Home » விவேகானந்தர் (page 13)

Category Archives: விவேகானந்தர்

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 3

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 3

புவனேஸ்வரி அம்மையார் மகனுக்கு சூட்டிய பெயர் விரேஸ்வரன். அந்தப் பெயரிலேயே அவரை அழைத்தார். ஆனால், ஊரார் முன் அவர் குடும்பத்தினர் வைத்த நரேந்திரநாத் தத்தா என்ற பெயர் தான் நிலைத்தது. அதுவும் சுருங்கி, நரேன் என்ற பெயர் தான் நிலைத்தது. குழந்தை நரேனுக்கு ஐந்து வயது எட்டிவிட்டது. அந்த சமயத்தில் அவன் செய்த சேஷ்டைகள் அதிகம். சேஷ்டை என்றால் சாதாரணமான சேஷ்டை அல்ல…வெறித்தனமான சேஷ்டை. அவன் செய்யும் சேஷ்டையில் புவனேஸ்வரி மட்டுமல்ல, பொறுமை மிக்க சகோதரிகள் இருவரும் ... Read More »

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 2

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 2

விஸ்வநாதரை தரிசித்து விட்டு ஊர் திரும்பி விட்டாள். மனைவியை யாரோ ஒருத்தியாக நினைத்து, கண்டுகொள்ளாமல் போன துர்காசரணரும் எங்கெங்கோ அலைந்து, விதிவசமாக கல்கத்தாவுக்கே வந்து சேர்ந்தார். ஆனால், வீட்டுக்குப் போகவில்லை. தன் நண்பரின் வீட்டுக்குப் போய் சேர்ந்தார். பழைய நண்பர் தன் வீட்டுக்கு வந்த செய்தியை, துர்காசரணரின் வீட்டுக்கு சொல்லி அனுப்பிவிட்டார் அந்த நண்பர். அவ்வளவுதான். உறவுக்காரர்கள் குவிந்து விட்டனர்.துர்கா! நீர் இப்படி செய்தது முறைதானா? உம் மனைவியை பிரிய எப்படி மனம் வந்தது? மனைவி கிடக்கட்டும். ... Read More »

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 1

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 1

ஓம் காளி… ஜெய் காளி… என்ற கோஷம் விண்ணை முட்டுமளவு ஒலித்துக் கொண்டிருக்கும் நகரம் அது. அந்த கோஷம் நள்ளிரவு வேளையில் கூட ஆங்காங்கே கேட்கும். அம்பிகையை வீரத்தின் சின்னமாக பாவித்து வணங்குவர் அந்நகரத்து மக்கள். ஆம்… கல்கத்தா…அது காளியின் நகரம். அந்நகரத்தின் வடக்கே இருந்த சிம்லா என்ற பகுதியில் அரண்மனை போல் இருந்த அந்த வீட்டில் இருந்து மங்கள வாத்தியங்களின் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. புதுப்பெண் புவனேஸ்வரி சர்வ அலங்காரங்களுடன் ஒரு சாரட்டில் அழைத்து வரப்பட்டாள். ... Read More »

மிரள வைத்த விவேகானந்தரின் `வலிமை’

மிரள வைத்த விவேகானந்தரின் `வலிமை’

ஒருமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் சுவாமி விவேகானந்தர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் இருந்த பெட்டியில் அவரைத் தவிர 2 வெள்ளையர் இருந்தனர். விவேகானந்தர் அணிந்திருந்த காவி உடையை பார்த்த அவர்கள், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். திட்டவும் கூட செய்தனர். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தர் அமைதியாகவே இருந்தார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை.   ஒரு ரெயில் நிலையத்தில் ரெயில் ... Read More »

சூழ்நிலையால் தடுமாறாதே!

சூழ்நிலையால் தடுமாறாதே!

சிறுவன் நரேந்திரன் கொல்கத்தாவைச் சேர்ந்தவன். அப்போது அவனுக்கு பத்து வயது நடந்துகொண்டிருந்தது. அவன் தன் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து, ஒரு நாடக்குழுவை அமைத்தான். அதில் அவனும் அவனது நண்பர்களும் பல நாடகங்கள் நடத்தினார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு நரேந்திரன், தன் வீட்டு முற்றத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓர் உடற்பயிற்சி குழுவை அமைத்தான். பின்னர் நரேந்திரனும் அவனது நண்பர்களும், முறைப்படி உடற்பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். எனவே அவர்கள், நவகோபால் மித்ரா என்பவர் நடத்தி வந்த உடற்பயிற்சி நிலையத்தில் ... Read More »

துணிவும் வீரமும்!

துணிவும் வீரமும்!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு – குறள் -423 இதற்கு, எந்தச் செய்தியை யார் கூறக் கேட்டாலும், கூறியவர் யார் என்று பாராமல் அந்தச் செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும் என்பது பொருள். திருவள்ளுவரின் இந்தக் கருத்துக்கு, எடுத்துக்காட்டாக நரேந்திரன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி இது: சிறுவன் நரேந்திரன் சுறுசுறுப்பானவன், எப்போதும் உற்சாகத்துடன் இருப்பவன். ஓடி விளையாடு பாப்பா! என்று பாரதியார் கூறியதுபோல், விளையாட்டுகளில் நரேந்திரனுக்கு ஆர்வம் அதிகம். ... Read More »

வெள்ளரிக்காய் வழங்கிய முஸ்லிம் அன்பர்!

வெள்ளரிக்காய் வழங்கிய முஸ்லிம் அன்பர்!

அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் 1893-ஆம் ஆண்டு சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் உலகில் முக்கியத்துவம் வாய்ந்த எல்லா மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள். இந்தப் பேரவை நிகழ்ச்சிகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல், 27-ஆம் தேதி வரை பதினேழு நாள்கள் நடைபெற்றன. பேரவை நிகழ்ச்சிகளில், சுவாமி விவேகானந்தர் இந்துமதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அதனால் அவர் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தினார். சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு சுமார் நாலரை ... Read More »

எது சிறந்த வழி!

எது சிறந்த வழி!

ஒவ்வொருவனும் தன்னுடைய வழிதான் சிறந்தது என்று நினைக்கிறான். மிகவும் நல்லது. ஆனால் உனக்கு வேண்டுமானால் அது நல்லதாக இருக்கலாம் என்பதை நீ நினைவில் வைக்க வேண்டும். ஒருவனால் சிறிது கூட ஜீரணிக்க முடியாத ஓர் உணவு, மற்றொருவனுக்கு எளிதல் ஜீரணமாகக் கூடியதாக இருக்கும். உனக்குப் பொருத்தமாக இருப்பதனாலேயே ஒவ்வொருவனுக்கும் அது தான் வழி, சங்கரனுக்குப் பொருத்தமான சட்டை சந்திரனுக்கும் சங்கரிக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்ற முடிவிற்குத் தாவிவிடாதே. கல்வியறிவில்லாத, பண்பாடற்ற, சிந்தனையில்லாத ஆண் பெண் அனைவரும் ... Read More »

கல்வியும் சமுதாயமும்!

கல்வியும் சமுதாயமும்!

மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வியாகும். கல்வி என்றால் என்ன? அது புத்தகங்களைப் படிப்பதா?இல்லை. அல்லது அது பலவிதமானவற்றைக் குறித்த அறிவா?அதுவும் இல்லை.எத்தகைய பயிற்சியின் மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, பயன்தரும் வகையில் அமைகிறதோ. அந்தப் பயிற்சிதான் கல்வியாகும். வெறும் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதல்ல, மனதை ஒருமுகப்படுத்துவது தான் என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் அடிப்படையான இலட்சியமாகும். மீண்டும் ஒரு முறை நான் கல்வி கற்பதாக இருந்தால், ... Read More »

ஓய்வின்றி வேலை செய்க!

ஓய்வின்றி வேலை செய்க!

* உங்களிடம் உள்ளதை எல்லாம் பிறருக்கு கொடுத்துவிட்டு பிரதிபலன் எதிர்பாராமல் வாழுங்கள். * நாம் உண்பதும், உடுப்பதும், உறங்குவதும் கடவுளுக்காகவே. அனைத்திலும் எப்போதும் கடவுளையே காணுங்கள். * ஒரு எஜமானனைப் போல கடமையைச் செய்யுங்கள். அடிமையைப் போல இருக்காதீர்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள். * சாகின்ற நிலையிலும் கூட நாம், ஒருவர் யார் எப்படிப்பட்டவர் என்று கேள்வி கேட்காமல் உதவி செய்வது தான் கர்மயோகம். * சுதந்திர உணர்வு இல்லாத வரையில் மனதில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி ... Read More »

Scroll To Top