மாறியதால் இம்மகானுக்கு குகை நமசிவாயர் என்ற பெயர் ஏற்பட்டது. இவரது காலம் சரிவர தெரியவில்லை. இவர் ஸ்ரீ சைலத்திலிருந்து தெற்கே வந்த கன்னட தேச வீர சைவர். சிவத்தலங்களை தரிசிப்பதற்காக தனது குருவிடம் உத்தரவு பெற்று தமிழ்நாட்டில் யாத்திரை செய்தபோது அவர் திருவண்ணாமலை தலத்துக்கு வந்தார். அண்ணாமலையார் அவருக்கு குருவாகவே தரிசனம் அளித்து, தம்மைப்பற்றி தோத்திரப்பாடல்கள் இயற்றுமாறு கட்டளை இட்டார். ... Read More »
உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டியது!!!
June 21, 2016
உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் ... Read More »
வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்!!!
June 21, 2016
வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்… 1. பணிவு ஒரு துறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் நாலு விசயங்களைப் பழகியவுடன் கர்வம் அவர்களுடைய தலைக்கு மேல் ஏறிக் கொள்கிறது. என்னைப் போல் யார்? என்று நினைக்கிறார்கள். இதுதான் அவர்களின் சரிவுக்கான முதல் படி. முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை. இதற்குப் பதிலாகத் துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு அது துணை நிற்கும். 2. கருணை உங்களைச் சுற்றியுள்ளவர்கள் துயரத்தை அனுபவிக்கும் போது, அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள். உங்களுக்குப் பிரச்சனை என்று ... Read More »
திருவண்ணாமலையே கதி!!!
June 20, 2016
அண்ணாமலையே கதி : சேஷாத்திரி சுவாமிகள் திருவண்ணாமலையை வந்தடைந்த சேஷாத்திரி சுவாமிகள் அதன்பின் அங்கிருந்து எங்கும் செல்லவில்லை. அங்கேயே பல இடங்களில் பித்தனைப்போல சுற்றிக்கொண்டிருந்தார். அழுக்கு வேட்டி.சவரம் செய்யப்படாத முகம். கிடைத்ததை சாப்பிடுவார். சாப்பிடாமலும் இருப்பார். யாராவது புதிய வேட்டி கட்டி விட்டால், அடுத்த ஒரு மணியில் அது கந்தயாகி விட்டிருக்கும். குளக்கரை, குப்பைமேடு, எதோ ஒரு வீட்டின் திண்ணை, இப்படி எங்கு வேண்டுமானாலும் படுப்பார். பெரும்பாலும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கம்பத்து இளையனார் கோயிலில் ... Read More »
பித்தராக திரிந்த சித்தர்!!!
June 20, 2016
பித்தராக திரிந்த சித்தர்: சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவாவூரில் பிறந்தால் முக்தி,காசியில் இறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அகங்காரத்தை அழித்துவிட்டால் நம்முள்ளே ஆன்ம ஒலி பிரகாசிக்கும் என்ற தத்துவத்திற்கு விளக்கமாக ஓங்கி நிற்கிறது அண்ணாமலை எனும் ஞான மலை. இப்புனித மண்ணில் நடமாடிய சித்தர்கள், ஞானிகள் தான் எத்தனை எத்தனை! சிலர் மோன தவத்தில் முழ்கியிருப்பர், சிலர் பித்தரைப்போல அலைந்து திரிவர். இவர்களின் நடவடிக்கைகள்தான் வேறு. அவர்தம் ஞான செல்வம் ஒன்றேதான். ... Read More »
பிரதோஷ விரதமிருத்தல்!!!
June 20, 2016
பிரதோஷ விரதமிருத்தல் பிரதோஷம் என்றால் என்ன? பிரதோஷ காலம் என்பது – வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரு காலங்களிலும், `திரயோதசி திதி’ வருகிறது அல்லவா! இவை சனிக்கிழமைகளில் வருமாயின் சனி பிரதோஷம் என்பர். இது, கிருஷ்ணபக்ஷ திரியோதசி எனின் மகாப்பிரதோஷம் என வழங்கப்படும். இனி பிரதோஷ மகிமை என்ன என அறிவோம். பிரதோஷ காலம் பரமேஸ்வரனை வழிபட உகந்த காலம் ஆகும். `திருப்பாற்கடலில் பொங்கி வந்த ஆலகால விஷத்தை அமரர்களுக்கும் அடியார்களுக்கும் எவ்வித தோஷமும் ஏற்படா வண்ணம் ... Read More »
பிரதோஷ வழிபாடு!!!
June 20, 2016
பிரதோச வழிபாட்டினைக் கடைப்பிடித்து சகல நலனும் பெறுவோமாக பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ... Read More »
நிம்மதியாக இருக்க!!!
June 20, 2016
நிம்மதியாக இருக்க முடியவில்லையா? பலருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. வாழ்க்கையில் நிம்மதி என்பது எங்கே இருக்கிறது. நம்மால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லையே என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பதுண்டு. மனதில் எழும் இந்த ஆதங்கம் சாதாரண ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் இதற்கு விதிவிலக்கல்ல. இதே எண்ணம் தொடருமானால் வாழ்வில் விரக்தியும், சலிப்புமே மிஞ்சும். ‘எதுவாக இருந்தாலும் வாழ்க்கையை நேசித்து வாழ்ந்து விடு’ என்றான் ஒரு தத்துவ ஞானி. வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்? இதற்கான விடையை ... Read More »
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்!!!
June 19, 2016
மகான்கள் வாழ்வில் பொதுவாக மகான்கள் செய்யும் காரியங்கள் பலவற்றிற்கும் நமக்கு முதலில் அர்த்தம் புரியாது. பைத்தியக்காரத்தனமாகத் தான் அது நமக்குத் தோன்றும். ஆனால் பின்னர் உண்மை புலப்படும். அவ்வாறு பற்பல அற்புதங்கள் புரிந்து பக்தர்களின் கர்ம வினையைத் தாம் ஏற்று, அவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்த மகான்களுள் மிக முக்கியமானவர் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். ‘தங்கக்கைச் சாமி’ என்றும் ‘கிறுக்குச் சாமி’ என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டவர். பலரது வாழ்க்கை உயர்விற்குக் காரணமாக அமைந்தவர். ஞானத் ... Read More »
அறிவுக்கு விருந்தாகும் அறிவுரைகள்!!!
June 19, 2016
அறிவுக்கு விருந்தாகும் சில அறிவுரைகள் 1. உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டம் மனதை வலிமையாக்கும் -செனகா. 2. கடினமான உழைப்பே சிறந்த அதிர்ஷ்டமாகும் -டெம்பஸ் 3. நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்காது. 4. திறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சன் 5. பசியுடையவனின் புன்னகை, செயற்கையாயிருக்கும். 6. பெரிய பெரிய சாதனைகளனைத்தும் செய்து முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தினால்தான் -மேலை நாட்டறிஞர் 7. மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை -லாவோட் ஸே 8. அறிவாளி, ஒருபோதும் ... Read More »