* நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இராதீர்கள். உலக நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள். * உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு சக்தியல்ல. நன்மையும் தெய்வபக்தியுமே சக்தி. * இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். * தனியாக இருந்து கொண்டு பலருடைய பகையை தேடிக் கொள்பவன் அறிவற்ற மூடனைப் போன்றவன். * செல்வம் பெருகிய காலத்தில் ஒருவனுக்கு ... Read More »
Category Archives: விவேகானந்தர்
ஆளுக்கொரு அறிவுரை
March 29, 2016
ஒருமுறை, ராமகிருஷ்ணரின் சீடரான பிரும்மானந்தர் படகுப் பயணம் மேற்கொண்டார். படகிலிருந்த ஒருவன், அவரைக் கேலிசெய்தான். பிரும்மானந்தர் வருத்தமடைந்தாலும், அவனைத் தட்டிக் கேட்கவில்லை. குருநாதரிடம் சென்று, நடந்ததைச் சொன்னார். ராமகிருஷ்ணர் அவரிடம், “”நீ ஏன் அவனைக் கண்டிக்கவில்லை. தவறு செய்பவனைக் கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும்,” என்றார். மற்றொரு முறை, மற்றொரு சீடரான விவேகானந்தர் படகில் சென்றார். அதே ஆசாமி படகில் அவருடன் வந்தான். அவன், விவேகானந்தரை கேலி செய்ய ஆரம்பித்தான்.விவேகானந்தர் மாவீரர் அல்லவா! கை முட்டியை மடக்கி, அவனை ஓங்கிக் குத்தப்போனார். அவன் அப்படியே ஒடுங்கி விட்டான். இந்த சம்பவத்தை பெருமையாக குருவிடம் ... Read More »
சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் ஒரு அற்புதமான சம்பவம்
March 28, 2016
என்சைக்ளோபீடியாவின் புதிய பதிப்பு ஒன்று சுவாமியின் மடத்தில் இருந்தது.மொத்தம் இருபத்தைந்து பெரிய தொகுதிகள் கொண்டது அந்த நூல். அவர் அதைப்படிக்க ஆரம்பித்தார். அவருடைய மன ஒருமைப்பாடு அபாரமானது. வெகு விரைவிலேயே அவர் பத்து தொகுதிகளை முடித்துவிட்டு, பதினொன்றாவதை ஆரம்பித்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு சீடர் அந்த நூல் வரிசையைக் கண்டு, ‘ஒருவன் வாழ்நாள்முழுவதும் படித்தாலும் இத்தனை நூல்களையும் முடிக்க முடியாது’ என்று கூறினார்.‘அது எப்படி? நான் ஏற்கனவே பத்து தொகுதிகளை முடித்துவிட்டேனே! என்ன கேள்வி வேண்டுமானாலும் அதிலிருந்து கேள்’ என்றார் சுவாமி. சீடர் ஒவ்வொரு தொகுப்பிலிருந்தும் ... Read More »
விவேகானந்தர் சிறப்பு பகிர்வு: முதலில் உங்களிடமே நம்பிக்கைகொள்ளுங்கள். அதன்பின் ஆண்டவனை நம்புங்கள்..
March 28, 2016
மனதை மட்டுமல்ல; மக்களையும் திருத்த நினைத்த ஆன்மிகவாதி. உள்ள வலிமைக்கு இணையாக உடல் வலிமையையும் தூண்டிய பலசாலி. அரங்கிலும் அந்தரங்கத்திலும் நிறம் மாறாத நிஜ சாமி! * நரேந்திரநாதன் வீட்டார் வைத்த பெயர். நரேன் என்றே அதிகமாக அழைக்கப்பட்டார். நண்பர்களுக்கு ‘குட்டிப் பிசாசு’. அந்தக் காலத்து சென்னைவாசிகளுக்கு அவர் ‘பயில்வான் சாமி’.அமெரிக்காவில் இருந்து எதிரொலித்த பிறகு ‘விவேகானந்தர்’ என்ற பெயரே உலகம் முழுமைக்கும் ஒலித்தது! * கோச் வண்டி ஓட்டுபவனாக வர வேண்டும் என்று நரேன் நினைத்தார். அப்பா விசுவநாத தத்தர்,வழக்கறிஞராக்க முயற்சித்தார். தன் மகளைத் திருமணம் செய்துகொண்டால் ஐ.சி.எஸ்.,ஆக்குவதாக மாமனார் சொன்னார். ‘என்னோடு இருந்துவிடேன்’ என்று ராமகிருஷ்ணர்அழைத்தார். குருநாதர் ஆசைதான்கடைசியில் நிறைவேறியது! * ‘புத்தகத்தில் ... Read More »
விவேகானந்தரின் பொன் மொழிகள்
March 28, 2016
“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!” “உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!” “நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.” “பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!” “கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.” “உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் ... Read More »
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!!!
March 26, 2016
செப்டம்பர் 11, 1893 இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன். இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் ... Read More »
மதத்தின் தேவை ( பகுதி -2)
March 22, 2016
இவ்வாறு மிக உன்னதமானதொரு கருத்தை எல்லா மதங்களும் வெளியிடுகின்றன. மனித மனம் சிலவேளைகளில் புலன்களின் எல்லைகளை மட்டுமல்லாமல், பகுத்தறிவின் ஆதிக்கத்தையும் கடந்து செல்கிறது என்பதுதான் அந்தக் கருத்து, அந்த நேரங்களில், புலன்களின் மூலமாகவோ ஆராய்ச்சி மூலமாகவோ உணர முடியாத பல பேருண்மைகளை மனித மனம் நேருக்குநேர் காண்கிறது. இந்த உண்மைகளே உலகின் எல்லா மதங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றன. இந்த உண்மைகளை மறுத்துக் கூறவும், இவற்றைப் பகுத்தறிவின் மூலம் சோதிக்கவும் நமக்கு உரிமை உண்டு. மனித மனத்திற்குப் புலன்களையும் ... Read More »
மதத்தின் தேவை (பகுதி -1)
March 22, 2016
மனித இனத்தின் விதியை உருவாக்குவதற்காக செயலாற்றி வந்துள்ள, இன்னும் செயலாற்றி வருகின்ற சக்திகள் பலவாகும். இவற்றுள் மதம் என்று நாம் சொல்கிறோமோ, அந்த சக்தியை விட வலிமை வாய்ந்தது வேறொன்றுமில்லை. எல்லா சமூக இயக்கங்களும், பின்னால் இங்கே நின்று அவை இயங்க காரணமான இருப்பது மதம் என்ற இந்த தனிப்பட்ட சக்தியே. மனிதர்களை எல்லாம் ஒன்றாக இணைந்து வாழச்செய் உணர்வை தோற்றுவிக்கின்ற சக்திகளுள் மகத்தான சக்தி மதம் என்பதிலிருந்தே தோன்றியுள்ளது. இனம், தட்பவெப்பநிலை, ஏன், பாரம்பரியம் இவற்றின் ... Read More »
ராஜ யோகம் பகுதி – 16
March 22, 2016
11. ஹேது பலாச்ரயாலம்பனை; ஸங்க்ருஹீதத்வா தேஷாமபாவே ததபாவ காரணம், பலன், ஆதாரம், பற்றுகின்ற பொருட்கள் இவை ஒன்று கூடியிருப்பதால் இவையில்லாதபோது அதுவும் இல்லை. காரண காரியங்களால் ஆசை ஒன்றுசேர்க்கப்பட்டிருக்கின்றன. ஓர் ஆசை தோன்றினால் அது விளைவை உண்டுபண்ணாமல் மறையாது. சித்தத்தில் எல்லா பழைய ஆசைகளும் சம்ஸ்காரங்களாகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவை செயல்பட்டு ஓயும்வரை அழிவதில்லை. மேலும், புலன்கள் புறப் பொருட்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வதால், புதிய ஆசைகளும் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. ஆகையால், ஆசைக்கான காரணம், பலன், ஆதாரம், ... Read More »
ராஜ யோகம் பகுதி – 15
March 21, 2016
4. கைவல்ய பாதம் முக்தி 1. ஜன்மௌஷதி மந்த்ர தப ஸமாதிஜா ஸித்தய பிறவி, ரசாயன மருந்துகள், மந்திர ஆற்றல், தவம், சமாதி, இவற்றின் மூலம் சித்திகள் கிடைக்கின்றன. சிலவேளைகளில் ஒருவன் பிறக்கும்போதே சித்திகளுடன் பிறக்கலாம். இவை முற்பிறவிகளில் அடையப் பெற்றவை. அவற்றின் பயனை அனுபவிப்பதற்கேபோல் இந்த முறை அவர்கள் பிறக்கின்றனர். சாங்கியத் தத்துவத்தின் தந்தையாகிய கபிலமுனிவர் பிறவிச் சித்தர் என்று அழைக்கப்படுகிறார். சித்தர் என்ற சொல்லுக்கு வெற்றி அடைந்தவர் என்று பொருள். இந்தச் சித்திகளை ரசாயன ... Read More »