அறிவுக்கு விருந்தாகும் சில அறிவுரைகள் 1. உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டம் மனதை வலிமையாக்கும் -செனகா. 2. கடினமான உழைப்பே சிறந்த அதிர்ஷ்டமாகும் -டெம்பஸ் 3. நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்காது. 4. திறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சன் 5. பசியுடையவனின் புன்னகை, செயற்கையாயிருக்கும். 6. பெரிய பெரிய சாதனைகளனைத்தும் செய்து முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தினால்தான் -மேலை நாட்டறிஞர் 7. மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை -லாவோட் ஸே 8. அறிவாளி, ஒருபோதும் ... Read More »
Category Archives: விவேகானந்தர்
சுவாமிஜியின் திட்டம்!!!
June 19, 2016
சுவாமிஜி இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் நிலைமை மிக மோசமாயிருந்தது. நம் நாடு அப்போது சுதந்திரம் பெறவில்லை. ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தது. மக்கள் வறுமையில் வாடினர். பெரும்பாலான மக்களுக்குப் போதிய உணவு கூட கிடைக்கவில்லை. மிகச் சில சிறுவர் சிறுமியரே பள்ளி செல்ல முடிந்தது. மக்கள் தைரியத்தை இழந்து விட்டிருந்தனர். அவர்களிடம் தன்னம்பிக்கை இல்லை. அவர்கள் உதவியற்றோராக நசுக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் கண்ட சுவாமிஜி கண்கள் கலங்கின. பழங்காலத்தில் இந்தியா எத்தகையதொரு உன்னத நிலையில் இருந்தது ... Read More »
சுவாமிஜியின் தேச பக்தி!!!
June 18, 2016
தேச பக்தி திருவனந்தபுரத்தில் சுவாமிஜி தங்கியிருந்தபோது பேராசிரியர் சுந்தராம ஐயரின் மகன் ராமசாமி சாஸ்திரியிடம் தேசபக்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் சுவாமிஜி. “….தேச பக்தி, தேச பக்தி என்கிறார்களே உண்மையில் அது என்ன? கண்மூடித் தனமான ஒரு நம்பிக்கையா? இல்லை. நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம் தான் உண்மையில் தேசபக்தி. பாரதம் முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பமும், ஒழுக்க சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு ... Read More »
விவேகானந்தரின் சிந்தனை துளிகள்!!!
June 12, 2016
* உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை. * அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது. * தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது. * கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ... Read More »
ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி விவேகானந்தர்!!!
June 8, 2016
ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி சுவாமி விவேகானந்தர்…. ஒருவரிடம் கூர்த்த அறிவு, மற்றவரிடம் பரந்த இதயம். இந்த அறிவும் இதயமும் ஒருங்கே கொண்ட ஒருவர் பிறப்பதற்கான காலம் கனிந்தது. சங்கரரின் கூர்த்த அறிவும், சைதன்யரின் எல்லையற்ற பரந்த இதயமும் கொண்ட, எல்லா மதப் பிரிவுகளிலும் ஒரே இறைவனைக் காணக்கூடிய, ஏழைகள், பலவீனர்கள், கிழ்ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர் என்று இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் உருகும் இதயம்கொண்ட. அதே வேளையில் இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு வெளியிலும் ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருக்கும் ... Read More »
தைரியமாக இரு மன உறுதியை இழக்காதீர்!!!
May 31, 2016
* அறியாமையால் அச்சம் உண்டாகிறது. அச்சம் துன்பத்திற்கு வழிவகுக்கிறது. * நிமிர்ந்த நெஞ்சுடன் தைரியமாகப் போராடுங்கள். * பணியின் முழுப் பொறுப்பையும் உங்கள் மீது சுமத்திக் கொள்ளுங்கள். * துணிவுடன் செயலாற்றுங்கள். உங்களுக்குரிய விதியை வகுத்துக் கொள்வது நீங்கள் தான் என்பதை உணருங்கள். * ஒழுக்கம், அன்பு, அமைதி உள்ளவர்களை@ய இந்த மண்ணுலகம் வேண்டுகிறது. * அறிவார்ந்து சிந்திக்கும்போது தான், பிழைகளை நம்மால் அகற்ற முடியும். * ஞானம் புறவுலகில் இருந்து வருவது இல்லை. இயல்பாகவே மனிதனுக்குள் ... Read More »
விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார்!!!
May 25, 2016
ஆஹா! சுவாமி விவேகானந்தரைப் போன்று பத்து பேர் இப்போது இருந்தால், இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகம் எங்கும் நாட்டலாம். சுவாமி விவேகானந்தர், யோசனை செய்யாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்கிய சாஸ்திரம் எதுவுமே கிடையாது. அவருடைய அறிவின் வேகத்திற்குத் தடையே கிடையாது. அவருடைய தைரியத்திற்க்கோ எல்லையே கிடையாது. கண்ணபிரான் கீதை உபதேசம் செய்து, எல்லா விதமான மக்களின் சந்தேகளையும் அறுத்து வேதஞானத்தை நிலைநிறுத்திய காலத்திற்குப் பிறகு, இந்துமதத்தின் உண்மைக் கருத்துக்களை ... Read More »
எலி ஜுரம்!!!
May 20, 2016
எலி ஜுரம் அல்லது லெப்டோஸ்பைரோஸிஸ் நோய் பற்றிய தகவல்கள்:- லெப்டோஸ்பைரோஸிஸ் என்பது ஸ்பைரோகீட்ஸ் என்ற சுரு¢வடிவ பாக்டீரியாவால் ஏற்படும் காய்ச்சலாகும். பொதுவாக, மிருகங்களைத் தாக்கக்கூடிய இந்த நோய், மனிதர்களையும் தாக்கக்கூடும். சிலருக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல்போல், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாமல் சரியாகிவிடும். ஒரு சிலருக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். மனிதர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். * பாக்டீரியவால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் நமது உடலில் குறிப்பாக தோலில் படும்போது, வெட்டுக்காயம், சிராய்ப்புகள் வழியாகவும், கண்கள் ... Read More »
சுவாமி விவேகானந்தரின் இலங்கை பயண அனுபவங்கள்!!!
April 28, 2016
சிங்களர்கள் எல்லாம் வங்காளத்தில் இருந்து குடியேறியவர்கள் .துடுக்கும் துஷ்டத்தனமும் மிக்க விஜயசிம்மன் என்ற வங்க இளவரசன் தன் தந்தையிடம் சண்டையிட்டுக்கொண்டு,தன்னைப்போன்ற சிலரை கப்பலில் ஏற்றினான்சென்று சேர்ந்தது இலங்கை தீவில். பெடூயின்ஸ் என்று இப்போது அறியப்படுவோரின் முன்னோராகிய புனோ என்ற ஆதிவாசிகள் அப்போது இந்த நாட்டில் வாழ்ந்து வந்தனர்.அவர்கள் இந்த விக்கிரசிம்மனை வரவேற்று அவனுக்கு தனது மகளையும் திருமணம் செய்து வைத்தனர்.அவனும் சிலகாலம் ஏதோ ஓழுங்காக இருந்தான்.பிறகு மனைவியுடனும் நண்பர்களுடனும் சதிசெய்து,திடீரென ஒரு இரவில் புனோ அரசனையும் அவளை ... Read More »
விவேகானந்தர்!!!! இந்து மதம்
April 1, 2016
செப்டம்பர் 19, 1893 வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன. யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் ... Read More »