முன்னொரு காலத்தில் ஓர் அரசனிடம் மந்திரி ஒருவன் இருந்தான். அவன் ஏதோ குற்றம் செய்துவிட்டான். அதற்குத் தண்டனையாக அவனை ஒரு உயரமான கோபுரத்தின் உச்சி அறையில் சிறை வைக்கக் கட்டளையிட்டான் அரசன். அவன் அங்கேயே கிடந்து சாகுமாறு விடப்பட்டான். மந்திரியின் மனைவி ஓர் இரவில் கோபுரத்தின் அடியில் வந்து அவனைக் கூவி அழைத்து, தான் எந்த விதத்திலாவது அவனுக்கு உதவ முடியுமா என்று கேட்டாள். அதற்கு மந்திரி, அடுத்த நாள் இரவு வரும்போது, தடித்த நீண்ட கயிறு ... Read More »
Category Archives: விவேகானந்தர்
சுவாமிஜியின் மாமரம்!!!
January 12, 2017
முற்றத்தின் கிழக்கு ஓரத்தில் நிற்கிறது. சுவாமிஜியின் மாமரம். மடத்து நிலம் வாங்கியபோதே நிற்கின்ற மரங்களுள் ஒன்றான இந்த மரம் சுவாமிஜியின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது. காலைவேளைகளில் இதன்கீழ் நாடாக் கட்டிலில் அமர்ந்து கொண்டு படிக்கவோ, எழுதவோ, தம்மைக் காண வருபவர்களுடன் பேசவோ செய்வார் அவர். அவர் விரும்பி தியானம் செய்கின்ற இடங்களுள் ஒன்று இது, சுவாமிஜியின் ஆன்மீக ஆற்றலை வெளிப்படுத்துகின்ற சில நிகழ்ச்சிகள் இந்த மாமரத்தின் கீழ் நடைபெற்றுள்ளன. ஓரிரண்டைக் காண்போம். ஒருநாள் மாலை வேளை, சுவாமிஜி ... Read More »
ஆரம்பகால மடம்!!!
January 12, 2017
ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயிலுக்குப் பின்னால் அமைந்துள்ளது ஆரம்பகால மடம். பேலூர் மடத்து நிலம் (ஆரம்பத்தில் சுமார் 7.3 ஏக்கர் நிலம் மட்டுமே மடத்திற்குச் சொந்தமாக இருந்தது; மீதி பகுதிகள் பின்னர் வாங்கப்பட்டவை) பிப்ரவரி 1898-இல் ராமகிருஷ்ண மடத்தின் கீழ் வந்தது. அப்போது, நிலத்தின் வடக்கு மூலையில் ஒரு மாடிக் கட்டிடம் மட்டுமே இருந்தது. சுவாமிஜிக்குப் பழக்கமானவரான ஓலி புல் அளித்த நன்கொடையுடன், விஞ்ஞானானந்தரின் மேற்பார்வையில் தொடங்கிய சீரமைப்பு பணி ஓராண்டு நடைபெற்றது. சீரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது ... Read More »
விவேகானந்தரின் திருமண வாழ்த்து!!!
January 12, 2017
மனிதர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றுஒன்பது பேருக்கு உண்மையான குறிக்கோள் திருமணம்தான். சகித்துக்கொள்வதும் பொறுத்துக்கொள்வதும்தான் வாழ்க்கை. இதற்கு மாறாக நாம் வாழ முடியாது; விட்டுக்கொடுத்தே ஒவ்வொருவரும் வாழ முடியும் இது மாறாத பாடம். இந்தப் பாடத்திற்கு ஏற்ப வாழத் தயாராகி விட்டவன் மகிழ்ச்சியாக வாழ்வான். அன்பார்ந்த ஹேரியட், என்னை நம்பு நமது மேலான லட்சியத்திற்கு ஏற்ப விஷயங்கள் இருக்காது என்பதை நாம் எதிர்பார்த்தே இருக்க வேண்டும். இதை அறிந்துகொண்டு, ஒவ்வொன்றையும் முடிந்தவரை நன்றாகச் செய்ய வேண்டும். உன்னை நான் அறிந்த ... Read More »
விவேகானந்தரும் அவரது அன்னையும்!!!
January 12, 2017
என்தாயைப் போல பார்ததில்லை! தாய்மையைப் போற்றுதல் என்னும் பண்பு சுவாமி விவேகானந்தரிடம் முழுமையாக வெளிப்பட்டது கீழ்க்காணும் வாசகங்கள் அதைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளன. எங்கள் குடும்பங்களில் அன்னையே கடவுள் இவ்வுலகில் தன்னலமற்ற. உண்மையான அன்பு தாயிடம் மட்டுமே இருக்கிறது. அவள் எப்போதும் தான் துன்புற்றபடி பிறர் மீது அன்பைப் பொழிந்து கொண்டே இருப்பாள் என்று சுவாமிஜி கூறியுள்ளார். சுவாமிஜி என்ற அற்புத மனிதரை இவ்வுலகிற்கு அளித்த அவரது தாயான புவனேஸ்வரி தேவியைப் பற்றி பல சந்தர்ப்பங்களில் சுவாமிஜி ... Read More »
விவேகானந்தரும் அவரது அன்னையும் – 5
January 12, 2017
சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு என்னும் நூல் குறிப்பிடுகிறது: சுவாமிஜி எங்குச் சென்றாலும் வாய்ப்பு நேரும்போதெல்லாம் தனது தாய்க்குப் புகழாரம் சூட்டினார். சுவாமிஜியின் நண்பர்களில் ஒருவர், இருவரும் சிலவாரங்கள் விருந்தினர்களாக ஒரு நண்பர் வீட்டில் மகிழ்ச்சியாகக் கழித்த நாட்களை நினைவுகூரும் போது. அவர் அடிக்கடி தன் அன்னையைப் பற்றி பேசினார். சுவாமிஜி தனது அன்னைக்கு உள்ள சுய கட்டுப்பாட்டை மிகவும் பாராட்டினார். பின்னர் தனக்குத் தெரிந்து எந்தப் பெண்ணும் தன் அன்னையைப் போல் நீண்ட நாள் ... Read More »
விவேகானந்தரும் அவரது அன்னையும் – 4
January 12, 2017
அன்னையின் மீது சுவாமிஜி கொண்டிருந்த பக்தியையும் மதிப்பையும் பற்றிய ஒரு கண்ணோட்டம்: சுவாமிஜி துறவியான பின்னரும் தன் அன்னையின் வறுமை நிலையை ஒரு போதும் மறந்தது இல்லை. தனது வருத்தத்தையும், வேதனையையும் பிரமததாச மித்ராவிடம் அவர் வெளிப்படுத்திய போது அவர் சுவாமிஜியின் அன்னைக்கு 20/- ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை அனுப்பி வைத்தார். 14 ஜூலை 1889 அன்று சுவாமிஜி கல்கத்தாவிலுள்ள சிமூலியாவிலிருந்து எழுதிய கடிதத்தின் மூலம் குடும்பப் பெருமையை மனத்தில் கொண்டு அவரது அன்னை அந்தப் ... Read More »
விவேகானந்தரும் அவரது அன்னையும் – 3
January 12, 2017
சுவாமிஜியின் புனிதமான அன்னை புவவேசுவரி தேவி: பதினாறு வயதுடைய விசுவநாத தத்தரை மணந்தபோது புவனேசுவரி தேவியின் வயது பத்து மட்டுமே. புவனேசுவரி தேவியை மனைவியாக அடைவதற்கு விசுவநாதர் கொடுத்து வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். இந்துப் பண்பாட்டின் சின்னமாய். கணவருக்கு உற்ற துணையாய், அவருடைய பெரிய கூட்டுக் குடும்பத்தின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கு கொள்பவராய் புவனேசுவரி தேவி இருந்தார். பாதுகாக்க வேண்டிய சிறிய மாமனாரும் அவரது மனைவியும் மாற்றுப் புடவை கூடத் தராமல் அநீதி இழைத்துக் ... Read More »
விவேகானந்தரும் அவரது அன்னையும் – 2
January 12, 2017
விவேகானந்தரும் அவரது அன்னையும் 6 ஆகஸ்டு 1899 அன்று திருமதி ஒலிபுல் அம்மையாருக்குச் சுவாமிஜி பின்வருமாறு கடிதம் எழுதினார்: உங்களுக்குத் தெரிந்த என் சித்தி, என்னை எமாற்றுவதற்கு ஒரு ஆழ்ந்த திட்டம் வைத்திருந்தார். அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் சூழ்ச்சி செய்து எனக்கு வீட்டை 6000 ரூபாய்க்கு (400 டாலர்) விற்பதற்குத் திட்டமிட்டனர். நானும் அவர்களை நம்பி என் அன்னைக்காக அந்த வீட்டை வாங்கினேன். அதை எனக்கு விற்றபின், ஒரு துறவியென்ற முறையில் நான் நீதிமன்றம் சென்று வலுகட்டாயமாக ... Read More »
விவேகானந்தரும் அவரது அன்னையும் – 1
January 12, 2017
விவேகானந்தரும் அவரது அன்னையும் தாய்மையை போற்றுதல் என்பது காலங்காலமாக இந்தியர்களின் ரத்தத்தில் ஊறியிருக்கும் ஒரு பண்பு ஆகும். சுவாமி விவேகானந்தரிடம் இந்த பண்பு முழுமையாக வெளிப்பட்டது. தனது மேலை நாட்டுச் சுற்றுப்பயணங்களின் போது, லட்சியப் பெண்மை என்பது மேலை நாடுகளைப் பொறுத்த வரையில் மனைவி; கீழை நாடுகளைப் பொறுத்த வரையில் அது தாயமை; என்று அவர் கூறியுள்ளார். இந்துப் பெண்மணிகள் வளர்த்துக்கொண்டது, தம் வாழ்வின் லட்சியமாக கொண்டது என்று குறிப்பிடக்கூடிய முக்கிய பண்டு தாய்மையே என்றும் அவர் ... Read More »