அபரஞ்சியிடமிருந்து தப்பித்த குருக்கள்!!!

அபரஞ்சியிடமிருந்து தப்பித்த குருக்கள்!!!

விக்கிரமாதித்தன் கதை அபரஞ்சியிடமிருந்து தப்பித்த குருக்கள் முன்னொரு காலத்தில் உச்சினி மாகாளிபுரம் என்ற ஊரைத் தலைநகரமாகக் கொண்ட ஒரு ராஜ்ஜியத்தை விக்கிரமாதித்தன் என்ற வீரதீர பராக்கிரமம் பொருந்திய ராஜா ஆண்டு கொண்டிருந்தான். அவனுக்கு மதியூகம் மிகுந்த பட்டி என்ற மகா மந்திரி துணையாக இருந்தான். அவர்கள் இருவரும் நாடாறு மாதம், காடாறு மாதம் என்று தங்கள் ஆட்சிக்காலத்தைப் பிரித்து நாட்டை ஆண்டு வந்தார்கள். இப்படி இருக்கையில் அந்த ஊரில் உள்ள ஒரு கம்மாளனுக்கும் ராஜாவிற்கும் நட்பு உண்டாயிற்று. ... Read More »

கடவுளின் குரலை சிறிது நேரம் கேட்போமே!!!

கடவுளின் குரலை சிறிது நேரம் கேட்போமே!!!

தகுதியும் திறமையும் மிக்க இளைஞன் அவன். சம்பள உயர்வும் கைநிறைய போனஸும் வந்தவுடன் அவன் செய்த முதல் வேலை, தான் நீண்ட நாட்களாக வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்ட காரை வாங்கியது தான். காரை வாங்கியதும் அதை நண்பர்களிடம் காட்ட ஒரு நாள் காரை எடுத்துக்கொண்டு தெருவில் மிக வேகமாக அவன் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் பார்க் செய்யப்பட்டிருந்த கார்களுக்கு இடையே ஒரு சிறுவன் திடீரென எட்டிப்பார்ப்பது போல தெரிந்தது சற்று வண்டியை ஸ்லோ செய்கிறான். ஆனால் அந்த பகுதியை ... Read More »

வீரபாகுவின்  நன்றி உணர்வு!!!

வீரபாகுவின் நன்றி உணர்வு!!!

விக்கிரமாதித்தன் கதை வீரபாகுவின்  நன்றி உணர்வு தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம், “மன்னா! இரவு பகலாக இவ்வாறு காட்டிலும், மேட்டிலும் நடு நிசியில் திரியும் உன்னைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது. ஆனால் நீ தேடும் பொருள் உனக்குக் கிட்டும்போது, அதைக் கை நழுவ விட்டுவிடுவாயோ என்ற சந்தேகமும் எனக்குத் ... Read More »

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை!!!

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை!!!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள்; சுப்பிரமணிய பாரதியார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவேந்தர் பாரதிதாசன் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை ஆகிய நால்வருமாவர். அவருள்; பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்; பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்; நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர். ஆயின்,கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் கவிஞர் எனக் கூறுதல் சாலப் பொருந்தும். ... Read More »

சத்ரபதி சிவாஜி!!!

சத்ரபதி சிவாஜி!!!

மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர். இராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி, பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டியப்பேரரசு விரிவடைய வித்திட்டவர். இவருடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது. மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணாமாய் விளங்கி, பிளவுபட்டு கிடந்த பகுதிகளை ஒன்றிணைத்து மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை ... Read More »

சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள்!!!

சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள்!!!

இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் 1.சிவகங்கை இராணி வேலு நாச்சியார் ஆட்சிக்காலம் கி.பி 1780- கி.பி 1783சிவகங்கை தலைநகரான காளையார்கோயிலை கிழக்கிந்திய கம்பெனியின் படை முற்றுகையிட்டபோது சிவகங்கை மன்னரின் மனைவியான வேலுநாச்சியார் வீரத்தோடு எதிர்த்ததன் மூலம் தமிழக மகளிர் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லையென்பதை நிரூபித்தார். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையும் வேலுநாச்சியாருக்கே உரித்தாகும். 2.1806-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி அதிகாலையில் வேலூர் படைவீரர்கள் புரட்சி செய்தனர்,பெண்களும் ... Read More »

ராணி லக்ஷ்மி பாய்!!!

ராணி லக்ஷ்மி பாய்!!!

ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் வீரச்செயல்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும். பிறப்பு: 19 நவம்பர் 1828 பிறந்த இடம்: வாரணாசி, இந்தியா  இறப்பு: 18 ஜூன் 1858 தொழில்: ஜான்சியின் ராணி, விடுதலைப் போராட்ட ... Read More »

சந்திரசேகர ஆசாத்!!!

சந்திரசேகர ஆசாத்!!!

சுதந்திர தினம் பல சுதந்திர போராட்ட வீரர்களின் இரத்தத்தால் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விலகி இந்தியா ஒரு தனி நாடாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றைய நாளை இந்திய மக்கள் அனைவரும் தமக்கு சுதந்திரம் கிடைத்த சுதந்திர நாளாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் அரசவிடுமுறை அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படும். இந்தியப்பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி, சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் ... Read More »

தோல்வியை வெல்லும் தியானம்!!!

தோல்வியை வெல்லும் தியானம்!!!

தோல்வியை வெல்லும் தியானம்:- தோல்வி என்று ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டால் மனிதர்களின் மனம் அந்த தோல்வியில் இருந்து சாமான்யமாக வெளி வராது. காரணம் உங்களுடைய ஆழ்மனது தான். உங்களுடைய நடத்தைகள் அனைத்திற்கும் உங்களுடைய ஆழ்மனதுதான் காரணம். நீங்கள் ஒரு செயலை தவறு என்று நினைத்தீர்கள் என்றால் அந்த நினைவு அப்படியே உங்கள் ஆழ்மனதிற்கு எடுத்து செல்லப்பட்டு நீங்கள் செய்யும் செயல் தவறு என்று பதியப்படுகிறது. பிறகு அந்த செயலை சரி என்று யாராவது சொன்னாலும் உங்களது ஆழ்மனது ... Read More »

அறுமுகன் வருகைப் பதிகம்!!!

அறுமுகன் வருகைப் பதிகம்!!!

வருகைப் பதிகம் அறுமுகன் ஆனவனே! கரிமுகன் சோதரனே! ஒருமுகம் ஆகஉந்தன் திருமுகம் நாடுகின்றேன்! மயில்முகம் முன்தோன்ற(வுன்) மலர்முகம் உடன்தோன்ற அயில்வடி வேலேந்தி அழகுடன் வருவாயே! குஞ்சரி இடையோடும், குறமகள் இதழோடும் கொஞ்சிடும் மணவாளா! குவலயப் பரிபாலா! தஞ்சமென் றுன்இருதாளைத் தயவுடன் பணிகின்றேன்! விஞ்சிடும் அன்புடனே விரைவினில் வருவாயே! தகதக மயிலேறித் தடைதகர் கொடியேந்தி இகபர நலமருள எனதிடர் நீகளையச் சுகநல வளமருளச் சூட்சும வேலேந்திப் பகவதி பாலகனே! பாங்குடன் வருவாயே! அரிதிரு மருகோனே! அரன்விழிச் சுடரோனே! கரிமுகற் ... Read More »

Scroll To Top