ஒரு துறவிகிட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் வந்தார்.. நல்ல தெய்வ பக்தி,அறிவாளி. ஆனா அவருக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அதாவது இந்த பூமியில பிறந்துட்டோம். ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு போகத்தான் போறோம். அப்படி இருக்கும்போது ஏன் நாம நல்லது மட்டும் தான் செய்யணும். கெட்டது செஞ்சா, அடுத்தபிறவியில அனுபவிக்கணும். அதாவது கர்மாவிடாதுன்னு எல்லா பெரியவங்களும் சொல்றாங்க. ஆனா எனக்கு அதுல உடன்பாடு இல்லை. எல்லாம் சுத்த பொய். அது எப்படி நாம செத்துபோய்ட்டா கர்மா நம்ம கூடவே வருதும்னு அவருக்கு சந்தேகம். அவருடைய சந்தேகத்தை துறவிகிட்ட சொன்னார்..துறவி கேட்டார். உனக்கு ... Read More »
ராஜா மோதிரம்!!!
July 2, 2016
அவந்தி புரத்து ராஜா அனந்த வர்மா ஒரு நாள் ஆத்துல மந்திரிகளோட சேர்ந்து குளிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்ப அவரு விரல்ல இருந்த ராஜாவோட முத்திரை மோதிரம் நழுவி ஆத்துக்குள்ள விழுந்துருச்சு. குளிச்சு கரையேறுன பின்னாடிதான் தெரிஞ்சது ராஜாவுக்கு தன்னோட முத்திரை மோதிரம் காணாம போன விஷயம். ஆத்துக்குள்ளதான் விழுந்திருக்கும்னு சொல்லி சேவகர்களை ஆத்துல மூழ்கித் தேடச்சொன்னாரு. அவங்களும் ஆத்துல மூழ்கி பல மணி நேரம் தேடிப்பார்த்தும் மோதிரம்கிடைக்கவே இல்லை. ராஜா உங்க மோதிரம் கிடைக்கவே இல்லை! மணலுக்குள்ள ... Read More »
திகைக்க வைக்கும் மரம்!!!
July 1, 2016
வீடு வீடாக பிச்சை கேட்டு வரும் சாமியார்கள், கோயில்களுக்கு முன்பு அமர்ந்திருக்கும் சாமியார்களை பார்த்திருப்போம். அவர்களின் கைகளில் கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டி கொடுத்தது போன்று ஒரு பாத்திரம் இருக்கும். அரிசியோ, பணமோ அதில்தான் வாங்கிக் கொள்வார்கள். அதை திருவோடு, அட்சய பாத்திரம், கபாலம் என்ற பெயர்களில் அழைப்பார்கள். இந்து மத துறவிகள் உடுப்புக்கு அடுத்து கொடுக்கும் முக்கியத்துவம் திருவோட்டுக்கே. சரி… இந்த திருவோடு எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது? எந்த நாட்டைச் சேர்ந்தது ... Read More »
மனஅழுத்ததை போக்கும் வழிகள்!!!
July 1, 2016
மனஅழுத்ததை(டென்ஷன்) போக்கும் 6 சிறந்த வழிகள் இன்றைய சுறுசுறுப்பான வேலை பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தம் என்னும் தவிர்க்க இயலாத ஒரு அங்கமாகவே மாறித்தான் போய்விட்டது. நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த, மனதை அழுத்தத்தில் இருந்து வேறு ஏதாவது சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் செய்யும் செயல்கள் நமக்கு பிடித்த விடயமாக மட்டுமில்லாமல் அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அது சிறிது நேரத்திற்கு மட்டுமே உண்டான செயலானாலும் ... Read More »
பட்டினத்தார்!!!
July 1, 2016
முற்றும் துறந்த துறவி பட்டினத்தார் வரலாறு:- காவிரிப் பூம்பட்டினம் வணிகர்கள் நிறைந்த நகரம். பிற்காலச் சோழர்கள் காலத்தில் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் சிவநேசர் என்னும் வணிகர் ஞானகலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். திருவெண்காட்டு ஈசனிடம் மிகுந்த பக்தி செலுத்திய அந்த வணிகருக்குப் பிள்ளை பிறந்த போது திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமான் என்ற பெயரையே வைத்தார். திருவெண்காடர் எனவும் அழைக்கப்பட்டார். சிவநேசர் வணிகர்களிலேயே பெரு வணிகர் என்பதோடு பெரும்பொருளும் திரட்டி ... Read More »
கல்பனா சாவ்லா!!!
July 1, 2016
ஜூலை 1: கல்பனா சாவ்லா – விண்ணைத்தொட்ட தேவதை பிறந்த தின சிறப்பு பகிர்வு அப்பா பிரிவினைக்கு முந்திய இந்தியாவில் இருந்து வந்திருந்தார் ; பாகிஸ்தானில் இருந்து அகதியாக எல்லாவற்றையும் அங்கே விட்டுவிட்டு கொஞ்சம் காசு,ஏகத்துக்கும் நம்பிக்கை என்று சாதித்து காட்டியவர் அவர். அவரின் கரம்பிடித்து நடைபயின்ற குழந்தை என்பதால் கொஞ்சம் கல்பனாவுக்கு அடம் அதிகம். நான்கு பிள்ளைகள் இருந்த வீட்டில் கடைக்குட்டி என்பதால் இன்னமும் செல்லம் தூக்கல். எல்லா குழந்தைகளும் வெளியே விளையாடிக்கொண்டு இருக்கும் பொழுது ... Read More »
பாரதத்தின் பெருமை!!!
June 30, 2016
நம் அன்னைபூமியின் தொன்மையையும் உயர்வையும் எத்தனையோ பாடல்களும், உரை நடைகளும் எடுத்துரைத்துள்ளன. இந்த தேசத்தின் பெருமை அதன் வீரமும் ஞானமும் மிக்க வரலாறு மட்டுமல்ல, அதன் மைந்தர்களாகிய நம்முடைய உயரிய சிந்தனைகளும், பேணி வளர்த்த கலாச்சாரமும்தான். உண்மையில் இன்றைக்கு நம் பாரத மாதா தளர்வுற்று இருக்கிறாள். ஏனென்றால், நம்முடைய தேசத்தின் வலி மிகுந்த வரலாறும், பெருமை மிக்க ஆக்கங்களும் இன்றைய இளையவர்களுக்கு தெரிய வைக்கப்படவில்லை. சுதந்திர தினம் ஞாயிற்றுக் கிழமையில் வரவில்லை என்ற மகிழ்ச்சிதான் மிகுந்து வருகிறது. ... Read More »
யாருடன் நட்புறவு கொள்ள வேண்டும்!!!
June 30, 2016
யாருடன் நட்புறவு கொள்ள வேண்டும்:- காட்டிலே ஒரு வேடன் மாலை வேளையில் வலை விரித்துச் செல்வான். இரவு அதிலே சிக்கும் விலங்கினை தன் வேட்டைப் பொருளாக மறுநாள் காலையிலே எடுத்துச் செல்வான் அப்படி அவன் ஒரு நாள் விரித்த வலையில் ஒரு பூனை சிக்கியது. காலையிலே அந்தப் பக்கம் வந்த எலி ஒன்று பூனை வலையிலே சிக்கியிருப்பதை பார்த்து ஆனந்தம் கொண்டது. “அப்பாடா பூனை சிக்கிச்சி. வேடன் வந்து இந்தப் பூனையைக் கொண்டு செல்வான். நாம இனிமே ... Read More »
பிசினஸ் தந்திரம்!!!
June 30, 2016
பிசினஸ் தந்திரம் இளைஞன் ஒருவன் நிறைய கோழி முட்டைகளை ஒரு மூன்று சக்கர வண்டியில் வைத்து மக்கள் கூட்டம் மிகுதியாக உள்ள கடைத்தெரு வழியே சென்று கொண்டிருந்தான். ஒரு திருப்பத்தில் எதிர் பாராதவிதமாக வண்டி கவிழ்ந்து விட்டது. முட்டைகள் அனைத்தும்உடைந்து சிதறி விட்டன. இளைஞன் அழ ஆரம்பித்து விட்டான், ”ஐயோ, என்முதலாளிக்கு என்ன பதில் சொல்வேன்? இவ்வளவு முட்டைக்குரிய காசுக்கு நான் என்ன செய்வேன்?” அங்கே பெரும் கூட்டம் கூடிவிட்டது. எல்லோருக்கும் அழுது கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து பரிதாபம் ஏற்பட்டது. அப்போது அங்கே வந்த ஒரு பெரியவர், ”தம்பி, ஏன் அழுகிறாய்? ... Read More »
இயற்கை வைத்தியம்-1
June 30, 2016
அஜீரணசக்திக்கு அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும். அம்மைநோய் தடுக்க! அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம். அறுகம் புல் இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து ... Read More »