விக்ரமாதித்தன் கதைகள்!!! தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேஇறங்கி, அவன் அதைத் தூக்கிக்கொண்டு செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! எந்த இலட்சியத்தை நாடி, இவ்வாறு நடு இரவில் மயானத்தில் என்னை சுமந்து கொண்டு திரிகிறாய் என்பது எனக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் அறிவில் சிறந்தவர்கள் என்று நாம் கருதும் சிலரது ஆலோசனைகள் நம்மைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லக் கூடும்! ... Read More »
காலத்தை வென்று நிற்கும் பொன்மொழிகள்!!!
August 8, 2016
சுவாமி விவேகானந்தர்: உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய். வில்லியம் ஷேக்ஸ்பியர்: வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் 1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள். 2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள் 3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள். அடால்ஃப் ஹிட்லர்: நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு ... Read More »
கற்றதை வெளிப்படுத்தினால் மகிழ்ச்சி!!!
August 8, 2016
ஒரு முறை இங்கிலாந்து போலீஸ் தீவிரவாதக் கும்பல் ஒன்றை சுற்றி வளைக்க முற்பட்டபோது தீவிரவாதிகள் தப்பித்தனர். அவர்களுடைய நாய் மட்டும் பிடிபட்டது. ஆச்சரியம் என்னவென்றால், தீவிரவாதக் கும்பல் போய் வரும் இடங்கள், ஒளிந்திருந்த இடங்கள், எல்லாமே அந்த நாய்க்கு நன்றாகத் தெரியும். வருத்தம் என்னவென்றால், அந்த தீவிரவாதக் கும்பல் பேசிய ஹீப்ரு மொழியில் கட்டளை பிறப்பித்தால்தான் அந்த நாய்க்குப் புரியும். கட்டளைக்குக் கீழ்படியும். ஹீப்ரு மொழி தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடி இதழ்களில் விளம்பரங்கள் கொடுத்தது ... Read More »
ஆறு சுவைகள்!!!
August 8, 2016
பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம். தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ... Read More »
சூரியகாந்தி விதை!!!
August 8, 2016
சூரியகாந்தி விதை:- சூரியகாந்தி விதை என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும். பழத்தையே தவறாக சூரியகாந்தி விதை என அழைத்து வருகின்றோம். காரணம், அந்தப் பழம் வித்தின் அமைப்பை ஒத்திருப்பதேயாகும். இதன் வெளிப்பகுதியில் மெல்லிய மேலோடும், உள்பகுதியில் உண்மையான வித்து அல்லது பருப்பும் (Kernal) காணப்படுகின்றது. பாதாம், முந்திரி போல பருப்பு வகைகளில் முக்கியமானது சூரியகாந்தி விதைகள். இனிப்பு சுவையுடன் உடலுக்கு அவசியமான பல்வேறு சத்துக்கள் இதில் அடங்கி உள்ளன. மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும் இதனை கொறித்து உண்கின்றன. சூரியகாந்தி விதையில் உள்ள சத்துக்களை ... Read More »
கீதாஞ்சலி கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்!!!
August 7, 2016
இரவீந்திரநாத் தாகூர் 1941-ஆம் ஆண்டில் தனது 80 ஆவது வயதில் இறந்தார். அவர் கிட்டத்தட்ட- ஆயிரமாண்டு பழமையான வங்காள இலக்கியத்தின் நாயகர்களில் ஒருவர். இந்தியா, வங்காளதேசம் என இரு நாடுகளிலும் மிக பரந்தளவில் புகழ்பெற்றவர். அவருடைய கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை மிகவும் பரந்த அளவில் உலகம் முழுவதும் வாசிக்கப்படுகின்றன. பாடல்களுக்கு அவர் அமைத்த இசை கிழக்கிந்தியாவை தாண்டி, தெற்காசியாவில் எதிரொலிலித்து, உலகம் முழுவதும் மணம் பரப்புகின்றன. தாகூரின் படைப்புகள் 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பக்கட்டத்தில் எழுதப்பட்டவை. ... Read More »
தண்ணீர்! தண்ணீர்!! தண்ணீர்!!!
August 7, 2016
ஜீரண சக்திக்கு, உடல் சூட்டை ஒரே சீராக வைக்க, ஹார்மோன் மாற்றத்திற்கு, சருமப் பொலிவுக்கு என உடலுக்கு தண்ணீர் அவசியம். சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், ஒன்றரை லிட்டர் தண்ணீர் வெளியில் போகும். இந்த நீர்ச் சத்து உடலுக்குத் தண்ணீர் மூலம் நேரடியாகவும், சாம்பார், ரசம், ஜூஸ், காய்கறிகள், பழங்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற உணவின் மூலமாகவும் உடலில் சேர்ந்துவிடும். 1. சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1,500 மில்லி அதாவது ஒன்றரை லிட்டர் தண்ணீர் ... Read More »
சாப்பிடுவதும் ஒரு கலைதான்!!!
August 7, 2016
எதை எப்படி சாப்பிடலாம்? மனிதனின் இயக்கத்துக்கு எரிபொருள், உணவு. அது வெறும் ஆற்றல் தருவது மட்டுமல்லாது, அதன் சுவை மனதுக்கு மகிழ்ச்சியை, புத்துணர்ச்சியைத் தருகிறது. சமையல் எப்படி ஒரு கலையோ… அதேபோல சாப்பிடுவதும் ஒரு கலைதான். எதை, எவ்வளவு, எப்படி, எந்தப் பொழுதில் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது என, உணவு பற்றிய ‘டூஸ் அண்ட் டோன்ட்ஸ்’-ஐ வரும் பக்கங்களில் பரிமாறியுள்ளோம். சுவையுங்கள்! வெஜிடேரியனில், நீங்கள் எந்த வகை?!!!!!!!!!!!! 1. வெஜிடேரியன்களை மூன்று விதமாகப் பிரிப்பார்கள். லாக்டோ ஓவோ ... Read More »
இரவீந்தரநாத் தாகூர்!!!
August 7, 2016
இரவீந்தரநாத் தாகூர் (வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861-ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக உள்ளது. கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) ... Read More »
கழுகு!!!
August 6, 2016
கழுகுகள் பற்றிய தகவல்கள்:- கழுகு (ஈகல்) என்பது ஒரு வலுவான பெரிய பறவையையும் அதன் இனத்தையும் குறிக்கும். கழுகுகள் அக்சிபிட்ரிடே (அக்சிபிட்றிடாஎ) என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. யூரேசியா, ஆப்பிரிக்காவில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன. இவற்ரை விட இரண்டு வகைகள் (வெண்தலைக் கழுகு, பொன்னாங் கழுகு) ஐக்கிய அமெரிக்கா, கனடாநாடுகளிலும், ஒன்பது வகைகள் நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றிலும், மூன்று வகைகள் ஆத்திரேலியாவிலும்காணப்படுகின்றன. இவைகளின் கண் பார்வை மிகவும் கூரியது. கழுகுகளில் மொத்தம் 74 ... Read More »