* ஆன்மிக வாழ்வில் பேரின்பம் கிடைக்காமல் போனால் அதற்காகப் புலனின்ப வாழ்வில் திருப்தி கொள்ளக்கூடாது. இது அமுதம் கிடைக்காவிட்டால்சாக்கடைநீரை நாடிச் செல்வதற்கு சமம். * மாபெரும் வீரனே! உறக்கம் உனக்குப் பொருந்தாது. துணிவுடன் எழுந்து நில். * உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது. “நான் ஒரு வெற்றி வீரன்’ என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள். மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய். * கீழ்த்தரமான தந்திர முறைகளால் இந்த உலகத்தில் ... Read More »
Category Archives: விவேகானந்தர்
இளமையிலேயே ஆன்மிகம்!!!
January 18, 2016
* நாம் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம். நல்ல எண்ணங்களின் கருவிகளாக செயல்பட்டால் தூய்மை பெறுவோம். * நாம் இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதை நம்மாலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். * புது மலர்களே இறைவனின் பாதங்களில் இடுவதற்கு தகுதி பெற்றவை. அதுபோல வலிமை, வளமை, அறிவுக்கூர்மை கொண்ட இளமைக்காலத்திலேயே இறைவனை அறிய முயலுங்கள். * ஒழுக்கம், மனவலிமை, விரிந்த அறிவு, தன்னம்பிக்கை இவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு ... Read More »
மனிதனும் மகான் ஆகலாம்!
January 17, 2016
* பிறருக்காகச் செய்கின்ற சேவையால், நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும். * சுயநலத்தால் சுகம் கிடைக்கும் என்று மனிதன் முட்டாள்தனமாக நினைக்கிறான். உண்மையில், தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. * நம்மை நாமே பெரிதாக எண்ணிக் கொண்டு அகந்தை கொள்வது கூடாது. சாதாரணமானவர்களாக நம்மை கருதும் போது தான், நம்மிடம் கருணையும், பணிவும், நல்ல சிந்தனையும் வெளிப்படத் தொடங்கும். * விவசாயி மடையைத் திறந்து விட்டால் புவியீர்ப்பு விசையால் நீர் தானாக பள்ளத்தைநோக்கிப் பாய்வது ... Read More »
செயலில் அன்பிருக்கட்டும்!
January 17, 2016
* தாயும், தந்தையும் எப்போது மகிழ்ச்சி அடைகிறார்களோ, அப்போது கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார். அதனால், பெற்றோர் பெருமை கொள்ளும் விதத்தில் வாழுங்கள். * அறிவோடு ஒன்றிவிடும்போது தான் பிழைகளைப் போக்க முடியும். இந்த முடிவை அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது. * தன்னைத் தானே வெறுக்கத் தொடங்கும் மனிதனுக்கு, அழிவுக்கான வாசல்கள் திறக்கப்பட்டு விட்டதாகப் பொருள். * அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை கொண்டு வந்தே தீரும். * தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப்போல, ... Read More »
வெற்றி வாழ்வின் ரகசியம்!
January 17, 2016
* நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். * உண்மை எதற்கும் தலை வணங்கத் தேவையில்லை. மனித சமூகம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும். * எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதை விழித்து எழச் செய்வதே நல்லாசிரியரின் கடமை. * இன்றைய கல்வித்திட்டம் மனிதனை இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கம், மனவலிமை, பரந்த அறிவு இவற்றை புகட்டுவதாக கல்வித்திட்டம் மாற வேண்டும். * மனிதர்கள் விலங்குகளை விட அதிக ... Read More »
விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு!
January 14, 2016
சிகாகோவில் நடைப்பெற்ற சர்வ சமயப் பேரவை: கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து 400 ஆண்டுகள் ஆகியிருந்தது. அதன் நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்கு, அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில், பிரம்மாண்டமான ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் கண்காட்சியில் அறிவியல், பொருளாதாரம் என்று சுமார் 20 பேரவைகள் நடைபெற்றன. அங்கு சர்வ சமய பேரவை சொற்பொழிவுகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, பதினேழு நாட்கள் நடைபெற்றன. அங்கு ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகளை, மூன்று பிரிவுகளாகப் பிரித்து ... Read More »
நாம் ஏன் ஒத்துப் போவதில்லை?
January 14, 2016
செப்டம்பர் 15, 1893 ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், ‘நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்’ என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் ... Read More »
வலிமையே வாழ்வு!!! சுவாமி விவேகானந்தர்
January 12, 2016
மேலைநாட்டின் மாபெரும் சக்கரவர்த்தியான அலெக்சாண்டர் சிந்து நதிக்கரையில் உள்ள காடு ஒன்றில் ஒரு வயோதிபத் துறவியைக் கண்டு அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்தத் துறவி ஒருவேளை எந்த உடையுமின்றி, நிர்வாணமாக ஒரு கல்லின் மீது அமர்ந்திருக்கிறார். அவரது ஞானத்தைக் கண்டு வியந்துபோன சக்கரவர்த்தி அவரைத் தமது கிரீஸ் நாட்டிற்கு வருமாறு தூண்டுகிறார். அதற்காகப் பொன்னும், பொருளும் தருவதாகவும் ஆசை காட்டுகிறார். ஆனால் அந்த வயதான சாதுவோ அலெக்சாண்டரின் பொற்காசுகளைப் பார்த்தும், ஆசை வார்த்தைகளைக் கேட்டும் மென்மையாக சிரிக்கிறார், ... Read More »
மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று!!!
January 12, 2016
செப்டம்பர் 20, 1893 நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. ... Read More »
மனிதநேயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு!
January 11, 2016
1893-ஆம் ஆண்டு அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் இந்துமதம் பற்றிச் சொற்பொழிவுகள் செய்தார். அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். அப்போது அவர் பிரபலமாகவில்லை. அந்த நிலையில் ஒரு சமயம் விவேகானந்தர் ஓர் ஊரில் தங்கினார். அவரைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அவர் அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் இவ்விதம் கூறியிருக்கிறார்: ... Read More »