Home » விவேகானந்தர் (page 9)

Category Archives: விவேகானந்தர்

ராஜ யோகம் பகுதி-14

ராஜ யோகம் பகுதி-14

31. கண்டகூபே க்ஷúத்பிபாஸா நிவ்ருத்தி தொண்டைக் குழிமீது சம்யமம் செய்தால் பசி மறைகிறது. ஒரு மனிதனுக்குப் பசி அதிகமிருந்தால், தொண்டைக் குழி மீது அவன் சம்யமம் செய்தால் பசி அடங்கிவிடுகிறது. 32. கூர்ம நாட்யாம் ஸ்தைர்யம் கூர்ம நாடிமீது சம்யமம் செய்தால் உடல் உறுதிபெறும். பயிற்சி வேளையில் உடல் அசைவற்று உறுதி நிலையில் இருக்கும். 33. மூர்த்த ஜ்யோதிக்ஷி ஸித்த தர்சனம் உச்சந்தலையில் எழுகின்ற ஜோதியின்மீது சம்யமம் செய்வதால், சித்தர்களது காட்சி கிடைக்கிறது. சித்தர்கள் என்பவர்கள் ஆவிகளுக்குச் ... Read More »

ராஜ யோகம் பகுதி -13

ராஜ யோகம் பகுதி -13

3. விபூதி பாதம் யோக சித்திகள் இந்த அத்தியாயத்தில் யோக சித்திகளைப்பற்றி விவரிக்கப்படுகிறது. 1. தேச பந்தச் சித்தஸ்ய தாரணா குறிப்பிட்ட பொருளில் மனத்தை நிறுத்திவைப்பது தாரணை உடலில் உள்ளேயோ வெளியேயோ உள்ள ஒரு பொருளின்மீது மனம் நிலைபெற்று அந்த நிலையிலேயே பொருந்தியிருப்பது தாரணை (ஒருமைப்பாடு) 2. தத்ர ப்ரத்யயைகதானதா த்யானம் அறிவு அந்தப் பொருளை நோக்கி இடையீடற்றுப் பாய்ந்து செல்வது தியானம். மனம் ஏதாவது ஒரு பொருளை நினைக்கவோ, உச்சி, இதயம் முதலிய குறிப்பிட்ட பகுதியில் ... Read More »

ராஜ யோகம் பகுதி-12

ராஜ யோகம் பகுதி-12

41. ஸத்வ சுத்தி ஸெளமனஸ்யைகாக்ர்யேந்த்ரிய ஜயாத்மதர்சன யோக்யத்வானி சத்வத் தூய்மை, மன உற்சாகம், மன ஒருமைப்பாடு, புலன்களை வெற்றி கொள்ளல், ஆன்ம அனுபூதிக்குத் தகுதி இவற்றை அடைகிறான். தூய்மையைப் பழகுவதால் சத்வப்பொருள் மேலோங்குகிறது. மனம் குவிந்து உற்சாகம் பெறுகிறது. நீங்கள் ஆன்மீகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு முதல் அடையாளம் உற்சாகம் பெறுவதே. முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பது அஜீரணத்தின் விளைவாக இருக்கலாம். அது ஆன்மீகம் ஆகாது. சத்வத்தின் இயல்பே ஆனந்த உணர்ச்சிதான். சாத்வீக மனிதனுக்கு எல்லாமே இன்பம் ... Read More »

ராஜ யோகம் பகுதி -11

ராஜ யோகம் பகுதி -11

21. ததர்த்த ஏவ த்ருச்யஸ்யாத்மா காணப்படுவதன் இயல்பு அவனுக்காக அமைந்துள்ளது. பிரகிருதிக்குச் சுய ஒளி இல்லை. புருஷன் அதில் இருக்கும்வரை அது ஒளிபோல் தோன்றுகிறது. ஆனால் அந்த ஒளி கடன் வாங்கியது. சந்திரனின் ஒளிபோல் பிரதிபலிப்பு ஒளிதான். இயற்கையின் வெளிப்பாடுகள் எல்லாமே இயற்கை தனக்குத்தானே உண்டாக்கியவை. புருஷனைச் சுந்திரனாகச் செய்வதைத் தவிர இயற்கையின் இந்தச் செயலுக்கு வேறெந்த நோக்கமும் இல்லை என்று யோகிகள் கூறுகின்றனர். 22. க்ருதார்த்தம் ப்ரதி நஷ்டமப்யநஷ்டம் ததன்ய ஸாதாரணத்வாத் குறிக்கோளை அடைந்தவர்களுக்கு அது ... Read More »

ராஜ யோகம் பகுதி -10

ராஜ யோகம் பகுதி -10

2. சாதனை பாதம் ஒருமைப்பாடு: அதன் பயிற்சி 1. தப: ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி க்ரியா யோக தவம், படிப்பு, செயலின் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்தல் இவை கிரியா யோகம். சென்ற பகுதியின் இறுதியில் நாம் கண்டசமாதிகளை அடைவது மிகவும் கடினம். அவற்றைப் படிப்படியாகத் தான் முயல வேண்டும். முதல்படி, ஆரம்பப்படி கிரியா யோகம், கிரியா என்பதற்குச் செயல் என்று பொருள், கிரியா யோகம் என்றால் யோகத்தை அடைவதற்கான செயல். புலன்களே குதிரைகள், மனம், கடிவாளம்; புத்தி, சாரதி, ... Read More »

ராஜ யோகம் பகுதி -9

ராஜ யோகம் பகுதி -9

36. விசோகா வா ஜ்யோதிஷ்மதீ அல்லது எல்லா துயரங்களுக்கும் அப்பால் உள்ள பேரொளியை (தியானிப்பதாலும்) இது மற்றொரு வகை சமாதி, இதயத் தாமரையின் இதழ்கள் கீழ்நோக்கி இருப்பது போலவும், அதனூடே சுழுமுனை நாடி செல்வது போலவும் நினையுங்கள். மூச்சை உள்ளே இழுங்கள். அதை வெளிவிடும்போது தாமரையின் இதழ்கள் மேல்நோக்கித் திரும்புவதுபோல் பாவனை செய்யுங்கள். தாமரைக்குள்ளே பேரொளிப் பிழம்பான ஜோதி ஒன்று இருப்பதாக நினையுங்கள். அதைத் தியானியுங்கள். 37. வீத ராக விஷயம் வா சித்தம் அல்லது புலனின்பப் ... Read More »

ராஜ யோகம் பகுதி – 8

ராஜ யோகம் பகுதி – 8

17. விதர்க்க விசாரானந்தாஸ்மிதானுகமாத் ஸம்ப்ரஜ் ஞாத: ஆராய்ச்சி, விவேகம், இன்பம், நிர்க்குண அகங்காரம் இவற்றைத் தொடர்ந்து வருவது உணர்வுடன் கூடிய சமாதி. சமாதி இருவகைப்படும். ஒன்று சம்ப்ரஜ்ஞாத சமாதி, உணர்வோடு கூடியது; மற்றது அசம்ப்ரஜஞாத சமாதி, உணர்வோடு கூடாதது. சம்ப்ரஜ்ஞாத சமாதியில் இயற்கையை வெல்லும் திறன்கள் எல்லாம் வந்து எய்துகின்றன. இது நான்கு வகைப்படும். முதல் வகை ஸவிதர்க்கம் எனப்படும்; மனம் ஒரு பொருளை வேறு பொருட்களிலிருந்து பிரித்து அதை மீண்டும்மீண்டும் தியானிப்பது ஸவிதர்க்கம். சாங்கியர்கள் கூறும் ... Read More »

ராஜ யோகம் பகுதி – 7

ராஜ யோகம் பகுதி – 7

1. சமாதி பாதம் சமாதி: அதன் ஆன்மீகப் பயன்கள் 1. அத யோகானுசாஸனம் இனி யோகம் விளக்கப்படும் 2. யோகச்சித்த வ்ருத்தி நிரோத சித்தம் பல்வேறு உருவங்களை எடுக்காமல், அதாவது பல்வேறு விருத்திகளாக மாறாமல் தடுப்பதே யோகம். இங்கு விரிவான விளக்கம் தேவைப்படுகிறது. சித்தம் என்றால் என்ன, விருத்திகள் என்றால் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். எனக்குக் கண்கள் உள்ளன. ஆனால் காண்பவை அவை அல்ல. அதற்குரிய மையத்தை மூளையிலிருந்து அகற்றி விடுங்கள் கண்கள் திறந்திருக்கும், ... Read More »

ராஜ யோகம் பகுதி – 6

ராஜ யோகம் பகுதி – 6

7. தியானமும் சமாதியும் மன ஒருமைப்பாடு என்ற லட்சியத்திற்கு ராஜயோகம் நம்மை அழைத்துச் செல்கிறது. அதிலுள்ள நுட்பமான விஷயங்களைத் தவிர பல்வேறு படிகளை ஓரளவிற்குப் பார்த்தோம். மானிடர் என்ற நிலையில் நமது பகுத்தறிவு எல்லாம் உணர்வைச் சார்ந்தே இருக்கிறது. இந்த மேஜையும் நீங்களும் இங்கிருப்பதை நான் உணர்வதால்தான் நீங்களும் மேஜையும் இங்கே இருப்பதை நான் அறிய முடிகிறது. அதே வேளையில் என்னில் மிகப் பெரும் பகுதியை நான் உணர்வதில்லை. உடலின் உள்ளே உள்ள பல உறுப்புகள், மூளையின் ... Read More »

ராஜ யோகம் பகுதி – 5

ராஜ யோகம் பகுதி – 5

 5. சித்துப் பிராணனைக் கட்டுப்படுத்துதல் இப்போது பிராணாயாமத்திலுள்ள பயிற்சிகளைப் பார்ப்போம். யோகிகளைப் பொறுத்தவரை நுரையிரல்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதுதான் முதற்படி. உடலிலுள்ள நுண்ணிய இயக்கங்களை உணர்வதே நாம் செய்ய வேண்டுவது. நமஆ மனம் புறமாகிவிட்டது. அகத்தில் நிகழ்கின்ற நுண்ணிய இயக்கங்களை உணரும் தன்மையை இழந்துவிட்டது. அவற்றை உணரத் தொடங்குவோமானால் அடக்கி ஆளவும் தொடங்குவோம். நரம்புகள் உடல் முழுவதும் பரவிச் சென்று ஒவ்வொரு தசைக்கும் ஊக்கமும் சக்தியும் ஊட்டுகின்றன. ஆனால் அவற்றை நாம் உணர்வதில்லை. அவற்றை உணர்வதற்கு நாம் பழகலாம் ... Read More »

Scroll To Top