வ.வே.சு.ஐயர் (பிறப்பு: 1881, ஏப். 2- மறைவு: 1925, ஜூன் 4) திருச்சி நகரத்தில் ஒரு பகுதி வரகநேரி. இங்கு கல்வி இலாகாவில் பணிபுரிந்து கொண்டிருந்த வேங்கடேச அய்யர் என்பவருக்கும் காமாட்சி அம்மாளுக்கும் 1881, ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி பிறந்தவர் வ.வே.சுப்பிரமணியம் என்கிற வ.வே.சு.ஐயர். திருச்சியில் இவரது ஆரம்பக் கல்வி. தனது 12-ஆவது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். பிறகு திருச்சி தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். அப்போது ... Read More »
இன்றைய நகைச்சுவை!!!
April 11, 2017
நாராயணசாமி ஒரு தூக்கு தண்டனைக் கைதி. நாராயணசாமி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டார். அப்போது மாம்பழ சீசன் இல்லை. எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆறு மாதத்திற்குப்பி ன் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர். செர்ரிப் பழம் என்று பதில் வந்தது. அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு. பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது . மூன்றாவது ... Read More »
மகாத்மா காந்தியின் நிழல்
April 11, 2017
கஸ்தூரிபா காந்தி (பிறப்பு: 1869, ஏப். 11 -மறைவு: 1944, பிப். 22) தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நிழலாக வாழ்ந்தவர், அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் கஸ்தூரிபா காந்தி. கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்த பாரத மங்கையர் திலகம் அவர். குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில், வணிக குடும்பத்தில், கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869-இல் பிறந்தார் கஸ்தூரிபா. இவருக்கு 13 வயதான போது (1883) குடும்ப உறவினரான மோகன்தாஸ் கரம்சந்த் (மகாத்மா) காந்தியுடன் திருமணம் செய்து ... Read More »
எலும்புகளின் உறுதித் தன்மைக்கு… புரோட்டீன்களே அவசியமானது!
April 10, 2017
எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய சின்னச் சின்ன, ஆனால் அவசியமான விசயங்களை நாம் பார்ப்போம்…இவை அனைத்துமே நம் நலனைப் பாதுகாக்கும் முத்தான செய்திகள்தான். 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் ... Read More »
தமிழைக் காத்த தாத்தா
April 10, 2017
உ.வெ.சாமிநாத ஐயர் பிறப்பு: 1855, பிப். 19- மறைவு: 1942, ஏப். 28) தமிழ்மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா! 1855, பிப். 19-ஆம் நாள், நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில், வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், தமிழுக்கு ஆற்றிய ... Read More »
இன்றைய நகைச்சுவை!!!
April 9, 2017
விரட்டியடித்த மழையில் நண்பரின்வீட்டில் சிக்கிக்கொண்டார் நாராயணசாமி. மழை நின்றதும் கிளம்பலாம் என்ற எண்ணத்தில், நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார் நாராயணசாமி. ஆனால், நன்றாக இருட்டிய பிறகும் மழை நின்றபாடில்லை. என்ன செய்வது என நாராயணசாமி யோசித்துக்கொண்டிருக்கையில், நண்பர் சொன்னார், ” நாராயணசாமி…இந்த மழையில் நீங்கள் வீட்டுக்குப் போக முடியாது.இன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாப்பிடுங்கள்”. வேறு வழியில்லை. இவரும் ஒப்புக்கொண்டார் . நாராயணசாமிக்கும் சேர்த்து உணவு தயாரிக்க மனைவியிடம் சொல்ல வீட்டுக்குள் சென்றார் நண்பர். பின் திரும்பி வந்து பார்த்தபோது ... Read More »
உலகப் பொதுமறை கண்ட தமிழர்
April 9, 2017
திருவள்ளுவர் (குருபூஜை தினம்: மாசி – ஹஸ்தம்) (மார்ச் 8) ”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாடி மகிழ்வார் மகாகவி பாரதி. ஈரடிகளால் ஆனா குறட்பா வடிவில், 1330 பாக்களில், அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்கள் மூலமாக வீடு என்னும் உயரிய பேறினை அடைய வழிகாட்டுகிறார் திருவள்ளுவர். திருவள்ளுவர் குறித்த ஆதாரப்பூர்வமான விபரங்கள் கிடைக்கவில்லை. எனினும், சென்னை- மயிலாப்பூரில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், வைகாசி மாத அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார்; ... Read More »
உடலின் உப்பு நீரை வெளியேற்றி… வாத, பித்தம் போக்கும் புடலங்காய்!
April 8, 2017
புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில், நிச்சயம் சமைக்கப்படும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள், தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காயை நம் முன்னோர்கள் காலந்தொட்டு, நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயன் அறிந்துதான், சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு என்பதால், கிடைக்கும் போதெல்லாம் வாங்கி சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள சத்துக்கள்: உயர்நிலை புரதம், விட்டமின் ... Read More »
தற்பெருமை!!!
April 8, 2017
ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார். முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால் முல்லாவைக் காப்பாற்றியவரோ சும்மா இருக்கவில்லை. முல்லாவை எந்த இடத்தில் யாருக்கு நடுவே சந்தித்தாலும் குளத்தில் விழ இருந்த முல்லாவை நான்தான் காப்பாற்றினேன் என்று சொல்ல தொடங்கிவிட்டார். அவருடைய ... Read More »
பாரதத் தாயின் தவப்புதல்வர்
April 8, 2017
குருஜி கோல்வல்கர் (பிறப்பு: 1906, பிப். 19- மறைவு: 1973, ஜூன் 5) “தன்னை உணர்ந்திட தவம்பல புரிந்திட துறவறம் வேண்டிப் புறப்பட்டாய் தனிநபர் மோட்சம் வேண்டுமென்று தொண்டின் மூலம் இன்பம் கண்டாய்!” – என்ற ஆழமான , பொருள் பொதிந்த பாடல் ஒன்றே கணீர் என்ற குரலுடன் காற்றினில் மிதந்து வந்து என் செவிகளில் நிறைந்தது. துறவறம் வேண்டிப் புறப்பட்டு, பின் மோட்சத்தை புறந்தள்ளி, தொண்டின் மூலம் இன்பம் கண்ட அந்த அசாதாரணமான மகான் யார்? ... Read More »