சிறு வயதில் இருந்தே சுவாமி விவேகானந்தர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தைரியசாலியாக விளங்கினார். அதை அவரது வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் மூலம் தெரிந்து கொள்வோம். தீராத விளையாட்டுப் பிள்ளை! நரேனின் நண்பன் வீட்டின் அருகே பூத்துக் குலுங்கும் மரம் ஒன்று இருந்தது. நரேனும் அவனது நண்பர்கள் அனைவரும் அம்மரத்தில் ஏறி கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு விளையாடுவார்கள். நரேன் மரத்தின் கிளையைப் பிடித்துத் தொங்கி முன்னும் பின்னும் ஆடி கடைசியில் முன்னும் பின்னும் தொங்கிக் குதித்து மகிழ்ச்சியாக ... Read More »
Category Archives: விவேகானந்தர்
இந்தியாவின் ஆன்மிகத் தூதர்
December 11, 2016
கண்களைக் கவரும் வடிவம், மஞ்சளும் சிவப்பும் கொண்ட வண்ண உடை அணிந்தது, சிகாகோவில் இருண்ட ஆகாய மண்டலத்தின் நடுவில் இந்தியாவின் ஞானசூரியன் போலத் திகழ்வது, ஊடுருவி நோக்கும் கண்கள், வேகத்தோடு விரைந்தெழும் இயக்கங்கள் – இது சிகாகோ சர்வசமயப் பேரவையில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் உபயோகிப்பதற்கு என்று ஒதுக்கியிருந்த அறைகளில் ஒன்றில், நான் சுவாமி விவேகானந்தரைப் பார்த்தபோது என் உள்ளத்தில் தோன்றிய எண்ணமாகும். அவர் ஒரு வீரத்துறவி. ஆம், அவரிடம் நான் வீரர்களுக்கு உரிய பண்புகளையே முதலில் பார்த்தேன். ... Read More »
துணிச்சல் கொள்! பயப்படாதே!
December 10, 2016
இன்றைய நவீன உலகில் சிறியவர் முதல் பெரியவர் வரை குறைவான உழைப்பில் நிறைவான செல்வம் பெற நினைக்கிறோம். இந்தச் சூழலில் எந்த ஒரு மனிதனும் சிறிய தோல்வியைக் கூட தாங்கிக் கொள்ளும் மன தைரியம் இல்லாதவராய் இருக்கின்றனர். பணத்தால் மட்டுமே பலமானவன் என்று நினைப்பது தவறாகும். மனத்தாலும் பலமானவன் என்பதே உண்மையான பலமாகும். மனதில் பலமில்லாமல், கோழைத்தனமான மனதுடன் பலவீனமாக இருப்பதால் தான் தற்கொலைகள் என்ற நச்சுக் காற்று வேகமாக வீசி வருகிறது. ஆதலால் பலத்தால் வாழ்க்கை ... Read More »
ஏசுவின் ராஜ்யம்
December 10, 2016
1900 வருடத்துப் பக்கம். கொல்கத்தா மாநகரம். ‘உத்போதன்’ ராமகிருஷ்ண மிஷனின் வங்கமொழிப் பத்திரிகை. அதில் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவை வெளியிட்டு வந்தனர். மடத்தின் பிரம்மசாரியான ப்ரீதி மகராஜும், அச்சுக்கூடத்தின் பணியாளரான துலாலும் பேலூர் மடத்திற்கு வந்திருந்தனர். ப்ரீதி மகராஜின் கையில் ப்ரூஃப் கட்டுக்கள், பையில் சுவாமிஜியின் சில நூல்களும் இருந்தன. “இன்று என்ன மடம் புதுப் பொலிவுடன் காணப்படுகிறதே, மகராஜ்?” என்று துலால் கேட்டான். உனக்குத் தெரியாதா? இன்று சுவாமி விவேகானந்தர் தமது ... Read More »
நம்பிக்கையே வெற்றியின் ரகசியம்!
December 9, 2016
நமது வாழ்க்கையில் நமக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டியது தன்னம்பிக்கை ஆகும். ஒரு சிலர் சில வேலைகளை தன்னால் செய்ய முடியாது என்ற அவநம்பிக்கையில், யாராவது செய்து கொள்வார்கள் என்று விட்டு விடுகிறார்கள். இத்தகைய தன்மை நமது கோழைத் தனத்தைக் காட்டுகிறது. இதைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் சிந்தனையைப் பார்ப்போம். சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: “தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலரது வரலாறே உலக வரலாறு”. இதற்குத் தேவையானவற்றை நாம் அவரது வார்த்தைகளிலேயெ இப்போது பார்க்கலாம். தன்னம்பிக்கை: ‘முடியாது, ... Read More »
தட்டிவிடு சாம்பலை!
December 9, 2016
அமெரிக்காவில், தென் கலிபோர்னியாவில் உள்ள திருமதி கேரீ மீட் வைக்காப்பின் இல்லம். சில வருடங்களுக்கு முன்பு அது குதூகலம் மிக்க ஓர் ஆனந்தப் பூங்கா. இன்றோ…, வைக்காப் ஏன் இப்படி உருக்குலைந்து கிடக்கிறார்? இவரது சுறுசுறுப்பு எங்கே? சேவை எங்கே? எங்கே, எங்கே என்ற கேள்விக்கெல்லாம், வைக்காப்பின் ஒரே பதில், ஒரு பெருமூச்சுதான் – உஷ்ணமாக! எத்தனை எத்தனை இடர்கள் அவரைப் புரட்டிப் போட்டன. இவரா இப்படி? ஒரு காலத்தில் சூறாவளித் துறவிக்கே சமைத்துப் போட்ட அவரது ... Read More »
மாணவச் செல்வங்களே!
December 8, 2016
மாணவச் செல்வங்களே! ரோஜா சிறந்த மலர், அன்னம் சிறந்த பறவை, மா சிறந்த பழம், மார்கழி சிறந்த மாதம், வசந்தம் சிறந்த காலம். இவற்றின் சிறப்பு எங்கிருந்து வந்தது என்று எண்ணிப் பாருங்கள். மணத்தால் ரோஜா மலரும், பிரித்து உண்ணுகின்ற பண்பால் அன்னமும், முக்கனிகளுள் முதற்கனி ஆதலால் மாவும், தெய்வீகக் காரியங்களைச் செய்வதற்கு உகந்த மாதம் ஆதலால் மார்கழியும், அழகிய பூக்களாலும், தளிர்- செடி-கொடிகளாலும் மனதிற்கு மகிழ்வை ஊட்டுவதால் வசந்த காலமும் சிறப்பைப் பெறுகின்றன. அதேபோல உங்கள் ... Read More »
அவர் அதையும் நமக்காகச் செய்கிறார்!
December 8, 2016
”சேவை செய்ய வேணாம்னு நான் உங்களைச் சொல்லல்லை. ஆனா நம்ம பிஸினஸிலே கூடுதல் கவனம் தந்தா, நம்ம பொருளாதார நிலை வளருமில்லே?” என்று நீலா ஹரிஹரனிடம் கேட்டாள். களைத்து வந்திருந்த ஹரிஹரன் மனைவியை நோக்கினார். ‘செய்து வந்த சேவையைப் பார்த்துத் தான் இவள் என்னை விரும்பி மணந்தாள்; இன்று இப்படி மாறிவிட்டாளே!’ என எண்ணியபடி உண்ண ஆரம்பித்தார். ஒரு நடுத்தரக் குடும்பத்தின் நாயகன் ஹரிஹரன். நடுத்தரமான சிந்தனைகள் உடையவள் நீலா. ”நீலா, இன்னைக்கு மட்டும் ஒரு பத்துப் ... Read More »
விவேகானந்தர் – குழந்தைப்பாடல்
December 7, 2016
காவியுடை அணிந்திருப்பார் விவேகானந்தர்! கட்டான உடலழகர் விவேகானந்தர்! . நாவினிய சொல் படைத்தார் விவேகானந்தர்! நல்ல மனம் கொண்டவராம் விவேகானந்தர்! . இந்துக்களின் பெருமை சொன்ன விவேகானந்தர்! இந்தியாவைச் சுற்றியவர் விவேகானந்தர்! . குரு பெயரால் மடம் அமைத்தார் விவேகானந்தர்! குன்றாத மணிவிளக்கு விவேகானந்தர்! . நேரான பார்வை கொண்ட விவேகானந்தர்! நேசித்தார் அனைவரையும் விவேகானந்தர்! . வீரத்தை வேண்டியவர் விவேகானந்தர்! விழிகளிலே அருள் மிளிரும் விவேகானந்தர்! . சிறப்பான செயல் புரிந்தார் விவேகானந்தர்! சிறுமை கண்டு ... Read More »
சிவ சிவ சுவாமிஜி!
December 7, 2016
திருக்கைலாயம். தியானத்தில் கைலாசபதி வீற்றிருக்கிறார். சுற்றிலும் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், பூத, சிவ கணங்கள். ஸ்ரீருத்ர சமகம் பாராயணம் ஒலிக்கிறது. பிரணவ ஜபம் கைலாசத்தையே ஆனந்தமாக அதிரச் செய்கிறது. சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கித் தமது எல்லையற்ற மகிமையில் மக்னமாகியுள்ளார். அப்போது ஒரு தேவவாணி கேட்டது: ஏழைகளிடமும், பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவன் தான் – உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். சிவபெருமானை விக்கிரகத்தில் மட்டும் காண்பவனின் பூஜை, ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. ஒரே ஓர் ஏழைக்காவது, ... Read More »