கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்:- ஆசை!!! வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கயிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்ய என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது. ஆசை எந்தக் ... Read More »
ஆசை அழித்து விடும்!!!
July 9, 2016
ஆசை அழித்து விடும்! முனிவர் ஒருவரின் தவத்தை மெச்சி கடவுள் அவருக்கு காட்சி கொடுத்து, “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். “தங்கள் தரிசனமே எனது தவத்தின் நோக்கம்; வேறெதுவும் வேண்டாம்” என்றார் அந்த முனிவர். கடவுள், “நான் உனக்கு ஒரு விருஷத்தை வரமாக தருகிறேன். கற்பக விருஷம் மாதிரி. இதனிடம் கேட்கக் கூட வேண்டாம். அதனடியில் நின்று கொண்டு யார் என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று அருளினார் . இந்த மரத்தை வைத்துக் ... Read More »
கம்பர்!!!
July 9, 2016
கம்பர்:- கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர், ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும் பெற்று, அவரது சமகாலத்துப் புலவர்களான ஓட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். ... Read More »
ரவீந்திரநாத் தாகூர்!!!
July 9, 2016
ரவீந்திரநாத் தாகூர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் ஒரு கல்வியாளரும் கூட. 1913ல், அவரது கவிதைத் தொகுப்பான ‘கீதாஞ்சலி’ என்ற படைப்புக்காக, நோபல் பரிசு வென்று,ஆசியாவின் முதல் நோபல் பரிசுக்கான வெற்றி வாகை சூட்டப்பட்டவர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றவர். ஆங்கிலேய அரசரான கிங் ஜார்ஜ்.V அவர்களால் ‘வீரத்திருமகன்’ என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், பிரபலமாக ... Read More »
ராஜா ராம் மோகன் ராய்!!!
July 9, 2016
ராஜா ராம் மோகன் ராய்:- ‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார். அவர், முதல் இந்திய சமூக சமய சீர்திருத்த இயக்கமான ‘பிரம்ம சமாஜத்தை’ நிறுவியவர் ஆவார். நாட்டில் “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகித்தார். ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், ஒரு பெரும் கல்வியாளராகவும், சுயாதீன ... Read More »
சுபாஷ் சந்திர போஸ்!!!
July 9, 2016
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை ... Read More »
நேரத்தை வீணடிக்காதீர்கள்!!!
July 8, 2016
அந்த செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன், எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான். செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான். எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான். “யார் நீ? உனக்கென்ன வேண்டும்?” “நான் எமதர்மராஜனின் ஏவலாள். இன்றோடு, இத்தோடு உன் ஆயுள் முடிகிறது. புறப்படு என்னோடு!” “நான் சாவதற்கு தயாராக இல்லை. எனக்கு இன்னும் கடமைகள் பல பாக்கியிருக்கிறது. நீ போய்விட்டு ... Read More »
சீதையின் கூறிய கதை!!!
July 8, 2016
சீதையின் பொறுமை:- இலங்கை அசோகவனத்தில் ராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையைக் கண்டு ராமன் அனுப்பிய செய்தியை அனுமன் சொன்னான். பின்னர், அங்கிருந்த அரக்கியர் கூட்டத்தைக் குறிப்பிட்டு, தேவி, உன்னைப் பயமுறுத்திய இவ்வரக்கியரை நான் கொல்ல நீ அனுமதிக்க வேண்டும். இவர்கள் கொடுமையே உருவானவர்கள்.இராவணனுடைய ஆணையால் மட்டுமல்ல; இவர்களுக்கு இயற்கையாக உள்ள கொடுமைக்குணம் உன்னைத் துன்புறுத்த இவர்களைத் தூண்டியது. இவர்களைத் தண்டிக்க வேண்டும். காது, மூக்கை, அறுக்க கீழே வீழ்த்தி உதைக்க வேண்டும் எனக்கு அனுமதி தா! என்றான். அனுமனின் ... Read More »
எதை நாம் செய்கிறோம்!!!
July 8, 2016
ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர்கவணித்தார். வாகணங்கள் செல்லும்போது அந்தபெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை. அந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார். என் பெயர் தயாளன் நீங்கள் காரில் உட்காருங்கள் நான் டயர் மாத்தி கொடுக்கிறேன் என்று டயரை கழட்ட ஆரம்பித்தார்.சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு ... Read More »
கீதை சொல்லும் பாதை!!!
July 8, 2016
கீதை சொல்லும் பாதை! ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம். அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம், நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால், ... Read More »